30.05.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்களிடமுள்ள அனைத்தையும் கடவுளின் சேவையில் தகுதி வாய்ந்த முறையில் பயன்படுத்தி, அதன் மூலம் உங்கள் எதிர்காலத்தை உருவாக்குங்கள். ஏனெனில் மரணம் உங்கள் தலைக்கு மேலுள்ளது.

கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் இந்த ஞானத்தைச் செவிமடுக்கின்ற போதிலும், ஏன் குழந்தைகளாகிய உங்களில் சிலரால் அதனைக் கிரகிக்க முடிவதில்லை?

பதில்:
இந்த ஞானக் கடலை எவ்வாறு கடைவது என்பது உங்களுக்குத் தெரியாது என்பதால் ஆகும். உங்களின் புத்தியின் யோகம் சரீரங்களிலும், சரீர உறவுகளிலும் தொங்கிக் கொண்டிருக்கின்றது. புத்தியிலிருந்து பற்று அகற்றப்படும் போதே உங்களால் எதையாவது கிரகிக்க முடியும். பற்று என்பது உங்களை முற்றுமுழுதாக ஒரு குரங்கு போல் ஆக்குகின்ற தன்மை உடையது. இதனாலேயே தந்தை உங்களுக்கு உங்களது முதலாவது சத்தியத்தை நினைவுபடுத்துகின்றார்: உங்களது சரீரத்தையும் அனைத்து சரீர உறவுகளையும் மறந்து என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள்.

பாடல்:
கள்ளங்கபடமற்ற பிரபுவைப் போல் தனித்துவமானவர் எவருமில்லை…..

ஓம் சாந்தி.
தந்தை இங்கு அமர்ந்திருந்து விளங்கப்படுத்துகிறார். எல்லையற்ற தந்தை மாத்திரமே சீரழிந்தவற்றைச் சீராக்குபவர் என அழைக்கப்படுகிறார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்கிறீர்கள். ஸ்ரீகிருஷ்ணரால் சீரழிந்தவற்றைச் சீராக்க முடியாது. சிவனே கீதையின் கடவுள் ஆவார், ஸ்ரீகிருஷ்ணர் அல்ல. சிவபாபா படைப்பவர், ஸ்ரீகிருஷ்ணர் படைப்பு ஆவார். சுவர்க்கத்தைப் படைப்பவரால் மாத்திரமே உங்களுக்குச் சுவர்க்க ஆஸ்தியைக் கொடுக்க முடியும். இதுவே பாரதத்தில் இழைக்கப்பட்ட மாபெரும் தவறாகும். எவருமே ஸ்ரீகிருஷ்ணரை “பாபா” என்று அழைக்க முடியாது. பாபாவிடம் இருந்து மாத்திரமே பெறப்படுகின்ற ஆஸ்தியை பாரதம் மாத்திரமே பெற்றது. பாரதத்தில் மாத்திரமே இளவரசர் ஸ்ரீகிருஷ்ணரும் இளவரசி ராதையும் நினைவு கூரப்படுகிறார்கள். அதிமேலான தந்தை ஒருவருக்கே புகழ் உள்ளது. உலகின் அதிபதியான ஸ்ரீகிருஷ்ணரே அதி மேன்மையான படைப்பு ஆவார். அவர்கள் சூரியவம்ச தேவ தர்மத்தைச் சேர்ந்தவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். கீதையே ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தின் சமயநூலாகும். சத்திய யுகத்திலே எவருக்கும் இந்த ஞானம் கொடுக்கப்படுவதில்லை. தந்தையே இதனைச் சங்கம யுகத்தில் உரைக்கிறார். இது முதலில் படங்களுக்கூடாக நிரூபிக்கப்பட வேண்டும். இவை இரண்டிற்குமான உருவங்கள் உள்ளன. மறுபிறப்புகளுக்கு அப்பாற்பட்ட படைப்பவராகிய இவரே, கீதையின் கடவுள் ஆவார். படைப்பாகிய ஸ்ரீகிருஷ்ணர் அல்ல. சிவபாபாவே உங்களை வைரம் போன்றவர் ஆக்குகின்றார் என்பது உங்களுக்குத் தெரியும். மேலும் நினைவு கூரப்படுகின்றது: சிலர் சிப்பியைப் போன்று பெறுமதி அற்றவர்கள். சிலர் வைரத்தைப் போன்று பெறுமதி வாய்ந்தவர்கள். குழந்தைகளின் புத்தியில் இருக்க வேண்டிய தந்தையின் கட்டளையானது: என்னையும் ஆஸ்தியையும் நினைவு செய்யுங்கள்! அவரே எல்லையற்ற தந்தை ஆவார். கிருஷ்ணர் உலகின் அரசன் ஆகிய போதிலும் அவர் எல்லைக்கு உட்பட்டதன் அதிபதியே ஆவார். சிவபாபா ஓர் அரசன் அல்ல. உண்மையில் கீதைக்குப் பெரும் புகழ் இருக்கின்றது. அத்துடன் கூடவே பாரதத்திற்கும் புகழ் உள்ளது. பாரதமே சமயங்கள் அனைத்தினதும் மகத்தான யாத்திரை ஸ்தலம் ஆகும். கிருஷ்ணரின் பெயர் புகுத்தப்பட்டதால் அதன் முக்கியத்துவம் அழிந்து விட்டது. இதனாலேயே பாரதம் சிப்பியைப் போன்று பெறுமதி அற்றதாகிவிட்டது. இது நாடகத்திற்கு ஏற்ப இடம்பெற்ற போதிலும் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தந்தை மிக நன்றாக விளங்கப்படுத்துகின்றார். அவர் நாளுக்கு நாள் மிக நன்றாக விளங்கப்படுத்துகின்றார். எனவே நீங்கள் பழைய படங்களிலே மாற்றம் செய்து புதிய படங்களை உருவாக்க வேண்டும். இது இறுதிவரை தொடரும். சிவபாபாவே உங்களது ஆஸ்தியை உங்களுக்குக் கொடுக்கிறார் என்பது குழந்தைகளாகிய உங்களது புத்தியில் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். அவர் கூறுகின்றார்: தொடர்ச்சியாக என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். கிருஷ்ணரை நினைவு செய்வதால் உங்கள் பாவங்கள் அழிக்கப்பட மாட்டாது. அவர் சர்வ சக்திவான் அல்ல. தந்தை ஒருவரே சர்வ சக்திவான், அவர் ஒருவரே உங்களுக்கு உங்களது ஆஸ்தியைக் கொடுக்கின்றார். மக்கள் சதா ஸ்ரீகிருஷ்ணரை நினைவு செய்கிறார்கள். உதாரணமாக, ஸ்ரீகிருஷ்ணர் இதனைக் கூறினார் என்று நீங்கள் நினைக்கலாம், அத்துடன் அவரே சரீர உறவுகள் அனைத்தையும் மறந்து சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள் என்று கூறுவதாகவும் கருதலாம். ஓர் ஆத்மா அவரது தந்தையையே நினைவு செய்வார். ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தை கிருஷ்ணர் அல்ல. இந்த விடயங்கள் அனைத்தும் கடையப்பட்டு புத்தியால் கிரகிக்கப்பட வேண்டும். பற்றிலே சிக்குண்டு இருப்பதால் சிலரால் இதனைக் கிரகிக்க முடிவதில்லை. நீங்கள் பாடுகிறீர்கள்: “நாங்கள் அனைவரில் இருந்தும் எங்களைத் துண்டித்து உங்களுடன் மாத்திரமே எங்களை இணைத்துக் கொள்வோம். என்னுடையவர் ஒருவரே அன்றி வேறெவரும் இல்லை.” எவ்வாறாயினும், பற்றானது உங்களை முற்று முழுதாக ஒரு குரங்கைப் போல் ஆக்குகின்றது. ஒரு குரங்கிற்கு அதிகளவு பற்றும் பேராசையும் இருக்கின்றது. செல்வந்தர்களுக்கும் இது விளங்கப்படுத்தப்படுகின்றது: மரணம் உங்கள் முன்னால் நிற்கின்றது. உங்களிடமுள்ள அனைத்தையும் கடவுளின் சேவைக்குப் பயன்படுத்தி உங்கள் எதிர்காலத்தை உருவாக்குங்கள். எவ்வாறாயினும் அவர்கள் தொடர்ச்சியாக ஒரு குரங்கைப் போல அனைத்திலும் தொங்கிக் கொண்டிருப்பதுடன் எவற்றையும் கைவிடுவதும் இல்லை. தந்தை கூறுகின்றார்: உங்கள் புத்தியின் யோகத்தை உங்கள் சரீரத்தில் இருந்தும் சரீர உறவுகளில் இருந்தும் அகற்றுங்கள்! தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள்! நீங்கள் கூறுகிறீர்கள்: இந்தச் செல்வம், குழந்தைகள் போன்றன கடவுளாலேயே கொடுக்கப்பட்டவை. அவரே இப்போது வந்து கூறுகின்றார்: உங்களது செல்வம், சொத்துக்கள் அனைத்தும் முடிவடையப் போகின்றது. “சிலரது செல்வம் நிலத்திற்குக் கீழ் புதைக்கப்படும்.” நில நடுக்கம் ஏற்படும் போது அனைத்தும் அழிந்துவிடும். ஒரு விமானம் விபத்துக்கு உள்ளாகும் போதும் அல்லது எங்காவது தீ பரவும் போதும் போலீசார் வருவதற்கு முன்னர் திருடர்கள் அங்கு விரைந்து வந்துவிடுகிறார்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளே சரீரதாரிகளில் இருந்து உங்கள் பற்றை அகற்றுங்கள். பற்றை வென்றவர்கள் ஆகுங்கள்! சரீர உணர்வே முதல் இலக்க எதிரியாகும். தேவர்கள் ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆவார்கள். நீங்கள் சரீர உணர்வு உடையவர்களாகும் போது, நீங்கள் விகாரங்களில் சிக்குண்டு விடுகிறீர்கள். நீங்கள் அரைக் கல்பமாகச் சரீர உணர்வு உடையவர்களாக இருந்தீர்கள். நீங்கள் இப்போது ஆத்ம உணர்வில் இருப்பதற்குப் பயிற்சி செய்ய வேண்டும். எந்த ஒரு மனிதருக்கும் இவ்விடயங்களைப் பற்றி எதுவுமே தெரியாது. அவர்களுக்குக் கடவுளையும் தெரியாது. அவர்களுக்கு ஆத்மாவையும் தெரியாது. பரமாத்மாவையும் தெரியாது. ஆத்மாக்கள் எத்தனை பிறப்புக்களை எடுக்கிறார்கள் என்றோ அவர்கள் எவ்வாறு நடிகர்களாக இருந்து, தங்களது பாகங்களை நடிக்கிறார்கள் என்றோ அவர்களுக்குத் தெரியாது. இதனாலேயே அவர்கள் அநாதைகள் என்று அழைக்கப்படுகிறார்கள். ஆத்மாக்கள் ஒளியுடன் இரண்டறக் கலந்து விடுகிறார்கள் என அவர்கள் கூறுகிறார்கள். எவ்வாறாயினும் ஆத்மாக்கள் அழிவற்றவர்கள். ஆத்மாவிலே 84 பிறவிகளின் பாகமும் பதியப்பட்டுள்ளது. ஆத்மா நட்சத்திரம் போன்றவர் என அவர்கள் கூறுகின்ற போதிலும், அவர்கள் அதனைப் புரிந்து கொள்வதில்லை. ஆத்மாவே பரமாத்மா என்று அவர்கள் கூறுகிறார்கள். தந்தையைப் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது. அற்புதமான நட்சத்திரம் நெற்றியின் நடுவே பிரகாசிக்கின்றது என அவர்கள் ஆத்மாவையிட்டுக் கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் கடவுளைப் பற்றி எதுவுமே கூறுவதில்லை. அவர் பரமாத்மா என்று அழைக்கப்படுகின்றார். அவர் பரந்தாமத்திலே வசிக்கின்றார். அவர் ஒரு புள்ளி ஆவார். அவர் மறுபிறப்புக்கு அப்பாற்பட்டவர். ஆனால் ஆத்மாக்கள் மறுபிறப்பு எடுக்க வேண்டும். கடவுளையிட்டுக் கூறப்படுகின்றது: அவரே ஞானக் கடலும், பேரானந்தக் கடலும், தூய்மைக் கடலும் ஆவார். தேவர்களுக்கு அவர்களது ஆஸ்தியைக் கொடுத்தது யார்? தந்தையே ஆவார். இப்போது எவருமே தேவர்களைப் போன்று அனைத்து தெய்வீகக் குணங்களும் நிரம்பியவர்களாகவும், 16 சுவர்க்கக் கலைகள் நிரம்பியவர்களாகவும் இல்லை. அவர்கள் எவ்வாறு தங்கள் ஆஸ்தியைப் பெற்றார்கள் என்பதை எவருமே அறிய மாட்டார்கள். தந்தை வந்தே உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அவர் ஒருவரே ஞானக் கடல் என்று அழைக்கப்படுகின்றார். அவர் இந்த நேரத்தில் வந்து உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார், அது பின்னர் மறைந்து விடுகின்றது. அதன் பின்னர் பக்தி இருக்கின்றது. அது ஞானம் என அழைக்கப்பட முடியாது. சற்கதி இந்த ஞானத்தின் மூலமே பெறப்படுகின்றது. சீரழிவு இருக்கும் போதே அனைவருக்கும் சற்கதி அருளும் ஞானக்கடல் வர முடியும். தந்தை ஒருவரே வந்து உங்களை இந்த ஞானத்தால் நீராட்டுகின்றார். வேறெந்த நீரிலும் நீராடுவதனால் சற்கதி அடைய முடியாது. இச்சிறிய விடயங்கள் கூட கிரகிக்கப்பட வேண்டும். பிரதானமான விடயம் நல்ல படங்கள் பெரிதாக உருவாக்கப்பட வேண்டும், அப்போது மக்களால் அவற்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். அவற்றில் எழுதப்படுவவை மிகப் பெரிதாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும். படங்களை உருவாக்குபவர்களது புத்திகளில் இவை இருக்க வேண்டும். பரமாத்மாவாகிய பரமதந்தையின் அறிமுகத்தைப் பெற்றுத் தந்தையிடம் இருந்து அவர்களது 21 பிறவிகளுக்கான ஆஸ்தியைக் கோரிக் கொள்ளுமாறு அனைவரையும் அழையுங்கள். சகோதர சகோதரிகளே, அப்பாலுள்ள தந்தையிடம் இருந்து எல்லையற்ற இராச்சியத்திற்கான சந்தோஷத்தை எவ்வாறு பெறுவது என வந்து புரிந்து கொள்ளுங்கள். எல்லையற்ற தந்தையிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைப் பெறுவதற்கு இங்கு கற்றிடுங்கள். இதையிட்டுப் பயப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. மக்கள் தொடர்ந்தும் அழைக்கிறார்கள்: ஓ தூய்மையாக்குபவரே வாருங்கள்! தந்தையும் கூறுகிறார்: காமமே கொடிய எதிரி. நீங்கள் தூய உலகிற்குப் போக வேண்டுமானால் நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாக வேண்டும். விகாரத்தினூடாகப் பிறப்பெடுப்பவர்கள் தூய்மை அற்றவர்கள் என்றே அழைக்கப்படுகிறார்கள். சத்திய, திரேதா யுகங்களில் நஞ்சு இருப்பதில்லை. அது முற்று முழுதான விகாரமற்ற உலகம் என அழைக்கப்படுகின்றது. அங்கே எந்த விதமான விகாரமும் இருப்பதில்லை. எனவே அங்கு எவ்வாறு குழந்தைகள் பிறப்பார்கள் என நீங்கள் ஏன் கேட்கிறீர்கள்? விகாரம் அற்றவர்கள் ஆகுங்கள்! குழந்தைகள் பிறக்க வேண்டிய விதத்தில் அவர்கள் பிறப்பார்கள். ஏன் அதைப் பற்றியே நீங்கள் கேட்கிறீர்கள்? தந்தையை நினைவு செய்யுங்கள். உங்களது பல பிறவிகளின் பாவங்கள் அழிக்கப்படும். இது தூய்மையற்ற ஆத்மாக்களின் உலகம். அது தூய புண்ணிய ஆத்மாக்களின் உலகம். அதை உங்களுடைய புத்திகளில் மிக நன்றாகப் பதிய வையுங்கள். தந்தை வந்து உங்கள் பக்தியின் பலனைக் கொடுக்கின்றார். தந்தை மாத்திரமே அனைவருக்கும் சற்கதியை அளித்து அவர்களை உலகின் அதிபதிகள் ஆக்குகின்றார். தந்தை கூறுகிறார்: இப்போது தூய்மையாகி, சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். இதுவே மகா மந்திரம். நீங்கள் நிச்சயமாகத் தந்தையிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பெறுவீர்கள். தந்தை கூறுகிறார்: என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள், நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள். நீங்கள் ஏணிப் படத்தை விளங்கப்படுத்த வேண்டும். நாளுக்கு நாள் அனைத்தும் தொடர்ந்தும் முன்னேற்றம் அடையும். மிகத் தெளிவாக அதில் எழுதுங்கள்: பிரம்மாவினூடாக ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தின் ஸ்தாபனை. ஆதி சனாதன தேவிதேவதா தர்மம் நிலவும் போது வேறெந்தச் சமயங்களும் இருக்க மாட்டாது. தூய்மை ஆகுபவர்கள் மாத்திரமே தூய உலகிற்குச் செல்வார்கள். உங்களை நீங்கள் சக்தியால் நிறைக்கும் அளவிற்கேற்ப நீங்கள் சீக்கிரமாகவே புதிய உலகிற்கு வருவீர்கள். அனைவரும் ஒன்றாகக் கீழிறங்கி வர மாட்டார்கள். சத்திய திரேதா யுகங்களில் மிகச் சொற்ப அளவு தேவர்களே இருப்பார்கள் என்றும், அதன் பின்னர் சனத்தொகை அதிகரிக்கிறது என்பதும் உங்களுக்குத் தெரியும். பல பிரஜைகள் இருப்பார்கள். விளங்கப்படுத்துபவர்கள் மிகச் சிறந்தவர்களாக இருக்க வேண்டும். அவர்களுக்குக் கூறுங்கள்: நீங்கள் அழைத்த எல்லையற்ற தந்தையிடம் இருந்து, வந்து, உங்கள் ஆஸ்தியைக் கோரிக் கொள்ளுங்கள்: ஓ பாபா! உண்மையி;ல் அவரது பெயர் சிவன். நீங்கள் “கடவுள்”, “ஈஸ்வர்”, “பிரபு” என்று கூறும் போது, அவரே உங்களது தந்தையும், நீங்கள் அவரிடமிருந்தே உங்கள் ஆஸ்தியைக் கோரிக் கொள்கிறீர்கள் எனபதையும் புரிந்து கொள்வதில்லை. சிவபாபா என்று கூறும் போது, நீங்கள் ஆஸ்தியை நினைவு செய்கிறீர்கள். மக்கள் அவரிடம் கூறுகிறார்கள்: பரமாத்மா சிவனுக்கு வந்தனங்கள். எங்களுக்கு பரமாத்மாவினுடைய பெயரைக் கூறுங்கள்! எவருமே பெயருக்கும் ரூபத்திற்கும் அப்பாற்பட்டிருக்க முடியாது. அவரது பெயர் சிவன். நீங்கள் இவ்வாறு கூறக் கூடாது: சிவனுக்கு வந்தனங்கள். கூறுங்கள்: பரமாத்மா சிவனுக்கு வந்தனங்கள். ஒவ்வொரு வார்த்தையும் மிகத் தெளிவாக விளங்கப்படுத்த வேண்டும். “சிவனுக்கு வந்தனங்கள்” என்று கூறுவதன் மூலம் தந்தை என்ற உறவு முறையில் சந்தோஷம் இருப்பதில்லை. மக்கள் இத்தகைய பெயர்களைக் கொடுத்திருக்கிறார்கள். மனிதர்களைக் கடவுள் என்று அழைக்க முடியாது என்பது உங்களுக்குத் தெரியும். பிரம்மா, விஷ்ணு, சங்கர் அனைவரும் தேவர்கள் என்றே அழைக்கப்படுகிறார்கள். படைப்பவராகிய தந்தை ஒருவரே அசரீரியானவர் ஆவார். பௌதீகத் தந்தை குழந்தைகளை உருவாக்கி, அவர்களுக்கு ஆஸ்தியைக் கொடுப்பதைப் போன்று, எல்லையற்ற தந்தை உங்களுக்கு உங்களது ஆஸ்தியைக் கொடுக்கின்றார். அவர் பாரதத்தை உலகின் அதிபதி ஆக்குகின்றார். தந்தை ஒருவரே முழு உலகையும் தூய்மை ஆக்குபவர் ஆவார். தங்களது சமய ஸ்தாபகர்கள் அனைவரும் தூய்மை அற்றவர்கள் என்பதும் அவர்களும் இடுகாட்டில் இருக்கிறார்கள் என்பதும் எவருக்குமே தெரியாது. இது இப்போது அனைவருக்கும் கணக்குத் தீர்க்கும் காலமாகும். தந்தை ஒருவரே வந்து அனைவரையும் ஈடேற்றுகின்றார். குதா, கடவுள், கணக்குத் தீர்க்கும் காலத்தில் மாத்திரமே வருகிறார். அவர் மாத்திரமே ஞானக்கடல் ஆவார். எழுதப்பட்டுள்ளது: கடலின் குழந்தைகள் முற்றாக எரிக்கப்பட்டார்கள். அதாவது அவர்கள் காமச் சிதையில் அமர்ந்ததால் அவலட்சணமாகவும், கலியுகத்தவர்களாகவும் ஆகிவிட்டார்கள். எனவே அவர்கள் எவ்வாறு மீண்டும் அழகானவர்கள் ஆகுவது? தந்தை கூறுகிறார்: நினைவு யாத்திரையில் நிலைத்து இருப்பதனூடாக. “யோகம்” என்ற வார்த்தையைப் பிரயோகிப்பதனூடாக மக்கள் குழப்பம் அடைந்து விட்டார்கள். தந்தை கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள். உங்கள் இறுதி எண்ணங்கள் உங்கள் இலக்கிற்கு உங்களை இட்டுச் செல்லும். அவர் மிகத் தெளிவாக விளங்கப்படுத்துகின்றார்! இருந்தும் இந்த விடயங்கள் ஏன் உங்கள் புத்திகளில் பதிவதில்லை? ஏனெனில் அதிகளவு சரீர உணர்வு இருப்பதால் எவராலும் கிரகிக்க முடியாதிருக்கின்றது. தந்தை உங்களுக்கு மிக நல்ல வழிமுறையைக் காட்டுகின்றார். அனைவரும் நினைவு செய்கின்ற எல்லையற்ற தந்தை, இங்கு வரும் போது என்ன செய்கிறார்? அவர் பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்குகின்றார். நீங்கள் பிறவி பிறவியாக எல்லைக்கு உட்பட்ட ஆஸ்தியைப் பெற்றீர்கள். நீங்கள் இப்போது 21 பிறவிகளுக்கு எல்லையற்ற தந்தையிடம் இருந்து எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். சத்திய, திரேதா யுகங்களில் தேவர்கள் ஆட்சி செய்தார்கள். சூரிய வம்சம், சந்திர வம்சம், பின்னர் வைசிய வம்சம், சூத்திர வம்சம் இருக்கின்றன. நீங்கள் இந்த வார்த்தைகளை எழுதும் போது அவர்களே மறு பிறப்பெடுத்து வெவ்வேறு இக்குலங்களுடாக வருகிறார்கள் என்பது தெளிவாகும். தந்தை அனைவருக்கும் விளங்கப்படுத்துகின்றார். ஆனால் நீங்கள் நேர் முன்னிலையில் இருப்பதால் நீங்கள் சந்தோஷப்படுகிறீர்கள். சேவை செய்யாதவர்களின் பாக்கியத்தில் இது இல்லை. அவர்கள் சேவை செய்யும் போது அவர்களது பெயர் புகழப்படும். கூறப்படுகின்றது: பாபாவின் புதல்விகள் மிகத் திறமைசாலிகள்! அவர்கள் எதையும் செய்வார்கள். அவர்கள் சுவர்க்க இராச்சியத்தின் ஆஸ்தியையே எங்களுக்குக் கொடுக்கிறார்கள்! அவர்கள் இந்தப் பொருட்களையும் எங்களுக்குக் கொடுக்கிறார்கள். குருடர்களுக்கு முன்னால் இந்தப் படங்கள் கண்ணாடி போன்று ஆகுகின்றன. இதில் மந்திரம் என்ற கேள்விக்கே இடமில்லை. தூய்மையே பிரதானமானது. இது உங்களது இறுதிப் பிறவி என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் சுவர்க்கத்திற்குச் செல்ல விரும்பினால் நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாக வேண்டும். விநாசம் உங்கள் முன்னால் உள்ளது. நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாக வேண்டும். தூய்மை ஆகுவதற்காகவே சந்தியாசிகள் தங்களது வீட்டையும் குடும்பத்தையும் துறக்கிறார்கள். தந்தை கூறுகிறார்: விநாசம் உங்கள் முன்னால் உள்ளது. என்னை நினைவு செய்யுங்கள். உங்கள் படகு அக்கரை சேரும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. விநாசம் இடம்பெறும் முன்னர், உங்களிடமுள்ள அனைத்தையும் தகுதி வாய்ந்த முறையில் பயன்படுத்துங்கள். இதுவே கணக்குத் தீர்க்கும் காலமாகும். எனவே நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாக வேண்டும்.

2. சரீரதாரிகளில் இருந்து உங்களின் பற்றை அகற்றிப் பற்றை வென்றவர்கள் ஆகுங்கள். சரீர உணர்வு என்ற முதல் இலக்க எதிரியை வெற்றி கொள்ளுங்கள். உங்களது புத்தியின் யோகத்தை அனைவரில் இருந்தும் துண்டித்துத் தந்தையுடன் இணையுங்கள்.

ஆசீர்வாதம்:
உங்களின் எண்ணங்களிலும் செயல்களிலும் அழியாத வெற்றியை அடைவதற்கு, நினைவெனும் மந்திரத்தைப் பயன்படுத்தி, வெற்றி சொரூபம் ஆகுவீர்களாக.

குழந்தைகளான நீங்கள் சர்வசக்திவான் அரசாங்கத்தின் தூதுவர்கள் ஆவீர்கள். ஆகவே, எவருடனும் எதையும் கலந்துரையாடும் போது உங்களின் மனங்கள் குழப்பம் அடைய அனுமதிக்காதீர்கள். நினைவெனும் மந்திரத்தைப் பயன்படுத்துங்கள். யாராவது ஒருவரை வார்த்தைகளால் அல்லது ஏனைய வழிமுறைகளால் கட்டுப்படுத்த முடியாத போது, அவர்கள் மாயாஜால மந்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள். உங்களிடம் ஆத்ம உணர்வுப் பார்வை என்ற கண்கள் உள்ளன. அத்துடன் ‘மன்மனாபவ’ என்ற மந்திரமும் உள்ளது. இதனால் உங்களால் உங்களின் எண்ணங்களை நடைமுறைப்படுத்தி, வெற்றி சொரூபம் ஆகமுடியும்.

சுலோகம்:
செயல் உணர்வு உடையவர் ஆகுவதற்குப் பதிலாக, ஆத்ம உணர்வு உடையவர் ஆகுங்கள்.

அவ்யக்த சமிக்ஞை: சதா ஆட்ட, அசைக்க முடியாத மற்றும் நிலையான ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.

நிலையாக இருப்பவர் என்றால் உங்கள் முயற்சியின் வேகம் எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருப்பது என்று அர்த்தமல்ல. சதா என்றால் சதா பறக்கின்ற ஸ்திதியை அனுபவம் செய்தல் என்று அர்த்தமாகும். சகல உறவுமுறைகள் என்ற அழியாத இழை எப்பொழுதும் ஒரேயொருவருடன் இணைந்திருக்கட்டும். ஒரேயொரு தந்தையன்றி வேறு எவரும் இல்லை - இந்த திடசங்கற்ப எண்ணத்தைக் கொண்டிருங்கள். எந்தவொரு உறவுமுறையும் தவறவிடப்படாது இருக்க வேண்டும். சகல உறவுமுறைகளின் இழையும் ஒருவருடன் கட்டுண்டு இருக்கின்ற போது, நீங்கள் இயல்பாகவே நிலையான ஸ்திதியை கொண்டிருப்பீர்கள்.