30.06.24    Avyakt Bapdada     Tamil Lanka Murli    30.03.20     Om Shanti     Madhuban


உங்களின் மனதை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு, அவ்வப்போது ஐந்து விநாடிகளுக்கு அதைப் பயிற்றுவியுங்கள்.


இன்று, தொலைதூரவாசியான பாப்தாதா, பௌதீக உலகில் வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் தனது குழந்தைகளைச் சந்திக்க வந்துள்ளார். பல்வேறு நாடுகளில் வசிக்கும் உங்கள் எல்லோரையும் ஒரே தேசத்துவாசிகளாகவே பாப்தாதா பார்க்கிறார். நீங்கள் ஒவ்வொருவரும் எங்கிருந்து வந்திருந்தாலும், நீங்கள் எல்லோரும் ஒரே இடத்தில் இருந்தே வந்துள்ளீர்கள். எனவே, உங்களின் அநாதியான தேசம் உங்களுக்கு நினைவிருக்கிறதுதானே? நீங்கள் அதை விரும்புகிறீர்கள்தானே? தந்தையை நேசிப்பதுடன்கூடவே, நீங்கள் உங்களின் அநாதியான தேசத்தையும் விரும்புகிறீர்கள்தானே?

இன்று, பாப்தாதா குழந்தைகளான உங்கள் எல்லோருடைய ஐந்து ரூபங்களையும் பார்க்கிறார். அந்த ஐந்து ரூபங்களும் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? உங்களுக்கு அவை என்னவென்று தெரியும்தானே? ஐந்து முகங்களைக் கொண்ட பிரம்மாவும் பூஜிக்கப்படுகிறார். ஆகவே, பாப்தாதா குழந்தைகளான உங்கள் எல்லோருடைய ஐந்து ரூபங்களையும் பார்க்கிறார்.

முதலாவது: உங்களின் அநாதியான ஒளிப்புள்ளி ரூபம். உங்களின் ரூபம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? நீங்கள் அதை மறக்கவில்லைத்தானே? இரண்டாவது: உங்களின் ஆதியான தேவ ரூபம். உங்களின் தேவ ரூபத்தை நீங்கள் அடைந்துவிட்டீர்களா? மூன்றாவது: மத்திய காலத்திற்குரிய உங்களின் பூஜிக்கத்தகுதிவாய்ந்த ரூபம். உங்களுக்கு அது நினைவிருக்கிறதா? நீங்கள் எல்லோரும் பூஜிக்கப்பட்டீர்களா அல்லது பாரதவாசிகள் பூஜிக்கப்பட்டார்களா? நீங்கள் பூஜிக்கப்பட்டீர்களா? குமார்களே, பேசுங்கள்! நீங்கள் பூஜிக்கப்பட்டீர்களா? எனவே, மூன்றாவது ரூபம், உங்களின் பூஜிக்கத்தகுதிவாய்ந்த ரூபம். நான்காவது: உங்களின் சங்கமயுக பிராமண ரூபம். இறுதியாக, உங்களின் தேவதை ரூபம். எனவே, உங்களின் இந்த ஐந்து ரூபங்களையும் இப்போது நீங்கள் நினைத்தீர்களா? அச்சா. உங்களின் இந்த ஐந்து ரூபங்களையும் உங்களால் ஒரு விநாடியில் அனுபவம் செய்ய முடிந்ததா? குறைந்தபட்சம் உங்களால், ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து என எண்ண முடியும்! இந்த ஐந்து ரூபங்களும் மிகவும் அழகானவை! உங்களை நீங்கள் விரும்பும்போதெல்லாம் விரும்பும் ரூபத்தில், நீங்கள் அதைப் பற்றி நினைத்தவுடனேயே உங்களால் அனுபவம் செய்ய முடியும். இதுவே மனதின் ஆன்மீக அப்பியாசம் ஆகும். தற்காலத்தில் எல்லோரும் என்ன செய்கிறார்கள்? அவர்கள் தேகாப்பியாசம் செய்கிறார்கள், அப்படித்தானே? உங்களின் உலகின் ஆரம்பத்தில் - சத்தியயுகம் உங்களின் உலகமாக இருந்ததல்லவா? அந்த வேளையில், நீங்கள் நடக்கும்போதும் அசையும்போதும் இயல்பாகவே தேகாப்பியாசமாகவே இருந்தது. நீங்கள் எங்கேயாவது நின்றுகொண்டு, ‘ஒன்று, இரண்டு, மூன்று’ எனச் சொல்லி தேகாப்பியாசம் செய்யவில்லை ஆகவே, இப்போது இறுதிநேரமாக இருப்பதனால், பாப்தாதா உங்களையும் இந்த அப்பியாசத்தைச் செய்ய வைக்கிறார். பௌதீக தேகாப்பியாசம் செய்வதனால் உங்களின் சரீரங்கள் ஆரோக்கியம் அடையும். அதேபோல், நடக்கும்போதும் அசையும்போதும் உங்களின் மனங்களுக்கும் தொடர்ந்து அப்பியாசத்தைக் கொடுங்கள். இதற்காக நீங்கள் விசேடமாக ஒரு நேரத்தைத் தேட வேண்டியதில்லை. எந்தவொரு வேளையிலும் உங்களால் ஐந்து விநாடிகளை எடுக்க முடியுமா முடியாதா? உங்களால் ஐந்து விநாடிகளைக் கூட செலவிட முடியாத அளவிற்கு நீங்கள் மிகவும் பிஸியா? அப்படி யாராவது இருக்கிறீர்களா? அப்படியிருந்தால், உங்களின் கையை உயர்த்துங்கள்! ‘நான் என்ன செய்வது? எனக்கு நேரமே இல்லை!’ எனப் பின்னர் நீங்கள் சொல்ல மாட்டீர்கள்தானே? நீங்கள் இப்படிச் சொல்ல மாட்டீர்கள்தானே? உங்களுக்கு நேரம் இருக்கிறதா? எனவே, அவ்வப்போது, இந்த அப்பியாசத்தைச் செய்யுங்கள். நீங்கள் என்ன பணியைச் செய்து கொண்டிருந்தாலும், உங்களின் மனதை ஐந்து விநாடிகளுக்குப் பயிற்றுவியுங்கள். உங்களின் மனங்கள் அதனால் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும். பாப்தாதா கூறுகிறார்: ஒவ்வொரு மணிநேரத்திற்கு ஒரு தடவை இந்த ஐந்து விநாடிப் பயிற்சியைச் செய்யுங்கள். உங்களால் இதைச் செய்ய முடியுமா? பாருங்கள், இதைச் செய்ய முடியும் என நீங்கள் எல்லோரும் சொல்கிறீர்கள். ஆகவே, அதைச் செய்ய வேண்டும் என்பதை நினைவில் வைத்திருங்கள்! இந்த ஓம் சாந்தி பவனை நினையுங்கள். அதை மறக்காதீர்கள்! உங்களின் மனங்களைப் பற்றிய பல்வேறு முறைப்பாடுகள் உங்களிடம் உள்ளன. ‘எனது மனதை ஒருமுகப்படுத்த முடியாவிட்டால், என்னால் என்ன செய்ய முடியும்?’ நீங்கள் உங்களின் மனங்களை (மன்) ஒரு தொன் போல் கனக்கச் (மான்) செய்கிறீர்கள். நீங்கள் அவற்றைப் பாரமானது ஆக்குகிறீர்கள். முன்னர், நிறுப்பதற்கு இந்த நிறுக்கும் வழக்கத்தை நீங்கள் செய்வதுண்டு. எவ்வாறாயினும், இப்போது நிறுக்கும் வழக்கம் மாறிவிட்டது (மெட்ரிக்). நீங்கள் உங்களின் மனங்களை ஒரு தொன்னைப் போல் கனக்கச் செய்கிறீர்கள். அதாவது, நீங்கள் அவற்றை மிகவும் பாரமானது ஆக்குகிறீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் தொடர்ந்து இந்த அப்பியாசத்தைச் செய்தால், நீங்கள் மிகவும் இலேசானவர் ஆகிவிடுவீர்கள். எனவே, இந்தப் பயிற்சியை விருத்தி செய்யுங்கள். எந்தவொரு குறிப்பிட்ட ரூபத்தில் நீங்கள் உங்களை ஸ்திரப்படுத்த விரும்பும்போதும், உதாரணமாக, பிராமண ரூபத்தை எடுத்தால், அப்போது நீங்கள் பிராமண வாழ்க்கையை அனுபவம் செய்வீர்கள். ‘தேவதை’ என்று சொல்லுங்கள், நீங்கள் ஒரு தேவதை ஆகிவிடுவீர்கள். இது கஷ்டமா இல்லையா? குமார்களே பேசுங்கள்! இது கஷ்டமா? இது சிறிது கஷ்டமா? நீங்கள் தேவதைகளா இல்லையா? நீங்கள்தான் தேவதைகளா அல்லது வேறு யாருமா? எனவே, நீங்கள் எத்தனை தடவைகள் தேவதைகள் ஆகினீர்கள்? நீங்கள் எண்ணற்ற தடவைகள் அப்படி ஆகியுள்ளீர்கள். நீங்கள்தான் அப்படி ஆகுபவர்களா? அச்சா. எண்ணற்ற தடவைகள் செய்ததை மீண்டும் ஒருமுறை செய்வது கடினமாக இருக்குமா? இது சிலவேளைகளில் கடினமாக இருக்குமா? இப்போது இதைப் பயிற்சி செய்யுங்கள்! நீங்கள் எங்கே இருந்தாலும், உங்களின் மனதை ஐந்து விநாடிகள் பயணத்தில் எடுத்துச் செல்லுங்கள். நீங்கள் சுற்றுலா செல்வதை விரும்புகிறீர்கள்தானே? ஆசிரியர்களே, இது ஓகேயா? எப்படி சுற்றுலா செல்வது என உங்களுக்குத் தெரியுமல்லவா? இந்தச் சுற்றுலாவில் செல்லுங்கள். உங்களின் பணியில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். ஒவ்வொரு மணிநேரத்திற்கும் இந்தப் பயணத்தை மேற்கொள்ளுங்கள். அதன்பின்னர் உங்களின் பணியில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். உங்களின் வேலையை உங்களால் விட முடியாது. நீங்கள் உங்களின் கடமைகளை நிறைவேற்ற வேண்டும். எவ்வாறாயினும், உங்களால் ஐந்து விநாடிகளை எடுத்துக் கொள்ள முடியும். ஒரு நிமிடம்கூட இல்லை. ஆனால் விநாடிகள்! இதற்கான நேரத்தை உங்களால் ஏற்படுத்திக் கொள்ள முடியாதா? உங்களால் இதற்காக நேரத்தை ஒதுக்க முடியுமா? நீங்கள் ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் இருக்கும்போது இதற்காக நேரத்தை ஒதுக்க முடியுமா? நீங்கள் மாஸ்ரர் சர்வசக்திவான்கள்! ஆகவே, மாஸ்ரர் சர்வசக்திவான்களால் எதைத்தான் செய்ய முடியாது?

குழந்தைகளின் ஒரு விடயத்தைப் பார்க்கும்போது, பாப்தாதா மிக இனிமையாக வியக்கிறார். அது என்ன? நீங்கள் சவால்கள் விடுக்கிறீர்கள். துண்டுப்பிரசுரங்களை அச்சடிக்கிறீர்கள். சொற்பொழிவுகளை ஆற்றுகிறீர்கள். பாடநெறிகளையும் கொடுக்கிறீர்கள். நீங்கள் வேறு எதைச் செய்கிறீர்கள்? உலகை மாற்றுவீர்கள் என நீங்கள் சொல்கிறீர்கள். நீங்கள் எல்லோரும் இவ்வாறு சொல்கிறீர்கள்தானே? நீங்கள் எல்லோரும் இப்படிச் சொல்கிறீர்களா? அல்லது, சொற்பொழிவுகள் ஆற்றுபவர்கள் மட்டுமே இதைச் சொல்கிறார்களா? ஒருபுறம், நீங்கள் உலகை மாற்றுவீர்கள், நீங்களே மாஸ்ரர் சர்வசக்திவான்கள் என்று கூறுகிறீர்கள். உங்களின் மனம் உங்களுக்குச் சொந்தமானது, நீங்கள் உங்களின் மனதின் அதிபதி, நீங்கள் மாஸ்ரர் சர்வசக்திவான்கள் என்றும் சொல்கிறீர்கள். அப்படியிருந்தும், மறுபுறம், அது கஷ்டம் என்றும் நீங்கள் சொல்கிறீர்கள்! எனவே, பாபா இதனால் வியப்படைய மாட்டாரா? அவர் வியப்படைவார்தானே? எனவே, உங்களின் மனங்கள் நீங்கள் சொல்வதைக் கேட்கவில்லை என நீங்கள் நினைத்தால், நீங்களும் உங்களையிட்டு வியப்படையவே வேண்டும். ஏதாவது உங்களின் மனங்களில் பிரவேசிக்கும்போது நினைவுகூரப்படும் மூன்று வகையான கோடுகளை பாப்தாதா பார்க்கிறார். ஒன்று, நீரில் வரையப்படும் கோடு. தண்ணீரில் வரையப்படும் கோட்டை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? இத்தகையதொரு கோட்டை வரைய நீங்கள் ஆரம்பித்தவுடனேயே, அது உடனடியாக அழிந்து விடுகிறது. நீங்கள் இந்தக் கோட்டைக் கீறுகிறீர்கள்தானே? இரண்டாவது, ஒரு கடதாசியில் அல்லது சிலேட்டில் வரையும் ஒரு கோடு. எவ்வாறாயினும், மிகப்பெரிய கோடானது, கல்லில் செதுக்கப்படும் கோடாகும். கல்லில் செதுக்கப்படும் கோட்டை அழிப்பது மிகவும் கடினம். சிலவேளைகளில் குழந்தைகளான நீங்களும் கல்லில் செதுக்குவதைப் போல் உங்களின் மனங்களிலும் மிக ஆழமான கோட்டைச் செதுக்கிவிடுவதை பாப்தாதா பார்க்கிறார். அதன்பின்னர் நீங்கள் முயற்சி செய்தாலும் உங்களால் அதை அழிக்க முடியாது. இத்தகைய கோடு நல்லதா? ‘நான் இனிமேல் ஒருபோதும் இதைச் செய்ய மாட்டேன். அது ஒருபோதும் நடைபெற மாட்டாது’ என நீங்கள் பல தடவைகள் சத்தியம் செய்கிறீர்கள். ஆனால், நீங்கள் ஏதாவதொன்றின் ஆதிக்கத்திற்கு உள்ளாகுகிறீர்கள். இதனாலேயே, பாப்தாதா குழந்தைகளான உங்களை வெறுப்பதில்லை. ஆனால், அவருக்கு உங்களின் மீது கருணை ஏற்படுகிறது. நீங்கள் ஆதிக்கத்திற்கு உள்ளாகுகிறீர்கள். ஆகவே, ஆதிக்கத்திற்கு உள்ளான ஒருவர்மீது கருணை ஏற்படுகிறது. பாப்தாதா குழந்தைகளான உங்களைத் தனது கருணைப் பார்வையால் பார்க்கும்போது, நாடகத்தின் திரைகளில் என்ன தோன்றுகிறது? ‘எவ்வளவு காலத்திற்கு?’ என்ற கேள்வி. ஆகவே, நீங்கள் இதற்குப் பதில் சொல்ல வேண்டும். நீங்கள் பதில் சொல்வீர்களா? எவ்வளவு காலத்திற்கு? குமார்களான உங்களால் பதில் சொல்ல முடியுமா? அவை அனைத்தும் எப்போது முடியும்? குமார்களான நீங்கள் பல திட்டங்களைச் செய்கிறீர்கள்தானே? எனவே, எவ்வளவு காலத்திற்கு? உங்களால் இதற்குப் பதில் சொல்ல முடியுமா? இது இறுதியில் நிறுத்தப்படுவதற்கு முன்னர் எவ்வளவு காலத்திற்குத் தொடரும்? பேசுங்கள்! உங்களுக்குப் பதில் தெரியுமா? தாதிகளே, பேசுங்கள்! (இன்னமும் சங்கமயுகமாக இருப்பதனால், இது சிறிது காலத்திற்குத் தொடரும்.) ஆனால், சங்கமயுகம் எவ்வளவு காலத்திற்குத் தொடரப் போகிறது? (நாங்கள் தேவதைகள் ஆகும்வரை). ஆனால், அது எப்போது நடைபெறும்? (பாபாதான் எங்களுக்குச் சொல்ல வேண்டும்.) நீங்கள் தேவதைகள் ஆகவேண்டுமா அல்லது தந்தை அப்படி ஆகவேண்டுமா? ஆகவே, இதற்கான பதிலைப் பற்றிச் சிந்தியுங்கள். தந்தை, ‘இப்போது!’ எனச் சொல்லுவார். அதற்கு நீங்கள் தயாரா? அரைவாசி மாலை தயார் என்பதற்கே நீங்கள் உங்களின் கைகளை உயர்த்தவில்லை!

பாப்தாதா குழந்தைகளான உங்களை உங்களின் முழுமை ரூபத்தில் சதா காணவே விரும்புகிறார். தந்தை உங்களின் உலகம் (சன்சார்) என நீங்கள் சொல்கிறீர்கள். நீங்கள் எல்லோரும் இப்படிச் சொல்கிறீர்கள்தானே? உங்களுக்கு வேறு ஏதாவது உலகம் இருக்கிறதா? தந்தையே உங்களின் உலகமாக இருந்தால், இந்த உலகிற்கு வெளியே வேறு ஏதாவது இருக்க முடியுமா? இது உங்களின் சம்ஸ்காரங்களை மாற்றுகின்ற விடயம் மட்டுமே. உங்களின் பிராமண வாழ்க்கையில், பெரும்பாலான நேரத்தில், சம்ஸ்காரங்களே தடைகளை உருவாக்குகின்றன. அது உங்களின் சொந்த சம்ஸ்காரங்களாகவோ அல்லது மற்றவர்களின் சம்ஸ்காரங்களாகவோ இருக்கலாம். உங்கள் எல்லோரிடமும் இந்த ஞானம் உள்ளது. உங்களிடம் சக்திகள் உள்ளன. ஆனால், தடைகளுக்கான காரணம் என்ன? குறிப்பிட்ட வேளையில் உங்களுக்குத் தேவையான குறிப்பிட்டதொரு சக்தியானது, அது வரவேண்டிய நேரத்தில் அன்றி, சிறிது பிந்தியே வெளிப்படுகிறது. அதன்பின்னர், ‘அப்படிச் சொன்னதற்குப் பதில், நான் இப்படிச் சொல்லியிருந்தால், அது நன்றாக இருந்திருக்கும், அப்படிச் செய்வதற்குப் பதில், நான் இப்படிச் செய்திருந்தால், அது எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும்’ என நீங்கள் நினைக்கிறீர்கள். எவ்வாறாயினும், அந்தப் பரீட்சையில் நீங்கள் சித்தி எய்த வேண்டிய அந்த நேரம் அப்போது கடந்து போயிருக்கும். உங்களிடம் உள்ள சக்திகள் எல்லாவற்றையும் பற்றி நீங்கள் நினைக்கிறீர்கள்: ‘என்னிடம் சகித்துக் கொள்ளும் சக்தி உள்ளது, என்னிடம் வேறுபிரித்தறியும் சக்தி உள்ளது, நான் இந்தச் சக்தியைப் பயன்படுத்த வேண்டும்’. சிறிதளவு நேர வேறுபாடு ஏற்படுகிறது. வேறு என்ன நடக்கிறது? ஓகே, அந்த நேரத்தில் உங்களால் அந்தச் சக்தியைப் பயன்படுத்த முடியாமல் போய்விட்டது. நீங்கள் செய்ததற்குப் பதிலாக என்ன செய்திருக்கலாம் என்றும் நீங்கள் உணர்கிறீர்கள்;. நீங்கள் என்ன செய்திருக்கலாம் என்று பின்னரே உணர்கிறீர்கள். அந்தத் தவறை ஒரு தடவை செய்தபின்னர், அனுபவசாலியாகி, உங்களின் தவறு என்னவென்று உணர்ந்து கொள்ளுங்கள். அப்போது அதே தவறை நீங்கள் மீண்டும் செய்ய மாட்டீர்கள். அப்போதும் முன்னேற்றம் ஏற்படலாம். அந்த வேளையில், எது தவறு என்றும் எது சரி என்றும் உங்களால் புரிந்து கொள்ள முடியும். மிகத் தெளிவாக உங்களுக்குள் அதை உணர்ந்து கொள்ளுங்கள். அதனால், நீங்கள் அதே தவறை மீண்டும் செய்ய மாட்டீர்கள். எவ்வாறாயினும், இதிலும், உங்கள் எல்லோராலும் முழுமையான சதவீதத்தில் சித்தி எய்த முடியாமல் உள்ளது. மாயையும் மிகவும் கெட்டிக்காரி. அவள் அதே விடயத்தை உங்களில் மீண்டும் சோதிக்க வருகிறாள். உதாரணமாக, உங்களிடம் சகித்துக் கொள்ளும் சக்தி இல்லாவிட்டால், நீங்கள் அதை ஒரு தடவை உணர்ந்து கொண்டிருந்தாலும், மாயை மீண்டும் உங்களுக்கு சகித்துக் கொள்ளும் சக்தி தேவைப்படும் ஒரு சூழ்நிலையைக் கொண்டு வருவாள். ஆனால், அந்த வேளையில், அவள் தனது வடிவத்தைச் சிறிதே மாற்றியிருப்பாள். அதே விடயம்தான். ஆனால், மாயை தனது வடிவத்தைச் சிறிது மாற்றியிருப்பாள். அதே பழைய விடயம்தான். ஆனால், தற்காலத்தில் இடம்பெறுவதைப் போன்று, பழைய பொருள் எதுவும் மிக நன்றாக மெருகேற்றப்பட்டு, புதியதை விடப் புதியது போன்று தோற்றம் அளிக்கச் செய்யப்படுகிறது. அதேபோல், மாயாவும் மெருகேற்றப்பட்ட வடிவில் வருகிறாள். அப்போது அந்தச் சூழ்நிலையின் உட்பொருள் ஒன்றேதான் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்வதில்லை. உதாரணத்திற்கு, நீங்கள் பொறாமைப்படக்கூடும். பொறாமையிலும் பல வகைகள் உள்ளன. ஒரு வகை மட்டும் இல்லை. எனவே, பொறாமையே விதையாக உள்ளது. ஆனால் அது வெவ்வேறு வடிவங்களில் வருகின்றது. ஒரே வடிவத்தில் அது வருவதில்லை. அதனால், முன்னர் இடம்பெற்றது வேறானது. இது முற்றிலும் வேறுபட்டது என நீங்கள் சிலவேளைகளில் நினைப்பீர்கள். எவ்வாறாயினும், விதை ஒன்றேயாகும். அதன் வடிவம் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது. இதை இனங்கண்டு கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான சக்தி என்ன? வேறுபிரித்தறியும் சக்தி. இதற்கு, பாப்தாதாவும் இரண்டு விடயங்களில் கவனம் செலுத்தும்படி உங்களுக்கு முன்னரே கூறியுள்ளார். ஒன்று, நேர்மையான இதயத்தைக் கொண்டிருத்தல். நேர்மை! உங்களுக்குள் எதையும் மறைத்து வைக்காதீர்கள். அதை உங்களுக்குள் வைக்கும்போது என்ன நடக்கிறது? ஒரு பலூனுக்குள் அதிகளவு காற்றை நிரப்பினால் என்ன நடக்கும்? அது இறுதியில் வெடித்துவிடும், அப்படித்தானே? ஆகவே, உங்களின் இதயங்களை நேர்மையாக வைத்திருங்கள். ஓகே, ஏனைய ஆத்மாக்களின் முன்னால் பேசுவதற்கு நீங்கள் சிறிதளவு தயங்கக்கூடும். அவர்கள் உங்களை எப்படிப் பார்ப்பார்களோ என நீங்கள் சிறிது வெட்கப்படக்கூடும். எவ்வாறாயினும், உணர்ந்து கொள்வதுடன்கூடவே, நேர்மையான இதயத்தையும் கொண்டிருந்து, அதை பாப்தாதாவின் முன்னால் வையுங்கள். ‘நான் செய்த தவறைப் பற்றி நான் ஏற்கனவே பாப்தாதாவிடம் சொல்லிவிட்டேன்’ எனக் கூறாதீர்கள். நீங்கள் ஒரு கட்டளை இடுவதைப் போல், ‘ஆமாம், நான் இந்தத் தவறைச் செய்துவிட்டேன்’ எனச் சொல்லாதீர்கள். உங்களின் இனங்காணும் சக்தியாலும் உங்களின் நேர்மையான இதயத்தாலும், இதயபூர்வமாக அதை பாப்தாதாவின் முன்னால் வையுங்கள். உங்களின் தலையால் அன்றி, இதயபூர்வமாக வழங்குங்கள். அப்போது உங்களின் இதயத்தில் இருந்து அந்தக் குப்பை அகற்றப்பட்டு வெறுமையாகிவிடும். அது பின்னர் அழிக்கப்பட்டுவிடும். உங்களின் இதயம் சிறிய விடயங்களால் நிரம்பி உள்ளது. அவை எப்போதும் சிறிய விடயங்களே. அவை ஒருபோதும் பெரியவை அல்ல. நீங்கள் உங்களின் இதயத்தை நீங்கள் சேகரிக்கும் சிறிய விடயங்களால் நிரப்பிவிடுகிறீர்கள். அப்போது உங்களின் இதயம் வெறுமையாக இருப்பதில்லை. உங்களின் இதயம் வெறுமையாக இல்லாதபோது, எங்கே இதயங்களுக்கு சௌகரியம் அளிப்பவர் அமர முடியும்? குறைந்தபட்சம் அவர் அமர்வதற்கு ஓரிடம் இருக்க வேண்டும்! அல்லது, இல்லையா? எனவே, பிரபுவானவர் நேர்மையான இதயத்தையிட்டுக் களிப்படைகிறார். ‘நான் என்ன செய்பவனாக இருந்தாலும், எத்தகையவனாக இருந்தாலும். பாபா, நான் உங்களுடையவன்’. எல்லோரும் வரிசைக்கிரமமாக இருக்கப் போகிறார்கள் என்பதை பாப்தாதா அறிவார். இதனாலேயே. பாப்தாதா உங்களை அந்தப் பார்வையுடன் பார்ப்பதில்லை. எவ்வாறாயினும், உங்கள் ஒவ்வொருவருக்கும் நேர்மையான இதயம் இருக்க வேண்டும். இரண்டாவதாக, உங்களின் புத்தியின் இணைப்பானது எப்போதும் தெளிவாக இருக்க வேண்டும். உங்களின் இணைப்பில் எந்தவிதமான இடையூறும் இருக்கக்கூடாது. அந்த இணைப்பு துண்டிக்கப்படக்கூடாது. இல்லாவிட்டால், உங்களுக்குத் தேவையான நேரத்தில் உங்களால் பாப்தாதா உங்களுக்கு வழங்க விரும்பும் மேலதிக சக்தியையும் ஆசீர்வாதங்களையும் உதவியையும் பெற முடியாதிருக்கும். உங்களின் இணைப்பானது தெளிவாக இல்லாவிட்டால், அது சுத்தமாக இல்லாவிட்டால், அந்த இணைப்பு துண்டிக்கப்பட்டுவிடும். அப்போது நீங்கள் பெற வேண்டியதை உங்களால் பெற முடியாமல் போய்விடும். பல குழந்தைகள் கூறுகிறார்கள் - அவர்கள் அதைச் சொல்லாவிட்டாலும், அவ்வாறு நினைக்கிறார்கள் - ‘சில ஆத்மாக்கள் அதிகளவு ஒத்துழைப்பைப் பெறுகிறார்கள். அவர்கள் அதை பிராமணர்களிடமிருந்தும் மூத்தவர்களிடமிருந்தும் பாப்தாதாவிடமிருந்தும்கூடப் பெறுகிறார்கள். அவர்கள் பெறும் அளவிற்கு நான் அதைப் பெறுவதில்லை’. இதற்கான காரணம் என்ன? பாபா அருள்பவர், அவர் கடல் ஆவார். உங்களில் எவரும் நீங்கள் விரும்பிய அளவை அவரிடமிருந்து எடுத்துக்கொள்ள முடியும். ஏனென்றால், பாப்தாதாவின் பொக்கிஷக் களஞ்சியத்திற்கு பூட்டோ அல்லது சாவியோ கிடையாது. அதற்குக் காவலர்களும் கிடையாது. நீங்கள் ‘பாபா’ என்று சொன்னவுடனேயே, ‘ஜீ ஹஜீர்’ (வந்துவிட்டேன்) என பாபா பதிலளிக்கிறார். நீங்கள் ‘பாபா’ என்று சொன்னவுடனேயே, அவர் வழங்குகிறார். அவரே அருள்பவர். அவர் அருள்பவரும் அத்துடன் கடலும் ஆவார். எனவே, அவரிடம் எது இல்லாமல் போக முடியும்? அதனால், இந்த இரண்டு விடயங்களிலும் கவனம் செலுத்துங்கள் - நேர்மையான இதயம், சுத்தமான இதயம். கெட்டித்தனமாக இருக்க முயற்சி செய்யாதீர்கள்! உங்களில் பலர் அதிபுத்திசாலிகள் ஆகுகிறீர்கள்! நீங்கள் பல வழிமுறைகளில் புத்திசாலிகள் ஆக முயற்சி செய்கிறீர்கள். உங்களிடம் எப்போதும் சுத்தமான, நேர்மையான இதயம் இருக்கிறதா என்றும் உங்களின் புத்தியின் இணைப்பானது எப்போதும் தெளிவாகவும் சுத்தமாகவும் இருக்கிறதா என்றும் சோதித்துப் பாருங்கள். விஞ்ஞானத்தின் வசதிகளில் சிறிதளவு இடையூறு ஏற்பட்டாலும் அது தெளிவாக இல்லாமல் போவதை உங்களால் காண முடியும். ஆகவே, இதை நிச்சயமாகச் செய்யுங்கள்.

இன்னொரு விடயம்: இது இந்தப் பருவகாலத்தின் கடைசி முறை. இதனாலேயே. பாபா இதை உங்களுக்குக் கூறுகிறார். இது இரட்டை வெளிநாட்டவர்களுக்கு மட்டுமல்ல. ஆனால் எல்லோருக்கும் ஆகும். கடைசி முறையில் நீங்கள் பாபாவின் முன்னால் இருப்பதனால், பாபா இதை உங்களுக்குச் சொல்கிறார். இன்னமும் ஒரு குறிப்பிட்ட சம்ஸ்காரம், அல்லது நீங்கள் அதைச் சுபாவம் என்றும் அழைக்கலாம், அது இன்னமும் இருப்பதை பாப்தாதா கண்டுள்ளார். உங்கள் ஒவ்வொருவருக்கும் உங்களின் சொந்த சுபாவம் இருந்தாலும், எல்லோருக்கும் மற்றும் எல்லாவற்றிலும் உங்களுக்கு அன்பு இருந்தால் மட்டுமே, உங்களின் உறவுமுறைகள் வெற்றிகரமாக இருப்பதுடன், உங்களின் எண்ணங்களும் வெற்றிகரமாக இருந்து, உங்களின் வார்த்தைகள் இனிமையால் நிறைந்திருக்கும்போதே நீங்கள் இலகு சுபாவத்தைக் கொண்டவர் என்று அழைக்கப்படுவீர்கள். கவனக்குறைவான சுபாவத்தைக் கொண்டவர் ஆகாதீர்கள். கவனக்குறைவென்பது வேறொரு விடயம். இலகுவான சுபாவம் என்றால், காலத்தையும் நபரையும் சூழ்நிலைகளையும் இனங்கண்டு, அதற்கேற்ப உங்களை இலகுவாக ஆக்கிக் கொள்வதாகும். இலகுவாக இருத்தல் என்றால் ஒத்திசைவாக இருத்தல் என்று அர்த்தம். மிகவும் உத்தியோகபூர்வமாக இருப்பதன் மூலம் இறுக்கமான சுபாவத்தைக் கொண்டவர் ஆகாதீர்கள். உத்தியோகபூர்வமாக இருப்பது நல்லதே. ஆனால் அதிகம் இருக்கக்கூடாது! நீங்கள் தவறான நேரத்தில் உத்தியோகபூர்வமாக இருந்தால், அந்த வேளையில் அது ஒரு விசேடமான நற்குணமாகத் தோன்றாது. நீங்கள் இளையவராகவோ அல்லது முதிர்ச்சியானவராகவோ இருந்தாலும், நீங்கள் உங்களை வடிவமைக்கக்கூடியதாக இருக்கவும் வேண்டும். அத்துடன் வளைந்து கொடுக்கவும் வேண்டும். பெரியவர்களுடன் அவர்களைப் போன்று நீங்கள் ஆகவேண்டும். சிறுவர்களுடன் அவர்களைப் போன்று ஆகக்கூடியதாக இருக்க வேண்டும். உங்களின் சகபாடிகளுடன் அவர்களின் சகபாடியாக உங்களால் தொடர வேண்டியது அவசியமாகும். வயதானவர்களுடன், உங்களால் அவர்களுடன் செயற்படக் கூடியதாக இருப்பதுடன், அவர்களில் மரியாதை வைக்கவும் வேண்டும். உங்களால் உங்களை இலகுவாக வடிவமைத்துக் கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும். சிலர் தமது சரீரங்களை இலகுவாக (வளைந்து கொடுக்கக்கூடியதாக) வைத்துக் கொள்கிறார்கள். அதனால் அவர்களால் தாம் விரும்பியபடி அதை வளைத்துக் கொள்ள முடிகிறது. ஆனால், சிலருடைய சரீரங்கள் மிகவும் விறைப்பாக இருக்கும்போது, அவர்களால் அதை வளைக்க முடியாதிருக்கும். நீங்கள் கவனக்குறைவாக இருக்கக்கூடாது. நீங்கள் இலகுவாக இருக்கும்போது, உங்களால் எல்லாவற்றைப் பற்றியும் இலகுவாகவும் கவனக்குறைவாகவும் இருக்கமுடியும் என்பதல்ல. இல்லை! ‘பாப்தாதா எங்களை இலகுவாக இருக்கச் சொன்னார், அதனால் நாங்கள் இலேசாக இருக்கிறோம்!’ எனச் சொல்லாதீர்கள். இலகுவான சுபாவத்தைக் கொண்டிருத்தல் என்றால், காலத்திற்கேற்ப உங்களின் ரூபத்தை வளைத்துக் கொள்ளக்கூடியதாக இருத்தல் என்று அர்த்தம். அச்சா, இரட்டை வெளிநாட்டவர்களான உங்களுக்கு நல்லதொரு வாய்ப்புக் கிடைத்துள்ளது. நீங்கள் எல்லோரும் அப்பியாசத்தை நினைவு செய்தீர்களா? அல்லது, நீங்கள் அதை மறந்து விட்டீர்களா? நீங்கள் எல்லோரும் இப்போதே இந்த அப்பியாசத்தைச் செய்யுங்கள். ஒரு சுற்றுலா செல்லுங்கள். அச்சா.

எங்கும் உள்ள அதி மேன்மையான ஆத்மாக்கள் எல்லோருக்கும், அன்பையும் நினைவுகளையும் செய்திகளையும் அனுப்பி வைத்தவர்களுக்கும் தமது பல்வேறு உறவுமுறைகள், தமது சேவைச் செய்திகள் மற்றும் மிக நல்ல திட்டங்களைப் பற்றிய மிக நல்ல அன்பான கடிதங்களை அனுப்பியவர்ளுக்கும் அவை பாப்தாதாவை வந்தடைந்துள்ளன. அவற்றை எழுதியவர்களும் அந்த முயற்சியைச் செய்தவர்களும் தனிப்பட்ட முறையில் உங்களின் பெயர்களுக்கு இதயங்களுக்கு சௌகரியம் அளிப்பவரான பாப்தாதாவின் இதயபூர்வமான அன்பையும் நினைவுகளையும் ஏற்றுக்கொள்ளுங்கள். குழந்தைகள் தந்தையை நேசிக்கிறார்கள். தந்தையும் குழந்தைகளை பலமில்லியன் மடங்கு அதிகமாக நேசிக்கிறார். இது சதா அநாதியாக இருக்கும். அன்பான குழந்தைகளான உங்களால் தந்தையிடமிருந்து பிரிந்திருக்க முடியாது. தந்தையாலும் உங்களிடமிருந்து பிரிந்திருக்க முடியாது. நீங்கள் ஒன்றாக இருக்கிறீர்கள். நீங்கள் ஒன்றாகவே இருப்பீர்கள்.

எங்கும் உள்ள, தந்தைக்குச் சமமாக தங்களை ஆக்குகின்ற குழந்தைகள் எல்லோருக்கும், சதா தந்தைக்கும் அவரின் கண்களுக்கும் அவரின் இதயத்திற்கும் அவரின் நெற்றிக்கும் நெருக்கமாக இருப்பவர்களுக்கும் தந்தையின் ஒரேயொரு உலகில் சதா இருப்பவர்களுக்கும் சதா ஒவ்வோர் அடியிலும் பாப்தாதாவை சதா பின்பற்றுபவர்களுக்கும் சதா வெற்றியாளராக இருக்கும் நம்பிக்கையையும் போதையையும் சதா பேணுபவர்களுக்கும் வெற்றியாளர்களாக இருப்பதுடன்; எப்போதும் வெற்றியாளர்களாக இருப்பவர்களுக்கும், இத்தகைய அதிகபட்ச மேன்மையான, நீண்ட காலம் தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டுள்ள செல்லக் குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் நமஸ்காரங்களும்.

ஆசீர்வாதம்:
நீங்கள் சக்திசாலி ஆத்மாவாகி, ஒவ்வொரு விநாடியினதும் ஒவ்வோர் எண்ணத்தினதும் முக்கியத்துவத்தை அறிந்து, அதனால் உங்களின் சேமிப்புக் கணக்கை நிரப்புவீர்களாக.

சங்கமயுகத்தில், ஒவ்வொரு கணமும் நீங்கள் அழியாத தந்தையிடமிருந்து அழியாத பேறுகளைப் பெறுகிறீர்கள். கல்பம் முழுவதிலும் இந்த நேரத்தில் மட்டுமே நீங்கள் இத்தகைய பாக்கியத்தைப் பெறுகிறீர்கள். இதனாலேயே உங்களின் சுலோகன், ‘இப்பொழுதில்லையேல், எப்போதும் இல்லை’ என்பதாகும். நீங்கள் என்ன மேன்மையான பணிகளைச் செய்ய வேண்டியிருந்தாலும், அவற்றை இப்போதே நீங்கள் செய்ய வேண்டும். உங்களிடம் இந்த விழிப்புணர்வு இருக்கும்போது, நீங்கள் ஒருபோதும் உங்களின் நேரத்தையோ எண்ணங்களையோ அல்லது செயல்களையோ வீணாக்க மாட்டீர்கள். உங்களின் சக்திவாய்ந்த எண்ணங்களினூடாக, உங்களின் சேமிப்புக் கணக்கு நிறையும். அப்போது ஆத்மாவான நீங்கள், சக்திசாலி ஆகுவீர்கள்.

சுலோகம்:
ஒவ்வொரு வார்த்தையினதும் ஒவ்வொரு செயலினதும் தனித்துவம், தூய்மையாகும். சாதாரண தன்மையை தனித்துவமாக மாற்றுங்கள்.