29.10.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, எல்லையற்ற தந்தை, குழந்தைகளாகிய உங்களைத் திரும்பவும் தன்னுடன் அழைத்துச் செல்வதற்கு வந்துள்ளார். ஆகவே, இப்பொழுது தந்தைக்கு உரியவராகி, அவருடைய ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள்.
கேள்வி:
தந்தை தனது குழந்தைகளின் பாக்கியத்தை மேன்மை ஆக்குவதற்குக் கொடுக்கும் மேன்மையான வழிகாட்டல்கள் எவை?பதில்:
இனிய குழந்தைகளே, மரணம் வரும் முன்னர், இயன்றளவுக்கு நினைவில் நிலைத்திருப்பதற்கு முயற்சி செய்யுங்கள். இதனூடாகவே நீங்கள் ஒரு வருமானத்தைச் சம்பாதிப்பீர்கள். என்னுடைய குழந்தையாகிய பின்னர், தவறுதலாகவேனும் எந்தப் பாவச் செயலையும் செய்யாதீர்கள். மாயையின் புயல்கள் எத்தனை வந்தாலும் பரவாயில்லை, ஒருபொழுதும் தூய்மை அற்றவர்கள் ஆகாதீர்கள்.ஓம் சாந்தி.
கடவுள் சிவன் பேசுகிறார். சிவபாபாவே உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார் என்பதைக் குழந்தைகளான நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் சங்கமயுகத்தவர்கள், சிவபாபாவின் முன்னிலையில் நேரடியாக அமர்ந்திருக்கிறீர்கள். கலியுகத்து அம்மக்கள் சென்று சிவபாபாவின் உயிரற்ற ஆலயங்களில் அமர்ந்திருக்கிறார்கள். நீங்கள் வித்தியாசத்தைப் புரிந்து கொள்கிறீர்கள், இல்லையா? குறைந்தபட்சம் சிறிதளவேனும் உங்கள் புத்தியிலுள்ள பூட்டுக்களைத் திறவுங்கள்! நீங்கள் உயிருள்ள சிவபாபாவின் முன்னிலையில் அமர்ந்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்கிறீர்கள். பாபா உங்களுடன் நேரடியாகப் பேசுகிறார். சிவபாபா பிரம்மாவினூடாக உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறார். மறுபுறத்தில், மனிதர்கள் சிவபாபாவைப் பூஜிக்கிறார்கள். அவர்கள் அவரைத் தேடி அமர்நாத்துக்கும், காசிக்கும் செல்கிறார்கள். நீங்கள் பரமாத்மாவாகிய பரமதந்தை என்று அழைக்கப்படுகின்ற, சிவபாபாவுடன் அமர்ந்திருக்கிறீர்கள் என்பதை ஏன் மீண்டும் மீண்டும் மறந்து விடுகிறீர்கள்? அவர் அதிகளவு புகழப்படுகிறார்! நீங்கள் அவரை அழைக்கிறீர்கள்: “பாபா, பாபா!” நீங்கள் சிவபாபாவின் வழிகாட்டல்களைப் பின்பற்றி, உலக அதிபதிகள் ஆகுதல் எனும் உங்கள் ஆஸ்தியைக் கோருகிறீர்கள் என்பதை அறிவீர்கள். அம்மக்கள் தொடர்ந்தும் ஆலயங்களுக்கும், யாத்திரைத் தலங்களுக்கும் சென்று தடுமாறித் திரிகிறார்கள். ஆனால், நீங்களோ உங்கள் ஆஸ்தியைக் கோருகிறீர்கள். அதில் எவ்வளவு வித்தியாசம் உள்ளதெனப் பாருங்கள்! உங்களுடன் ஒப்பிடுகையில், அவர்கள் முழுமையான மூடர்கள். சிவபாபா கூறுகிறார்: நான் உங்களுடைய கீழ்ப்படிவான சேவகன். நான் உங்களுக்கு ஆஸ்தியைக் கொடுப்பதற்கே வந்துள்ளேன். அவர்கள் தொடர்ந்தும் தந்தையாகிய கடவுளை அழைக்கிறார்கள். இங்கு, நீங்கள் நேரடியாகத் தந்தையாகிய கடவுளின் முன்னிலையில் அமர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் இங்கு இருக்கும் பொழுது, இது உங்கள் புத்தியில் உள்ளது. எனவே, நீங்கள் வீட்டுக்குத் திரும்பிச் செல்லும் பொழுது, ஏன் அதை மறந்து விடுகிறீர்கள்? இங்கு, இது உங்களுக்குப் பகல், ஆனால் அம்மக்களுக்கோ இது இரவாகும். அவர்கள் தொடர்ந்தும் கதறி அழுகிறார்கள், ஆனால் நீங்கள் அவரின் முன்னிலையில் நேரடியாக அமர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் கூறுகிறீர்கள்: நான் உங்களுடன் அமர்ந்திருக்கிறேன், நான் நீங்கள் கூறுவதைச் செவிமடுக்கிறேன். எவ்வாறாயினும், நீங்கள் வீட்டுக்குத் திரும்பிச் செல்லும் பொழுது, இதனை மறந்து விடுகிறீர்கள். மாயை மிகவும் சக்திவாய்ந்தவள். சிவபாபாவின் குழந்தைகளாகிய பின்னர், நீங்கள் பூஜிப்பவர்களில் இருந்து பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாக மாறுவதற்கு முயற்சி செய்கிறீர்கள். ஆனால் நீங்களும் வெளியே சென்று பூஜிப்பவர்கள் ஆகுகிறீர்கள்! நீங்கள் தொடர்ந்தும் சிவபாபாவின் உயிரற்ற ஆலங்களுக்குச் செல்கிறீர்கள். இங்கு, தந்தை விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளே, ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதனால் மாத்திரமே நீங்கள் மேன்மையானவர்கள் ஆகுவீர்கள். தூய்மையே பிரதான விடயம். அவர்கள் உயிரற்ற விக்கிரகங்களிடம் செல்வதுடன், தங்களைக் காசியில் அர்ப்பணிக்கிறார்கள். இங்கு நீங்கள் உயிர்வாழும் ரூபத்தில் அமர்ந்திருக்கிறீர்கள். இங்கு, உங்களைக் காசியில் அர்ப்பணிக்கின்ற கேள்வியே கிடையாது. இங்கு, இது மரணித்து வாழ்வதற்குரிய விடயம். தந்தை கூறுகிறார்: ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள்! நீங்கள் இங்கிருந்து வெளியே சென்றதும், தந்தையை மறந்து விடுகிறீர்கள். சிலர் ஒருபொழுதும் பாபாவுக்கு ஒரு கடிதத்தையேனும் எழுதுவதில்லை. ஏனையோர் தந்தையை ஒருபொழுதும் கண்டிராத பொழுதிலும், தொடர்ந்தும் பாபாவுக்குப் பரிதவிப்பில் கடிதங்களை எழுதுகின்ற அத்தகையவர்கள் ஆவார்கள். ஆனால் அவரை நேரடியாகச் சந்தித்தவர்களோ அவரை முழுமையாக மறந்து விடுகிறார்கள். நீங்கள் உங்களைச் சிவபாபாவிடம் அர்ப்பணிக்க வேண்டும். சிவபாபாவைச் சந்திப்பதற்காக, பக்தி மார்க்கத்து மக்கள் தங்களைக் காசியில் அர்ப்பணிக்கிறார்கள். ஆனாலும் அவர்களால் அவரைச் சந்திக்க முடியாதிருந்தது. இங்கு இப்பொழுது தந்தை உயிருள்ள ரூபத்தில் வந்து, கூறுகிறார்: குழந்தைகளே, எனக்கு உரியவர்கள் ஆகுங்கள்! நான் உங்களைத் திரும்பவும் என்னுடன் அழைத்துச் செல்வதற்கு வந்துள்ளேன். தூய்மை ஆகாமல் உங்களால் அங்கு செல்ல முடியாது. நான் உங்களைத் தூய்மை ஆக்குவதற்கு வர வேண்டும். அனைவருக்கும் சற்கதியை அருள்பவராகிய தந்தை, உங்களுடன் அமர்ந்திருக்கிறார். அவர் உங்களுக்குக் கீதையின் கடவுள் கற்பித்த இராஜயோகத்தைக் கற்பிக்கிறார். அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரைக் கடவுள் என்று அழைக்கிறார்கள். சிவபாபாவே கீதையின் கடவுள் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் எழுதுகிறீர்கள்: சிவபாபா மேற்பார்த்து, பிரம்மா. தந்தை உங்கள் முன்னிலையில் நேரடியாக அமர்ந்திருந்து, உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். அப்பொழுதும் கூட நீங்கள் போதை ஊட்டப்பட்டதாக உணர்வதில்லை. ஓஹோ! சிவபாபா தனது மடியில் எங்களை வைத்துள்ளார்! அவர் எங்களைத் தத்தெடுத்துள்ளார்! எவ்வாறாயினும், இங்கு அவர் அனைவரையும் வைத்திருக்க மாட்டார். ஆயிரக்கணக்கான குழந்தைகள் உள்ளதால், எவ்வாறு அவரால் அவர்கள் அனைவரையும் இங்கு வைத்திருக்க முடியும்? அந்தளவுக்கு இங்கு இடம் இருப்பதில்லை. தந்தை கூறுகிறார்: நீங்கள் வீட்டில் வாழ்ந்து கொண்டு, தந்தையை நினைவுசெய்ய வேண்டும். நீங்கள் எல்லையற்ற தந்தையான, அனைவரிலும் இனிமையிலும் இனிமையானவரின் குழந்தைகளாகி விட்டீர்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளே, காமச்சிதையில் அமர்ந்ததனால், நீங்கள் எரிந்து மரணித்துள்ளீர்கள். இப்பொழுது இந்த ஞானச்சிதையில் அமர்ந்து, தேவர்கள் ஆகுங்கள். மக்கள் தேவர்களை வழிபடுகிறார்கள், ஆனால் அவர்கள் எதனையும் புரிந்து கொள்வதில்லை. இது நாடக நியதி எனக் கூறப்படுகிறது. நீங்கள் உயிருள்ள சிவபாபாவின் முன்னிலையில் அமர்ந்திருக்கிறீர்கள். சிவபாபா பிரம்மாவினூடாக விஷ்ணு தாமத்தை ஸ்தாபித்தார் என்பது நினைவுகூரப்படுகிறது. தந்தை விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளே, பாவச் செயல்கள் எதனையும் செய்யாதீர்கள். சரீர உணர்வு உடையவர்கள் ஆகாதீர்கள். நடந்தும், உலாவியும் திரியும்பொழுது, நீங்கள் அரைக்கல்பமாக நினைவு செய்தவராகிய, ஒரேயொருவரான, உங்கள் மணவாளனை நினைவுசெய்ய வேண்டும். இப்பொழுது அவர் உங்களுக்கான சேவையில் உள்ளார். அவரே ஆன்மீக சமூக சேவையாளர். அவர் உங்களுக்கு ஆன்மீகச் சேவையைக் கற்பிக்கிறார். சமூக சேவையாளர்களின் தலைவர்கள் உள்ளார்கள். அந்த ஒரேயொருவர் ஆன்மீகமானவர், ஆனால் ஏனையோர் மனித சமுதாயத்துக்கான பௌதீகச் சேவையைச் செய்பவர்கள். இப்பொழுது அவர்கள் அனைவரும் பசுவதையைத் நிறுத்த வேண்டும் என வேண்டுகிறார்கள். ஒருவர் மீது ஒருவர் காம வாளைப் பயன்படுத்துவதே அனைத்திலும் பெரிய வதை என உங்களால் எழுத முடியும். எல்லாவற்றுக்கும் முதலில், இதற்கு ஒரு முடிவு கட்டுங்கள். இதனையிட்டே கடவுள் கூறியுள்ளார்: காமமே கொடிய எதிரி, அது உங்களுக்கு அதன் ஆரம்பத்தில் இருந்து, மத்தியினூடாக, இறுதிவரைக்கும் துன்பத்தையே விளைவிக்கிறது. நீங்கள் கீதையின் கடவுளை மறந்து விட்டீர்கள். உண்மையிலேயே பாபா வியப்படைகிறார். அங்கு மேலே அவர் பார்வதிக்கு அமரத்துவக் கதையைக் கூறியதாக நீங்கள் நம்பியதால், முதலில், அமர்நாத்தில், மலைகளில் தடுமாறித் திரிந்தீர்கள். ஒரு பார்வதிக்கு மாத்திரம் கதையைக் கூறுவதனால் என்ன நிகழும்? தந்தை விளங்கப்படுத்துகிறார்: நீங்கள் அனைவரும் பார்வதிகள். அவர் உங்கள் அனைவருக்குமே அமரத்துவக் கதையைக் கூறுகிறார். தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, 84 பிறவிகளை எடுக்கும் பொழுது, நீங்கள் மரண பூமிக்குள் வந்தீர்கள். அச்சா, இலக்ஷ்மியும் நாராயணனும் எங்கே சென்றார்கள்? அவர்கள் திரும்பிச் சென்றார்களா அல்லது ஒளியினுள் இரண்டறக் கலந்தார்களா? சூரிய-வம்சத்து அரசர், அரசி, பிரஜைகள் அனைவரும் எங்கே சென்றார்கள்? 84 பிறவிகளை எடுக்கும் பொழுது, நிச்சயமாக அவர்கள் சதோபிரதானில் இருந்து தமோபிரதான் ஆகியிருக்க வேண்டும். சிவபாபா இங்கே அமர்ந்திருந்து, உங்களுக்குப் பிரம்மாவினூடாக விளங்கப்படுத்துகிறார் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள், இல்லையா? குழந்தைகளே, இப்பொழுது நான் உங்கள் பாக்கியத்தை உருவாக்குவதற்கு வந்துள்ளேன். ஆகவே, நீங்கள் ஏன் உங்கள் பாக்கியத்தை அழிக்கிறீர்கள்? குறைந்தபட்சம் சிறிதளவையேனும் புரிந்து கொள்ளுங்கள்! நான் உங்களைச் சுவர்க்க அதிபதிகள் ஆக்குவதற்கு வந்துள்ளேன். நீங்கள் எனது வழிகாட்டல்களைப் பின்பற்ற மாட்டீர்களா? நீங்கள் வீட்டுக்குத் திரும்பிச் செல்லும் பொழுது, ஏன் என்னை நினைவுசெய்ய மறந்து விடுகிறீர்கள்? தந்தை உங்களுக்கு மீண்டும் மீண்டும் விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது சங்கமயுகத்துக்கு உரியவர்கள், ஆனால் அம்மக்களோ கலியுகத்துக்கு உரியவர்கள். நீங்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுகிறீர்கள், ஆனால் அவர்களோ பூஜிப்பவர்கள். இப்பொழுது உங்கள் அலைச்சல் முடிவுக்கு வந்து விட்டது. அம்மக்கள் உங்களை நாஸ்திகர்களாகக் கருதினாலும், அவர்களே நாஸ்திகர்கள் என நீங்கள் கூறுகிறீர்கள். நீங்கள் பக்தி செய்வதில்லை என்பதனால், நீங்களே நாஸ்திகர்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள். அவர்களுக்குத் தந்தையைத் தெரியாது என்பதனால், அவர்களே நாஸ்திகர்கள் என நீங்கள் கூறுகிறீர்கள். நீங்கள் தந்தையை அறிவீர்கள் என்பதாலும், அவரிடமிருந்து உங்கள் ஆஸ்தியைக் கோருகிறீர்கள் என்பதாலும் நீங்களே ஆஸ்திகர்கள் என்று நீங்கள் கூறுகிறீர்கள். அவர்கள் இதனை அறியாததால், தொடர்ந்தும் தடுமாறித் திரிகிறார்கள். பலரும் கும்பமேளாவுக்குச் சென்று, தானம் அளித்துப் புண்ணியம் செய்கிறார்கள். இப்பொழுது தந்தை கூறுகிறார்: அவ்விடயங்கள் அனைத்தையும் நிறுத்தி விடுங்கள். நீங்கள் ஞானக்கடலைக் கண்டு விட்டதனால், வேறு எங்கு செல்வீர்கள்? இவர்கள் இந்த ஞானத்தின் ஞான நதிகள் ஆகும். நீங்கள் இந்த ஞானத்தில் நீராடுவதற்காக, அவர்கள் உங்களை ஞானக்கடலிடம் அழைத்து வருகிறார்கள். பல நல்ல குழந்தைகள் தந்தையிடம் வந்து, பின்னர் வீடு திரும்பியதும், மீண்டும் அசுத்தம் அடைகின்றார்கள். சிலர் தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்றுகிறார்கள். அவர்கள் வினவுகிறார்கள்: பாபா, நான் எவ்வாறு எனது அழியக்கூடிய செல்வத்தை ஒரு தகுதிவாய்ந்த வழியில் பயன்படுத்த முடியும்? அப்பொழுது அவர்களுக்கு விளங்கப்படுத்தப்படுகிறது: நீங்கள் எந்தளவுக்கு ஒரு மூழ்கும் படகைக் கரையேற்றுகிறீர்களோ, அந்தளவுக்கு நல்லது. அதனைப் பாரதத்துக்குச் சேவை செய்வதற்கு, ஒரு தகுதிவாய்ந்த வழியில் பயன்படுத்துங்கள், ஒரு நிலையத்தைத் திறவுங்கள். இந்தப் படங்களில் பல தொடர்ந்தும் உருவாக்கப்படுகின்றன. “பாபா, உங்களுக்குத் தேவை ஏற்படும்பொழுது எல்லாம், என்னை நினைவு செய்யுங்கள்” எனக் கூறுகின்ற அத்தகைய குழந்தைகள் பாபாவுக்கு உள்ளார்கள். நான் உங்களுக்கு உதவி செய்யத் தயாராக இருக்கிறேன். யக்ஞத்துக்காகச் சிறந்த பணிகளை மேற்கொள்ள எவரேனும் தேவைப்படின், அப்பொழுது என்னை நினையுங்கள். பாபா கூறுகிறார்: நான் எவரையும் நினைவு செய்ய மாட்டேன். உங்களுக்கு வேண்டியதை நீங்கள் செய்து கொள்ள முடியும். நானே அருள்பவர். நான் பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்குவதற்கு வந்துள்ளேன். நீங்களும் சுவர்க்கத்துக்குச் செல்வீர்கள். நீங்கள் எவ்வளவு செய்கின்றீர்கள் என்பதற்கு ஏற்பவே, நீங்கள் பெறுவீர்கள். எவ்வாறாயினும், உங்கள் தலை மீதுள்ள பல பிறவிகளின் பாவச்சுமை அகற்றப்பட வேண்டும். இல்லாவிட்டால், அதற்கான அதிகளவு தண்டனை இருக்கும். நீங்கள் சுவர்க்கத்துக்குச் செல்வீர்கள், ஆனால் நீங்கள் தண்டனையை அனுபவம் செய்தால், உங்களால் ஓர் அந்தஸ்தைக் கோர முடியாதிருக்கும். கடவுள் தனது பொக்கிஷக் களஞ்சியத்தைச் சதா நிரம்பி வழியச் செய்தார் என்பது நினைவு கூரப்படுகிறது. அவர் எதனைப் பற்றியும் கவலைப்படவில்லை. பாபா கூறுகிறார்: பொக்கிஷக் களஞ்சியம் தானாகவே நிறைந்திருக்கும். குழந்தைகளாகிய நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். இதில் மாத்திரமே உங்களுக்கு நன்மை உள்ளது. இதில் ஓர் இழப்பு உள்ளதென ஒருபொழுதும் எண்ண வேண்டாம். உதாரணமாக, நீங்கள் டெல்கிக்குப் பிரயாணம் செல்கையில், வழியில் உங்கள் காலை முறித்துக் கொண்டால், அதிலும் நன்மை உள்ளதெனக் கருதுங்கள். குறைந்தபட்சம் ஆத்மா துண்டிக்கப்படவில்லை! கால் முறிந்துள்ளது, ஆனால் அது பரவாயில்லை! நான் ஆத்மாக்களாகிய உங்களுடன் பேசுகிறேன். தந்தை விளங்கப்படுத்துகிறார்: இதுவே இராவண இராச்சியம், இதனாலேயே அவர்கள் இராவணனின் கொடும்பாவியை எரிக்கிறார்கள். நாங்கள் என்னவாக இருந்தோம், நாங்கள் முன்னர் இருந்ததில் இருந்து பாபா இப்பொழுது எங்களை என்னவாக ஆக்கியுள்ளார்! உலகின் நிலைமையைப் பாருங்கள்! இப்பொழுது தந்தை உங்களைச் சுவர்க்க அதிபதிகள் ஆக்குகிறார். ஆகவே, நீங்கள் அவருடைய வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும். நீங்கள் எந்தப்பாவச் செயலையும் செய்யக்கூடாது. வீட்டில் வாழும் பொழுது, தூய்மை ஆகுங்கள்! தொடர்ந்தும் சத்திய நாராயணனின் கதையைச் செவிமடுங்கள். அது அத்தகைய நீண்டதொரு கதை! நீங்கள் கடல் முழுவதையும் மையாக்கினாலும், இந்த ஞானத்துக்கு முடிவு இல்லை. ஆகவே, நீங்கள் தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும். கடவுளின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதனால், நீங்கள் உங்களுடைய இராச்சியத்தைக் கோருகிறீர்கள் என்பதையும், நீங்கள் மனிதர்களில் இருந்து தேவர்கள் ஆகுகிறீர்கள் என்பதையும் அறிவீர்கள். மரணம் உங்கள் முன்னிலையில் உள்ளது. சிலருக்குத் திடீரென இதய-வழுவல் ஏற்படுகிறது; ஏனையோர் விபத்தில் மரணிக்கிறார்கள். தந்தை கூறுகிறார்: நீங்கள் மரணிக்கும் முன்னர், பெருமளவு முயற்சி செய்யுங்கள். நீங்கள் தந்தையை நினைவு செய்யும்பொழுது, உங்கள் வருமானத்தைச் சம்பாதிக்கிறீர்கள். நீங்கள் எல்லையற்ற தந்தைக்கு உரியவராகிய பின்னர் பாவம் செய்தால், அந்த ஒரு பாவத்துக்காக நூறு மடங்கு தண்டனையைப் பெறுவீர்கள். பின்னர் மக்கள் என்ன கூறுவார்களோ என நீங்கள் வெட்கம் அடைவீர்கள். சிவபாபா கூறுகிறார்: தர்மராஜ் மிகக் கடுமையான தண்டனையை உங்களுக்குக் கொடுக்குமாறு நான் செய்கிறேன். அந்நேரத்தில், இவர் எனது குழந்தை என்று அவர் கூற மாட்டார். பல கண்டிப்பான சட்டங்கள் உள்ளன. ஒரு நீதிபதியின் குழந்தை ஒரு குற்றத்தைச் செய்தால், அவரால் எதுவும் செய்ய முடியாது; குழந்தை தண்டனையை அனுபவம் செய்யவே வேண்டும். தந்தை உங்களுக்குத் தினமும் விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளே, என்றுமே பாவகரமான எதனையும் செய்யாதீர்கள். விகாரமே மிகப்பெரிய பாவம். பல புயல்கள் வரும், வெளியே பல தீய செயற்பாடுகள் உள்ளன, கேட்கவும் வேண்டாம்! இது ஒரு விலைமாந்தர் இல்லம். உதாரணமாக, நீங்கள் ஒரு முக்கியஸ்தருக்கு விளங்கப்படுத்தி, அவர் ஒரு மாணவர் ஆகினால், அவர் மீது பிரம்மாகுமாரிகள் மந்திர வசியம் செய்துள்ளார்கள் என ஏனையோர் கூறுவார்கள். இங்கே மகத்துவமானவர்கள் வந்து எழுதுகிறார்கள்: உண்மையிலேயே நீங்கள் உண்மையைக் கூறுகிறீர்கள். உண்மையில், கீதையின் கடவுள் சிவனேயன்றி, ஸ்ரீ கிருஷ்ணரல்ல. எவ்வாறாயினும், அவர்கள் வீடு திரும்பியவுடனேயே அனைத்தும் முடிவடைகிறது. பெருமளவு முயற்சி செய்யப்பட வேண்டும். தந்தை விளங்கப்படுத்துகிறார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, என்னை மறந்து விடாதீர்கள்! மாயை மிகவும் சக்திநிறைந்தவள். தந்தையின் நினைவு பாதரசத்தைப் போன்றது; நீங்கள் விரைவில் அவரை மறந்து விடுகிறீர்கள். தந்தை கூறுகிறார்: நீங்கள் வீட்டில் வாழலாம், ஆனால் தூய்மையாக இருங்கள். நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். தந்தை ஒவ்வொரு குழந்தைக்கும் பெருமளவு அன்புடன் கூறுகிறார்: இப்பொழுது, எனது குழந்தையாகிய பின்னர், எந்தப்பாவச் செயலையும் செய்யாதீர்கள். நீங்கள் இப்பொழுது தந்தையை அறிவீர்கள், இல்லையா? உங்கள் புத்தியில் உலகச் சக்கரத்தின் இரகசியங்களும் உள்ளன. கல்விமான்களும், பண்டிதர்களும், தலைவர்களும் தங்களைச் சிவன் என அழைப்பதுடன், தங்களைப் பூஜிக்குமாறும் செய்கிறார்கள். பொதுவாக, சந்நியாசிகள் சென்று ஹரித்துவாரில் வசிக்கிறார்கள். நாள் முழுவதும், அவர்கள் தொடர்ந்தும் செபிக்கிறார்கள்: காசியின் சிவனே, கங்கையைக் கொண்டு வந்த உலகின் பிரபுவே! தந்தை இங்கே அமர்ந்திருந்து உங்களுக்கு மிகவும் நன்றாக விளங்கப்படுத்துகிறார். அவரே அமரத்துவ ரூபம் என்பது நினைவுகூரப்படுகிறது. அது ஒரு சிம்மாசனமல்ல, அதுவே அமரத்துவ சிம்மாசனம் ஆகும். அவை உங்கள் இரதங்கள் என்பதைப் போல், இந்த இரதமே அமரத்துவ ரூபமாகிய தந்தையின் சிம்மாசனம் ஆகும். பாபா கூறுகிறார்: நானும் இந்த இரதத்தைப் பெற்றுள்ளேன். நெற்றியில், ஒருபுறம் சிஷ்யரும், மறுபுறம் குருவும் இருக்கிறார்கள். நான் நிச்சயமாக வந்து அவருக்கு அடுத்ததாக அமர்வேன். நானும் ஒரு புள்ளியே. நான் அந்தளவு பெரியவன் அல்ல. இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, இது உங்கள் உண்மையான, உயிருள்ள நினைவு யாத்திரை. பாப்பும், தாதாவும் இணைந்துள்ளார்கள். பாப்பும், தாதாவும் என்பதன் அர்த்தத்தை எவராலும் புரிந்து கொள்ள முடியாது. தந்திகளில், அவர் “பாப்தாதா” என்று கையொப்பம் இடுகிறார். எவராலும் இதனைப் புரிந்து கொள்ள முடியாது. சிவபாபா உங்களுடைய பாபாவும், பிரஜாபிதா பிரம்மா உங்களுடைய தாதாவும் என்பதனால், அவர்கள் ஒன்றிணைந்து பாப்தாதா ஆவார்கள். தந்தை கூறுகிறார்: இப்பொழுது நான் இவரினூடாக உங்களுக்கு உங்களுடைய ஆஸ்தியைக் கொடுப்பதற்கு வந்துள்ளேன். சிவபாபா உங்களுக்கு உரியவர். பிரஜாபிதா பிரம்மாவும் அனைவரினதும் தந்தை ஆவார். நீங்கள் சிவபாபாவிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். ஆகவே, அவர் இவ்விதமாகக் கையொப்பம் இடுவார், இல்லையா? நாங்கள் பாப்தாதா என அழைக்கப்படுகிறோம். சிவபாபா கூறுகிறார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். இருப்பினும், இது உங்கள் புத்தியில் இருப்பதில்லை. கண்காட்சிகளுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வருகிறார்கள். ஒருவேளை அவர்களில், எட்டு முதல் பத்துப் பேர்வரையில் மேலும் புரிந்து கொள்வதற்கு வரலாம், படிப்படியாக அவர்களுள் ஓரிருவர் மாத்திரமே நிலைத்திருப்பது சாத்தியம். பல மில்லியன் கணக்கானோரில் ஒரு கைப்பிடியளவினர் என்பது நினைவு கூரப்படுகிறது. ஆகவே, நீங்கள் பல்வேறு கண்காட்சிகளை நடத்த வேண்டும். அதனால், பல மில்லியன் கணக்கானோரில் ஒரு கைப்பிடியளவினர் வெளிப்பட முடியும். சிலர் நான்கு முதல் ஐந்து வருடங்கள் வரை வந்த பின்னர் மறைந்து விடுகிறார்கள்; அவர்கள் தந்தையை விட்டு விலகிச் சென்று விடுகிறார்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. சிவபாபாவிடம் உங்களை முழுமையாக அர்ப்பணியுங்கள். அதாவது, மரணித்து வாழ்ந்து, ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள்.2. நீங்கள் சிவபாபாவின் குழந்தைகள் ஆகியுள்ளதனால், எந்தப்பாவச் செயல்களையும் செய்யாதீர்கள். தூய்மையாகி, உங்களுக்கு நன்மை செய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் இந்த ஞானத்தின் ஆழமான விடயங்களைச் செவிமடுத்து, அவற்றின் சொரூபம் ஆகுகின்ற ஞானி ஆத்மா ஆகுவீர்களாக.ஞானி ஆத்மாக்கள் இந்த ஞானத்தின் ஒவ்வொரு விடயத்தையும் அனுபவம் செய்கிறார்கள். எவ்வாறு நீங்கள் அவற்றைச் செவிமடுப்பதை இரசிப்பதுடன் அவை ஆழமாக இருப்பதையும் உணர்கிறீர்களோ, இவற்றைக் கேட்பதுடன் கூடவே, உங்களுக்குள் அவற்றை அமிழ்த்திக் கொள்ளவும் வேண்டும். அதாவது, நீங்கள் அவற்றின் சொரூபங்கள் ஆகவேண்டும். இந்தப் பயிற்சி இருக்க வேண்டியது அவசியம். ஆத்மாவான நான், அசரீரியானவன். நீங்கள் மீண்டும் மீண்டும் இதைக் கேட்கிறீர்கள். ஆனால் அசரீரி ஸ்திதியை அனுபவம் செய்த வண்ணம் நீங்கள் அதைக் கேட்க வேண்டும். அந்தக் கருத்திற்கேற்ப உங்களின் அனுபவமும் இருக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், நீங்கள் உங்களின் கணக்கில் தூய எண்ணங்களைச் சேமிப்பீர்கள். இதைச் செய்வதில் உங்களின் புத்தி மும்முரமாக ஈடுபட்டிருக்கும் போது, உங்களால் இலகுவாக வீணான எண்ணங்களில் இருந்து விலக முடியும்.
சுலோகம்:
இந்த ஞானத்தினதும் இந்த அனுபவத்தினதும் இரட்டை அதிகாரிகளாக இருப்பவர்கள், போதையுடைய பிச்சைக்காரர்கள், பறக்கும் யோகிகள் (மஸ்த் பக்கீர், ரம்தா யோகி) ஆவார்கள்.அவ்யக்த சமிக்ஞை: மற்றவர்களை ஈடேற்றும் மனப்பான்மையைக் கொண்டிருந்து, உங்களை இகழ்பவர்களையும் ஈடேற்றுங்கள்.
எந்தவொரு சூழ்நிலையைப் பற்றியும் உணர்ச்சிகளைக் கொண்டிருத்தல் தோல்வியின் அடையாளம். ஒருவர் உங்களை எந்தளவிற்கு அவமதித்தாலும் அவருக்கான உங்களின் பார்வையும் மனோபாவமும் எப்போதும் அவரை ஈடேற்றுவதாகவே இருக்க வேண்டும். உங்களிடம் உரிமை இருக்கும் அளவிற்கு, நீங்கள் அகங்காரம் அற்றவராக இருப்பீர்கள். நீங்கள் இந்த ஆன்மீகப் பாதையில் வந்த பின்னர் விருத்தியாகிய அகங்காரத்தையும் துறந்து விடுங்கள். இத்தகைய துறவறத்தின் பார்வையையும் மனோபாவத்தையும் நீங்கள் கொண்டிருக்கும்போது, உங்களால் பாப்தாதாவை உங்களின் விழிப்புணர்iவில் வைத்திருக்க முடியும். அத்துடன் உங்களின் உதடுகளிலும் அந்த வார்த்தைகள் இருக்கும்.