30.10.24 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
இனிய குழந்தைகளே, ஒரேயொரு தந்தையின் நினைவில் நிலைத்திருப்பது மட்டுமே, கலப்படமற்ற நினைவாகும். இந்த நினைவைக் கொண்டிருப்பதால் உங்கள் பாவங்கள் அழிக்கப்பட முடியும்.
பாடல்:
தந்தை விளங்கப்படுத்துகின்ற விடயங்களைச் சிலர் இலகுவாக ஏற்றுக்கொள்வதற்கும், ஏனையோர் அதைச் சிரமமாகக் கருதுவதற்கும் காரணம் என்ன?பதில்:
நீண்டகாலம் பக்தி செய்துள்ள குழந்தைகளாலும், அரைக் கல்பத்துப் பழைய பக்தர்களாலும், தந்தை கூறுகின்ற அனைத்து விடயங்களையும் இலகுவாக ஏற்க முடியும், ஏனெனில் அவர்கள் தங்கள் பக்தியின் பலனைப் பெறுகிறார்கள். பழைய பக்தர்கள் அல்லாதவர்கள் அனைத்து விடயங்களையும் புரிந்துகொள்வதைச் சிரமமாகக் காண்கின்றனர். ஏனைய சமயத்தவர்களால் இந்த ஞானத்தைப் புரிந்துகொள்ளக்கூட முடியாது.ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கமர்ந்திருந்து இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகிறார். குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? உங்கள் நினைவு கலப்படமற்றதாகும். ஒன்று கலப்படமான நினைவும், மற்றையது கலப்படமற்ற நினைவும் ஆகும். நீங்கள் அனைவரும் கலப்படமற்ற நினைவைக் கொண்டிருக்கிறீர்கள். அது எவருடைய நினைவு? ஒரேயொரு தந்தையினது ஆகும். தந்தையை நினைவுசெய்வதால் உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு, நீங்கள் அங்கே சென்றடைவீர்கள். நீங்கள் தூய்மையாகிய பின்னர் புதிய உலகிற்குச் செல்ல வேண்டும். ஆத்மாக்கள் அங்கு செல்ல வேண்டும். ஆத்மாக்களே இப் புலன்களினூடாகச் செயல்கள் அனைத்தையும் செய்கிறார்கள். தந்தை கூறுகிறார்: உங்களை ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை நினைவுசெய்யுங்கள். மனிதர்கள் அனைவரும் ஏனைய பலரையும் நினைவுசெய்கிறார்கள். பக்தி மார்க்கத்தில், நீங்கள் ஒருவரையே நினைவுசெய்ய வேண்டும். முதலில், நீங்கள் அதிமேலான சிவபாபாவின் பக்தியை மாத்திரம் செய்தீர்கள். அது கலப்படமற்ற பக்தி என்று அழைக்கப்படுகிறது. படைப்பவராகிய தந்தையே அனைவருக்கும் சற்கதி அருள்பவர். குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் அவரிடமிருந்து ஓர் எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். நீங்கள் சகோதரர்களிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுவதில்லை. ஆண் குழந்தைகள் எப்பொழுதும் தங்கள் தந்தையிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுகிறார்கள். புதல்விகளும் சிறிதளவைப் பெறுகிறார்கள். பின்னர் அவர்கள் சென்று வாழ்க்கைத்துணை ஆகுகிறார்கள். இங்கு, நீங்கள் அனைவரும் ஆத்மாக்கள், ஒரேயொருவரே ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தை. அனைவருக்கும் தந்தையிடமிருந்து தங்கள் ஆஸ்தியைக் கோருவதற்கு உரிமை உள்ளது. நீங்கள் ஓர் ஆணின் அல்லது பெண்ணின் சரீரத்தைக் கொண்டிருந்தாலும், நீங்கள் அனைவரும் சகோதரர்களே; ஆத்மாக்கள் அனைவரும் சகோதரர்கள். வெறுமனே கூறவேண்டும் என்பதற்காகவே இந்துக்களும் முஸ்லிம்களும் சகோதரர்கள் என்று அம்மக்கள் கூறுகின்றார்கள், ஆனால் அவர்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. நீங்கள் இப்பொழுது அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்கிறீர்கள். “சகோதரர்கள்” என்றால் ஆத்மாக்கள் அனைவரும் ஒரே தந்தையின் குழந்தைகளும், பின்னர், பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் ஆகுவதால், அனைவரும் சகோதர, சகோதரிகளும் என அர்த்தமாகும். இவ்வுலகிலிருந்து அனைவரும் அங்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்பது இப்பொழுது உங்களுக்குத் தெரியும். மனிதர்கள் அனைவரினதும் பாகங்கள் இப்பொழுது முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றன. பழைய உலகிலிருந்து உங்களைப் புதிய உலகிற்கு அழைத்துச் செல்வதற்குத் தந்தை வந்துள்ளார். அவர் உங்களை அக்கரை சேர்க்கிறார். மக்கள் பாடுகிறார்கள்: ஓ படகோட்டியே, எங்களை அக்கரைக்கு அழைத்துச் செல்லுங்கள்! அதாவது, எங்களைச் சந்தோஷ தாமத்துக்கு அழைத்துச் செல்லுங்கள். இப் பழைய உலகம் நிச்சயமாக மாறிப் புதிய உலகமாக வேண்டும். அசரீரி உலகிலிருந்து ஆரம்பித்து நீங்கள் முழு உலகினதும் வரைபடத்தை உங்களுடைய புத்தியில் கொண்டிருக்கிறீர்கள். ஆத்மாக்களாகிய நாங்கள் அனைவரும், அமைதி தாமமாகிய, இனிய தாமத்துவாசிகள் ஆகுவோம். இது உங்கள் புத்தியில் உள்ளது. நாங்கள் சத்தியயுகத்துப் புதிய உலகில் இருக்கும்பொழுது, ஏனைய ஆத்மாக்கள் அனைவரும் அமைதி தாமத்தில் வசிக்கிறார்கள். ஆத்மாக்கள் ஒருபொழுதும் அழிக்கப்படுவதில்லை. ஒருபொழுதும் அழிக்கப்பட முடியாத, அழிவற்ற பாகங்கள் ஆத்மாக்களில் பதியப்பட்டுள்ளன. உதாரணமாக, ஒருவர் பொறியியலாளராக இருந்தால், பின்னர், மிகச்சரியாக, 5000 வருடங்களின் பின்னர் அதேபோன்று, அவர் ஒரு பொறியியலாளர் ஆகுவார்; அவர் அதே பெயர், தோற்றம், நேரம், இடத்தைக் கொண்டிருப்பார். தந்தை மாத்திரம் வந்து இவ்விடயங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துகிறார். இந்த நாடகம் அநாதியானதும் அழிவற்றதும் ஆகும், அதன் ஆயுட்காலம் 5000 வருடங்கள் ஆகும். அது ஒரு விநாடி கூட நீண்டதாகவோ அல்லது குறுகியதாகவோ இருக்க முடியாது. இது அநாதியாக முற்கூட்டியே நிச்சயிக்கப்பட்ட நாடகமாகும். ஒவ்வொருவரும் தனது சொந்த பாகத்தைப் பெற்றுள்ளார். நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகி, நாடகத்தைப் பற்றற்ற பார்வையாளர்களாகப் பார்க்க வேண்டும். தந்தை தனக்கென ஒரு சரீரத்தைக் கொண்டிருப்பதில்லை. அவர் ஞானம் நிறைந்தவரும், விதையும் ஆவார், மேலே அசரீரி உலகில் வசிக்கும் ஆத்மாக்கள் அனைவரும் இங்கு வரிசைக்கிரமமாக, தங்களுடைய பாகங்களை நடிப்பதற்குக் கீழே வருகிறார்கள். முதல் இலக்கம் தேவர்களுக்கு உரியது. முதல் இலக்க வம்சத்தின் படங்களும், பின்னர் சந்திர வம்சத்தின் படங்களும் உள்ளன. சூரிய வம்ச இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியமே உயர்வானது. எப்பொழுது அல்லது எவ்வாறு அவர்களின் இராச்சியம் ஸ்தாபிக்கப்பட்டது என்று எம் மனிதர்களுக்குத் தெரியாது. சத்தியயுகத்தின் ஆயுட்காலம் நூறாயிரக் கணக்கான வருடங்கள் என அவர்கள் எழுதியுள்ளார்கள். அவர்களுக்கு எவருடைய வாழ்க்கை வரலாறும் தெரியாது. இலக்ஷ்மி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். அவர்களைப் பற்றி அறியாமல் அவர்களுக்குத் தலை வணங்குவதோ அல்லது அவர்களுடைய புகழ் பாடுவதோ தவறானதாகும். தந்தை இங்கமர்ந்திருந்து உங்களுக்குப் பிரதானமானவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுகிறார். அவர்கள் எவ்வாறு தங்கள் இராச்சியத்தை ஆட்சிசெய்தார்கள் என்பது இப்பொழுது உங்களுக்குத் தெரியும். ஸ்ரீ கிருஷ்ணர் சத்தியயுகத்தில் இருந்தார். மீண்டும் ஒருமுறை ஸ்ரீ கிருஷ்ணரின் பூமி ஸ்தாபிக்கப்பட்டு வருகின்றது. ஸ்ரீகிருஷ்ணர் சுவர்க்கத்தின் ஓர் இளவரசராக இருந்தார். இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் எவ்வாறு ஸ்தாபிக்கப்பட்டது என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். ஒரு மணிமாலை வரிசைக்கிரமமாக உருவாக்கப்படுகிறது. இன்ன இன்னார் மணிமாலையின் ஒரு மணி ஆகுவார்கள், ஆனால், முன்னேறிச் செல்கையில், சிலர் தோற்கடிக்கப்படுகிறார்கள்; மாயை அவர்களைத் தோற்கடிக்கிறாள். இவர் ஒரு கட்டளையிடும் தளபதி, இவர் இன்ன இன்னார் என்று இராணுவத்தில் உள்ளவர்களைப் பற்றிக் கூறப்படும். பின்னர் அவர்கள் மரணிக்கிறார்கள். இங்கு, மரணிப்பதென்றால், உங்கள் ஸ்திதியை இழப்பது, அதாவது, மாயையால் தோற்கடிக்கப்படுவது என அர்த்தம்; பின்னர் அவர்கள் மரணிக்கிறார்கள். ஞானத்தால் வியப்படைந்து, அதைச் செவிமடுத்து, அதை ஏனையோர்களுக்குக் கூறிப் பின்னர் விலகிச் செல்பவர்கள் உள்ளார்கள். ஓ மாயையே! அவர்கள் தந்தையைப் பிரிந்து சென்றவர்கள் ஆகினார்கள். அவர்கள் மரணித்து வாழ்கிறார்கள். அவர்கள் தந்தைக்கு உரியவர்களாகிப் பின்னர் இராம இராச்சியத்தை விட்டு நீங்கி இராவண இராச்சியத்துக்குச் செல்கிறார்கள். அவர்கள் காண்பித்துள்ள கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையிலான யுத்தம் இதன் அடிப்படையிலேயே அமைந்துள்ளது. தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையிலான ஒரு யுத்தத்தையும் அவர்கள் காண்பித்துள்ளார்கள். அவர்கள் ஒரு யுத்தத்தையே காண்பிக்க வேண்டும்! ஏன் இரண்டு யுத்தங்கள் உள்ளன? அவ்விடயங்கள் இங்குள்ளவற்றையே குறிக்கின்றன என்று தந்தை விளங்கப்படுத்துகிறார். யுத்தம் என்றால் வன்முறையாகும். இதுவோ அகிம்சைக்குரிய (அதிமேன்மையான) பரம தேவதர்மம் ஆகும். நீங்கள் இப்பொழுது இரட்டை அகிம்சாவாதிகள் ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுடையது யோகசக்திக்குரிய விடயம். நீங்கள் ஆயுதங்கள் போன்றவற்றினால் எவருக்கும் எதையும் செய்வதில்லை. அதைச் செய்வதற்குக் கிறிஸ்தவர்கள் பெருமளவு சக்தியைக் கொண்டிருக்கிறார்கள். ரஷ்யர்களும் அமெரிக்கர்களும் இரு சகோதரர்கள் ஆவார்கள். அவர்கள் குண்டுகள் போன்றவற்றைத் தயாரிப்பதில் ஒருவர் மற்றவருடன் போட்டியிடுகிறார்கள். ஒவ்வொருவரும் மற்றவரை விட அதிகச் சக்திவாய்ந்தவர்கள். அவர்கள் ஒன்றுபட்டால், உலகையே ஆளக்கூடியளவுக்குப் பெரும் சக்தியைக் கொண்டிருக்கிறார்கள். எவ்வாறாயினும், பௌதீகச் சக்தியால் எவரும் உலக ஆட்சியை அடைய முடியும் என்பது நியதியல்ல. இரண்டு பூனைகள் சண்டையிடுகையில், இடையிலுள்ள மூன்றாமவர் வெண்ணெயை உண்ணும் கதையை அவர்கள் காண்பிக்கிறார்கள். இந்நேரம், அவ்விடயங்கள் அனைத்தையும் தந்தை விளங்கப்படுத்துகிறார். இவர் எதையும் அறிந்திருக்கவில்லை. தெய்வீகக் காட்சிகள் மூலம் இப் படங்கள் போன்றவற்றைத் தந்தை உருவாக்கி வைத்துள்ளார். அம்மக்கள் எவ்வாறு ஒருவருடன் ஒருவர் சண்டையிடுகிறார்கள் என்பதையும் இப்பொழுது அவர் விளங்கப்படுத்துகிறார். நீங்கள் முழு உலக இராச்சியத்தையும் பெறுகிறீர்கள். அவர்கள் இருவரும் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள். அவர்கள் நாடுகளை ஒன்றுடனொன்று சண்டையிடச் செய்து, பின்னர் தொடர்ந்தும் உதவி செய்கிறார்கள், ஏனெனில் அவர்களின் வியாபாரம் மிகவும் சக்திவாய்ந்தது. இரண்டு பூனைகள் ஒன்றுடன் மற்றையது சண்டையிடும்பொழுது மட்டும், யுத்தத் தளபாடங்கள் போன்றவை அனைத்தும் பயனுள்ளவை. அவர்கள் இரண்டு நாடுகளை ஒன்றுடனொன்று சண்டையிடச் செய்கிறார்கள். முன்னர் இந்துஸ்தானும் பாகிஸ்தானும் பிரிக்கப்பட்டிருந்தனவா? இரண்டும் இணைந்திருந்தன. இவை அனைத்தும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளன. யோகசக்தியினூடாக உலக அதிபதிகள் ஆகுவதற்கு நீங்கள் இப்பொழுது முயற்சி செய்கிறீர்கள். அந்த மக்கள் ஒருவர் மற்றவருடன் சண்டையிடுகையில், மத்தியிலுள்ள நீங்கள் வெண்ணெயை உண்கிறீர்கள். நீங்கள் வெண்ணெயை, அதாவது, உலக இராச்சியத்தைப் பெறுகிறீர்கள், நீங்கள் அதை மிகவும் இலகுவான வழியில் பெறுகிறீர்கள். தந்தை கூறுகிறார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, நிச்சயமாக நீங்கள் தூய்மையாக வேண்டும். நீங்கள் தூய்மையாகித் தூய உலகிற்குச் செல்ல வேண்டும். அது முற்றிலும் விகாரமற்ற உலகமாகிய, விகாரமற்ற உலகம் என அழைக்கப்படுகிறது. அனைத்தும் நிச்சயமாகச் சதோபிரதான், சதோ, இரஜோ, தமோ ஸ்திதிகளினூடாகச் செல்கின்றன. தந்தை விளங்கப்படுத்துகிறார்: முன்னர் உங்களுக்கு விவேகம் இருக்கவில்லை, ஏனெனில் அவர்கள் சமயநூல்களில் நூறாயிரக் கணக்கான வருடங்களைப் பற்றி எழுதியுள்ளார்கள். பக்தியே அறியாமை இருளாகும். முன்னர், நீங்கள் இதை அறிந்திருக்கவில்லை. கலியுகம் மேலும் 40,0000 வருடங்களுக்குத் தொடரும் என்று அந்த மக்கள் கூறுகிறார்கள் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். அச்சா. 40,000 வருடங்களின் இறுதியை நீங்கள் அடையும்பொழுது, என்ன நடைபெறும்? எவருக்கும் தெரியாது. அவர்கள் அறியாமை உறக்கத்தில் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று இதனாலேயே கூறப்பட்டுள்ளது. பக்தி அறியாமையாகும். ஞானத்தைக் கொடுக்கின்ற, ஞானக்கடல் ஒரேயொரு தந்தை மட்டுமே. நீங்களும் ஞான ஆறுகள் ஆவீர்கள். தந்தை வந்து குழந்தைகளாகிய உங்களுக்கு, அதாவது, ஆத்மாக்களாகிய உங்களுக்குக் கற்பிக்கிறார். அவரே தந்தையும் ஆசிரியரும் சற்குருவும் ஆவார். அவர் எங்களுடைய தந்தையும், ஆசிரியரும், குருவும் என்று வேறெவரும் கூற மாட்டார்கள். இது ஓர் எல்லையற்ற விடயம். அவரே எல்லையற்ற தந்தையும், ஆசிரியரும், சற்குருவும் ஆவார். அவரே இங்கமர்ந்திருந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: நான் உங்கள் பரமதந்தையும், நீங்கள் அனைவரும் எனது குழந்தைகளும் ஆவீர்கள். நீங்கள் கூறுகிறீர்கள்: பாபா, நீங்களே அந்த அதே ஒரேயொருவர். தந்தையும் கூறுகிறார்: ஒவ்வொரு கல்பமும் நான் உங்களைச் சந்திக்கிறேன். அவரே பரமாகிய, பரமாத்மா. அவர் இங்கு வந்து குழந்தைகளாகிய உங்களுக்கு அனைத்தையும் விளங்கப்படுத்துகிறார். கலியுகத்தின் ஆயுட்காலம் 40,000 வருடங்கள் என்று கூறுவது ஒரு முழுப் பொய்; அனைத்தும் 5000 வருடங்களில் உள்ளடங்குகின்றன. தந்தை உங்களுக்குக் கூறுவதையே, நீங்கள் நம்பி, அதைப் புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் அதை நம்பவில்லை என்பதல்ல. நீங்கள் அதை நம்பியிருக்காது விட்டால், இங்கு வர மாட்டீர்கள். நீங்கள் இந்தத் தர்மத்துக்கு உரியவராக இருக்காது விட்டால், அதை நம்ப மாட்டீர்கள். அனைத்தும் பக்தியிலேயே தங்கியுள்ளது என்று தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். பெருமளவு பக்தி செய்துள்ளவர்கள், தங்களின் பக்தியின் பலனைப் பெற வேண்டும். அவர்களே தந்தையிடமிருந்து எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுபவர்கள். நீங்கள் உலகின் அதிபதிகளாக, தேவர்களாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ளன. இப் பழைய உலகின் விநாசம் காண்பிக்கப்பட்டுள்ளது. அத்தகைய விடயங்கள் வேறு எந்தச் சமயநூல்களிலும் குறிப்பிடப்படவில்லை. கீதை மட்டும் பாரதத்தின் சமயநூல். கிறிஸ்துவைப் பற்றிக் கிறிஸ்தவர்கள் அறிந்துள்ளதைப் போன்று, ஒவ்வொருவரும் தங்களின் சொந்தச் சமயநூலைக் கற்பதுடன், அச் சமயத்தை ஸ்தாபித்தவரையும் அறிந்துகொள்ள வேண்டும். அவர்கள் அவரை அறிந்துகொண்டதுடன், அவரை மாத்திரமே வழிபடுகிறார்கள். நீங்கள் ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்துக்கு உரியவர்கள் ஆதலால், நீங்கள் தேவர்களை மாத்திரமே வழிபடுகிறீர்கள். எவ்வாறாயினும், இந்நாட்களில், தாங்கள் இந்து சமயத்துக்கு உரியவர்கள் என்று மக்கள் கூறுகிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இராஜயோகத்தைக் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் இராஜரிஷிகளும், அந்த மக்கள் ஹத்தயோக ரிஷிகளும் ஆவர். பகலுக்கும் இரவுக்குமான வித்தியாசம் உள்ளது. தங்கள் வீட்டையும், குடும்பத்தையும் துறக்கும் அவர்களின் துறவறமானது பலவீனமானதும் எல்லைக்குட்பட்டதுமாகும். பழைய உலகம் முழுவதையும் விட்டு நீங்குவதே, உங்களுடைய துறவறமும் விருப்பமின்மையும் ஆகும். முதலில் நீங்கள் இனிய வீடாகிய, உங்களுடைய வீட்டுக்குச் சென்று, பின்னர் புதிய உலகில் சத்தியயுகத்துக்குச் செல்வீர்கள். பிரம்மாவினூடாகவே ஆதிசனாதன தேவிதேவதா தர்மம் ஸ்தாபிக்கப்படுகிறது. இப்பொழுது பழைய தூய்மையற்ற உலகமே உள்ளது. இவ்விடயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் தந்தையுடன் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். இது நிச்சயமாக உண்மையானது. இதில் நம்பிக்கையின்மை பற்றிய கேள்வியே கிடையாது. தந்தை மட்டும் இந்த ஞானத்தைக் கற்பிக்கிறார். அந்தத் தந்தை ஆசிரியரும், எங்களை அவருடன் திரும்பவும் அழைத்துச் செல்கின்ற உண்மையான சற்குருவும் ஆவார். அக் குருமார்கள் உங்களை நடுவழியில் கைவிட்டுச் செல்கிறார்கள். ஒரு குரு உயிர் நீத்ததும் அவர்கள் வேறொருவரைக் குரு ஆக்குகிறார்கள்; அவர்கள் அவரது சிஷ்யரைக் கதியில் அமரச் செய்வார்கள். இங்கு, இது தந்தைக்கும் குழந்தைகளுக்குமுரிய விடயம். அங்கு, அது குருவுக்கும் அந்த ஆஸ்திக்கான உரிமையைக் கொண்ட சிஷ்யர்களுக்குமான விடயம் ஆகும். தந்தையிடமிருந்து மட்டுமே ஓர் ஆஸ்தி இருக்க முடியும். சிவபாபா பாரதத்தில் மட்டும் வருகிறார். மக்கள் சிவராத்திரியையும், ஸ்ரீகிருஷ்ணரின் இரவையும் கொண்டாடுகிறார்கள். சிவனுக்கு ஜாதகம் இல்லாததால், எவ்வாறு எதனையும் கூற முடியும்? அவருக்கு நேரமோ, திகதியோ கிடையாது. அவர்கள் முதல் இலக்கத்தவராகிய, ஸ்ரீகிருஷ்ணரின் நேரத்தையும் திகதியையும் காண்பிக்கிறார்கள். தீபாவளியைக் கொண்டாடுவது உலக மக்கள் செய்கின்ற ஒன்றாகும். தீபாவளி குழந்தைகளாகிய உங்களுக்கானதல்ல. எங்கள் புதிய வருடமும் புதிய உலகமும் சத்தியயுகம் என அழைக்கப்படுகிறது. புதிய உலகிற்காக நீங்கள் இப்பொழுது கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் இப்பொழுது அதி மங்களகரமான சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள். பலர் அந்தக் கும்பமேளாக்களுக்குச் செல்கிறார்கள். அந்த மேளாக்கள் ஆற்றங்கரைகளில் நடைபெறுகின்றன. பல்வேறு மேளாக்களும் நடைபெறுகின்றன. அவர்களுக்கும் அவர்களின் சொந்த ஆட்சித்தலைமை உள்ளது. சில சமயங்களில், அவர்கள் மத்தியில் பெரிய சண்டை சச்சரவுகள் ஏற்படுகின்றன, ஏனெனில் அவர்கள் சரீர உணர்வுடையவர்கள். இங்கு, சண்டையிடல் போன்றவற்றின் கேள்வியே கிடையாது. தந்தை கூறுகிறார்: இனிமையிலும் இனிமையான அன்பிற்கினிய குழந்தைகளே, என்னை நினைவுசெய்யுங்கள்! ஆத்மாக்களாகிய நீங்கள் சதோபிரதானிலிருந்து தமோபிரதான் ஆகிவிட்டீர்கள். உங்களில் கலப்படம் கலக்கப்பட்டுள்ளது, அது யோக அக்கினி மூலம் மாத்திரமே அகற்றப்பட முடியும். இது பொற்கொல்லர்களுக்குத் தெரியும். தந்தை மாத்திரமே தூய்மையாக்குபவர் என அழைக்கப்படுகிறார். தந்தையே பரம பொற்கொல்லர். அவர் அனைவருடைய கலப்படத்தையும் அகற்றி, அவர்களை நிஜத்தங்கம் ஆக்குகிறார். தங்கம் தீயிலிடப்படுகிறது. (புடம் போடப்படுகிறது) இது யோகம், அதாவது, நினைவாகிய அக்கினி, ஏனெனில் நினைவின் மூலம் மட்டும் உங்கள் பாவங்கள் அழிக்கப்பட முடியும். நினைவு யாத்திரையினூடாக மட்டுமே நீங்கள் தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆகுவீர்கள். அனைவரும் சதோபிரதான் ஆக மாட்டார்கள். முன்னைய கல்பத்தில் செய்தது போலவே அனைவரும் முயற்சி செய்வார்கள். பரமாத்மாவின் பாகமும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது, நிச்சயிக்கப்பட்டவை தொடர்ந்தும் நடைபெறும்; அது மாற்றப்பட முடியாது; படச்சுருள் தொடர்ந்தும் சுழல்கிறது. தந்தை கூறுகிறார்: நீங்கள் மேலும் முன்னேறுகையில், தந்தை உங்களுக்கு ஆழமான விடயங்களைக் கூறுவார். எல்லாவற்றிற்கும் முதலில், அவர் ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தை என்னும் நம்பிக்கையைக் கொண்டிருங்கள். அவரை நினைவுசெய்யுங்கள்! இதுவே “மன்மனபவ” என்பதன் அர்த்தமாகும். கடவுள் ஸ்ரீகிருஷ்ணர் பேசுகிறார் என்று கூறப்பட முடியாது. ஸ்ரீகிருஷ்ணர் பேசியிருந்தால், அனைவரும் அவரிடம் செல்வார்கள்; அனைவரும் அவரை இனங்கண்டு கொள்வார்கள். அச்சந்தர்ப்பத்தில், பல மில்லியன் கணக்கானோரில் ஒரு கைப்பிடியளவினர் மட்டும் என்னை அறிந்துகொள்கிறார்கள் என்று ஏன் கூறப்படும்? தந்தை இதை விளங்கப்படுத்துகிறார், இதனாலேயே மக்கள் அதைப் புரிந்துகொள்வதைச் சிரமமாகக் காண்கிறார்கள். முன்னரும் அதேவிடயமே நடைபெற்றது. நான் வந்து தேவதர்மத்தை ஸ்தாபித்தேன். அச் சமயநூல்கள் போன்றவை அனைத்தும் மறைந்துவிடும். பின்னர், பக்தி மார்க்கத்தில் அதே சமயநூல்கள் மீண்டும் அவற்றுக்குரிய சொந்த நேரத்தில் வெளிப்படும். சத்தியயுகத்தில், ஒரு சமயநூல்கூட இருக்காது. பக்தியின் பெயரோ அல்லது சுவடோ இருக்காது. இப்பொழுது பக்தியின் இராச்சியமே உள்ளது. தங்களை ஸ்ரீ ஸ்ரீ 108 ஜெகத்குரு என்று அழைத்துக் கொள்பவர்களே, அனைவரிலும் மகத்தானவர்கள். இந்நாட்களில், அவர்கள் தங்களை 1008 ஸ்ரீ ஸ்ரீ எனவும் அழைக்கிறார்கள்! உண்மையில், அந்த மணிமாலை இவ்விடத்தையே குறிப்பிடுகிறது. மக்கள் ஒரு மணிமாலையை உருட்டும்பொழுது, குஞ்சம் அசரீரியானவரைக் குறிப்பிடுகிறது என்பதையும், பின்னர் இரட்டை மணிகள் உள்ளன என்பதையும் அவர்கள் அறிவார்கள். பிரம்மாவும் சரஸ்வதியும் இரட்டை மணிகள், ஏனெனில் இது இல்லறப் பாதை ஆகும். இல்லறப் பாதைக்குரியவர்கள் அந்தத் துறவுப் பாதைக்குரியவர்களைத் தங்கள் குருமாராக ஆக்கியிருந்தால், என்ன கொடுப்பார்கள்? அவர்கள் ஹத்த யோகத்தைக் கற்க வேண்டியிருக்கும். பலவிதமான ஹத்தயோகம் உள்ளன, ஆனால் ஒரேவிதமான இராஜயோகம் மட்டும் உள்ளது. இராஜயோகம் என்று அழைக்கப்படுகின்ற, ஒரு நினைவு யாத்திரையே உள்ளது. ஏனைய அனைத்தும் ஒருவரின் தேகாரோக்கியத்துக்கு உரிய ஹத்தயோகம் ஆகும். இந்த இராஜயோகத்தைத் தந்தை மட்டும் கற்பிக்கிறார். முதலில் ஆத்மாவும், பின்னர் சரீரமும் உள்ளது. உங்களை ஆத்மாக்கள் என்று கருதுவதற்குப் பதிலாகச் சரீரங்களெனக் கருதுவதால், நீங்கள் தவறான பாதையில் சென்றவர்கள் ஆகினீர்கள். உங்களை இப்பொழுது ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை நினைவுசெய்யுங்கள், உங்கள் இறுதி எண்ணங்கள் உங்கள் இலக்குக்கு உங்களை இட்டுச் செல்லும். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.தாரணைக்கான சாராம்சம்:
1. ஆத்ம உணர்வுடையவர்களாகி, இந்த அநாதியான, அழிவற்ற, முற்கூட்டியே நிச்சயிக்கப்பட்ட நாடகத்தில், ஒவ்வொருவரின் பாகத்தையும் ஒரு பற்றற்ற பார்வையாளராக அவதானியுங்கள். உங்கள் இனிமையான வீட்டையும், உங்கள் இனிமையான இராச்சியத்தையும் நினைவுசெய்யுங்கள். இப் பழைய உலகை உங்கள் புத்தியிலிருந்து அகற்றுங்கள்.2. மாயையால் தோற்கடிக்கப்படாதீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் நினைவு அக்கினியில் உங்கள் பாவங்களை எரிப்பதனால், தூய்மையாகுவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
ஆசீர்வாதம்:
நீங்கள் தீபமாலைக்காக உங்களின் தேவ அந்தஸ்தை மிகச்சரியான முறையில் வெளிப்படுத்துவதன் மூலம் ஒரு பூஜிக்கத்தகுதிவாய்ந்த ஆத்மா ஆகுவீர்களாக.முன்னர், தீபமாலையில், மக்கள் சம்பிரதாயப்படி தீபங்களை ஏற்றுவார்கள். அத்துடன் அந்தத் தீபங்கள் அணைந்து போகாமல் இருப்பதில் கவனம் செலுத்துவார்கள். அவற்றுக்கு அவர்கள் எண்ணெய் ஊற்றி, சரியான முறையில் வழிபாட்டை ஆரம்பித்து வைப்பார்கள். இப்போது, தீபங்களுக்குப் பதிலாக, அவர்கள் மின்விளக்குகளைப் பயன்படுத்துகிறார்கள். இப்போது அவர்கள் தீபமாலையைக் கொண்டாடுவதில்லை. ஆனால், அது களிப்பூட்டும் வடிவமாக ஆகியுள்ளது. வரவழைக்கும் வழிமுறை, அதாவது, ஆன்மீக முயற்சி முடிவடைந்துவிட்டது. அன்பு முடிந்துவிட்டது. சுயநலமான நோக்கங்களே எஞ்சியுள்ளன. இதனாலேயே, உண்மையான அருள்பவரின் ரூபத்தில் உள்ள லக்ஷ்மி, எவரிடமும் வருவதில்லை. எவ்வாறாயினும், நீங்கள் எல்லோரும் உங்களின் தேவ அந்தஸ்தை மிகச்சரியான முறையில் அழைக்கிறீர்கள். இதனாலேயே, நீங்களே தேவர்கள் ஆகுகிறீர்கள்.
சுலோகம்:
சதா எல்லையற்ற மனோபாவத்தையும் பார்வையையும் ஸ்திதியையும் கொண்டிருங்கள். அப்போது மட்டுமே உலக நன்மை என்ற பணி பூர்த்தியாகும்.