29.10.24 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, ஆத்மாவில் இருந்து விகாரங்களாகிய குப்பைகளை அகற்றி, ஒரு தூய்மையான மலராகுங்கள். தந்தையின் நினைவைக் கொண்டிருப்பதன் மூலமே அனைத்துக் குப்பைகளும் அகற்றப்படும்.
பாடல்:
தூய்மையாகுகின்ற குழந்தைகள், எந்த ஒரு விடயத்தில் தந்தையைப் பின்பற்ற வேண்டும்?பதில்:
தந்தை மிக மிகத் தூய்மையானவர். அழுக்குகளினால் தூய்மையற்றவர்கள் ஆகுகின்ற ஆத்மாக்களுடன் அவர் கலப்பதில்லை; அவர் மிகவும் புனிதமானவராக இருக்கின்றார். அதேபோன்று தூய்மையாகுகின்ற குழந்தைகளாகிய நீங்களும் தந்தையைப் பின்பற்ற வேண்டும். தீயவற்றைப் பார்க்காதீர்கள்.ஓம் சாந்தி.
தந்தை இங்கமர்ந்திருந்து, குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இருவருமே தந்தையர்கள். ஒருவர் ஆன்மீகத் தந்தை என அழைக்கப்படுகின்றார். மற்றையவர் பௌதீகத் தந்தை என அழைக்கப்படுகின்றார். இருவருடைய சரீரமும் ஒன்றென்பதால், இரு தந்தையருமே விளங்கப்படுத்துவதைப் போன்றுள்ளது. ஒருவர் விளங்கப்படுத்துகின்றார், மற்றவர் புரிந்துகொள்கின்றார் என்றாலும், இருவருமே விளங்கப்படுத்துகிறார்கள் என்றே கூறப்படும். அத்தகைய சின்னஞ்சிறிய ஆத்மாவில் அதிகளவு அழுக்கு சேகரிக்கப்பட்டுள்ளது. அழுக்கானது சேகரிக்கப்படும்பொழுது, அதிகளவு இழப்பு ஏற்படுகின்றது. ஆத்மாக்கள் தங்கள் சரீரங்களில் இருக்கும்பொழுதே, இந்த இலாப, நஷ்டத்தைப் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. ஆத்மாக்களாகிய நாங்கள் தூய்மையாகும்பொழுது, இலக்ஷ்மி, நாராயணன் போன்று, தூய்மையான சரீரங்களைப் பெறுவோம் என்பது உங்களுக்குத் தெரியும். இப்பொழுது, ஆத்மாக்களில் அதிகளவு அழுக்கு சேகரிக்கப்பட்டுள்ளது. தேன் சேகரிக்கப்படும்பொழுது, அது வடிக்கப்பட்டு அதிலிருந்து அதிகளவு அழுக்குகள் அகற்றப்பட்டுத் தூய்மையான தேன் பிரித்தெடுக்கப்படுகின்றது. ஆத்மாக்களும் மிகவும் அழுக்கானவர்கள் ஆகுகின்றனர். ஆத்மா சுத்தமானவராகவும், முற்றிலும் தூய்மையானவராகவும் இருந்ததுடன், அவருடைய சரீரமும் மிகவும் அழகானதாக இருந்தது. இலக்ஷ்மி, நாராயணனுடைய சரீரங்கள் எவ்வளவு அழகானவை எனப் பாருங்கள். மக்கள் சரீரங்களை மாத்திரமே வழிபடுகின்றார்கள்; அவர்கள் ஆத்மாக்களைப் பார்ப்பதில்லை. அவர்கள் ஆத்மாவை இனங்கண்டு கொள்வதில்லை. ஆத்மாக்கள் ஆரம்பத்தில் அழகானவர்களாக இருந்ததுடன், தூய்மையான சரீரங்களையும் அவர்கள் பெற்றிருந்தனர். நீங்களும் இப்பொழுது அவர்களைப் போன்று ஆகவேண்டுமென விரும்புகின்றீர்கள். எனவே ஆத்மாக்கள் மிகவும் தூய்மையானவர்கள் ஆகவேண்டும். ஆத்மா குப்பைகளால் நிறைந்துள்ளதால், தமோபிரதான் எனப்படுகின்றார். அவர் சரீர உணர்வு எனும் குப்பையுடன் காமம், கோபத்தையும் கொண்டிருக்கின்றார். ஏதாவதொன்றிலிருந்து குப்பைகளை அகற்றுவதற்கு, அது வடிகட்டப்படுகின்றது. ஏதோ ஒன்று வடிகட்டப்படும்பொழுது, அதன் நிறம் மாற்றம் அடைகின்றது. நீங்கள் அமர்ந்திருந்து இது பற்றி மிக நன்றாகச் சிந்திப்பீர்களாயின், உங்களுக்குள் பெருமளவு குப்பை இருப்பதை உணர்வீர்கள். ஆத்மாக்களில் இராவணன் இருக்கின்றான். இப்பொழுது நீங்கள் தந்தையின் நினைவில் இருப்பதனால், குப்பைகள் அகற்றப்படுகின்றன. இதற்கும் காலம் எடுக்கின்றது. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: சரீர உணர்வைக் கொண்டிருப்பதால், விகாரங்களாகிய குப்பை அதிகளவில் இருக்கின்றது. கோபம் எனும் குப்பையும் குறைந்ததல்ல. கோபம் கொண்ட ஒருவர் உள்ளே எரிவதைப் போன்றே இருக்கின்றார். ஏதாவது ஒரு விடயத்தால் அவருடைய இதயம் எரிகின்றது. அவருடைய முகம் கூட செப்பு போன்று செந்நிறம் ஆகுகின்றது. ஆத்மாக்களாகிய நீங்கள் எரிந்து விட்டீர்கள் என்பதை இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். ஆத்மாக்களில் எவ்வளவு அழுக்கு இருக்கின்றது என்பதை இப்பொழுது நீங்கள் அறிவீர்கள். மிகக் குறைந்தளவினரே இவ்விடயங்களைப் புரிந்துகொள்கின்றார்கள். இதில் முதற்தரமான மலர்கள் தேவைப்படுகின்றார்கள். பல குறைபாடுகளும் இப்பொழுது இருக்கின்றன. நீங்கள் அனைத்துப் பலவீனங்களையும் அகற்றி, முற்றிலும் தூய்மையானவர்கள் ஆகவேண்டும். இந்த இலக்ஷ்மியும், நாராயணனும் மிகவும் தூய்மையானவர்கள். உண்மையில் அவர்களைத் தொடுவதற்கு எவருக்கும் உரிமை கிடையாது. தூய்மையற்றவர்களால் அப்படிப்பட்ட மேன்மையான தூய தேவ விக்கிரகங்களைச் சென்று தொட முடியாது. தூய்மையானவர்களைத் தொடுவதற்கான தகுதி அவர்களுக்குக் கிடையாது. எவராலும் சிவனைத் தொட முடியாது. அவர் அசரீரியானவர். எனவே, அவரைத் தொட முடியாது. அவர் அதி தூய்மையானவர். அப்படிப்பட்ட ஒரு சின்னஞ்சிறிய புள்ளியை எவராலும் தொட முடியாது என்பதால், மக்கள் அவருடைய பெரிய உருவத்தை வைத்திருகின்றார்கள். ஆத்மா ஒரு சரீரத்தினுள் பிரவேசிக்கும் பொழுது, சரீரம் வளர்ச்சி அடைகின்றது; ஆத்மா பெரியதாகவோ, சிறியதாகவோ ஆகுவதில்லை. இது குப்பைகளைக் கொண்ட உலகமாகும். ஆத்மாக்களில் அதிகளவு குப்பை இருக்கின்றது. சிவபாபா மிகவும் புனிதமானவர், அவர் மிகவும் தூய்மையானவர். இங்கு அனைவரும் ஒரேமாதிரி ஆக்கப்பட்டுள்ளனர். “நீங்கள் ஒரு மிருகத்தைப் போன்றவர்!” என அவர்கள் ஒருவருக்கொருவர் கூறுகின்றனர். இப்படிப்பட்ட வார்த்தைகள் சத்தியயுகத்தில் உபயோகிக்கப்படுவதில்லை. ஆத்மாக்களாகிய உங்களில் பெருமளவு அழுக்கு சேர்க்கப்பட்டுள்ளது என்பதை இப்பொழுது நீங்கள் உணர்கின்றீர்கள். ஆத்மாக்கள் தந்தையை நினைவுசெய்வதற்கு இப்பொழுது தகுதியானவர்கள் இல்லை. மாயையும் ஆத்மாக்களைத் தகுதியற்றவர்களாகக் கருதி, அவர்களை ஒரு பக்கமாகத் தள்ளிவிடுகின்றாள். தந்தை மிகவும் புனிதமானவர்! ஆத்மாக்களாகிய நாங்கள் எவ்வாறாக இருந்ததிலிருந்து இப்பொழுது எப்படியாகி இருக்கின்றோம் எனப் பாருங்கள்! தந்தை இப்பொழுது விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் வந்து ஆத்மாக்களைத் தூய்மையாக்குங்கள் எனக் கூவி அழைத்தீர்கள். ஆத்மாக்கள் பெருமளவு குப்பைகளால் நிரப்பப்பட்டிருக்கின்றனர். ஒரு தோட்டத்தில் உள்ள அனைத்து மலர்களும் முதற் தரமானவையாக இருக்கும் என்றில்லை; அவை வரிசைக்கிரமமானவை. தந்தையே தோட்டத்தின் அதிபதியாவார். ஆத்மாக்கள் மிகவும் தூய்மையானவர்கள் ஆகுகின்றார்கள். பின் அவர்கள் மிகவும் அழுக்கானவர்கள் ஆகுகின்றார்கள்! அவர்கள் முட்களைப் போன்று ஆகுகின்றார்கள். ஆத்மாக்களில் சரீர உணர்வு, காமம், கோபம் என்ற குப்பைகள் இருக்கின்றன. மனிதர்கள் தங்களுக்குள் அதிகளவு கோபத்தைக் கொண்டிருக்கின்றார்கள். நீங்கள் தூய்மையாகும்பொழுது, எவரது முகத்தையும் பார்க்க விரும்ப மாட்டீர்கள் - தீயவற்றைப் பார்க்காதே. நீங்கள் தூய்மையற்ற மனிதர்களையும் கூட பார்க்கக்கூடாது. ஆத்மாக்கள் தூய்மையாகி, தூய, புதிய சரீரங்களைப் பெறும்பொழுது, அவர்கள் ஒருபொழுதும், எந்தவிதமான குப்பைகளையும் பார்க்க மாட்டார்கள்; குப்பைகளின் உலகம் முடிவடைகின்றன. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் சரீர உணர்வுடையவர்கள் ஆகுவதனால், அத்தகையதொரு குப்பையாகி விட்டீர்கள். நீங்கள் தூய்மையற்றவர்கள் ஆகியுள்ளீர்கள். குழந்தைகள் கூவி அழைக்கின்றார்கள்: பாபா, நான் கோபம் எனும் தீய ஆவியை என்னில் கொண்டிருக்கின்றேன். பாபா நான் தூய்மையாகுவதற்காக உங்களிடம் வந்துள்ளேன். தந்தை சதா தூய்மையானவர் என்பதை நீங்கள் அறிவீர்கள். மக்கள் அதி உயர்ந்த அதிகாரியைச் சர்வவியாபகர் என அழைப்பதன் மூலம் இகழ்கின்றனர். நீங்கள் இப்பொழுது உங்கள் மீதே விருப்பமின்மையைக் கொண்டிருக்கின்றீர்கள், ஏனெனில் நீங்கள் எவ்வாறு இருந்தீர்கள், இப்பொழுது என்னவாக ஆகியுள்ளீர்கள் என்பதை உங்களால் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இவ்விடயங்களைப் புரிந்துகொள்கின்றீர்கள். வேறு எந்த ஆன்மீக ஒன்றுகூடலிலோ அல்லது பல்கலைக்கழகம் போன்றவற்றிலோ எவராலும் இந்த இலட்சியத்தையும் இலக்கையும் விளங்கப்படுத்த முடியாது. ஆத்மாக்கள் எவ்வாறு தொடர்ந்தும் அழுக்குகளைச் சேர்த்துக் கொண்டார்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். இரண்டு கலைகள் குறைவடைந்து, பின்னர் நான்கு கலைகள் எனக் குறைந்து, இவ்வாறாக ஆத்மாக்கள் தொடர்ந்தும் குப்பைகளை நிரப்பிக் கொண்டார்கள். இதனாலேயே அவர்கள் தமோபிரதானமானவர்கள் என அழைக்கப்படுகின்றனர். சிலர் பேராசையிலும், சிலர் பற்றிலும் எரிந்து மரணிக்கின்றார்கள். அவர்கள் அந்த ஸ்திதியிலேயே எரிந்து மரணிப்பார்கள். குழந்தைகளாகிய நீங்கள், உங்களை அவர்களைப் போன்று ஆக்குகின்ற, சிவபாபாவின் நினைவில் உங்கள் சரீரங்களை நீக்க வேண்டும். தந்தை இலக்ஷ்மி நாராயணனை அவ்வாறு ஆக்கினார். எனவே, நீங்கள் மிகவும் கவனமாக இருந்தாக வேண்டும். புயல்கள் பல வரும். மாயையின் புயல்கள் மாத்திரமே உள்ளன் வேறு எவ்விதப் புயல்களும் கிடையாது. அதேபோன்று அவர்கள் சமயநூல்களில் அனுமான் போன்றோரின் கதைகளைக் கொண்டிருக்கின்றார்கள். கடவுளே சமயநூல்களை உருவாக்கினார் என அவர்கள் கூறுகின்றார்கள். அனைத்து வேதங்களினதும், சமயநூல்களினதும் சாராம்சத்தைக் கடவுள் பேசுகின்றார். கடவுளே, சற்கதியை அருளினார். எனவே, அவர் ஏன் சமயநூல்களை எழுத வேண்டும்? தந்தை கூறுகின்றார்: தீயவற்றைக் கேட்காதீர்கள்! அச் சமயநூல்கள் போன்றனவற்றின் மூலம் உங்களால் மேன்மையானவர்கள் ஆக முடியாது. நான் அவை அனைத்திலிருந்தும் வேறுபட்டவன். எவரும் என்னை இனங்கண்டு கொள்வதில்லை. தந்தை என்னவாக இருக்கின்றார் என எவருக்குமே தெரியாது. தந்தை அவருடைய சேவையை யார் செய்கின்றார்கள் என அறிவார். அதாவது, எவர் பரோபகாரி ஆகுவதுடன், ஏனையோருக்கும் நன்மையைச் செய்கின்றார்களோ, அவர்கள் தந்தையின் இதயத்தில் அமர்ந்திருக்கின்றார்கள். சிலர் சேவையைப் பற்றி எதுவுமே அறியாதவர்களாக இருக்கின்றார்கள். உங்களை ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை நினைவுசெய்ய வேண்டும் என்ற ஞானத்தைக் குழந்தைகளாகிய நீங்கள் பெற்றுள்ளீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையாகினாலும், உங்கள் சரீரங்கள் இன்னமும் தூய்மையற்றவையாகவே உள்ளன. தூய்மையாகிய ஆத்மாக்களுடைய செயற்பாடுகளுக்கும், தூய்மையாகாதவர்களின் செயற்பாடுகளுக்கும் இடையே பகலுக்கும், இரவுக்கும் இடையிலான வித்தியாசம் இருக்கின்றது. அதனை அவர்களுடைய நடத்தையின் மூலம் அறிந்துகொள்ள முடியும். எவருடைய பெயரும் குறிப்பிடப்படவில்லை. எவருடைய பெயராவது குறிப்பிடப்பட்டிருப்பின், அவர்கள் மேலும் மோசமானவர்களாகி விடக்கூடும். நீங்கள் எப்படி இருந்தீர்கள், இனி எப்படி ஆக வேண்டியவர்களாக இருக்கின்றீர்கள் என்பதற்கிடையிலான வித்தியாசத்தை இப்பொழுது உங்களால் பார்க்க முடியும். எனவே, நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். உங்களின் உள்ளே நிறைந்திருக்கும் அனைத்துக் குப்பைகளும் அகற்றப்பட வேண்டும். லௌகீக உறவு முறைகளிலும் கூட, ஒரு தந்தை தனது அழுக்கான குழந்தைகளைப் பார்த்துச் சலிப்படைகின்றார். இப்படி ஒரு குழந்தை இருப்பதிலும் பார்க்க இல்லாதிருந்தால் மிக நன்றாக இருக்கும் என அவர் கூறுவார். ஒரு மலர்த் தோட்டத்தில் நறுமணம் இருக்கின்றது. எவ்வாறாயினும், நாடகத்தின்படி அங்கு குப்பையும் இருக்கின்றது. அக் (எருக்கலம்) மலரை எவரும் பார்க்கக்கூட விரும்ப மாட்டார்கள். எவ்வாறாயினும், நீங்கள் ஒரு தோட்டத்தினுள் செல்லும்பொழுது, உங்கள் பார்வை அனைத்து மலர்கள் மீதும் விழும். இவர் அப்படிப்பட்ட ஒரு மலர் என ஆத்மா கூறுவார். நீங்கள் சிறந்த மலர்களில் இருந்து நறுமணத்தை எடுப்பீர்கள். சில ஆத்மாக்கள் எவ்வளவு தூரம் நினைவு யாத்திரையில் இருக்கின்றார்கள் எனவும், அவர்கள் எவ்வளவு தூய்மையானவர்களாகி இருக்கின்றார்கள் எனவும், அவர்கள் எவ்வாறு தங்களைப் போல ஏனையோரையும் தூய்மை ஆக்குகின்றார்கள் என்பதுடன், அவர்கள் எவ்வளவு ஞானத்தையும் உரைக்கின்றார்கள் என்பதைத் தந்தை பார்க்கின்றார். முக்கியமான விடயம் ‘மன்மனாபவ’ என்பதாகும். தந்தை கூறுகின்றார்: என்னை நினைவுசெய்யுங்கள், நீங்கள் ஒரு தூய மலர் ஆகுவீர்கள். இலக்ஷ்மியும், நாராயணனும் அப்படிப்பட்ட தூய மலர்கள் ஆவார்கள். சிவபாபா அதனையும் விட மிகவும் புனிதமானவர். இலக்ஷ்மி நாராயணனை அவ்வாறு ஆக்கியது சிவபாபா என்பதை மக்கள் அறியார்கள். இந்த முயற்சியைச் செய்தே அவர்கள் அவ்வாறு ஆகினார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். தந்தை பெருமளவில் விளங்கப்படுத்துகின்றார். முதலாவதாக நீங்கள் நினைவு யாத்திரையில் இருத்தல் வேண்டும். அதன் மூலம் குப்பைகள் அகற்றப்படுவதுடன், ஆத்மாக்களாகிய நீங்களும் தூய்மையாகுவீர்கள். பலர் உங்களைப் பார்க்க அருங்காட்சியகம் போன்ற இடங்களுக்கு வருவார்கள். குழந்தைகளாகிய நீங்கள் சேவை செய்வதற்குப் பெருமளவு ஆர்வத்தைக் கொண்டிருக்க வேண்டும்;. நீங்கள் சேவை செய்வதைத் துறந்து நித்திரைக்குச் செல்லக்கூடாது. நீங்கள் சேவையில் மிகச் சரியானவர்களாக இருத்தல் வேண்டும். நீங்கள், அருங்காட்சியகங்களிலும் உங்களுடைய ஓய்வுக்காக நேரத்தை எடுத்துக் கொள்கின்றீர்கள். உங்களுடைய தொண்டை களைப்படைந்து விடுகின்றது. நீங்கள் உணவு உண்ணவும் வேண்டும். ஆனால், பகலும், இரவும் உங்களிடம் வருகின்ற எவருக்கும் பாதையைக் காட்ட வேண்டும் என்ற உற்சாகத்தை நீங்கள் உங்களுக்குள் கொண்டிருக்க வேண்டும். உணவு நேரத்தில் மக்கள் வருவார்களாயின், முதலில் அவர்களைக் கவனித்துப் பின்னரே நீங்கள் உங்கள் உணவை உண்ண வேண்டும். நீங்கள் அப்படிப்பட்ட சேவையைச் செய்பவர்களாக இருக்க வேண்டும். சிலர் பெருமளவு சரீர உணர்வைக் கொண்டிருக்கின்றார்கள். அதனால் அவர்கள் ஓய்வை விரும்புகின்ற பிரபுக்களாக இருக்கின்றார்கள். தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்த வேண்டியுள்ளது: இந்த பிரபுத்தனத்தைத் துறந்து விடுங்கள்! தந்தை காட்சிகளையும் அருள்வார்: உங்களுடைய அந்தஸ்தைப் பாருங்கள். நீங்களே சரீர உணர்வு என்ற கோடரியை உங்கள் பாதங்களில் இடுகின்றீர்கள். பல குழந்தைகள் பாபாவுடன் போட்டி இடுகின்றார்கள். ஆ! இது சிவபாபாவினுடைய இரதம். அது பராமரிக்கப்பட வேண்டும். வைத்தியர்களிடம் பெருமளவு மருந்தை எடுக்கின்ற சிலர் இங்கு இருக்கின்றார்கள். பாபா கூறுகின்றார்: நீங்கள் உங்களுடய சரீரத்தை ஆரோக்கியமானதாக வைத்திருத்தல் வேண்டும். ஆனால் உங்களுடைய ஸ்திதியையும் நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் பாபாவினுடைய நினைவில் உண்பீர்களாயின், எதுவும் உங்களுக்கு எந்தக் கெடுதலையும் உண்டாக்காது. நினைவின் மூலம் நீங்கள் சக்தியால் நிரப்பப்படுவீர்கள். உங்கள் உணவும் மிகவும் தூய்மையானதாகும். எவ்வாறாயினும், நீங்கள் இன்னமும் அந்த ஸ்திதியைக் கொண்டிருக்கவில்லை. பாபா கூறுகின்றார்: பிராமணர்களால் தயாரிக்கப்படும் உணவு அதி உயர்ந்தது. ஆனால், அவர்கள் நினைவில் இருந்து அதனைத் தயாரிக்கும்பொழுது மாத்திரமே அது அவ்வாறிருக்கும். நினைவில் இருந்து உணவு தயாரிக்கும்பொழுது, அதனைத் தயாரிப்பவர்களும் நன்மை அடைவதுடன், அதனை உண்பவர்களும் நன்மை அடைகின்றார்கள். 'அக்" மலர்கள் போன்று பலர் இருக்கின்றார்கள். அந்த அப்பாவி மக்கள் எத்தகைய அந்தஸ்தைக் கோருவார்கள்? தந்தை அவர்கள் மீது கருணை கொண்டவராக இருக்கின்றார். எவ்வாறாயினும், சிலர் பணிப்பெண்களாகவும் வேலையாட்களாகவும் ஆகுவது நிச்சயிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஆகுவதையிட்டு நீங்கள் சந்தோஷமடைந்து விடக்கூடாது. சிலர் தாம் அவ்வாறு ஆகவேண்டும் என்பதனையே சிந்திப்பதில்லை! பணிப்பெண்களாகவும், வேலையாட்களாகவும் ஆகுவதற்குப் பதிலாக நீங்கள் செல்வந்தர்கள் ஆகுவது சிறந்தது. அப்பொழுது நீங்கள் பணிப்பெண்களையும், வேலையாட்களையும் கொண்டிருப்பீர்கள். தந்தை கூறுகின்றார்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள், என்னை நினைவுசெய்வதனால், சந்தோஷத்தைப் பெறுங்கள். பக்தர்கள் அமர்ந்திருந்து உருட்டுவதற்காக மாலையை உருவாக்குகின்றார்கள். இதுவே பக்தர்களுடைய வேலையாகும். தந்தை கூறுகின்றார்: உங்களை நீங்கள் ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை நினைவுசெய்யுங்கள், அவ்வளவேதான். நீங்கள் மந்திரங்களை ஓதவோ, மாலைகளை உருட்டவோ வேண்டியதில்லை. நீங்கள் தந்தையை அறிந்து, அவரை நினைவுசெய்தல் வேண்டும். நீங்கள் உங்கள் உதடுகள் மூலமாக 'பாபா, பாபா" எனக் கூற வேண்டியதில்லை. அவர் ஆத்மாக்களாகிய எங்களுடைய எல்லையற்ற தந்தை என்பதை நீங்கள் அறிவீர்கள். அவரை நினைவுசெய்வதனால், நாங்கள் சதோபிரதான் ஆகுவோம். அதாவது, ஆத்மாக்களாகிய நாங்கள் தூய்மையாகுவோம். இது மிகவும் இலகுவானது. எவ்வாறாயினும், இது ஒரு யுத்தகளம்; நீங்கள் மாயையுடன் யுத்தம் செய்ய வேண்டியுள்ளது. அவள் உங்களுடைய புத்தியின் யோகத்தை மீண்டும், மீண்டும் துண்டித்து விடுகின்றாள். விநாச நேரத்தில் ஒருவர் எந்தளவிற்கு அன்பான புத்தியைக் கொண்டிருக்கின்றாரோ, அந்தளவிற்கு ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவார். நீங்கள் ஒரேயொருவரைத் தவிர வேறு எவரையும் நினைவுசெய்யக்கூடாது. சென்ற கல்பத்திலும் கூட சிலர் வெளிப்பட்டு, வெற்றி மாலையின் மணிகள் ஆகினார்கள். உருத்திர மாலையானது, பிராமணக் குலத்திற்கு உரியவர்களும், பெருமளவு மறைமுகமான முயற்சியைச் செய்பவர்களுமாகிய பிராமணர்களுக்கு உரியது. ஞானமும் மறைமுகமானது. தந்தை ஒவ்வொருவரையும் மிக நன்றாக அறிவார். மிகவும் சிறந்தவர்களாகக் கருதப்பட்டவர்கள், இன்று இங்கில்லை. பெருமளவு சரீர உணர்வு உள்ளது. அதனால், அவர்கள் தந்தையின் நினைவைக் கொண்டிருக்க முடியாதவர்களாக உள்ளனர். மாயை அவர்களை மிகவும் கடுமையாக அறைந்து விடுகின்றாள். மிகவும் குறைந்தளவினரைக் கொண்டே மாலை உருவாக்கப்பட முடியும். எனவே, தந்தை இன்னமும் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் எப்படிப்பட்ட தூய்மையான தேவர்களாக இருந்தீர்கள், பின் எவ்வாறு அந்நிலையில் இருந்து குப்பை போன்று ஆகினீர்கள் எனத் தொடர்ந்தும் உங்களைப் பாருங்கள். இப்பொழுது நீங்கள் சிவபாபாவைக் கண்டுகொண்டு விட்டீர்கள். எனவே, நீங்கள் அவருடைய வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும். நீங்கள் சரீரதாரிகளை நினைவுசெய்யக்கூடாது. நீங்கள் வேறு எவரையும் நினைவுசெய்யக்கூடாது. நீங்கள் எவரது படத்தையும் வைத்திருக்கக்கூடாது. ஒரே ஒரு சிவபாபாவின் நினைவு மாத்திரம் இருக்கட்டும். சிவபாபாவிற்கென ஒரு சரீரம் கிடையாது. நான் தற்காலிகமாக இவரது சரீரத்தைக் கடனாக எடுக்கின்றேன். அவர் உங்களை இலக்ஷ்மி நாராயணன் போன்று தேவர்கள் ஆக்குவதறகு அதிகளவு முயற்சி செய்கின்றார். தந்தை கூறுகின்றார்: நீங்கள் தூய்மையற்ற உலகிற்கு என்னை அழைத்தீர்கள். நான் உங்களைத் தூய்மை ஆக்குகின்றேன். இருந்தும், நீங்கள் என்னைத் தூய உலகிற்கு அழைப்பதில்லை! அவர் அங்கு என்ன செய்வார்? அனைவரையும் தூய்மையாக்குவதே அவருடைய சேவையாகும். நீங்கள் மிகவும் எரிந்ததனால், மரத்தினது கரி போன்று ஆகிவிட்டீர்கள் என்பதைத் தந்தை அறிவார். தந்தை உங்களை அழகானவர்கள் ஆக்குவதற்காக வந்துள்ளார். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. சேவையில் மிகச்சரியானவர்களாக இருங்கள், பகலும், இரவும் சேவைக்கான உற்சாகம்; இருக்கட்டும். ஒருபொழுதும் சேவையைத் துறந்து ஓய்வெடுக்கச் செல்லாதீர்கள். தந்தையைப் போன்று பரோபகாரியாகுங்கள்.2. ஒரேயொருவரின் நினைவைக் கொண்டிருப்பதனால், ஓர் அன்பான புத்தியைக் கொண்டவர்களாகி, உங்களிடம் உள்ள குப்பைகளை அகற்றி விடுங்கள். ஒரு நறுமணமுள்ள மலர் ஆகுங்கள். இந்தக் குப்பைகளின் உலகத்தின் மீது உங்கள் இதயத்தில் பற்று வைக்காதீர்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் மனதையும் புத்தியையும் உங்களின் மேன்மையான ஸ்திதி என்ற ஆசனத்தில் ஸ்திரப்படுத்தி, தபஸ்யா சொரூபம் ஆகுவீர்களாக.ஒரு தபஸ்வி எப்போதும் ஏதாவதோர் ஆசனத்தில் அமர்ந்திருந்த வண்ணம் தவம் செய்பவர் ஆவார். தபஸ்வி ஆத்மாக்களான உங்களின் ஆசனம், உங்களின் ஸ்திரமான, தேவதை ஸ்திதியாகும். இந்த மேன்மையான ஸ்திதியில் உங்களை ஸ்திரப்படுத்திக் கொள்வதென்றால், உங்களின் ஆசனத்தில் அமர்ந்திருத்தல் என்று அர்த்தம். பௌதீகமான சரீரம் பௌதீகமான ஆசனத்தில் அமர்ந்திருக்கும். ஆனால், நீங்கள் உங்களின் மனதையும் புத்தியையும் இந்த மேன்மையான ஆசனத்தில் இருக்கச் செய்கிறீர்கள். அந்தத் தபஸ்விகள் ஒற்றைக் காலில் நிற்கிறார்கள். ஆனால், நீங்களோ உங்களை நிலையான, ஸ்திரமான ஸ்திதியில் ஸ்திரப்படுத்திக் கொள்கிறீர்கள். அவர்களுடைய ஹத்த யோகம். ஆனால் உங்களுடையதோ, இலகு யோகம்.
சுலோகம்:
அன்புக் கடலான தந்தையின் குழந்தைகளான நீங்கள், அன்பு கங்கைகளால் நிரம்பியிருங்கள்.