30.07.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


இனிய குழந்தைகளே, ஒரேயொரு தந்தை மாத்திரம் துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அருள்பவர். அவர் மாத்திரமே உங்கள் துன்பங்கள் அனைத்தையும் அகற்றுகின்றார். எந்த மனிதராலும் எவருடைய துன்பத்தையும் அகற்ற முடியாது.

பாடல்:
உலகில் அமைதியின்மைக்குக் காரணம் யாது? எவ்வாறு அமைதி ஸ்தாபிக்கப்படுகின்றது?

பதில்:
எண்ணற்ற சமயங்களே உலகில் அமைதியின்மைக்குக் காரணம் ஆகும். கலியுகத்தின் இறுதியில் வேற்றுமை உள்ளபொழுது, அமைதியின்மை ஏற்படுகின்றது. தந்தை வந்து ஓர் உண்மையான தர்மத்தை ஸ்தாபிக்கின்றார், பின்னர் அங்கு அமைதி ஸ்தாபிக்கப்படுகின்றது. இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியத்தில் அமைதி இருந்தது என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும். அங்கு தூய தர்மமும், தூய செயலும் இருந்தன. நன்மையளிக்கும் தந்தை அப்புதிய உலகை மீண்டும் ஒருமுறை படைக்கின்றார். அங்கு அமைதியின்மை என்னும் குறிப்பே கிடையாது.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கமர்ந்திருந்து ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். ஆன்மீகத் தந்தை மாத்திரம் ஞானக்கடல் என அழைக்கப்படுகின்றார். இது குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. பம்பாயில், தொடர்ந்தும் சந்திப்புக்களை நடாத்துகின்ற பல சமூக சேவையாளர்கள் உள்ளனர். அவர்கள் பம்பாயில், சாதாரணமாகச் சந்திப்புக்களை நடாத்துகின்ற இடம், பாரதீய வித்யாபவன் என அழைக்கப்படுகின்றது. இரு வகையான ஞானம் உள்ளன. ஒன்று, பாடசாலைகளிலும் கல்லூரிகளிலும் கொடுக்கப்படுகின்ற, லௌகீக ஞானம். அவர்கள் அதை வித்யா (ஞானம்) பவன் என அழைக்கிறார்கள். வேறு ஒன்றும் இருக்க வேண்டும். ஞானம் என்றால் என்ன என்பது மக்களுக்குத் தெரியாது. இது ஆன்மீக ஞானபவனாக இருக்க வேண்டும். கியான், ஞானம் என அழைக்கப்படுகின்றது. பரமாத்மாவாகிய பரமதந்தை மாத்திரம் ஞானக்கடல். கிருஷ்ணரை ஞானக்கடல் என அழைக்க முடியாது. கிருஷ்ணரின் புகழானது சிவபாபாவின் புகழிலிருந்து வேறுபட்டது. பாரத மக்கள் குழப்பமடைந்துள்ளனர். அவர்கள் ஸ்ரீ கிருஷ்ணரைக் கீதையின் கடவுளாகக் கருதுவதால், அவர்கள் தொடர்ந்தும் வித்யாபவன்களைத் (ஞானத்தின் இடங்கள்) திறக்கின்றார்கள். அவர்கள் எதையும் புரிந்துகொள்வதில்லை. அந்த ஞானமே கீதா ஞானமாகும். ஞானக்கடல் என அழைக்கப்படுகின்ற, ஒரேயொரு தந்தையிடம் மாத்திரமே அந்த ஞானம் உள்ளது. இதை மனிதர்கள் அறிய மாட்டார்கள். உண்மையில், சமயநூல்கள் அனைத்தினதும், இரத்தினமாகிய, ஒரேயொரு பகவத் கீதையே, பாரத மக்களின் சமயநூல் ஆகும். யாரைக் கடவுள் என்று அழைக்க முடியும்? இந்நேரத்தில் பாரத மக்கள் இதையேனும் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் கிருஷ்ணரை அல்லது இராமரை அல்லது தங்களை பரமாத்மா என அழைக்கிறார்கள். இப்பொழுது தமோபிரதான் காலம். இது இராவண இராச்சியமாகும். குழந்தைகளாகிய நீங்கள் எவருக்காவது விளங்கப்படுத்தும்பொழுது, அவர்களுக்குக் கூறுங்கள்: கடவுள் சிவன் பேசுகிறார். ஒரேயொரு பரமாத்மாவாகிய பரமதந்தை மாத்திரமே ஞானக்கடல் என்பதையும், அவரே சிவன் என்று அழைக்கப்படுகிறார் என்பதையும் அவர்கள் எல்லாவற்றிற்கும் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் சிவராத்திரியையும்; கொண்டாடுகிறார்கள், ஆனாலும் எவராலும் எதையும் புரிந்துகொள்ள முடியாதுள்ளது. நிச்சயமாகச் சிவன் வந்திருக்க வேண்டும். இதனாலேயே அவர்கள் அவருடைய இரவைக் கொண்டாடுகிறார்கள். அவர்களுக்கு யார் சிவன் என்பது கூடத் தெரியாது. தந்தை கூறுகிறார்: ஒரேயொருவரே அனைவரினதும் கடவுள். ஆத்மாக்கள் அனைவரும் சகோதரர்கள். ஒரேயொரு பரமாத்மாவாகிய பரமதந்தையே, ஆத்மாக்கள் அனைவரதும் தந்தையாவார், அவரே ஞானக்கடல் என்று அழைக்கப்படுகின்றார். தேவர்களிடம் இந்த ஞானம் இல்லை. எந்த ஞானம்? படைப்பவரின் அல்லது படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானம் எந்த மனிதரிடமுமே இல்லை. புராதன ரிஷிகளுக்கும் முனிவர்களுக்கும் கூட இது தெரியாது என அவர்கள் கூறுகிறார்கள். “புராதன” என்பதன் அர்த்தத்தைக்; கூட அவர்கள் புரிந்துகொள்வதில்லை. “புராதன” என்றால் சத்திய, திரேதா யுகங்கள் ஆகும். சத்தியயுகமே புதிய உலகம். அங்கு ரிஷிகளும் முனிவர்களும் இருக்கவில்லை. ரிஷிகள், முனிவர்கள் போன்ற அனைவரும் பின்னரே வந்தார்கள். அவர்களிடமும் இந்த ஞானம் இல்லை. அவர்கள் “நெத்தி, நெத்தி” (இதுவுமல்ல, அதுவுமல்ல) என்று கூறுகின்றார்கள். அவர்களே அறியாதிருக்கும்பொழுது, இப்பொழுது தமோகுனியாகி விட்ட, பாரத மக்களால் எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்? இந்நேரத்தில் விஞ்ஞானத்தின் அகங்காரம் அதிகளவு உள்ளது. தற்கால விஞ்ஞானத்தினூடாக, பாரதம் சுவர்க்கமாகி விட்டது என அவர்கள் நம்புகிறார்கள். அது மாயையின் பகட்டு என அழைக்கப்படுகின்றது. ‘பொம்பியின் வீழ்ச்சி’ என்பதைக் காட்டுகின்ற ஒரு நாடகத்தை அவர்கள் கொண்டுள்ளார்கள். இந்நேரத்தில், இது பாரதத்தின் வீழ்ச்சி என்றும் அவர்கள் கூறுகின்றார்கள். சத்தியயுகமானது எழுச்சியாகும், இது இப்பொழுது வீழ்ச்சியாகும். இது சுவர்க்கம் அல்ல. இதுவே மாயையின் பகட்டாகும். அது முடிவடைய வேண்டும். விமானங்கள், பெரிய மாளிகைகள், விளக்குகள் உள்ள காரணத்தினால் இதுவே சுவர்க்கம் என்று மக்கள் நம்புகின்றார்கள். ஒருவர் மரணிக்கும்பொழுது, அவர் சுவர்க்கத்துக்குச் சென்றுவிட்டார் என அவர்கள் கூறுகிறார்கள். இதிலிருந்தும் கூட அவர் சுவர்க்கத்துக்குச் சென்று விட்டார் எனில், அச் சுவர்க்கம் வேறோர் இடத்திலே உள்ளது என்றே அர்த்தம் என்பதை அவர்கள் புரிந்துகொள்வதில்லை. இது இராவணனின் பகட்டாகும். எல்லையற்ற தந்தை சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றார். இந்நேரத்தில், மாயைக்கும் கடவுளுக்கும் இடையிலும், அசுர உலகுக்கும் இறை உலகுக்கும் இடையிலும் ஓர் இழுபறி யுத்தம் உள்ளது. இதுவும் பாரத மக்களுக்கு விளங்கப்படுத்தப்பட வேண்டும். இன்னமும் பெருமளவு துன்பம் வரவுள்ளது. பெருமளவு துன்பம் வரும். சுவர்க்கம் சத்தியயுகத்தில் மாத்திரம் இருக்கின்றது. அது கலியுகத்தில் இருக்க முடியாது. அதி மங்களகரமான சங்கமயுகம் என்றால் என்ன என்பது எவருக்கும் தெரியாது. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: ஞானம் பகலும், பக்தி இரவும் ஆகும். அவர்கள் தொடர்ந்தும் இருளில் தடுமாறித் திரிகின்றார்கள். கடவுளைச் சந்திக்கும் பொருட்டு, அவர்கள் பல்வேறு வேதங்களையும், சமயநூல்களையும் கற்கின்றார்கள். பிரம்மாவின் பகலும் இரவும் என்றால் பிராமணர்களின் பகலும் இரவும் என்று அர்த்தமாகும். பிராமணர்களாகிய நீங்களே, உண்மையான வாய்வழித்தோன்றல்கள். அப் பிராமணர்கள் கலியுகத்து பௌதீகப் படைப்புக்கள். நீங்களே அதி மங்களகரமான சங்கமயுகத்துப் பிராமணர்கள். வேறு எவருக்கும் இவ்விடயங்கள் தெரியாது. இவ்விடயங்களை அவர்கள் புரிந்துகொள்ளும்பொழுது மாத்திரம், தாங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பது அவர்களின் புத்தியில் பிரவேசிக்க முடியும். சுவர்க்கம் என்று அழைக்கப்பட்ட பாரதம் சதோபிரதானாக இருந்தது. ஆகவே, இது நிச்சயமாக நரகம் ஆகும், இதனாலேயே அவர்கள் நரகத்திலிருந்து சுவர்க்கத்துக்குச் செல்கின்றார்கள். அங்கு அமைதியும், சந்தோஷமும் உள்ளன. அங்கு இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் உள்ளது. எவ்வாறு மனித சனத்தொகையைக் குறைக்க முடியும் என்றும், எவ்வாறு அமைதியின்மையைக் குறைக்க முடியும் எனவும் உங்களால் விளங்கப்படுத்த முடியும். பழைய, கலியுக உலகில் அமைதியின்மை உள்ளது. புதிய உலகில் மாத்திரம் அமைதி இருக்கின்றது. சுவர்க்கத்தில் அமைதி இருக்கின்றது. அது ஆதி சனாதன தேவிதேவதா தர்மம் என்று அழைக்கப்படுகின்றது. இந்து சமயம் இந்நேரத்திற்கானது. அதனை ஆதிசனாதன தர்மம் என்று அழைக்க முடியாது. இந்துஸ்தான் என்ற பெயர் உள்ளதால், அவர்கள் தங்களை இந்துக்கள் என்று அழைத்துள்ளனர். அங்கு ஆதி சனாதன தேவிதேவதா தர்மம் இருந்தது. அங்கு முழுமையான தூய்மை, சந்தோஷம், அமைதி, ஆரோக்கியம், செல்வம் இருந்தன. அங்கு அனைத்தும் இருந்தன. மக்கள் இப்பொழுது கூவியழைக்கிறார்கள்: நாங்கள் தூய்மையற்றவர்கள்! ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! ஒரு வினா எழுகின்றது: யார் தூய்மையாக்குபவர்? கிருஷ்ணர் அவ்வாறு அழைக்கப்பட மாட்டார். தூய்மையாக்குபவராகிய, பரமாத்மாவான பரமதந்தை மாத்திரமே ஞானக்கடல். அவர் மாத்திரம் வந்து உங்களுக்குக் கற்பிக்கின்றார். ஞானம் ஒரு கல்வி என்று அழைக்கப்படுகின்றது. அனைத்தும் கீதையிலேயே தங்கியுள்ளது. நீங்கள் இப்பொழுது கண்காட்சிகள், அருங்காட்சியகங்கள் போன்றவற்றை நடாத்துகின்றீர்கள், ஆனால் இன்னமும் மக்கள் பிரம்மாகுமார், பிரம்மாகுமாரிகள் (பி.கு) என்பதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளவில்லை. இது மற்றுமொரு புதிய சமயம் என அவர்கள் நம்புகின்றார்கள். அவர்கள் விடயங்களைச் செவிமடுத்தாலும், எதையும் புரிந்துகொள்வதில்லை. தந்தை கூறியுள்ளார்: அவர்கள் முழுமையான, தமோபிரதான் கல்லுப்புத்தியைக் கொண்டிருக்கின்றார்கள். இந்நேரத்தில், பலர் விஞ்ஞானத்தின் அகங்காரத்தைக் கொண்டுள்ளார்கள். அவர்கள் விஞ்ஞானத்தினூடாகத் தங்களைத் தாங்களே அழிப்பார்கள், எனவே அவர்கள் கல்லுப்புத்தியை உடையவர்கள் என அழைக்கப்படுவார்கள். அவர்கள் தெய்வீகப் புத்தியை உடையவர்கள் என அழைக்கப்பட மாட்டார்கள். அவர்களின் சுய விநாசத்துக்காக, அவர்கள் குண்டுகள் போன்றவற்றை உருவாக்குகின்றார்கள். சங்கரர் விநாசத்தை மேற்கொள்கின்றார் என்பதல்ல. இல்லை, அம்மக்கள் தங்களின் சுய விநாசத்துக்காக, அனைத்தையும் உருவாக்கியுள்ளனர். எவ்வாறாயினும், தமோபிரதான், கல்லுப்புத்தியை உடையவர்கள் எதையும் புரிந்துகொள்ள மாட்டார்கள். அவர்கள் செய்வது அனைத்தும் இப்பழைய உலகின் விநாசத்துக்கே ஆகும். விநாசம் இடம்பெறும்பொழுது மாத்திரம் புதிய உலகிற்கான வெற்றி ஏற்படும். எவ்வாறு பெண்களின் துயரத்தை அகற்றுவது என்பதைப் பற்றியே அம்மக்கள் அக்கறை கொண்டிருக்கின்றார்கள். எவ்வாறாயினும், மனிதர்களால் எவருடைய துன்பத்தையும் அகற்ற முடியாது. ஒரேயொரு தந்தை மாத்திரம் துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அருள்பவர். தேவர்களைக் கூட அவ்வாறு அழைக்க முடியாது. கிருஷ்ணரும் ஒரு தேவர் ஆவார். அவரைக் கடவுள் என்று அழைக்க முடியாது. அவர்கள் எதையும் புரிந்துகொள்வதில்லை. புரிந்துகொள்பவர்கள் பிராமணர்களாகி, ஏனையோருக்;குத் தொடர்ந்தும் விளங்கப்படுத்துகின்றார்கள். ஓர் அரச அந்தஸ்தைக் கோர இருப்பவர்களும் ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்துக்கு உரியவர்களும் வெளிப்படுவார்கள். இலக்ஷ்மியும் நாராயணனும் எவ்வாறு சுவர்க்க அதிபதிகள் ஆகினார்கள்? அவர்கள் உலக அதிபதிகள் ஆகும்வகையில் எச் செயல்களைப் புரிந்தார்கள்? இந்நேரத்தில், கலியுக இறுதியில் எண்ணற்ற சமயங்கள் உள்ளதால், அமைதியின்மை உள்ளது. புதிய உலகத்தில் அவ்வாறில்லை. இது இப்பொழுது, தந்தை வந்து உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கின்ற சங்கமயுகம் ஆகும். செயல், பாவச்செயல், நடுநிலையான செயலின் ஞானத்தைத் தந்தை மாத்திரம் உங்களுக்குக் கொடுக்கின்றார். செயல்களைப் புரியும்பொருட்டு, ஆத்மாக்கள் வந்து சரீரங்களைப் பெறுகின்றார்கள். சத்தியயுகத்தில் மக்கள் செய்கின்ற செயல்கள் அனைத்தும் நடுநிலையான செயல்கள். அங்கு பாவச்செயல்கள் எவையும் செய்யப்படுவதில்லை. அங்கு எத் துன்பமும் இல்லை. தந்தை மாத்திரம் இறுதியில் வந்து, செயல், நடுநிலையான செயல், பாவச்செயல் ஆகியவற்றின் இரகசியங்களை உங்களுக்குக் கூறுகின்றார். இவருடைய பல பிறவிகளின் இறுதிப் பிறவியில் நான் வருகின்றேன். நான் இந்த இரதத்தில் பிரவேசிக்கின்றேன். இதுவே அமரத்துவ ரூபமான, ஆத்மாவின் இரதம் ஆகும். அது அம்ரித்சரில் மாத்திரம் இருக்கவில்லை. மனிதர்கள் அனைவருக்கும் ஓர் அமரத்துவ சிம்மாசனம் உள்ளது. ஆத்மாக்கள் அமரத்துவ ரூபங்கள். இச் சரீரம் தொடர்ந்தும் பேசி நகர்கின்றது. இது அமரத்துவ ஆத்மாவின் உயிருள்ள சிம்மாசனம் ஆகும். அனைவரும் அமரத்துவ ரூபங்கள், ஆனால் சரீரங்களுக்கே மரணம் வருகின்றது. ஆத்மாக்கள் அமரத்துவமானவர்கள். அவர்கள் சிம்மாசனத்தை அழிக்கின்றார்கள். சத்தியயுகத்தில் பல சிம்மாசனங்கள் இருப்பதில்லை. இந்நேரத்தில், மில்லியன்கணக்கான ஆத்மாக்களின் சிம்மாசனங்கள் உள்ளன. ஆத்மா அமரத்துவமானவர் என்று கூறப்படுகின்றார். ஆத்மாக்களே தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆகுகின்றனர். நான் என்றென்றும் சதோபிரதானாகவும், தூய்மையாகவும் உள்ளேன். அவர்கள் பாரதத்தின் புராதன யோகத்தைப் பற்றிப் பேசினாலும், அதைக் கிருஷ்ணரே கற்பித்தார் என எண்ணுகின்றார்கள். அவர்கள் கீதையைப் பொய்யாக்கி விட்டார்கள். அவர்கள் சுய சரிதையில் பெயரை மாற்றி விட்டார்கள். அவர்கள் தந்தையின் பெயருக்குப் பதிலாக, குழந்தையின் பெயரைப் புகுத்தி விட்டார்கள். அவர்கள் சிவராத்திரியைக் கொண்டாடுகின்றார்கள், ஆனால் அவர் எவ்வாறு வருகின்றார் என்பது அவர்களுக்குத் தெரியாது. சிவன் பரமாத்மா ஆவார். அவருடைய புகழானது ஆத்மாக்களின் புகழிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. இராதையும் கிருஷ்ணருமே இலக்ஷ்மி நாராயணன் ஆகுகிறார்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். இலக்ஷ்மி நாராயணனின் இரட்டை ரூபமே விஷ்ணு என அழைக்கப்படுகின்றது. அதில் வேறுபாடு இல்லை. எவ்வாறாயினும், நான்கு கரங்களை அல்லது எட்டுக் கரங்களைக் கொண்ட மனிதர்கள் எவரும் இல்லை. அவர்கள் இறைவிகள் போன்றோரைப் பல்வேறு கரங்களுடன் காட்டுகிறார்கள். இதை விளங்கப்படுத்துவதற்கு நேரம் பிடிக்கின்றது. தந்தை கூறுகின்றார்: நான் ஏழைகளின் பிரபு. ஆவேன். பாரதம் ஏழ்மையாகும்பொழுதும், அங்கு இராகுவின் சகுனங்கள் உள்ளபொழுதும் நான் வருகின்றேன். பாரதத்தின் மீதும், முழு உலகத்தின் மீதும் வியாழ சகுனங்கள் இருந்தன, இப்பொழுதோ அவற்றின் மீது இராகுவின் சகுனங்களே உள்ளன. இதனாலேயே தந்தை பாரதத்தில் மாத்திரம் வருகின்றார். அவர் வந்து சுவர்க்கம் என அழைக்கப்படுகின்ற, புதிய உலகை ஸ்தாபிக்கின்றார். கடவுள் பேசுகின்றார்: நான் உங்களை அரசர்களுக்கெல்லாம் அரசர்கள் ஆக்குகின்றேன். நான் உங்களை இரட்டைக் கிரீடமுடைய சுவர்க்க அதிபதிகள் ஆக்குகின்றேன். ஆதி சனாதன தேவிதேவதா தர்மம் தோன்றியதிலிருந்து 5000 வருடங்கள் ஆகிவிட்டன. அது இப்பொழுது இல்லை. அவர்கள் தமோபிரதான் ஆகிவிட்டனர். தந்தையே உங்களுக்குப் படைப்பவரினதும் படைப்பினதும் அறிமுகத்தைக் கொடுக்கின்றார். கண்காட்சிகளின்பொழுதும் அருங்காட்சியகங்களிலும் பலரும் உங்களிடம் வருகின்றார்கள். ஆனால் அவர்கள் எதையும் புரிந்துகொள்வதில்லை. அரிதாக, மிகச்சிலரே புரிந்துகொண்டு, படைப்பவரையும் படைப்பையும் அறிந்துகொள்வதற்கு, பாடநெறியைக் கற்கின்றார்கள். எல்லையற்ற தந்தையே படைப்பவர். நீங்கள் அவரிடமிருந்து ஓர் எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். தந்தை மாத்திரம் உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். பின்னர், நீங்கள் இராச்சியத்தைப் பெற்றுவிட்டதும், அங்கு ஞானத்திற்கான தேவையில்லை. சுவர்க்கமாகிய புதிய உலகம் சற்கதி எனவும், நரகமாகிய பழைய உலகம் சீரழிவு எனவும் அழைக்கப்படுகின்றது. தந்தை உங்களுக்கு மிகவும் நன்றாக விளங்கப்படுத்துகின்றார். குழந்தைகளாகிய நீங்களும் இதேவழியில் விளங்கப்படுத்த வேண்டும். நீங்கள் அவர்களுக்கு இலக்ஷ்மி நாராயணன் படங்களைக் காட்ட வேண்டும். உலகில் அமைதி ஸ்தாபிக்கப்படுகின்றது. தந்தை இப்பொழுது ஸ்தாபிக்கின்ற, ஆதிசனாதன தேவிதேவதா தர்மத்தின் அத்திவாரம் இப்பொழுது இல்லை. தேவர்கள் ஒரு தூய தர்மத்தைக் கொண்டிருந்தார்கள், அவர்களின் செயல்கள் தூய்மையாக இருந்தன. இது இப்பொழுது விகார உலகம். புதிய உலகம் சிவாலயமாகிய, விகாரமற்ற உலகம் என அழைக்கப்படுகின்றது. இப்பொழுது நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும், அதனால் ஆதரவற்ற அப்பாவி மக்கள் சிறிதளவு நன்மையைப் பெற முடியும். தந்தை மாத்திரமே நன்மையளிப்பவர் என அழைக்கப்படுகின்றார். அவர் அதி மங்களகரமான சங்கமயுகத்தில் வருகின்றார். நன்மையளிப்பவராகிய தந்தை, நன்மையளிக்கும் யுகத்தில் வந்து, உங்கள் அனைவருக்கும் நன்மையளிக்கின்றார். அவர் பழைய உலகத்தை மாற்றிப் புதிய உலகத்தை ஸ்தாபிக்கின்றார். ஞானத்தினூடாகச் சற்கதி உள்ளது. நீங்கள் நேரத்தை ஒதுக்கி, ஒவ்வொரு நாளும் இதை விளங்கப்படுத்துங்கள். அவர்களுக்குக் கூறுங்கள்: எங்களுக்கு மாத்திரம் படைப்பவரையும் படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியையும் தெரியும். கடவுள் வந்து, இராஜயோகத்தைக் கற்பித்து, எங்களை இரட்டைக் கிரீடமுடையவராக ஆக்கிய, கீதையின் அத்தியாயமே இப்பொழுது நடைபெறுகின்றது. இலக்ஷ்மியும் நாராயணனும் இராஜயோகத்தைக் கற்பதினூடாகவே அவ்வாறு ஆகினார்கள். அவர்கள் தந்தையிடமிருந்து அதிமங்களகரமான சங்கமயுகத்தில் இராஜயோகத்தைக் கற்றார்கள். பாபா அனைத்தையும் மிக இலகுவாக விளங்கப்படுத்துகின்றார். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. இராஜயோகக் கல்வியே உங்கள் வருமானத்துக்கான ஒரு மூலாதாரம், ஏனெனில் இதனூடாகவே நீங்கள் அரசர்க்கெல்லாம் அரசர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் ஒவ்வொரு நாளும் இந்த ஆன்மீகக் கல்வியைக் கற்று ஏனையோருக்கும் கற்பிக்க வேண்டும்.

2. பிராமணர்களாகிய நீங்களே உண்மையான வாய்வழித்தோன்றல்கள் என்ற போதையை எப்பொழுதும் கொண்டிருங்கள். நீங்கள் கலியுக இரவிலிருந்து அப்பாற் சென்று, பகலுக்குள் வருகின்றீர்கள். இதுவே நீங்கள் உங்களுக்கும், ஏனைய அனைவருக்கும் நன்மையளிக்க வேண்டிய, அதி மங்களகரமான, உபகாரமான சங்கமயுகம் ஆகும்.

ஆசீர்வாதம்:
ஒவ்வொரு மேன்மையான எண்ணத்தையும் பயிற்சியில் இடுகின்ற ஒரு மாஸ்ரர் சர்வசக்திவானாக இருப்பீர்களாக.

எண்ணங்களையும் செயல்களையும் ஒன்றாகக் கொண்டிருப்பவர்களே ஒரு மாஸ்ரர் சர்வசக்திவான் ஆவார்கள். உங்கள் எண்ணங்கள் மிகவும் மேன்மையான இருந்த போதிலும், உங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப உங்கள் செயல்கள் இல்லாத போது உங்களை ஒரு மாஸ்ரர் சர்வசக்திவான் என அழைக்க முடியாது. எனவே உங்களுடைய மேன்மையான எண்ணங்களை நீங்கள் பயிற்சியில் இடுகிறீர்களா என சோதித்து பாருங்கள். தேவையான அக்கணத்தின் போது, குறிப்பிட்ட அந்தச் சக்தியை பயன்படுத்த இயலுமாக இருப்பதே மாஸ்ரர் சர்வசக்திவானின் அடையாளமாகும். எக்கணத்தின் பொழுது எக்குறிப்பிட்ட சக்தியின் தேவை உங்களுக்கு ஏற்படுகின்றதோ அக்கணமே அதனை பயன்படுத்தக் கூடியவகையில் உங்களுடைய பௌதீக மற்றும் சூட்சும சக்திகளை அவ்வாறாக உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருங்கள்.

சுலோகம்:
ஞானம் நிறைந்த ஆத்மாக்கள் தமக்குள் கோபத்தைக் கொண்டிருந்தால், அவர்கள் தந்தையின் பெயருக்கு அவதூறு ஏற்படுத்துகிறார்கள்.