30.08.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்கள் புத்திகளுக்குள் இந்த ஞானத்தைப் பதிய வைத்து உங்கள் மத்தியில் வகுப்புக்களை நடத்துங்கள். உங்களுக்கும், ஏனையோருக்கும் நன்மையை ஏற்படுத்தி, தொடர்ந்தும் ஓர் உண்மையான வருமானத்தைச் சம்பாதித்துக் கொண்டிருங்கள்.

கேள்வி:
எந்த அகங்காரத்தைக் குழந்தைகளாகிய நீங்கள் என்றுமே கொண்டிருக்கக் கூடாது?

பதில்:
குழந்தைகளில் சிலர் அகங்காரம் உடையவராகி ‘இச்சிறிய குமாரிகளினால் எங்களுக்கு எதனைக் கற்பிக்க முடியும்?’ எனக் கூறுகின்றார்கள். அவர்களுடைய சிரேஷ்ட சகோதரி எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் சிலர் முகங்கோணி, வகுப்புக்கு வருவதை நிறுத்தி விடுகின்றார்கள். இது மாயையின் தடையாகும். பாபா கூறுகின்றார்: குழந்தைகளே, முரளி வாசிக்கின்ற ஆசிரியரின் பெயரையோ, ரூபத்தையோ பார்க்காதீர்கள். தந்தையின் நினைவில் முரளியைச் செவிமடுங்கள். அகங்காரம் உடையவர்கள் ஆகாதீர்கள்.

ஓம் சாந்தி.
தந்தை இங்கே அமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இப்பொழுது, நீங்கள் தந்தை எனப் பேசும் போது, அது பல குழந்தைகளைக் கொண்ட ஒரு லௌகீகத் தந்தையாக இருக்க முடியாது. இவர் ஆன்மீகத் தந்தையாவார். அவருக்குப் பல குழந்தைகள் உள்ளனர். டேப்ரெக்கோடர், முரளி, மற்றும் ஏனைய வசதிகள் அனைத்தும் குழந்தைகளுக்காகவே. நீங்கள் இப்பொழுது அதிமேன்மையான மனிதர்கள் ஆகுவதற்காக, சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். இதுவும் பெரும் சந்தோஷத்திற்குரிய ஒரு விடயமாகும். தந்தையால் மாத்திரமே உங்களை மேன்மையாக ஆக்க முடியும். இந்த இலக்ஷ்மியும், நாராயணனும் மேன்மையான மனிதர்களாக இருந்தவர்கள். இந்த உலகில் மாத்திரமே மேன்மையானவர்களும், நடுத்தரமானவர்களும், சீரழிந்த மனிதர்களும் உள்ளார்கள். ஆரம்பத்தில் அவர்கள் மேன்மையாகவும், மத்தியில் அவர்கள் நடுத்தரமாகவும், இறுதியில் அவர்கள் சீரழிந்தவர்களாகவும் உள்ளார்கள். முதலில் அனைத்தும் புதியதாகவும், மேன்மையாகவும், பின்னர் நடுத்தரமானதாகவும், அதன்பின்னர் சீரழிந்ததாகவும், அதாவது, பழையதாகவும் ஆகுகின்றது. இது உலகத்திற்கும் பொருந்துகின்றது. ஆகவே, மக்களுக்கு எந்த விடயத்திலேனும் சந்தேகங்கள் எழுந்தால், அவற்றை நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். நீங்கள் ஏன் பிரம்மாவின் படத்தை வைத்திருக்கின்றீர்கள் எனப் பொதுவாகப் பலரும் உங்களை வினவுகின்றார்கள். ஆகவே, நீங்கள் விருட்சத்தின் படத்தைப் பயன்படுத்த வேண்டும்: அவர்களிடம் கூறுங்கள்: பாருங்கள், இப்பொழுது இதன் கீழிலிருந்து அவர் தபஸ்யா செய்கிறார். அவரது இறுதிப்பிறவியின் முடிவில் அவர், விருட்சத்தின் உச்சியில் நிற்கின்றார். தந்தை கூறுகின்றார்: நான் அவரினுள் பிரவேசிக்கின்றேன். இவ்விடயங்களை விளங்கப்படுத்துவதற்கு மிகவும் திறமைசாலியான ஒருவர் தேவைப்படுகின்றார். ஒருவர் விவேகம் அற்றவராக இருந்து, அவருக்கு எவ்வாறு விளங்கப்படுத்துவது என்பது தெரியாமல் இருந்தால், அவர் பிரம்மாகுமார், குமாரிகள் அனைவரின் பெயரையும் அவதூறு செய்கின்றார். நீங்கள் இறுதியில் முழுமையாகச் சித்தி எய்தினாலும், இப்பொழுது எவருமே பதினாறு சுவர்க்கக் கலைகளும் நிறைந்தவர்கள் ஆக முடியாது. நிச்சயமாக விளங்கப்படுத்துவதில் அனைவரும் வரிசைக்கிரமமாகவே உள்ளனர். பரமாத்மாவாகிய பரமதந்தை மீது அன்பில்லாதவர்கள் நிச்சயமாகப் அன்பற்ற புத்தி உடையவர்கள் ஆவர். அவர்களிடம் இதைப் பற்றி உங்களால் கூற முடியும். அன்பான புத்தி உடையவர்கள் வெற்றியாளர்களும், அன்பற்ற புத்திகளை உடையவர்கள் விநாசத்தின் வழியில் செல்பவர்களும் ஆவார்கள். சிலர் இதனையிட்டுக் குழப்பம் அடைந்து, பின்னர் பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்துகின்றார்கள். அவர்கள் சண்டையிட ஆரம்பிப்பதற்கு நீண்டகாலம் எடுப்பதில்லை. அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஒருவரால் என்ன செய்ய முடியும்? சில நேரங்களில் அவர்கள் படங்களுக்குத் தீ மூட்டவும் தயங்குவதில்லை. பாபா உங்களுக்குப் படங்களைக் காப்புறுதி செய்து கொள்ளுமாறு அறிவுரை கூறுகின்றார். தந்தை குழந்தைகளின் ஸ்திதியை அறிவார். பாபாவும் தினமும் குற்றப் பார்வையைப் பற்றித் தொடர்ந்தும் விளங்கப்படுத்துகின்றார். சிலர் எழுதுகின்றார்கள்: பாபா, குற்றப் பார்வையைப் பற்றி நீங்கள் விளங்கப்படுத்திய விடயங்கள் முற்றிலும் சரியானவை. இது தமோபிரதான் உலகம். நாளுக்கு நாள், அது மேலும், தமோபிரதான் ஆகுகின்றது. கலியுகம் இன்னமும் அதன் குழந்தைப் பருவத்திலேயே உள்ளதென அவர்கள் சிந்திக்கின்றார்கள். அவர்கள் அறியாமை என்ற உறக்கத்தில் ஆழ்ந்து உறங்குகிறார்கள். ‘இதுவே மகாபாரத யுத்தத்திற்கான காலம் என்பதால், கடவுள் ஏதாவது ஒரு ரூபத்தில் நிச்சயமாக இங்கு இருப்பார்’ என்று சிலவேளைகளில் அவர்கள் கூறுகின்றார்கள். எனினும், அவரின் ரூபத்தைக் அவர்கள் காட்டுவதில்லை. அவர் நிச்சயமாக யாராவது ஒருவரினுள் பிரவேசிக்க வேண்டும். “பாக்கிய இரதம்” நினைவுகூரப்பட்டுள்ளது. ஓர் ஆத்மா வரும்பொழுது பிரவேசிப்பதற்கென அவரது சொந்த இரதம் உள்ளது. இவரே “பாக்கிய இரதம்” என்று அழைக்கப்படுகின்றார். எனினும் பாபா பிறப்பு எடுப்பதில்லை. அவர் வந்து இவரின் பக்கத்தில் அமர்ந்திருந்து, உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். அனைத்தும் மிகத்தெளிவாக உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. திரிமூர்த்தியின் படமும் உள்ளது. பிரம்மா, விஷ்ணு, சங்கரர் ஆகியோர் திரிமூர்த்தி என அழைக்கப்படுகின்றார்கள். அவர்கள் செல்வதற்கு முன்னர் நிச்சயமாக எதையேனும் அவர்கள் செய்திருக்க வேண்டும். இதனாலேயே அவர்களுக்குப் பின்னர், பாதைகளுக்கும், கட்டடங்களுக்கும் “திரிமூர்த்தி” என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று “சுபாஷ் றோட்” என்றொரு வீதி உள்ளது. அனைவருக்கும் சுபாஷின் (சுபாஷ் சந்திரபோஸ் - இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்) சரித்திரம் தெரியும். அவர்களுடைய சரித்திரங்கள் அவர்கள் சென்றுவிட்ட பின்னரே எழுதப்பட்டன. பின்னர் அவர்களுடைய சிலைகளைச் செய்து அவர்களை மகத்தானவர்கள் ஆக்குகின்றார்கள். அவர்கள் அமர்ந்திருந்து அத்தகைய மகத்துவமான விடயங்களை எழுதுகின்றார்கள். அதேபோன்று, குருநானக்கின் சமயநூலும் மிகப் பெரிதாக்கப்பட்டுள்ளது. அவர் அதிகளவு எழுதவில்லை. இந்த ஞானத்தை எழுதுவதற்குப் பதிலாக, அவர்கள் பக்தியின் விடயங்களையே எழுதியுள்ளார்கள். இப்படங்கள் போன்றவை மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டன. உங்கள் பௌதீகக் கண்களால் நீங்கள் காண்பவை அனைத்தும் எரியப் போகின்றன என்பது உங்களுக்குத் தெரியும். எனினும் ஆத்மாக்கள் இங்கேயே இருந்துவிட முடியாது. அவர்கள் நிச்சயமாக வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். இத்தகைய விடயங்கள் அனைவரினது புத்தியிலும் நிலைத்திருப்பதில்லை. அவர்கள் அவற்றைக் கிரகித்திருந்தால், ஏன் அவர்கள் வகுப்புக்களைக் கொடுப்பதில்லை? ஏழு முதல் எட்டு வருடங்களுக்குப் பின்னரும் கூட வகுப்பு கொடுப்பதற்கு எவருமே தயாராக இல்லை. பல இடங்கள் அவ்வாறாகவே (ஓர் ஆசிரியர் இல்லாமல்) இயங்குகின்றன. இருப்பினும் தாய்மார்களின் அந்தஸ்து உயர்வாகவே உள்ளது எனப் புரிந்து கொள்ளப்படுகின்றது. பல படங்கள் உள்ளன. அவர்கள் முரளியைக் கிரகித்த பின்னர், அதைப் பற்றிச் சிறிதளவை விளங்கப்படுத்துகின்றார்கள். எவராலும் இதைச் செய்ய முடியும்: இது மிகவும் இலகுவானது, ஆனால் ஓர் ஆசிரியர் தேவை என அவர்கள் இன்னமும் ஏன் கேட்கின்றார்கள் என்பதை பாபாவினால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்களுடைய ஆசிரியர் எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால், அவர்கள் முகங்கோண ஆரம்பிப்பதுடன் வகுப்புக்குச் செல்வதையும் நிறுத்தி விடுகிறார்கள். அதன்பின்னர், அவர்கள் மத்தியில் முரண்பாடு ஏற்படுகின்றது. எவராலும் வகுப்பு கொடுக்க முடியும். எனினும், சிலநேரங்களில் தங்களுக்கு நேரமில்லை என அவர்கள் கூறுகின்றார்கள். நீங்கள் உங்களுக்கும் பிறருக்கும் நன்மையை ஏற்படுத்த வேண்டும். இது பெரியதொரு வருமானம் ஆகும். மக்கள் தங்கள் வாழ்வை வைரம் போன்று பெறுமதியாக ஆக்கிக் கொள்ளும் வகையில், உண்மையானதொரு வருமானத்தைச் சம்பாதிப்பதற்கு நீங்கள் அவர்களைத் தூண்ட வேண்டும். நீங்கள் அனைவரும் சுவர்க்கத்திற்குச் செல்வீர்கள். அங்கு சதா சந்தோஷம் நிலவுகின்றது. பிரஜைகளின் ஆயுட்காலம் குறைவாக இருக்கும் என்றில்லை. இல்லை, பிரஜைகளும் நீண்ட ஆயுட்காலத்தைக் கொண்டுள்ளார்கள், அது அமரத்துவ பூமியாகும். எவ்வாறாயினும் அந்தஸ்து உயர்ந்ததாகவோ அல்லது தாழ்ந்ததாகவோ இருக்கலாம். ஆகவே நீங்கள் எந்தத் தலைப்பிலும் வகுப்பை நடத்தலாம். உங்களுக்கு நல்லதொரு ஆசிரியர் தேவை என நீங்கள் ஏன் கூறுகின்றீர்கள்? உங்கள் மத்தியிலேயே நீங்கள் வகுப்பு நடத்த முடியும். யாராவது ஒருவர் வரவேண்டும் என நீங்கள் தொடர்ந்தும் கேட்டுக் கொண்டிருக்கக் கூடாது. சிலர் அகங்காரத்துடன் கூறுகின்றார்கள்: இந்தச் சிறிய குமாரிகளால் எங்களுக்கு எதனைக் கற்பிக்க முடியும்? மாயையின் பல தடைகள் உள்ளன. அவர்களின் புத்தியில் இது இருப்பதில்லை. தினமும் பாபா இதனை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். ஒரு குறிப்பிட்ட தலைப்பில் சிவபாபா விளங்கப்படுத்துவதில்லை. அவர் கடல் ஆவார். வேறுபட்ட தலைப்புகளின் அலைகள் தொடர்ந்தும் இருக்கும். சிலவேளைகளில் அவர் இங்குள்ள குழந்தைகளுக்காக விளங்கப்படுத்துகின்றார். சிலவேளைகளில் வெளியில் உள்ளவர்களுக்காக ஒரு விளக்கத்தைக் கொடுக்கின்றார். அனைவரும் முரளியைப் பெறுகின்றார்கள். உங்களால் வார்த்தைகளைப் புரிந்து கொள்ள முடியாது விட்டால், நீங்கள் அப்பொழுது கற்க வேண்டும். உங்கள் சொந்த முன்னேற்றத்திற்காக நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நன்மையை ஏற்படுத்த வேண்டும். இந்தத் தந்தை (பிரம்மபாபா) குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த ஞானத்தை விளங்கப்படுத்தினாலும், உங்கள் புத்தியின் யோகம் சிவபாபாவுடனேயே இருக்க வேண்டும். இதனாலேயே அவர் கூறுகின்றார்: எப்பொழுதும் சிவபாபாவே இதனைப் பேசுகின்றார் என்றே நீங்கள் கருத வேண்டும். சதா சிவபாபாவை நினைவு செய்யுங்கள். சிவபாபா பரந்தாமத்தில் இருந்து வந்து முரளியைப் பேசுகின்றார். இந்த பிரம்மா முரளியைப் பேசுவதற்கு பரந்தாமத்தில் இருந்து வருவதில்லை. சிவபாபா இவரது சரீரத்தினுள் பிரவேசித்து, உங்களுக்கு முரளியைக் கூறுகின்றார் என்றே எப்பொழுதும் நினையுங்கள். இதனை உங்கள் புத்தியில் வைத்திருங்கள். இதனை உங்கள் புத்தியில் மிகச்சரியாக வைத்திருக்கும் பொழுது அதுவும் நினைவு யாத்திரையே ஆகும். எனினும் இங்கு அமர்ந்திருக்கும் பொழுதும் பலரின் புத்தியின் யோகம் அங்கும் இங்கும் அலைகின்றது. இங்கு நீங்கள் மிகவும் நன்றாக யாத்திரை செய்யலாம். இல்லாவிட்டால், உங்கள் கிராமத்தையும், வீட்டையும் குடும்பம் போன்றவற்றையும் நீங்கள் நினைவு செய்கின்றீர்கள். சிவபாபா இவரில் அமர்ந்திருந்து எங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பது உங்கள் புத்தியில் இருக்கின்றது. நாங்கள் சிவபாபாவின் நினைவில் இருந்தே முரளியைச் செவிமடுத்துக் கொண்டிருந்தோம். பின்னர் எங்கள் புத்தியின் யோகம் எங்கு சென்றது? இவ்வாறாகவே உங்களிற் பலரின் புத்திகளின் யோகம் திசை திருப்பப்படுகின்றது. இங்கு நீங்கள் மிக நன்றாக யாத்திரையில் நிலைத்திருக்க முடியும். சிவபாபா பரந்தாமத்தில் இருந்து வந்துள்ளார் என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். உங்கள் கிராமத்தில் நீங்கள் இருக்கும் பொழுது நீங்கள் இவ்வாறு சிந்திப்பதில்லை. சிவபாபாவின் முரளியைத் தங்கள் செவிகளின் ஊடாகத் தாங்கள் செவிமடுப்பதாகச் சிலர் நம்புகின்றார்கள். அச்சந்தர்ப்பங்களில் அவர்கள் முரளியை வாசிக்கின்றவரின் பெயரையோ, ரூபத்தையோ நினைவுசெய்ய மாட்டார்கள். இந்த ஞானம் அனைத்தும் சுயத்திற்கான விடயமாகும். உள்ளுர நீங்கள் சிவபாபாவின் முரளியைச் செவிமடுக்கின்றீர்கள் என்ற விழிப்புணர்வையே கொண்டிருங்கள். அதனை இன்ன சகோதரி உங்களுக்கு வாசிக்கின்றார் என நினைக்காதீர்கள். நீங்கள் சிவபாபாவின் முரளியைச் செவிமடுக்கின்றீர்கள். இவையும் நினைவில் நிலைத்திருப்பதற்கான வழிமுறைகளாகும். நீங்கள் எந்த நேரமும் முரளியைச் செவிமடுக்கின்றீர்கள் என்றோ அல்லது நினைவில் இருக்கின்றீர்கள் என்றோ இல்லை. இல்லை. பாபா கூறுகின்றார்: பலரின் புத்திகள் வெளியே அலை பாய்கின்றன. அவர்கள் தங்கள் பண்ணைகளையும் வயல்களையும் நினைவு செய்கின்றார்கள். புத்தியின் யோகம் வெளியே அலைந்து திரியக்கூடாது. சிவபாபாவை நினைவு செய்வதில் எச்சிரமமும் இல்லை. எனினும் நீங்கள் நினைவில் நிலைத்திருப்பதற்கு மாயை உங்களை அனுமதிப்பதில்லை. வேறு எண்ணங்கள் இடையில் வருவதால் உங்களால் சிவபாபாவை எந்த நேரமும் நினைவு செய்ய முடியாதுள்ளது. நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப, நீங்கள் அனைவரும் வரிசைக்கிரமமானவர்களே. மிக நெருக்கமாக இருப்பவர்களின் புத்தியில் இவ்விடயங்கள் விரைவாகப் பதிந்துவிடும். அனைவரும் எட்டு மணிகளின் மாலையில் வருவார்கள் என்றில்லை. உங்களிடம் இந்த ஞானம், யோகம், தெய்வீகக்குணங்கள் இருக்கின்றனவா என உங்களைப் பரிசோதனை செய்து பாருங்கள். என்னிடம் எந்தப் பலவீனங்களும் இல்லை, அல்லவா? மாயையின் ஆதிக்கத்தினால் நான் எப்பாவச் செயலையும் செய்யவில்லை, இல்லையா? சிலர் மிகவும் பேராசை உடையவர்களாக ஆகுகின்றார்கள். பேராசை என்னும் தீய ஆவியும் உள்ளது. மாயை பிரவேசிப்பதினால் அவர்கள் தங்களுக்குப் பசிக்கின்றது எனவும், வயிற்றுக்கு ஏதாவது தேவைப்படுகின்றது எனவும் எந்நேரமும் கூறிக் கொண்டிருப்பார்கள். சிலர் உணவுகளினால் மிகவும் கவரப்படுகின்றார்கள். உண்பதிலும் ஓர் ஒழுங்குமுறை இருக்க வேண்டும். இப்பொழுது பல குழந்தைகள் உள்ளார்கள், மேலும் பல குழந்தைகள் வருவார்கள். பிராமணர்கள் பலர் இருப்பார்கள். பிராமணர்கள் ஆகுங்கள் எனக் குழந்தைகளாகிய உங்களிடம் நான் கூறுகின்றேன். தாய்மார்கள் முன்னிலையில் வைக்கப்படுகின்றார்கள். ‘பாரதத்தின் சிவசக்தி தாய்மார்களுக்கு வெற்றி’ எனக் கூறப்பட்டுள்ளது. தந்தை கூறுகின்றார்: உங்களை ஆத்மாக்களாகக் கருதி, தந்தையை நினைவு செய்யுங்கள். தொடர்ந்தும் சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுங்கள். பிராமணர்களாகிய நீங்கள் சுயதரிசனச் சக்கரதாரிகள். புதியவர்களால் இவ்விடயங்களைப் புரிந்து கொள்ள முடியாது. நீங்களே பிரம்மாவின் அதி மேன்மையான வாய்வழித் தோன்றல்களும், பிராமண குல அலங்காரங்களும், சுயதரிசனச் சக்கரதாரிகளும் ஆவீர்கள். சுயதரிசனச் சக்கரம் விஷ்ணுவிற்கு உரியது என்றும், ஆனால் நீங்கள் அனைவருமே அவ்வாறானவர்கள் என இவர் கூறுகின்றார் என்றே இதனைச் செவிமடுக்கின்ற ஒரு புதியவர் கூறுவார். இவ்விடயங்களை அவர் நம்பமாட்டார். இதனாலேயே இந்த ஒன்றுகூடலுக்குள் புதியவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. சிலர் பின்னர் குழப்பம் அடைந்து கூறுகின்றார்கள்: நாங்கள் விவேகமற்றவர்களா, நாங்கள் ஏன் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை? ஏனைய ஒன்றுகூடல்களுக்குள் எவரும் செல்லலாம் என்பதாலேயே அவர்கள் இவ்வாறு கேட்கின்றார்கள். அங்கு அவர்கள் சமயநூல்களில் உள்ள விடயங்களை மாத்திரமே கூறுகின்றார்கள். அவற்றைச் செவிமடுக்க அனைவருக்கும் உரிமை உள்ளது. இங்கு நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கடவுளின் இந்த ஞானம் அவர்களின் புத்தியில் பதியாததால், அவர்கள் குழப்பம் அடைகின்றார்கள். படங்களையிட்டும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்த அசுர இராச்சியத்திலேயே நீங்கள் உங்களுடைய தெய்வீக இராச்சியத்தை ஸ்தாபிக்க வேண்டும். கிறிஸ்து தனது சமயத்தை ஸ்தாபிக்க வந்ததைப் போன்றே, தெய்வீக இராச்சியத்தை ஸ்தாபிப்பதற்குத் தந்தை வந்துள்ளார். இதில் வன்முறை என்ற கேள்விக்கே இடமில்லை. நீங்கள் காமவாள் மூலம் வன்முறையில் ஈடுபடுவதுமில்லை அல்லது வேறு எந்தப் பௌதீக வன்முறையிலும் ஈடுபடுவதில்லை. கடவுள் அழுக்குத் துணிகளைக் கழுவுகின்றார் எனக் கூறப்படுகின்றது. மனிதர்கள் காரிருளில் இருக்கின்றார்கள். தந்தை வந்து அந்தக் காரிருளை அகற்றி, ஒளி ஏற்றுகின்றார். ‘பாபா’ என்று கூறுவதற்குப் பதிலாக, சிலர் தங்கள் முகத்தை பாபாவிடம் இருந்து மறுபக்கம் திருப்பிக் கொள்கின்றார்கள். அவர்கள் கற்பதையும் நிறுத்தி விடுகிறார்கள். உங்களை உலக அதிபதிகள் ஆக்குவதற்கே கடவுள் உங்களுக்குக் கற்பிக்கின்றார். அத்தகைய கல்வியைக் கற்காமல் நிறுத்துகின்ற எவரும் ஒரு மூடர் என்றே அழைக்கப்படுகின்றார். அத்தகைய பெரும் பொக்கிஷத்தை நீங்கள் பெறுகின்றீர்கள். நீங்கள் என்றுமே அத்தகைய தந்தையை விட்டுச் செல்லக்கூடாது. பாடல் ஒன்றுள்ளது: என்னை நீங்கள் நேசித்தாலும் அல்லது நிராகரித்தாலும் நான் என்றும் உங்களை விட்டுச் செல்ல மாட்டேன். உங்கள் எல்லையற்ற இராச்சியத்தை உங்களுக்குக் கொடுப்பதற்காகவே தந்தை வந்துள்ளார். அவரை விட்டுச் செல்லுதல் என்ற கேள்விக்கே இடமில்லை. ஆம், நீங்கள் தெய்வீகக் குணங்களையும் கிரகிக்க வேண்டும். தாங்கள் துன்புறுத்தப்படுவதாகத் தாய்மாரிடம் இருந்து பாபா அறிக்கைகளைப் பெறுகிறார். இந்நாட்களில் மக்கள் மிகவும் தீயவர்களாக உள்ளார்கள். நீங்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சகோதரர்கள் சகோதரிகளையிட்டுக் கவனம் எடுக்க வேண்டும். அனைத்துச் சந்தர்ப்ப சூழ்நிலையிலும், ஆத்மாவாகிய நான், நிச்சயமாகத் தந்தையிமிருந்து எனது ஆஸ்தியைக் கோர வேண்டும். நீங்கள் தந்தையை விட்டுச் சென்றால், உங்கள் ஆஸ்தியும் முடிவடைந்து விடுகின்றது. நம்பிக்கையுள்ள புத்தி வெற்றி அடைகின்றது, சந்தேகப் புத்தி விநாசத்திற்கு இட்டுச் செல்லப்படுகின்றது. அப்பொழுது அந்தஸ்தும் அதிகளவில் குறைக்கப்படுகின்றது. ஞானக்கடலான ஒரேயொரு தந்தையால் மாத்திரமே இந்த ஞானத்தைக் கொடுக்க முடியும். ஏனைய அனைத்தும் பக்தியாகும். தன்னை ஒரு ஞானம் நிறைந்த ஆத்மா என ஒருவர் எந்தளவிற்குக் கருதினாலும், அவர்கள் அனைவரும் சமயநூல்களினதும் பக்தியினதும் ஞானத்தை மாத்திரமே கொண்டுள்ளார்கள் எனத் தந்தை கூறுகின்றார். உண்மையான ஞானம் இது என்பதைக்கூட மக்கள் அறியாமல் இருக்கிறார்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும் ஆன்மீகத்தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. முரளியைச் செவிமடுக்கும் பொழுது, உங்கள் புத்தியின் யோகம் வேறு எங்கும் அலைந்து திரியாமல் இருப்பதில்; கவனம் செலுத்துங்கள். நீங்கள் சிவபாபாவின் மேன்மையான வாசங்களைச் செவிமடுக்கின்றீர்கள் என்ற உணர்வில் சதா நிலைத்திருங்கள். இதுவும் நினைவு யாத்திரையாகும்.

2. உங்களிடம் இந்த ஞானம், யோகம், தெய்வீகக் குணங்கள் உள்ளனவா என உங்களைச் சோதித்துப் பாருங்கள். பேராசை எனும் தீய ஆவி என்னிடம் இல்லை, என்னிடம் உள்ளதா? மாயையின் ஆதிக்கத்தினால் நான் பாவச்செயல்களைச் செய்கின்றேனா?

ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரு கருவியாக இருக்கும் விழிப்புணர்வைக் கொண்டிருப்பதன் மூலம் சதா ஆட்ட, அசைக்க முடியாதவராக இருந்து, உங்களின் குழப்பங்கள் எல்லாவற்றையும் முடிப்பீர்களாக.

ஒரு கருவியாக இருப்பதை நீங்கள் உணரும்போது, இலகுவாக உங்களால் பல வகையான நான் மற்றும் எனது என்பவற்றை முடிக்க முடியும். இந்த விழிப்புணர்வானது உங்களைச் சகல வகையான குழப்பங்களில் இருந்தும் விடுவித்து, உங்களுடைய ஆட்ட, அசைக்க முடியாத உங்கள் ஸ்திதியை அனுபவம் பெறச் செய்கிறது. நீங்கள் சேவை செய்வதற்கு கடினமாக உழைக்க வேண்டியதில்லை. ஏனென்றால், கருவிகள் ஆகுபவர்களின் புத்திகள், தாம் என்ன செய்கிறோமோ, அதைப் பார்க்கும் மற்றவர்களும் அதையே செய்வார்கள் என்பதை சதா உணர்ந்தவாறே இருக்கும். சேவைக்காக ஒரு கருவியாக இருத்தல் என்றால், மேடையில் செல்லுதல் என்று அர்த்தம். எல்லோருடைய பார்வையும் இயல்பாகவே மேடையை நோக்கியே ஈர்க்கப்படும். இந்த விழிப்புணர்வானது உங்களின் பாதுகாப்பிற்கான வழிமுறை ஆகுகிறது.

சுலோகம்:
சகல சூழ்நிலைகளில் இருந்தும் விடுபடுங்கள். நீங்கள் தந்தையான இறைவனின் ஆதரவை அனுபவம் செய்வீர்கள்.

அவ்யக்த சமிக்கை: ஓர் இலகு யோகியாக இருப்பதற்கு, இறை அன்பை அனுபவிப்பவராக இருங்கள்.

தற்சமயம், அலைந்து திரியும் ஆத்மாக்களுக்கு அமைதியும் ஆன்மீக அன்பும் தேவைப்படுகின்றன. எங்கும், அன்பும் அமைதியுமே காணாமல் போயுள்ளன. இதனாலேயே, நீங்கள் என்ன நிகழ்ச்சிகளைச் செய்தாலும் எல்லாவற்றுக்கும் முதலில், தந்தையுடன் உள்ள உறவுமுறையின் அன்பைப் புகழுங்கள். அந்த அன்புடன் ஆத்மாக்களைத் தந்தையுடன் ஓர் உறவுமுறையை ஏற்படுத்திய பின்னர், அவர்களுக்கு அமைதியின் அனுபவத்தைக் கொடுங்கள். அன்பு சொரூபத்திற்கும் அமைதி சொரூபத்திற்கும் இடையில் ஒரு சமநிலை இருக்க வேண்டும்.