29.08.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, ஒவ்வொரு சூழ்நிலையிலும் சகிப்புத்தன்மையுடன் இருங்கள். புகழ்ச்சியிலும் இகழ்ச்சியிலும், வெற்றியிலும் தோல்வியிலும் சமநிலையைப் பேணுங்கள். மற்றவர்களிடம் இருந்து நீங்கள் கேட்கின்ற விடயங்களை நம்பாதீர்கள்.
கேள்வி:
ஆத்மாக்கள் மேலேறும் ஸ்திதியில் தொடர்ந்தும் முன்னேறுவதற்கு இலகுவான வழி என்ன?பதில்:
வேறு எவருமன்றி ஒரேயொரு தந்தை கூறுவதையே செவிமடுங்கள். வீண் பேச்சுக்களிலும், மற்றவர்களைப் பற்றிய பயனற்ற எண்ணங்களிலும் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள், அப்பொழுது, ஆத்மாக்களாகிய நீங்கள் சதா மேலேறும் ஸ்திதியில் இருப்பீர்கள். தவறான விடயங்களைச் செவிமடுப்பதாலும், அவற்றை நம்புவதாலும் நல்ல குழந்தைகள் கூட வீழ்ந்து விடுகிறார்கள், இதனாலேயே நீங்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.ஓம் சாந்தி.
இராவண இராச்சியம் ஆரம்பித்த காலத்திலிருந்து அரைக்கல்பமாக நீங்கள் உண்மையாகவே தந்தையை நினைவு செய்தீர்கள் என்பதை இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். அரைக் கல்பம் ழுழுவதும் நீங்கள் அவரை நினைவு செய்கின்றீர்கள் என்றில்லை. இல்லை, பெருந் துன்பத்தை அனுபவித்த வேளைகளில் மாத்திரமே நீங்கள் அவரை நினைவு செய்தீர்கள். பக்தி மார்க்கத்தில் நீங்கள் தொடர்ந்தும் கீழிறங்கினீர்கள் என்பதை இப்பொழுது அறிவீர்கள். இந்த நாடகத்தின் இரகசியங்கள் உங்கள் புத்தியில் உள்ளன. எதையும் கூற வேண்டிய அவசியமில்லை. நாங்கள் இப்பொழுது அவருக்குச் சொந்தமாக உள்ளோம், எனவே, பெருமளவு ஞானத்திற்கான தேவையில்லை. இப்பொழுது நீங்கள் தந்தைக்குச் சொந்தமாகி உள்ளதால், அவரின் சொத்துக்கு அதிபதிகள் ஆகியுள்ளீர்கள். பௌதீக அங்கங்களால் செய்ய வேண்டியது எதுவுமில்லை. பக்தி மார்க்கத்தில், கடவுளைக் கண்டறிவதற்காக அவர்கள் பல யாகங்கள் வளர்த்து, அதிகளவு தவம் செய்து, தான தர்மங்களைச் செய்கின்றார்கள். நீங்கள் செல்லும் இடமெல்லாம் பல்வேறு யாத்திரை ஸ்தலங்களும் ஆலயங்களும் உள்ளன. பாரதம் முழுவதும் சுற்றிச் சென்று, சகல யாத்திரை ஸ்தலங்களையும், ஆலயங்களையும் சுற்றிப் பார்த்த வேறு எவருமே எங்கும் இல்லை. எவராவது அவ்வாறு பயணம் செய்தாலும் அவரால் எதையும் அடைய முடியாது. அங்கே எங்கும் அதிகளவில் மணியோசைகளும் கூச்சலும் ஆரவாரங்களும் உள்ளன. இங்கே, கூச்சல் ஆரவாரம் என்ற கேள்விக்கே இடமில்லை; பாடல்களைப் பாடுதல், கைகளைத் தட்டுதல் போன்றவற்றிற்கும் இங்கே இடமில்லை. மக்கள் என்ன செய்கின்றார்கள் எனப் பாருங்கள்! அங்கு பலவிதமான சடங்குகள் இருக்கின்றன. இங்கே, குழந்தைகளாகிய நீங்கள் தந்தையை நினைவுசெய்ய வேண்டியது மாத்திரமே, வேறெதுவும் செய்ய வேண்டியதில்லை. வீட்டில் வாழ்ந்து கொண்டு அனைத்தையும் செய்யும் பொழுதும் தந்தையை நினைவு செய்யுங்கள். நீங்கள் இப்பொழுது தேவர்கள் ஆகுகின்றீர்கள் என்பதை அறிவீர்கள். இங்கேயே தெய்வீகக் குணங்கள் கிரகிக்கப்பட வேண்டும். உங்களின் உணவும், பானமும் தூய்மையாக இருக்க வேண்டும். அங்கு நீங்கள் 36 வகையான உணவைப் பெறுவீர்கள். இங்கே நீங்கள் அதிக ஆடம்பரமாகவோ, அதிக எளிமையாகவோ அன்றி, சாதாரணமாக வாழ வேண்டும். ஒவ்வொரு சூழ்நிலையிலும் சகிப்புத்தன்மையுடன் இருங்கள். புகழ்ச்சி-இகழ்ச்சி, வெற்றி-தோல்வி, சூடு-குளிர் அனைத்தும் சகித்துக் கொள்ளப்பட வேண்டும். தண்ணீர், மற்றும் இதையும் அதையும் பெற முடியாத ஒரு காலமும் வரும், அப்பொழுது சூரியன் கூட மிகவும் வெப்பமாகவே இருக்கும். அனைத்தும் தமோபிரதான் ஆகுகின்றது. இவ்வுலகம் தமோபிரதான் ஆனது. பஞ்ச தத்துவங்களும் தமோபிரதானாகி, துன்பத்தை விளைவிக்கின்றன. நீங்கள் புகழ்ச்சியிலும், இகழ்ச்சியிலும் சிக்கிக் கொள்ளக்கூடாது. மிக விரைவில் குழப்பம் அடையக்கூடிய பலர் உள்ளனர். இந்நாட்களில், பல கதைகள் உருவாக்கப்படுவதால், சில சமயங்களில் சிலர் தவறான விடயங்களை மற்றவர்களுக்குக் கூறுகின்றனர். ஒருவர் இன்னொருக்குக் கூறக்கூடும்: ‘உங்களிடம் சரீர உணர்வு இருக்கிறது, அத்துடன் பெருமளவு பகட்டு இருப்பதாக பாபா கூறினார்’. அப்பொழுது அவருக்கு கடுமையான காய்ச்சல் வந்து, அவர் தூங்கவும் மாட்டார். இந்த அரைக் கல்பத்திலுள்ள மனிதர்கள் எத்தகையவர்கள் என்றால், மிக விரைவாகவே ஒருவருக்குக் காய்ச்சல் வரச்செய்து, அவரை வெளிறச் செய்து விடக்கூடியவர்கள். தந்தை கூறுகின்றார்: அத்தகைய பயனற்ற விடயங்களைச் செவிமடுக்காதீர்கள். தந்தை ஒருபொழுதும் எவரையும் இகழ்வதில்லை. நீங்கள் புரிந்து கொள்வதற்காகவே தந்தை கூறுகின்றார். நீங்கள் ஒருவருக்கொருவர் தவறான விடயங்களைக் கூறுவதால், நல்ல குழந்தைகள் கூட பாழாகி, துரோகிகளாகி, அநாவசியமான கதைகளைப் பரப்புகின்றார்கள். பக்தி மார்க்கத்தில் அவர்கள் உருவாக்கியுள்ள கதைகள் அனைத்தையும் பாருங்கள். நீங்கள் இப்பொழுது இந்த ஞானத்தைப் பெற்றிருப்பதால், “ஓ இராமா!” அல்லது “ஓ கடவுளே!” என நீங்கள் கூறுவதில்லை. அவ்வார்த்தைகள் பக்தி மார்க்கத்திற்கு உரியவை. அத்தகைய வார்த்தைகள் உங்கள் உதடுகளிலிருந்து வெளிப்படக்கூடாது. தந்தை கூறுகிறார்: இனிய, அன்பிற்கினிய குழந்தைகளே, ஆத்ம உணர்வு உடையவர்களாக இருங்கள்! அவர் அதிகளவு அன்புடன் விளங்கப்படுத்துகின்றார். வேறெவர் கூறுவதையும் செவிமடுக்காதீர்கள். மற்றவர்களைப் பற்றிய பயனற்ற எண்ணங்களைக் கொண்டிராதீர்கள். ஒரு விடயத்தை உறுதியாக்குங்கள்: நான் ஓர் ஆத்மா. ஆத்மாக்கள் அழிவற்றவர்கள், சரீரங்கள் அழியக்கூடியவை. ஆத்மாக்களே சம்ஸ்காரங்களைக் கிரகிக்கின்றனர். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகவேண்டும். துவாபரயுகம் முதல் இராவண இராச்சியத்தில் நீங்கள் சரீர உணர்வு உடையவர்களாக இருந்தீர்கள். இதனாலேயே ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுவதற்குப் பெருமளவு முயற்சி தேவை. நீங்கள் எல்லையற்ற தந்தையைக் கண்டுகொண்டீர்கள் என்பது மீண்டும் மீண்டும் உங்கள் புத்தியில் பிரவேசிக்க வேண்டும். தந்தை ஒவ்வொரு கல்பத்திலும் உங்களுக்கு ஆஸ்தியை வழங்குகின்றார். நீங்கள் இப்பொழுது அவரது வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும். அவருடைய புகழ் உள்ளது: நீங்களே தாயும், தந்தையும். அவர் எங்களுக்குச் சகல உறவுமுறைகளினதும் சந்தோஷத்தைக் கொடுக்கின்றார். சகல உறவுமுறைகளினதும் இனிமை அவரிடம் உள்ளது. ஏனைய நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் உங்களுக்குத் துன்பத்தையே விளைவிக்கின்றனர். ஒரேயொரு தந்தை மாத்திரமே அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கின்றார். அவர் காண்பிக்கின்ற பாதை மிகவும் இலகுவானது: உங்களை ஆத்மாக்களாகக் கருதி, உங்கள் தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இது எதுவும் புதிதல்ல. ஒவ்வொரு 5000 வருடங்களிலும் நீங்கள் அத்தகைய தந்தையிடம் வருகின்றீர்கள் என்பதை அறிவீர்கள். அவர் ஒரு சாதுவோ அல்லது புனிதரோ அல்ல. நீங்கள் ஒரு சாதுவுடனோ, புனிதருடனோ தங்கியிருக்கவில்லை, ஆனால் தந்தை கூறுகின்றார்: உங்கள் இல்லறப் பொறுப்புக்களை நிறைவேற்றுங்கள், இல்லாவிடில் தொடர்ந்தும் பெரும் குழப்பங்கள் இருக்கும். தொடர்ந்தும் சாதுரியமாகப் பழகுங்கள். அனைவருக்கும் அன்புடன் விளங்கப்படுத்துங்கள்: பாருங்கள், விநாச காலம் இப்பொழுது அண்மித்து விட்டது. இந்த அசுர உலகம் இப்பொழுது அழிக்கப்பட வேண்டும். நீங்கள் இப்பொழுது தேவர்களாக வேண்டும். இங்கேயே தெய்வீகக் குணங்களைக் கிரகியுங்கள். பெருமளவு அன்புடன் விளங்கப்படுத்துங்கள். தேவர்கள் வெள்ளைப்பூண்டு, வெங்காயம் போன்றவற்றை உண்பதில்லை. நாங்கள் மனிதர்களில் இருந்து தேவர்கள் ஆகுவதால், எவ்வாறு நாங்கள் அவற்றை உண்ண முடியும்? அவற்றைத் துறக்குமாறு உங்களுக்கு ஆலோசனை வழங்கப்படுகின்றது. நாங்கள் அவற்றை உண்பதில்லை. உங்களுக்குத் தெய்வீகக் குணங்களைக் கற்பிக்கின்ற, எல்லையற்ற தந்தையை நீங்கள் இப்பொழுது கண்டிருப்பதால், நீங்கள் இங்கேயே தெய்வீகக் குணங்கள் அனைத்தும் நிறைந்தவர்கள் ஆகவேண்டும். நீங்கள் இங்கே இவ்வாறு ஆகினால், எதிர்கால புதிய உலகம் வந்து விடும். இது பகலுக்குப் பின்னர் இரவும், இரவுக்குப் பின்னர் பகலும் வருவதைப் போன்றதாகும். இப்பொழுது இது இரவின் இறுதிக் காலம் என்பதால் தெய்வீகக் குணங்கள் கிரகிக்கப்பட வேண்டும், பின்னர் அது காலை ஆகும். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களையே சோதித்துப் பார்க்க வேண்டும். தந்தைக்கு அனைத்தும் தெரியும் என்று எண்ணாதீர்கள். நீங்கள் உங்களைச் சோதித்துப் பார்க்க வேண்டும். தனது ஆசிரியருக்குத் தன்னைப் பற்றி அனைத்தும் தெரியும் என ஒரு மாணவன் கூறுவதில்லை. பரீட்சை நாட்கள் நெருங்கும் பொழுது, தாங்கள் எந்தளவிற்குச் சித்தி அடைவார்கள் என்பதையும், எப்பாடங்களில் இன்னமும் சற்றுப் பலவீனமாக இருக்கின்றார்கள் என்பதையும் மாணவர்கள் புரிந்து கொள்கின்றார்கள். நீங்கள் சில பாடங்களில் குறைவான புள்ளிகளைப் பெற்றாலும், உங்களால் எல்லாவற்றிலும் சித்தி எய்தக்கூடியதாக உள்ளது. நீங்கள் இதைப் புரிந்து கொள்வதால், இதையிட்டு உங்களையே சோதித்துப் பார்க்க வேண்டும்: நான் எதில் இன்னமும் குறைவாக இருக்கின்றேன்? நான் மிகவும் இனிமையானவர் ஆகிவிட்டேனா? அனைவருக்கும் அன்புடன் விளங்கப்படுத்துங்கள்: பரமாத்மாவான பரமதந்தையே ஆத்மாக்களாகிய எங்களின் தந்தை ஆவார். அவர் ஒரு மனிதனாக இருப்பதற்கான கேள்வியே இல்லை. நாங்கள் அசரீரியானவரைக் கடவுள் என்று அழைக்கின்றோம். ஒரேயொருவரே படைப்பவரான கடவுள். ஏனைய அனைவரும் படைப்புக்கள் ஆவர். படைப்புக்களிடம் இருந்து எவராலும் ஓர் ஆஸ்தியைப் பெற முடியாது; அது நியதியல்ல. முழுப் படைப்புக்கும் சற்கதியை அருள்பவர் படைப்பவரான ஒரேயொரு தந்தையே. இதில் சாதுக்கள், புனிதர்கள் அனைவரும் உள்ளடங்குகின்றனர். அனைவரும் ஆத்மாக்களே. ஆம், நல்ல, தீய மனிதர்கள் உள்ளனர். அவர்கள் உயர்ந்த அல்லது தாழ்ந்த தராதரங்களைக் கொண்டுள்ளனர். சந்நியாசிகளும் வரிசைக்கிரமமானவர்களே. அவர்களில் சிலர் தொடர்ந்தும் யாசித்துக் கொண்டிருக்க, ஏனையோரின் காலடியில் அனைவரும் வீழ்கின்றனர். குழந்தைகளாகிய நீங்கள் மிக மேன்மையானவர்கள் ஆகவேண்டும்! மிகவும் இனிமையானவர்கள் ஆகுங்கள். ஒருபொழுதும் கோபமாகப் பேசாதீர்கள். இயன்றவரை அனைத்தையும் அன்புடன் செய்யுங்கள். தங்கள் குழந்தைகள் பெருமளவு தொந்தரவுகளை விளைவிப்பதாகச் சிலர் கூறுகின்றனர். எவ்வாறாயினும், தற்காலத்துப் பிள்ளைகள் அவ்வாறானவர்கள். அவர்களுக்கு அன்புடன் விளங்கப்படுத்துங்கள். காலம் அத்தகையது. வெளியிலுள்ள மக்களின் சகவாசமும் மிகவும் தீயது. எல்லையற்ற தந்தை இப்பொழுது கூறுகின்றார்: நீங்கள் விக்கிரகங்கள் போன்ற எதையும் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. சிரமப்பட வேண்டியதில்லை. நீங்கள் சிவனின் உருவத்தைக் கூட ஏன் வைத்திருக்க வேண்டும்? அவர் உங்களின் தந்தை. குழந்தைகள் தங்கள் வீட்டில் தங்களது தந்தையின் படத்தை வைத்திருப்பார்களா? தந்தை எந்நேரமும் பிரசன்னமாக இருக்க முடியும். தந்தை கூறுகின்றார்: நான் இப்பொழுது பிரசன்னமாக உள்ளேன், இல்லையா? எனவே, படங்களுக்கான அவசியமில்லை. நான் இங்கே அமர்ந்திருந்து, குழந்தைகளான உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றேன். நீங்கள் கூறுகின்றீர்கள்: நாங்கள் பாப்தாதாவைப் பார்ப்போம். தந்தை அசரீரியானவர். அவரைப் பார்க்க முடியாது. அவரைப் புத்தியால் புரிந்துகொள்ள முடியும். தந்தை கூறுகின்றார்: நான் இவரில் பிரவேசித்து, உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கின்றேன். வேறு எவ்வாறு நான் வரமுடியும்? எவ்வாறு அவரால் ஸ்ரீகிருஷ்ணரின் சரீரத்தில் பிரவேசிக்க முடியும்? அவரால் சந்நியாசிகளின் சரீரத்தில்கூட பிரவேசிக்க முடியவில்லை. நான் முதலாம் இலக்கத்தவராக இருந்தவரிலேயே பிரவேசிக்கின்றேன். அவர் இப்பொழுது இறுதி இலக்கத்தவராக இருக்கின்றார். நீங்களும் இப்பொழுது கற்று, முதலாம் இலக்கத்தைக் கோர வேண்டும். ஆசிரியர் அதே அவரே ஆவார். அவர் ஞானக்கடல் என்று அழைக்கப்படுகின்றார். நீங்கள் மிக நல்ல ஞானத்தைப் பெறுகின்றீர்கள். அமைதி தாமம் உங்களின் வீடு என்பதையும், சந்தோஷ தாமம் உங்களின் இராச்சியம் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். துன்ப தாமம் இராவண இராச்சியமாகும். தந்தை கூறுகிறார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, இப்பொழுது அமைதி தாமமான, உங்கள் வீட்டையும், சந்தோஷ தாமத்தையும் நினைவு செய்யுங்கள். தொடர்ந்தும் துன்ப தாமத்தின் பந்தனங்களை மறந்து விடுங்கள். வேறெவராலுமே இதைக் கூறவோ அல்லது எவராலும் வீடு திரும்பவோ முடியாது. நாடகத்தின் மத்தியில் எவராலுமே வீடு திரும்ப முடியாது. இன்ன இன்னார் ஒளியுடன் கலந்து விட்டார் அல்லது அவர் அப்பால் நிர்வாண தாமத்திற்குச் சென்றுவிட்டார் என மக்கள் கூறினாலும், உண்மையில் எவருமே அங்கு திரும்பிச் செல்வதில்லை. பரமாத்மா பரமதந்தையே அனைவரதும் தந்தையும், அதிபதியும் ஆவார். அவரே காதலிகள் அனைவரினதும் ஒரேயொரு அன்பிற்கினியவர். அந்தப் பௌதீகக் காதலர்களும், காதலிகளும் ஒருவரையொருவர் நினைவு செய்கின்றனர், ஒருவரது உருவம் மற்றவரது புத்தியில் தோன்றுகின்றது. அவர்கள் தொடர்ந்தும் ஒருவரையொருவர் நினைவு செய்கின்றனர். உண்ணும் பொழுதும், அவர்கள் தொடர்ந்தும் ஒருவரையொருவர் நினைவு செய்கின்றனர். அவர்கள் ஒரு பிறவிக்குரிய காதலர்களும், காதலிகளும் ஆவர். நீங்கள் பிறவிபிறவியாக ஒரேயொரு அன்பிற்கினியவரின் காதலிகளாக இருக்கின்றீர்கள். நீங்கள் வேறு எதையும் செய்ய வேண்டியதில்லை. ஒரேயொரு தந்தையை நினைவு செய்யுங்கள். காதலன் அல்லது காதலிக்கு முன்னால் மற்றவரின் உருவம் தெரிகின்றது. அவர்கள் தொடர்ந்தும் அவ்வுருவத்தையே பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, அவர்களின் வேலை இடைநிறுத்தப்படுகின்றது. பின்னர் அந்நபரின் முகம் மறைந்ததும், அவரவர் மீண்டும் தத்தமது வேலையை ஆரம்பிக்கின்றார். இங்கு அவ்வாறில்லை. ஆத்மாக்கள் புள்ளிகள், பரமாத்மாவும் ஒரு புள்ளியே. உங்களை ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை நினைவு செய்யுங்கள். இதற்கு முயற்சி தேவை. எவருமே இதைப் பயிற்சி செய்வதில்லை. நீங்கள் ஆத்மாக்கள் பற்றிய இந்த ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள், அதாவது, ஆத்மாக்களாகிய நீங்கள் உங்களைப் புரிந்து கொள்கின்றீர்கள். பின்னர் பரமாத்மா உள்ளார்; பாபா வந்து, இவரின் நெற்றியில் அமர்கின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அங்கு அவரது இடம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆத்மா எதன் வழியாகச் சரீரத்தை விட்டுச் செல்கிறார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள முடியாது. நெற்றியே ஆத்மாவின் பிரதான இடமாகும். தந்தை கூறுகிறார்: நான் ஒரு புள்ளி. நான் வந்து, இவரில் அமர்கின்றேன். உங்களால் கூறவே முடியாது. தந்தை அமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுடன் பேசுகின்றார். அவர் உங்களுக்குக் கூறுவதை நானும் செவிமடுக்கின்றேன். அவர் கொடுக்கின்ற விளக்கம் முற்றிலும் சரியானது. ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுவதைத் தேவ தர்மத்தைச் சேர்ந்தவர்கள் மிக விரைவாகவே புரிந்து கொள்வார்கள். முதலில் ஸ்தாபனை இருக்கும், பின்னர் விநாசம் இடம்பெறும். வேறெந்தச் சமய ஸ்தாபகர்களும் இதைச் செய்வதில்லை. அவர்கள் தங்களுடைய சொந்தச் சமயங்களை ஸ்தாபிக்கின்றனர், பின்னர் அவை தொடர்ந்தும் வளர்கின்றன. இங்கு, நீங்கள் எவ்வளவு முயற்சி செய்கின்றீர்கள் என்பதற்கேற்ப, எதிர்காலத்தில் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருகிறீர்கள். நீங்கள் உங்களின் எதிர்கால 21 பிறவிகளுக்கான வெகுமதியை உருவாக்குவதால், அதிக முயற்சி செய்ய வேண்டும். அது மிக இலகுவானது. யோகமும் இலகுவானது. இதன் மூலமாகவே உங்கள் பாவங்கள் அழிக்கப்படுகின்றன. தந்தை கூறுகின்றார்: நான் ஒவ்வொரு கல்பத்திலும் வந்து, குழந்தைகளாகிய உங்களைத் தூய்மை ஆக்குவேன் என்று உத்தரவாதம் அளிக்கின்றேன். அங்கு, தூய்மையற்ற எவருமே இருக்க மாட்டார்கள். இந்த ஞானமும் மிக எளிமையானது. எவ்வாறு நீங்கள் 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றி வருகின்றீர்கள் என்ற இந்த ஞானமும் உங்கள் புத்தியில் உள்ளது. நீங்கள் 84 பிறவிகளின் சக்கரத்தில் சுற்றி வருகின்றீர்கள் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும். நம்பிக்கையில் வெற்றி உள்ளது. நீங்கள் 84 பிறவிகளையா அல்லது அதை விடக் குறைவான பிறவிகளையா எடுக்கின்றீர்கள் எனச் சந்தேகம் கொள்ளாதீர்கள். நீங்கள் பிராமணர்கள் என்பதால், உண்மையிலேயே 84 பிறவிகளின் சக்கரத்தில் சுற்றி வந்திருக்கின்றீர்கள் என்ற நம்பிக்கையைக் கொண்டிருக்க வேண்டும். இவ்விளக்கம் மிக இலகுவானது. தந்தை தெய்வீகக் காட்சி மூலமே இப்படங்கள் யாவற்றையும் செய்வித்தார் எனக் குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. அவர் அவற்றில் திருத்தமும் செய்வித்துள்ளார். ஆரம்ப காலத்தில், பாபா பெனாரஸில் ஏகாந்தத்தில் இருக்கும்பொழுது, சுவரில் வட்டங்களை வரைவார். அவற்றின் அர்த்தத்தை அவர் புரிந்து கொள்ளவில்லை. ஆனாலும், அவர் சந்தோஷத்தை அனுபவம் செய்தார். அவருக்குக் காட்சிகள் கிடைத்த பொழுது, அவருக்கு பறப்பது போன்றிருந்தது. என்ன நடந்தது என்பதை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆரம்பத்தில் செய்யப்பட்ட படங்கள் யாவும் திருத்தங்கள் செய்யப்பட்டு, மீண்டும் உருவாக்கப்பட்டன. இப்பொழுது புதிய படங்களும் சென்ற கல்பத்தில் உருவாக்கப்பட்டதைப் போன்றே தொடர்ந்தும் உருவாக்கப்பட வேண்டும். ஏணிப்படம் எவ்வளவு அழகானது எனப் பாருங்கள்! இதை விளங்கப்படுத்துவது மிக இலகுவானது. தாமதமாக வருபவர்கள் மேலும் இலகுவான விளக்கத்தைப் பெறுவார்கள். இப்பொழுது புதிதாக வருபவர்களும் ஏழு நாட்களிலேயே முழு ஞானத்தையும் புரிந்து கொள்கிறார்கள். அவர்கள் பழையவர்களிலும் பார்க்க முன்னேறிச் செல்கிறார்கள். சிலர் தாங்கள் முன்னரே வந்திருந்தால், நன்றாக இருந்திருக்கும் எனக் கூறுகிறார்கள். அதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். நீங்கள் ஆரம்பத்திலேயே பாபாவிடம் வந்துவிட்டு, பின்னர் பாபாவை விட்டுச் சென்றிருந்தால் என்ன நடந்திருக்கும்? தாமதமாக வருபவர்கள் இலகுவாகவே ஒரு சிம்மாசனத்தைப் பெறுகின்றார்கள். ஆரம்பத்தில் வந்த சிலர் இப்பொழுது இங்கில்லை; அவர்கள் முற்றாகவே விட்டுச் சென்று விட்டார்கள். யார் சித்தி அடைந்துள்ளார்கள் என்ற பெறுபேறுகளை நீங்கள் இறுதியில் அறிந்து கொள்வீர்கள். புதியவர்கள் வந்து விரைவாகவே தங்களைச் சேவையில் ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். பழையவர்கள் அந்தளவிற்குச் செய்வதில்லை. புதிதாக வருகின்ற, புதல்விகளும் தாங்கள் செய்கின்ற சேவையால் பாபாவின் இதயத்தில் அமர்ந்திருக்கிறார்கள். பழையவர்களில் பலர் இப்பொழுது இல்லாமல் போய் விட்டார்கள். இதனாலேயே பாபா கூறுகின்றார்: பிராமணக் குலத்தின் மிக மேன்மையான அலங்காரங்களாக இருந்த சிலரும் இந்த ஞானத்தினால் வியப்படைந்து, அதனைச் செவிமடுத்த பின்னர் சென்று விட்டார்கள். நினைவு கூரப்பட்டவை யாவும் இப்பொழுது நடைமுறையில் இடம்பெறுகின்றன. அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்களையே சோதித்துப் பாருங்கள். நீங்கள் மிக மிக இனிமையானவர் ஆகிவிட்டீர்களா எனச் சோதித்துப் பாருங்கள். நான் எதில் குறைவாக இருக்கின்றேன்? நான் அனைத்துத் தெய்வீகக் குணங்களையும் கிரகித்து விட்டேனா? உங்களின் நடத்தை தேவர்களைப் போன்றிருக்க வேண்டும். தூய்மையற்ற உணவையும், பானத்தையும் விட்டு விடுங்கள்.2. பயனற்ற விடயங்கள் எதனையும் செவிமடுக்கவோ அல்லது கூறவோ வேண்டாம். சகிப்புத் தன்மையுடன் இருங்கள்.
ஆசீர்வாதம்:
உங்களுடைய விழிப்புணர்வை, மனோபாவத்தை, பார்வையை அலௌகீகம் ஆக்கி, அனைத்து கவர்ச்சிகளில் இருந்தும் விடுபடுவீர்களாக.கூறப்பட்டுள்ளது: உங்கள் எண்ணங்கள் எதுவோ, அதுவே உங்கள் உலகமாகும், உலகைப் புதியதாக ஆக்குவதற்கு கருவிகளாக இருக்கின்ற விசேட ஆத்மாக்களின் ஒவ்வோர் எண்ணமும் மேன்மையானதாக இருக்கட்டும். அதாவது, அவை அலௌகீகமாக இருக்க வேண்டும். உங்கள் விழிப்புணர்வு, மனோபாவம், பார்வை அனைத்தும் அலௌகீகம் ஆகும் போது, இந்த உலகைச் சேர்ந்த எந்த மனிதர் அல்லது பொருட்கள் உங்களைத் தம்பால் கவர முடியாது. ஏதாவது ஒன்று உங்களைக் கவருமாயின், நிச்சயமாக உங்களின் ஆன்மிகத்தில் ஏதோ தவறவிடப்பட்டுள்ளது. அலௌகீக (ஆன்மீக) ஆத்மாக்கள் அனைத்துக் கவர்ச்சிகளில் இருந்தும் விடுபட்டவர்கள்.
சுலோகம்:
உங்கள் இதயத்தில் இறை அன்பையும் அவரின் சக்திகளையும் அமிழ்த்திக் கொண்டால், உங்கள் மனம் என்றுமே குழப்பம் அடையாது.அவ்யக்த சமிக்ஞை: தூய்மையற்றதன் விதையை முடித்து, முற்றிலும் சுத்தமானவராக (தூய்மையானவராக) ஆகுங்கள்.
முழுமையான உண்மை தூய்மையின் அடிப்படையிலேயே உள்ளது. தூய்மை இல்லாத போது, நிலையான உண்மை இருக்க மாட்டாது. காம விகாரம் மாத்திரம் தூய்மையின்மை அல்ல. ஏனெனில் அதனுடன் ஏனைய சகபாடிகளும் உள்ளன. எனவே, உண்மையிலேயே தூய்மையாக இருப்பது என்றால் தூய்மையின்மையின் பெயரோ அல்லது சுவடோ இல்லாதிருப்பதாகும்.