29.11.24 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் சிவபாபாவிற்கு மதிப்பளிக்க வேண்டுமாயின், அவரின் ஸ்ரீமத்தைத் தொடர்ந்தும் பின்பற்றுங்கள். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதே, தந்தைக்கு மதிப்பளிப்பதாகும்.
கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் எவ்வாறு தந்தையிலும் சிறந்த மந்திரவாதிகள் ஆகுகின்றீர்கள்?பதில்:
அதிமேலான தந்தையை உங்கள் குழந்தையாக்குவதும், தந்தையை உங்கள் வாரிசு ஆக்கி, உங்கள் சரீரங்கள், மனங்கள், செல்வம் மூலம் உங்களைத் தந்தைக்கு அர்ப்பணிப்பதுமே குழந்தைகளாகிய உங்கள் மந்திர வித்தையாகும். இப்பொழுது, கடவுளைத் தங்கள் வாரிசு ஆக்குபவர்கள், 21 பிறவிகளுக்கான ஆஸ்திக்கு ஓர் உரிமையைக் கோருகின்றார்கள்.கேள்வி:
எக் குழந்தைகளுக்காக நீதிமன்றம் கூட்டப்படுகின்றது?பதில்:
தாங்கள் தானம் செய்தவற்றைத் மீண்டும் பெற நினைப்பவர்களுக்காகவும், மாயையின் ஆதிக்கத்தினால் அவச்சேவை செய்பவர்களுக்காகவும் நீதிமன்றம் கூட்டப்படுகின்றது.ஓம் சாந்தி.
சரீரமற்றவராகிய, தனித்துவமான ஆன்மீகத் தந்தை, அதாவது, பரமாத்மாவாகிய பரமதந்தை என அழைக்கப்படுகின்ற தொலைதூர உலகவாசி, இங்கமர்ந்திருந்து, தனது தனித்துவமான குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகின்றார். அவர் தொலைதூர தேசத்திலிருந்து வந்து, இந்தச் சரீரத்தினூடாக உங்களுக்குக் கற்பிக்கின்றார். கற்பவர்கள் இயல்பாகவே தங்களுக்குக் கற்பிப்பவருடன் யோகம் செய்கின்றார்கள். “ஓ குழந்தைகளே, உங்கள் ஆசிரியருடன் யோகம் செய்யுங்கள் அல்லது என்னை நினைவுசெய்யுங்கள்” என அவர் அவர்களுக்குக் கூற வேண்டியதில்லை. இல்லை. இங்கே தந்தை கூறுகின்றார்: ஓ, ஆன்மீகக் குழந்தைகளே! அவர் உங்கள் தந்தையும், ஆசிரியரும், குருவும் ஆவார். அவருடன் யோகம் செய்யுங்கள், அதாவது, தந்தையை நினைவுசெய்யுங்கள். அவர் தனித்துவமான பாபாவும், சரீரமற்றவரும் ஆவார். நீங்கள் மீண்டும் மீண்டும் அவரை மறப்பதனாலேயே உங்களுக்குக் கூறப்படுகிறது. உங்களுக்குக் கற்பிப்பவரை நினைவுசெய்வதனால், உங்கள் பாவங்கள் எரிக்கப்பட்டு விடும். “என்னைப் பாருங்கள், அதில் பெரும் நன்மையுள்ளது” என்று ஓர் ஆசிரியர் கூற வேண்டும் எனும் நியதி இல்லை. தந்தை கூறுகின்றார்: என்னை நினைவுசெய்யுங்கள். இந்த நினைவின் சக்தி மூலமே உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். இதுவே நினைவு யாத்திரை என அழைக்கப்படுகிறது. தனித்துவமான, ஆன்மீகத் தந்தை இப்பொழுது குழந்தைகளாகிய உங்களைப் பார்க்கின்றார். குழந்தைகளாகிய நீங்களும் உங்களை ஆத்மாக்களாகக் கருதி, சரீரமற்ற, தனித்துவமான தந்தையை நினைவும் செய்கின்றீர்கள். நீங்கள் மீண்டும் மீண்டும் ஒரு சரீரத்திற்குள் வருகின்றீர்கள். முழுக் கல்பத்திலும் நான் ஒரு சரீரத்தைப் பெறுவதில்லை. இந்தச் சங்கம யுகத்தில் மாத்திரமே, குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிப்பதற்காக நான் தொலைதூர தேசத்திலிருந்து வருகின்றேன். இதனை மிகவும் நன்றாக நினைவுசெய்யுங்கள்: பாபா எங்கள் தந்தையும், ஆசிரியரும், சற்குருவும் ஆவார். அவர் சரீரமற்றவர். அவர் தனக்கெனச் சொந்தமாக ஒரு சரீரத்தைக் கொண்டிருப்பதில்லை, எனவே அவர் எவ்வாறு வருகிறார்? அவர் கூறுகின்றார்: நான் சடப்பொருளின் ஆதாரத்தை, அதாவது, ஒரு வாயின் உதவியைப் பெறுகின்றேன். நான் சரீரமற்றவர். நீங்கள் அனைவரும் சரீரம் உடையவர்கள். எனக்கு நிச்சயமாக ஓர் இரதம் தேவையாகும். அவர் ஒரு குதிரை இரதத்தில் வரமாட்டார். தந்தை கூறுகின்றார்: நான் இந்தச் சரீரத்தினுள் பிரவேசிக்கின்றேன். முதலாம் இலக்கமாக இருப்பவர், பின்னர் கடைசி இலக்கம் ஆகுகின்றார். சதோபிரதானாக இருப்பவர்கள், பின்னர் தமோபிரதான் ஆகுகின்றார்கள். எனவே தந்தை அவர்களை மீண்டும் ஒருமுறை சதோபிரதான் ஆக்குவதற்குக் கற்பிக்கின்றார். அவர் விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளாகிய நீங்களே இந்த இராவண இராச்சியத்தில் உள்ள ஐந்து விகாரங்களை வெற்றி கொணடு, பின்னர் உலகை வென்றவர்கள் ஆக வேண்டும். குழந்தைகளே, சரீரமற்ற தந்தையே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதை நினைவுசெய்யுங்கள். நீங்கள் தந்தையை நினைவுசெய்யாது விட்டால், உங்கள் பாவங்கள் எவ்வாறு அழிக்கப்படும்? நீங்கள் இப்பொழுது இந்தச் சங்கம யுகத்தில் மாத்திரமே இவ்விடயங்களைச் செவிமடுக்கின்றீர்கள். இந்நேரத்தில் இடம்பெறுவன அனைத்தும், ஒரு கல்பத்தின் பின்னர் மீண்டும் இடம்பெறும். இது அத்தகைய நல்ல விளக்கமாகும். இதற்கு மிகவும் பரந்த, எல்லையற்ற புத்தி தேவைப்படுகிறது. இது ஒரு சாது அல்லது புனிதரின் ஆன்மீக ஒன்றுகூடல் அல்ல. நீங்கள் அவரை உங்கள் தந்தையும், உங்கள் குழந்தையும் என்றும் அழைக்கின்றீர்கள். அவரே உங்கள் தந்தையும், உங்கள் குழந்தையும் என்பதை நீங்கள் அறிவீர்கள். நாங்கள் எங்களிடமுள்ள அனைத்தையும் அக்குழந்தைக்கு ஆஸ்தியாகக் கொடுத்து, தந்தையிடம் இருந்து 21 பிறவிகளுக்கு எங்கள் ஆஸ்தியைப் பெறுகின்றோம். நாங்கள் குப்பைகள் அனைத்தையும் தந்தையிடம் ஒப்படைத்து, அவரிடமிருந்து உலக இராச்சியத்தைக் கோருகின்றோம். நீங்கள் கூறுகின்றீர்கள்: பாபா, நீங்கள் வரும்போது எங்கள் சரீரங்கள், மனங்கள், செல்வம் மூலம் எங்களை உங்களுக்கு முழுமையாக அர்ப்பணிப்போம் என பக்தி மார்க்கத்தில் கூறினோம். ஒரு லௌகீகத் தந்தையும் தனது குழந்தைகளுக்குத் தன்னை அர்ப்பணிக்கின்றார். எனவே இங்கே, நீங்கள் சரீரமற்ற தந்தையைக் கண்டுள்ளீர்கள். அவரை நினைவுசெய்தால், உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு, நீங்கள் வீடு திரும்புவீர்கள். இது அத்தகைய மிகவும் நீண்ட பயணமாகும். தந்தை எங்கே வருகின்றார் என்று பாருங்கள்! இராவணனின் இப்பழைய இராச்சியத்திற்கே வருகின்றார். அவர் கூறுகின்றார்: ஒரு தூய சரீரத்தைப் பெறுவது எனது பாக்கியத்தில் இல்லை. நான் தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குவதற்கு எவ்வாறு வருகின்றேன்? நான் தூய்மையற்ற உலகிற்குள் பிரவேசித்தே அனைவரையும் தூய்மையாக்க வேண்டும். ஆகவே, நீங்கள் அத்தகைய ஆசிரியருக்கு அதிகளவு மதிப்பளிக்கவும் வேண்டும். அவருக்கு எவ்வாறு மதிப்பளிப்பது என்பதைப் பலரும் அறியாதுள்ளார்கள். இதுவும் நாடகத்தில் நடைபெற வேண்டும் என்பது அர்த்தமாகும். ஓர் இராச்சியத்திற்கு வரிசைக்கிரமமாக அனைவரும் தேவைப்படுகின்றார்கள். எனவே, சகல வகையினரும் இங்கே உருவாக்கப்படுகின்றார்கள். கற்காமல் இருப்பதும், தந்தையின் நினைவில் நிலைத்திருக்காமையுமே ஒரு குறைந்த அந்தஸ்தைப் பெறுபவர்களின் நிலைமை ஆகும். அவர் தனித்துவமான தந்தையும், சரீரமற்றவரும் ஆவார். அவரது செயற்பாடும் அலௌகீகமானது. அவரது பாகத்தை வேறு எவரும் பெற முடியாது. அந்தத் தந்தை வந்து, அத்தகைய மேன்மையான கல்வியைக் கற்பிக்கின்றார்! எனவே நீங்களும் அவருக்கு மதிப்பளிக்க வேண்டும். நீங்கள் அவரது ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். எவ்வாறாயினும் மாயை உங்களை மீண்டும் மீண்டும் மறக்கச் செய்கின்றாள். நல்ல குழந்தைகளையும் வீழ்த்திவிடும் அளவிற்கு மாயை மிகவும் சக்திவாய்ந்தவள். தந்தை உங்களை மிகவும் செல்வந்தர்கள் ஆக்குகின்றார், ஆனால் மாயை உங்களை முழுமையாக வெறுமை ஆக்குகின்றாள். நீங்கள் மாயையிடமிருந்து பாதுகாக்கப்பட வேண்டுமாயின், நீங்கள் நிச்சயமாகத் தந்தையை நினைவு செய்ய வேண்டும். தந்தைக்கு உரியவர்களான மிகவும் நல்ல குழந்தைகள், பின்னர் மாயைக்கு உரியவர்கள் ஆகுகின்றார்கள். கேட்கவும் வேண்டாம்! அவர்கள் மிகவும் பலம்வாய்ந்த துரோகிகள் ஆகிவிடுகிறார்கள். மாயை அவர்களை அவர்களின் மூக்கால் முற்றாகப் பிடித்து விடுகின்றாள். “முதலை யானையை விழுங்கியது” எனும் வார்த்தைகளும் உள்ளன. எவ்வாறாயினும் எவருமே அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில்லை. தந்தை அனைத்தையும் மிகத்தெளிவாக விளங்கப்படுத்துகின்றார். சில குழந்தைகள் புரிந்துகொள்கின்றார்கள், ஆனால் அதுவும் அவர்கள் செய்கின்ற முயற்சிகளுக்கேற்ப, வரிசைக்கிரமமாகவே உள்ளது. சிலரினால் முற்றிலும் எதனையுமே கிரகிக்க முடிவதில்லை. இது அவர்களால் கிரகிக்க முடியாத, அத்தகைய மேன்மையான கல்வி! அவர்களுக்கு இராச்சிய பாக்கியம் இல்லை எனத் தந்தை கூறுகின்றார். சிலர் அக் மலர்களாகவும், சிலர் நறுமணம் மிக்க மலர்களாகவும் உள்ளனர். இது பலவகையான (மலர்கள் நிறைந்த) பூந்தோட்டமாகும். அவ் வகையானவர்களும் தேவைப்படுகின்றார்கள். ஓர் இராச்சியத்தில், நீங்கள் பணிப்பெண்களையும், வேலையாட்களையும் கூட காண்பீர்கள். வேறு எவ்வாறு உங்களால் பணிப்பெண்களையும், வேலையாட்களையும் காண முடியும்? இராச்சியம் இங்கேயே உருவாக்கப்படுகின்றது. நீங்கள் பணிப்பெண்கள், வேலையாட்கள், சுடலையாண்டிகள் போன்ற சகல வகையினரையும் காண்பீர்கள். ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது. இது ஓர் அற்புதமே! தந்தை உங்களை மிகவும் மேன்மையானவர்கள் ஆக்குகின்றார். ஆகவே அத்தகைய தந்தையை நினைவுசெய்யும்போது அன்புக் கண்ணீரைச் சிந்த வேண்டும். நீங்கள் மாலையின் மணிகள் ஆகுகின்றீர்கள். நீங்கள் கூறுகின்றீர்கள்: “பாபா, நீங்கள் மிகவும் தனித்துவமானவர்! நீங்கள் தூய்மையற்ற எங்களைத் தூய்மையானவர்கள் ஆக்குவதற்காக எவ்வாறு வந்து, கற்பிக்கின்றீர்கள் என்று பாருங்கள்”. பக்தி மார்க்கத்தில் மக்கள் சிவனை வழிபட்டபோதிலும், அவர் தூய்மையாக்குபவர் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. இருந்தும், அவர்கள் தொடர்ந்தும் அழைக்கின்றார்கள்: “ஓ! தூய்மையாக்குபவரே, வாருங்கள், வந்து எங்களை அழகிய தேவர்கள் ஆக்குங்கள்”. தந்தை குழந்தைகளாகிய உங்கள் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகின்றார். அவர் வந்ததும் கூறுகின்றார்: குழந்தைகளே, தூய்மையாகுங்கள்! இதனாலேயே குழப்பங்கள் உருவாகின்றன. தந்தை அற்புதமானவர். அவர் குழந்தைகளுக்குக் கூறுகின்றார்: என்னை நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும்! ஆத்மாக்களாகிய உங்களுடனேயே தந்தை பேசுகின்றார் என்பது அவருக்குத் தெரியும். ஆத்மாக்களே அனைத்தையும் செய்கின்றார்கள். ஆத்மாக்களே பாவச் செயல்களையும் செய்கின்றார்கள். பின்னர் ஆத்மாக்களே சரீரத்தினுடாக வேதனையையும் அனுபவம் செய்கின்றார்கள். உங்களுக்காக, அதிலும் குறிப்பாக சேவை செய்வதற்குத் தகுதியானவர்களாகி, பின்னர் துரோகிகள் ஆகிய குழந்தைகளுக்காக நீதிமன்றம் கூட்டப்படும். மாயை எவ்வாறு உங்களை விழுங்குகிறாள் என்பதைத் தந்தை மாத்திரமே அறிவார். “பாபா, நான் தோற்கடிக்கப்பட்டு விட்டேன், நான் எனது முகத்தை அழுக்காக்கிக் கொண்டேன். இப்போது என்னை மன்னித்து விடுங்கள்!” நீங்கள் விழுந்து, இப்போது மாயைக்குரியவர்கள் ஆகியுள்ளீர்கள், எனவே எவ்வாறு மன்னிப்பது? அந்த ஆத்மாக்கள் பின்னர் பெரும் முயற்சி செய்ய வேண்டும். மாயையினால் தோற்கடிக்கப்பட்ட பலர் உள்ளனர். தந்தை கூறுகின்றார்: இங்கு தந்தைக்குத் தானம் செய்தவற்றை, மீண்டும் பெறாதீர்கள். இல்லாவிடின் அனைத்தும் முடிவடைந்து விடும். அரிச்சந்திரனின் உதாரணம் உள்ளது. ஒரு தானம் செய்ததன் பின்னர் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் மீண்டும் அதனைப் பெற்றால், நூறு மடங்கு தண்டனை கிடைக்கும். பின்னர் மிகவும் குறைந்த அந்தஸ்தே பெறப்படும். ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகிறது என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். ஒரு சமயத்தை ஸ்தாபிக்கின்ற ஏனைய அனைவரும் ஆரம்பத்தில் ஓர் இராச்சியத்தைக் கொண்டிருப்பதில்லை. ஐந்து முதல் ஆறு மில்லியன்கள் எண்ணிக்கையினர் இருக்கும் போது மாத்திரமே ஓர் இராச்சியம் இருக்க முடியும், பின்னர் ஒரு பெரிய கூட்டம் இருக்கும். ஆரம்பத்தில், ஒருவர் அல்லது இருவர் மாத்திரம் கீழே வருகிறார்கள். பின்னர் வளர்ச்சி இடம்பெறுகிறது. கிறிஸ்து ஏதோ ஒரு ரூபத்தில் வருவார் என்பது உங்களுக்குத் தெரியும். முதலாம் இலக்கத்திற்குரியவர், பின்னர் நிச்சயமாக இறுதி இலக்கத்தில், ஒரு பிச்சைக்காரரின் ரூபத்தில் இருப்பார். இந்நேரத்தில், ஒரு பிச்சைக்காரரின் ரூபத்தில் கிறிஸ்து எங்கோ இருக்கின்றார் எனக் கிறிஸ்தவர்கள் உடனடியாகக் கூறுகின்றார்கள். இதிலிருந்து, அவர் மறுபிறவி எடுக்க வேண்டும் என்பது புரிந்துகொள்ளப்படுகின்றது. அனைவரும் நிச்சயமாகத் தமோபிரதானாக வேண்டும். இந்நேரத்தில், முழு உலகமும் தமோபிரதானாகவும், முற்றிலும் உக்கிய நிலையிலும் உள்ளது. இந்தப் பழைய உலகம் நிச்சயமாக அழிக்கப்படவுள்ளது. கிறிஸ்துவுக்கு 3000 வருடங்களுக்கு முன்னர் சுவர்க்கம் இருந்ததாகவும், அது மீண்டும் நிச்சயமாக இருக்கும் எனவும் கிறிஸ்தவர்களும் கூறுகின்றார்கள். எவ்வாறாயினும், எவரால் இவ் விடயங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்த முடியும்? தந்தை கூறுகின்றார்: சில குழந்தைகள் அந்த ஸ்திதியை இன்னமும் அடையவில்லை. அவர்கள் திரும்பத் திரும்ப எழுதிக் கூறுகின்றார்கள்: “என்னால் யோகத்தில் நிலைத்திருக்க முடியவில்லை”. குழந்தைகளின் செயற்பாட்டிலிருந்து பாபா புரிந்துகொள்கின்றார். அவர்கள் தங்கள் செய்தியை பாபாவுக்குக் கொடுப்பதற்கும் பயப்படுகின்றார்கள். தந்தை குழந்தைகளாகிய உங்களை அதிகளவு நேசிக்கின்றார். அவர் உங்களுக்கு அன்பாக வணக்கம் தெரிவிக்கின்றார், ஆனால் சில குழந்தைகளுக்கு அகங்காரம் உள்ளது. மாயை மிகவும் நல்ல குழந்தைகளையும் மறக்கச் செய்கின்றாள். பாபாவுக்கு இதனைப் புரிந்துகொள்ள முடியும். அவர் கூறுகின்றார்: நான் ஞானம் நிறைந்தவர். ஜனிஜனன்கார் (உள்ளேயுள்ள இரகசியங்களை அறிந்தவர்) என்றால் ஒவ்வொருவருக்கும் உள்ளே இருப்பவற்றை அறிந்தவர் என்று அர்த்தமல்ல. நான் இங்கு வந்திருப்பது உங்களுக்குக் கற்பிப்பதற்காகவா அல்லது உங்களைப் படித்து அறிந்து கொள்வதற்காகவா? நான் எவரையும் படித்து அறிந்து கொள்வதில்லை. இந்தச் சரீரதாரியும் கூட எவரையும் படித்து அறிந்து கொள்வதில்லை. அவர் அனைத்தையும் மறக்க வேண்டியுள்ளது. எனவே எதனை அவர் படித்தறிய முயற்சிப்பார்? நீங்கள் இங்கே கற்பதற்காக வருகிறீர்கள். பக்தி மார்க்கம் வேறானது. வீழ்வதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும். இந்த விடயங்கள் மூலமே நீங்கள் வீழ்கின்றீர்கள். இந்த நாடகத்தின் விளையாட்டு முற்கூட்டியே நிச்சயிக்கப்பட்டது. பக்தி மார்க்கத்தில் சமயநூல்களை வாசிப்பதனாலும், கீழே வருவதனாலும், நீங்கள் தமோபிரதான் ஆகுகிறீர்கள். நீங்கள் இந்த அழுக்கான உலகில் இனியும் இருக்க விரும்பவில்லை. கலியுகத்தின் பின்னர், சத்தியயுகம் இருக்கும். இப்போது இது சங்கம யுகமாகும். இவ்விடயங்கள் அனைத்தும் கிரகிக்கப்பட வேண்டியவை. தந்தை மாத்திரமே இவ்விடயங்களை விளங்கப்படுத்துகின்றார். உலகில் ஏனைய அனைவரின் புத்தியிலும் கோட்ரெஜ் பூட்டு உள்ளது. தெய்வீகக் குணங்களைக் கொண்டிருந்தவர்கள், இப்போது அசுர குணங்களை உடையவர்கள் ஆகியுள்ளார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: பக்தி மார்க்கத்துக்குரிய அனைத்து விடயங்களையும் இப்பொழுது மறந்து விடுங்கள். நான் உங்களுக்குக் கூறுவதை மாத்திரம் இப்பொழுது செவிமடுங்கள். தீயதைக் கேட்காதீர்கள்! நான் சொல்வதை மாத்திரம் செவிமடுங்கள். நான் இப்பொழுது உங்களை அக்கரைக்கு அழைத்துச் செல்லவே வந்துள்ளேன். நீங்கள் இறை சமுதாயத்தினர். பிரஜாபிதா பிரம்மாவின் தாமரை உதடுகளினால் நீங்கள் உருவாக்கப்பட்டுள்ளீர்கள். நீங்கள் அனைவரும் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள். அவர் ஆதிதேவர் என அழைக்கப்பட்டார். அவர் மகாவீரர் என்றும் அழைக்கப்படுகின்றார். குழந்தைகளாகிய நீங்களும் யோக சக்தியின் மூலம் மாயையை வெல்கின்ற மகாவீரர்கள் ஆவீர்கள். தந்தை ஞானக்கடல் என்று அழைக்கப்படுகின்றார். ஞானக்கடலான தந்தை தட்டு நிறைந்த அழிவற்ற, ஞான இரத்தினங்களை உங்களுக்குக் கொடுக்கின்றார். அவர் உங்களை மிகவும் செழிப்பானவர்கள் ஆக்குகின்றார். ஞானத்தைக் கிரகிப்பவர்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருகின்றார்கள். அதனைக் கிரகிக்காதவர்கள் நிச்சயமாகக் குறைந்த அந்தஸ்தையே கோருவார்கள். நீங்கள் எல்லையற்ற பொக்கிஷங்களைத் தந்தையிடமிருந்து பெறுகின்றீர்கள். அல்லா – அலாவுதீன் (அலாவுதீனும் அற்புத விளக்கும்) என்ற கதையும் உள்ளது. அங்கே உங்களுக்கு எந்தக் குறையும் இருக்க மாட்டாது என்பதும் உங்களுக்குத் தெரியும். தந்தை உங்களுக்கு 21 பிறவிகளுக்கான உங்கள் ஆஸ்தியைக் கொடுக்கின்றார். எல்லையற்ற தந்தை உங்களுக்கு ஓர் எல்லையற்ற ஆஸ்தியைக் கொடுக்கின்றார். ஓர் எல்லைக்குட்பட்ட ஆஸ்தியைப் பெறும்பொழுதும் மக்கள் நிச்சயமாக எல்லையற்ற தந்தையை நினைவுசெய்கின்றார்கள்: ஓ கடவுளே! கருணை கொள்ளுங்கள்! ஆசீர்வாதங்களை அருளுங்கள்! அவர் உங்களுக்கு எதனைக் கொடுக்கவுள்ளார் என்பதை எவருமே அறியார். பாபா உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்றார் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். பிரம்மாவின் மூலம் ஸ்தாபனை இடம்பெறுகின்றது என்பது படத்திலும் காட்டப்படுகின்றது. பிரம்மா உங்களின் முன்னிலையில் ஒரு சாதாரண ரூபத்தில் அமர்ந்துள்ளார். ஸ்தாபனை இடம்பெறும்போது, அவர் நிச்சயமாக அதற்குக் கருவியாக்கப்படுவார். தந்தை மிகவும் தெளிவாக விளங்கப்படுத்துகின்றார். உங்களால் முழுமையாக விளங்கப்படுத்த முடியாதுள்ளது. பக்தி மார்க்கத்தில் மக்கள் சங்கரரின் முன்னிலையில் சென்று கூறுகின்றார்கள்: “எங்கள் புத்தியை நிரப்புங்கள்!” ஆத்மா கூறுகின்றார்: “நான் ஏழையாகி விட்டேன்! எனது புத்தியை நிரப்புங்கள்! என்னை அவ்வாறு ஆக்குங்கள்!” இப்பொழுது நீங்கள் உங்கள் மடிகளை நிரப்பவே இங்கு வந்துள்ளீர்கள். நீங்கள் ஒரு சாதாரண மனிதரில் இருந்து நாராயணனாக விரும்புவதாக நீங்கள் கூறுகின்றீர்கள். இக்கல்வி ஒரு சாதாரண மனிதரை நாராயணனாக மாற்றுவதற்கு உரியதாகும். பழைய உலகிற்குச் செல்ல எவர் விரும்புவார்கள்? எவ்வாறாயினும், அனைவரும் புதிய உலகிற்குச் செல்ல மாட்டார்கள். சிலர் 25 வீதம் பழையதாகிய உலகிற்கும் வருகின்றார்கள். அப்பொழுது நிச்சயமாக ஏதோ ஒன்று இல்லாமல் இருக்கும். நீங்கள் ஒரு சிறிய செய்தியை எவருக்கேனும் கொடுத்தாலும், நிச்சயமாகச் சுவர்க்க அதிபதி ஆகுவீர்கள். இப்பொழுது அனைவரும் நரகத்தின் அதிபதியே. அரசர், அரசி, பிரஜைகள் அனைவருமே நரகத்தின் அதிபதிகளே. அங்கே, அவர்கள் இரட்டைக் கிரீடம் அணிந்திருந்தனர். அவர்கள் இப்பொழுது அவ்வாறில்லை. இந்நாட்களில், எவரும் சமயத்தின் மீது நம்பிக்கை கொண்டிருப்பதில்லை. தேவ தர்மம் முடிவடைந்து விட்டது. ‘தர்மமே சக்தி’ என்று நினைவுகூரப்பட்டுள்ளது. அவர்களுக்குச் சமயத்தில் நம்பிக்கை இல்லாததால், சக்தி எதுவுமே எஞ்சுவதில்லை. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, நீங்கள் பூஜிக்கத் தகுதி வாய்ந்தவர்களிலிருந்து, பூஜிப்பவர்கள் ஆகினீர்கள். நீங்கள் 84 பிறவிகளை எடுக்கின்றீர்கள். இல்லையா? பிராமணர்களாகிய நாங்களே, பின்னர் தேவர்கள் ஆகி, அதன்பின்னர் சத்திரியர்கள் ஆகுபவர்கள். முழுச் சக்கரமும் உங்கள் புத்தியில் உள்ளது. நாங்கள் 84 பிறவிச் சக்கரத்தைத் தொடர்ந்தும் சுற்றி வந்தோம், நாங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். தூய்மையற்றவர்களால் அங்கு செல்ல முடியாது. ஆத்மாக்களே தூய்மையாகுபவர்களும், தூய்மையற்றவர்களும் ஆகுபவர்கள். தங்கத்தில் கலப்படம் கலக்கப்படுகின்றது; அது ஆபரணத்துடன் கலக்கப்படுவதில்லை. இதுவே உங்கள் கலப்படம் முழுவதும் அகற்றப்பட்டு, நீங்கள் நிஜத் தங்கங்களாகி, பின்னர் அத்தகைய அழகிய ஆபரணங்களைப் பெறுகின்ற, ஞானத்தீ ஆகும். ஆத்மாக்கள் இப்பொழுது தூய்மையற்றவர்கள் ஆகியுள்ளதால், அவர்கள் தூய்மையானவர்களுக்குத் தலை வணங்குகின்றார்கள். ஆத்மாக்களே அனைத்தையும் செய்கின்றனர். தந்தை இப்பொழுது விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளே, என்னை மாத்திரம் சதா நினைவு செய்தால் உங்கள் படகு அக்கரை செல்லும். நீங்கள் தூய்மையாகி, தூய உலகிற்குச் செல்வீர்கள். இப்பொழுது நீங்கள் ஒவ்வொருவரும் எந்தளவிற்கு முயற்சி செய்கின்றீர்கள் என்பதிலேயே அது தங்கியுள்ளது. இந்த அறிமுகத்தை அனைவருக்கும் தொடர்ந்தும் கொடுங்கள். அவர்கள் எல்லைக்குட்பட்ட தந்தையர்களும், இவர் எல்லையற்ற தந்தையும் ஆவார். சங்கம யுகத்தில் மாத்திரமே, உங்களுக்குச் சுவர்க்க ஆஸ்தியைக் கொடுப்பதற்குத் தந்தை வருகின்றார். ஆகையால் அத்தகைய தந்தையை நீங்கள் நினைவு செய்ய வேண்டும். மாணவர்கள் எப்போதாவது தங்கள் ஆசிரியரை மறப்பதுண்டா? எவ்வாறாயினும், இங்கே, மாயை உங்களைத் தொடர்ந்தும் மறக்கச் செய்கின்றாள். நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது ஒரு யுத்த களமாகும். தந்தை கூறுகின்றார்: இப்பொழுது விகாரத்தில் வீழ்ந்து விடாதீர்கள்! அழுக்கானவர்கள் ஆகாதீர்கள்! இப்பொழுது நீங்கள் சுவர்க்கத்திற்குச் செல்ல வேண்டும். தூய்மையாகுவதனால் மாத்திரமே நீங்கள் தூய, புதிய உலகிற்கு அதிபதிகள் ஆகுவீர்கள். நான் உங்களுக்கு உலக இராச்சியத்தைக் கொடுக்கின்றேன். இது சிறியதொரு விடயமா? இந்த ஒரு பிறவியில், தூய்மையானவர்கள் ஆகுங்கள். இப்பொழுது நீங்கள் தூய்மையானவர்கள் ஆகாவிட்டால், விழுந்து விடுவீர்கள். அதிகளவு ஆசையின் தூண்டுதல் உள்ளது. விகாரத்தை வெற்றி கொள்வதால், நீங்கள் உலக அதிபதிகள் ஆகுவீர்கள். உலகக் குருவான, பரமாத்மாவான பரமதந்தையே முழு உலகிற்கும் சற்கதியை அருள்பவர் என்று நீங்கள் அவர்களிடம் தெளிவாகக் கூற முடியும். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. அழிவற்ற ஞான இரத்தினங்களினால், உங்கள் புத்தியை நிரப்பி, செழிப்பானவர்கள் ஆகுங்கள். எவ் வகையான அகங்காரத்தையும் வெளிப்படுத்தாதீர்கள்.2. சேவை செய்வதற்குத் தகுதியானவர் ஆகியபின்னர், துரோகி ஆகி, அவச்சேவை செய்யாதீர்கள். ஒரு தானத்தை வழங்கிய பின்னர் நீங்கள் மிக, மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எதனையும் திரும்பப் பெறுவதைப் பற்றி எண்ணாதீர்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் இறை ஒளியுடன் நேரடித் தொடர்பைக் கொண்டிருப்பதன் மூலம் இருளை நீக்குகின்ற கலங்கரைவிளக்கம் ஆகுவீர்களாக.குழந்தைகளான உங்களுக்கு இறையொளியுடன் நேரடித் தொடர்பு உள்ளது. நேரடி இணைப்பைப் பயன்படுத்தி, உங்களின் சுயமரியாதை என்ற விழிப்புணர்வின் ஆளியைப் போடுங்கள். வெளிச்சம் உண்டாகும். சூரிய ஒளியை மறைக்க கரும் முகில்கள் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும், அவையும் விலகிச் சென்றுவிடும். இந்த முறையில், நீங்களும் ஒளியாக இருப்பீர்கள். அத்துடன் நீங்கள் மற்றவர்களுக்கும் கலங்கரைவிளக்காக இருப்பீர்கள்.
சுலோகம்:
உங்களுக்கான முயற்சிகளில் தீவிரமாகுங்கள். அப்போது உங்களின் அதிர்வலைகளால் மற்றவர்களின் மாயை விரைவில் ஓடிவிடும்.