30.10.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, எதிரியான, இராவணனை நீங்கள் யோக சக்தி மூலம் வெற்றிகொள்ள வேண்டும். மனிதர்களில் இருந்து தேவர்களாக மாறுவதற்கு, தெய்வீகக் குணங்களைக் கிரகியுங்கள்.

கேள்வி:
குழந்தைகள் அனைவரும் தந்தையின் ஸ்ரீமத்தை (மேன்மையான வழிகாட்டல்கள்) ஏன் ஒரேயளவில் பின்பற்றுவதில்லை?

பதில்:
ஏனெனில் நீங்கள் அனைவருமே தந்தையை ஒரேயளவிற்கு இனங்கண்டு கொள்ளவில்லை. நீங்கள் அவரை முழுமையாக இனங்கண்டு கொள்ளும்பொழுதே, அவரின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவீர்கள். எதிரியான மாயை, நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதைத் தடை செய்கிறாள். அதனால் குழந்தைகளான நீங்கள் அவ்வப்பொழுது உங்கள் சொந்த வழிகாட்டல்களைப் பின்பற்றி விட்டு, நீங்கள் மாயையின் புயல்களை அனுபவம் செய்வதால் பாபாவை நினைவுசெய்ய மறந்து விடுவதாக பாபாவிடம் கூறுகிறீர்கள். பாபா கூறுகிறார்: குழந்தைகளே, இராவணனான மாயைக்குப் பயப்படாதீர்கள். நீங்கள் முழுப் பலத்துடன் முயற்சி செய்தால் அவள் களைப்படைந்து விடுவாள்.

பாடல்:
அவர் எங்களை விட்டுப் பிரியவும் மாட்டார், நாங்கள் துன்பத்தை அனுபவிக்கவும் மாட்டோம்.

ஓம் சாந்தி.
நீங்கள் தனி ஆத்மாக்கள். நீங்கள் ஒவ்வொருவரும் “ஓம் சாந்தி” என்று கூறுவீர்கள். இவரோ இரட்டையானவர் என்பதால் “ஓம் சாந்தி, ஓம் சாந்தி” என இரு தடவைகள் கூற வேண்டும். தந்தை இப்பொழுது இங்கே அமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் இங்கே ஒரு யுத்த களத்தில் அமர்ந்திருக்கின்றீர்கள். இது அம்மக்களின் சண்டை போன்றதல்ல. உண்மையில் சகல வீடுகளிலும் சண்டைகள் இடம்பெறுகின்றன. பெரும்பான்மையான இடங்களில் அவ்வாறே உள்ளது. முதலாவது இலக்கம் சரீர உணர்வும், இரண்டாவது காமமும் ஆகும். நீங்கள் இப்பொழுது நினைவுச் சக்தி மூலம் ஐந்து விகாரங்களான, இராவணனை வெற்றி கொள்கின்றீர்கள். உங்களிடம் நினைவுச் சக்தி இருந்தால், நீங்கள் விழ முடியாது. உங்களின் யுத்தம் இராவணனுடன் மாத்திரமே ஆகும். உலகில், சகலவிதமான சூழ்நிலைகளும் உள்ளன, இங்கோ, இந்த ஒரு விடயமே உள்ளது. உங்கள் யுத்தம் இராவணனுடனேயே. உங்களுக்குக் கற்பிப்பவர் யார்? தூய்மையாக்குபவரான கடவுள். அவரே உங்களைத் தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மையாக்குபவர். தூய்மை என்றால் தேவர்கள் என்று அர்த்தம்; நீங்கள் உலக அதிபதிகள் ஆகுகின்றீர்கள். இங்கே, இராவணன் மூலம் நீங்கள் தூய்மையற்றவர்கள் ஆகிவிட்டதை மனிதர்கள் புரிந்து கொள்வதில்லை. இந்நேரத்தில், முழு உலகிலும் இராவண இராச்சியமே உள்ளது எனத் தந்தை விளங்கப்படுத்தி உள்ளார். அதேபோன்று, சத்திய, திரேதா யுகங்களில் இராம இராச்சியம் உள்ளது. அதுவும் முழு உலகிலும் நிலவுவதாகக் கூறப்படுகின்றது. எவ்வாறாயினும், அங்கு அந்தளவு மக்கள் இல்லை. நீங்கள் யோக சக்தி மூலம் உலக இராச்சியத்தைக் கோருகின்றீர்கள். நீங்கள் இங்கே அமர்ந்திருக்கும் பொழுது மாத்திரமே, தந்தையை நினைவுசெய்ய வேண்டும் அல்லது சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்ற வேண்டும் என்றில்லை, அவ்வளவுதான். ஒவ்வொரு கணமும் நீங்கள் இதை உங்கள் புத்தியில் வைத்திருக்க வேண்டும். நாங்கள் அரைக் கல்பமாகச் சுவர்க்கத்தை ஆட்சிசெய்தோம், பின்னர் நாங்கள் இராவணனால் சபிக்கப்பட்ட பொழுது, கீழிறங்கினோம். கீழிறங்குவதற்குக் காலம் எடுக்கின்றது. நீங்கள் 84 படிகள் கீழிறங்க வேண்டியுள்ளது. ஏறும் ஸ்திதியில் படிகள் இல்லை; படிகள் இருந்திருந்தால் ஒரு விநாடியில் ஜீவன்முக்தி பற்றி எவ்வாறு உங்களால் பேச முடியும்? பாருங்கள், எவ்வாறு நீங்கள் கீழிறங்குவதற்கு 2500 வருடங்கள் எடுக்கின்றன, ஆனால் ஏறும் ஸ்திதிக்கோ சில வருடங்களே எடுக்கின்றன. எனவே, உங்களிடம் யோக சக்தி உள்ளது, அவர்களிடமோ பௌதீகச் சக்தியே உள்ளது. நீங்கள் துவாபர யுகத்திலிருந்து கீழிறங்க ஆரம்பித்ததும், பௌதீகச் சக்தி ஆரம்பிக்கின்றது. சத்திய யுகத்தில் கொலை என்ற கேள்விக்கே இடமில்லை. ஸ்ரீகிருஷ்ணர் ஒரு மரத்தில் கட்டப்பட்டதாக அவர்கள் சித்தரித்துள்ளனர், ஆனால் அவ்வாறான எதுவுமே அங்கு இருக்க முடியாது. அங்கே, குழந்தைகள் ஒருபொழுதும் விஷமத்தனம் செய்ய மாட்டார்கள்; அவர்கள் அனைவரும் சகல நற்குணங்களும் நிறைந்தவர்கள், பதினாறு கலைகளும் நிறைந்தவர்கள் எனக் கூறப்படுகின்றனர். மக்கள் ஸ்ரீகிருஷ்ணரை அதிகளவில் நினைவு செய்கின்றனர். சிறப்பாக இருப்பவை நினைவுகூரப்படுகின்றன. உதாரணமாக, மக்கள் உலகின் ஏழு அதிசயங்களையும் நினைவுகூருவதுடன், அவற்றைப் பார்க்கவும் செல்கின்றனர். மக்கள் வந்து பார்ப்பதற்கு, அபுவில் இருக்கும் அனைத்திலும் சிறப்பான விடயம் என்ன? சமயப் பற்றுள்ளவர்கள் ஆலயங்களைப் பார்ப்பதற்காக இங்கே வருகின்றனர். பக்தி மார்க்கத்தில் பல ஆலயங்கள் உள்ளன. சத்திய, திரேதா யுகங்களில் எந்த ஆலயங்களும் இல்லை. ஆலயங்கள் ஞாபகார்த்தங்களாகப் பின்னரே கட்டப்படுகின்றன. சத்திய யுகத்தில் பண்டிகைகள் எதுவும் கிடையாது. தீபாவளியும் நாங்கள் இந்நேரத்தில் கொண்டாடுவது போன்று அங்கே இருக்காது. ஆம், அரசன் சிம்மாசனத்தை ஏற்கும்பொழுது, அவர்கள் முடிசூட்டு விழாவைக் கொண்டாடுகின்றனர். அங்கு அனைவரதும் தீபம் ஏற்றப்படுகின்றது. “புதிய யுகம் வந்து விட்டது” என்ற பாடல் உங்களிடம் உள்ளது. புதிய உலகமான சத்திய யுகத்தில் தேவர்கள் ஆகுவதற்கே முயற்சி செய்கின்றீர்கள் என்பதை நீங்கள் மாத்திரமே அறிவீர்கள். நீங்கள் மிகவும் நன்றாகக் கற்க வேண்டும். நீங்கள் வாழும்வரை, இந்த ஞான அமிர்தத்தைப் பருகுங்கள். இந்த ஞானம் உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியை அறிந்து கொள்வது பற்றியதாகும். மொழி போன்றவை இங்கு கற்பிக்கப்படுவதில்லை. தந்தையை நினைவு செய்வதுடன், சுயதரிசனச் சக்கரத்தையும் சுழற்றுங்கள்; அவ்வளவுதான்! நீங்கள் இங்கே சுயதரிசனச் சக்கரதாரிகளாக அமர்ந்திருக்கின்றீர்கள். உங்களின் 84 பிறவிகளின் சக்கரம் முடிவுக்கு வந்து விட்டது என்பது உங்கள் புத்தியில் உள்ளது. நீங்கள் இப்பொழுது உங்களின் பழைய சரீரங்களையும், பழைய உறவுகளையும் துறந்து, புதியவற்றைப் பெற வேண்டும். பாபா உங்களை விஷ்ணு தாமத்தின் அதிபதிகள் ஆகுவதற்கு முயற்சி செய்யுமாறு தூண்டுகின்றார். உலகிலுள்ள ஏனைய அனைவரும் அசுர சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். கடவுள் பேசுகின்றார்: இப்பொழுது இது கீதையின் அதே யுகமாகும். இதுவே ஒவ்வொரு சக்கரத்திலும் வருகின்ற சங்கம யுகம். தந்தை கூறுகின்றார்: நான் இச்சக்கரத்தின் சங்கம யுகத்திலேயே வருகின்றேன். நான் கீதையின் அதே கடவுள் ஆவேன். நான் சுவர்க்கம் என்ற புதிய உலகை உருவாக்குவதற்கே இங்கே வருகின்றேன்; எனவே, எவ்வாறு நான் துவாபர யுகத்தில் வந்திருக்க முடியும்? அது மாபெரும் தவறு. சில தவறுகள் சிறியவை, சில பெரியவை. இதுவே அனைத்திலும் பெரிய தவறு. மறுபிறப்பிற்கு அப்பாற்பட்டவரான, கடவுள் சிவனின் பெயரைக் குறிப்பிடுவதற்குப் பதிலாக, அவர்கள் 84 பிறவிகள் எடுப்பவரின் பெயரைப் புகுத்தி விட்டார்கள். “சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள்!” என ஸ்ரீ கிருஷ்ணரால் கூறமுடியாது என்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். ஏனைய சமயத்தவர்கள் எவரும் அவரை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சிவன் அசரீரியானவர். நீங்கள் சிவசக்தி சேனையினர். நீங்கள் சிவபாபாவுடன் யோகம் செய்து, அவரிடமிருந்து சக்தியைப் பெறுகின்றீர்கள். இதில் ஆண் அல்லது பெண் என்ற கேள்விக்கு இடமில்லை. ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் சகோதரர்கள். நீங்கள் அனைவரும் தந்தையிடம் இருந்தே சக்தியைப் பெறுகின்றீர்கள். தந்தை மாத்திரமே உங்களுக்கு ஆஸ்தியை வழங்குவார். அந்தத் தந்தையே சர்வசக்திவான். இலக்ஷ்மியும் நாராயணனும் முழு உலகினதும் அதிபதிகளாக உள்ளதால், அவர்களும் சர்வசக்திவான்கள் என அழைக்கப்படுகின்றனர். அவர்கள் எவ்வாறு தங்கள் இராச்சியத்தைப் பெற்றனர்? இப்பொழுது பாரதத்தில் மாத்திரமன்றி, முழு உலகிலும் இராவண இராச்சியமே நிலவுகின்றது. சில அரசர்களையிட்டு, அவர்கள் இன்னமும் தொடர்ந்து வருகின்ற ஆட்சியாளர்களின் நீண்ட வரிசையில் ஒருவர் என உங்களால் கூற முடியும். அவர்கள் (இலக்ஷ்மியும், நாராயணனும்) சத்திய யுகத்தின் ஆரம்பத்திலேயே வந்து விட்டனர். எனவே, அவர்கள் தங்களது முன்னைய பிறவியில் அத்தகைய முயற்சியைச் செய்திருக்க வேண்டும். தான தர்மங்கள் செய்வதன் மூலமே, தூய்மையற்ற இராச்சியங்கள் பெறப்படுகின்றன. இங்கே, சங்கம யுகத்தில், இந்த ஞானத்தின் மூலமும், யோக சக்தி மூலமும் 21 பிறவிகளுக்கான இராச்சியத்தை நீங்கள் பெறுகின்றீர்கள். இந்தப்பழைய உலகம் முழுவதும் அழியப் போகின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். இச்சரீரங்கள் கூட எஞ்சியிருக்க மாட்டாது. எனவே, உங்களை ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை நினைவு செய்யுங்கள். சிறு குழந்தைகளுக்கு, அவர்களின் லௌகீகத் தந்தையை நினைவு செய்வதற்கு கற்பிக்கப்படுவது போன்று, “பாபா, பாபா!” எனக் கூறுவதற்குக் கற்றுக் கொள்ளுங்கள். இப்பொழுது ஆன்மீகத் தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகிறார்: ஓ குழந்தைகளே! இது ஒரு புதிய விடயம். தந்தை கூறுகிறார்: இப்பொழுது நீங்கள் வீடு திரும்ப வேண்டும் என்பதால், உங்களின் ஆன்மீகத் தந்தையாகிய, என்னை நினைவு செய்யுங்கள். ஆத்மா அழிவற்றவர், சரீரமோ அழியக்கூடியது, எனவே, யார் பலசாலி? ஆத்மாவின் அடிப்படையிலேயே சரீரம் செயற்படுகிறது. ஆத்மா பிரிந்து சென்றதும், சரீரம் தீயில் இடப்பட்டு, எரிக்கப்பட வேண்டும். ஆத்மாக்கள் அழிவற்றவர்கள். அவர்கள் புள்ளிகளே ஆவர். ஆத்மாக்களை எவருமே அறியாதுள்ளனர். எவராவது காட்சியைப் பெற்றாலும், அதில் என்ன இருக்கின்றது? ஓர் ஆத்மா ஒரு புள்ளி, அவரில் 84 பிறவிகளின் அழிவற்ற பாகம் பதியப்பட்டுள்ளது என்பதையேனும் அவர்கள் அறியாதுள்ளனர். இவ்விடயங்கள் உங்களின் புத்தியில் மாத்திரமே உள்ளன. ஒரேயொரு தந்தை மாத்திரமே உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார். சட்டத்தரணிகள், வழக்கறிஞர்கள், பொறியியலாளர்கள் போன்றோர் தொடர்ந்தும் இருக்கின்றனர். இங்கே, நீங்கள் மனிதர்களில் இருந்து தேவர்களாக மாறுகின்றீர்கள். அவர்களும் மனிதர்களே, ஆனால் அவர்கள் தேவர்கள் என அழைக்கப்படுகின்றனர். தெய்வீகக் குணங்களைக் கிரகித்துள்ளவர்களே தேவர்கள். நீங்கள் முயற்சி செய்து, தெய்வீகக் குணங்கள் கொண்டவர்கள் ஆகவேண்டும். அதுவே உங்களின் இலக்கும், குறிக்கோளும் ஆகும். தேவர்களிடம் என்ன தெய்வீகக் குணங்கள் உள்ளன என்பதை நீங்கள் அறிவீர்கள். நாங்களும் அவ்வாறாக வேண்டும். பிரஜைகளும் அங்கே இருப்பார்கள். பல பிரஜைகள் உருவாக்கப்படுகின்றனர். எனினும், ஓர் அரசன் அல்லது அரசி ஆகுவதற்கு முயற்சி தேவை. பெருமளவு முயற்சி செய்பவர்கள் அரசன் அல்லது அரசி ஆகுவார்கள். பலருக்கும் இந்த ஞானத்தைக் கொடுப்பவர்களால் தங்கள் சொந்த இதயத்தில் இதனைப் புரிந்து கொள்ள முடியும். ஆத்மா கூறுகின்றார்: நிச்சயமாக நான் எல்லையற்ற தந்தைக்கு உரியவர் ஆகுவேன். நான் அவரிடம் என்னை அர்ப்பணிப்பேன், அவருக்கு நான் என்னைத் தியாகம் செய்வேன். என்னிடமுள்ள அனைத்தையும் நான் அவருக்கு அர்ப்பணிப்பேன். மக்கள் கடவுளுக்குக் கொடுக்கின்றார்கள், அல்லவா? நீங்கள் வரும்பொழுது, நான் என்னை உங்களுக்கு அர்ப்பணிப்பேன். இதற்குப் பிரதிபலனாக, உங்களிடமிருந்து ஒரு புதிய சரீரம், மனம், செல்வம் ஆகியவற்றைப் பெற்றுக் கொள்வேன். எவ்வாறு நான் ஒரு புதிய மனதைப் பெற முடியும்? நான் ஆத்மாவைப் புதியதாக (தூய்மை) ஆக்குவேன். பின்னர் ஒரு புதிய சரீரத்தை ஏற்று, இராச்சியத்தையும் பெறுவேன். நீங்கள் இப்பொழுது அதனைக் கோருகின்றீர்கள், அல்லவா? ஆத்மா கூறுகிறார்: ஓ பாபா, நான் இச்சரீரத்துடனேயே உங்களுக்கு உரியவன் ஆகுகின்றேன். பாபா, நான் உங்களிடம் புகலிடம் தேடுகின்றேன். இராவண இராச்சியத்தில் அனைவரும் மிகவும் சந்தோஷம் அற்றவர்களாகி விட்டனர். எனவே, பாபா, எங்களை இதிலிருந்து விடுதலையாக்கி, எங்கள் இராச்சியத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். இப்பொழுது நீங்கள் சிவபாபாவைக் கண்டு கொண்டீர்கள். எனவே, உங்களுக்கு வேறு என்ன வேண்டும்? சிவபாபாவின் ஸ்ரீமத்தின் மூலம் சுவர்க்கம் உருவாக்கப்படுகின்றது என்பதையும், இராவணனின் அசுர கட்டளைகள் மூலம் நரகம் உருவாக்கப்படுகின்றது என்பதையும் நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது ஸ்ரீமத்தின் மூலம் மீண்டும் ஒருமுறை சுவர்க்கம் உருவாக்கப்பட வேண்டும். முன்னைய கல்பத்தில் வந்தவர்கள் நிச்சயமாக மீண்டும் வருவார்கள். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதனால், மேன்மையானவர்கள் ஆகுகின்றீர்கள். இராவணனின் கட்டளைகளைப் பின்பற்றும் பொழுது, நீங்கள் வீழ்ந்து விடுகின்றீர்கள். இப்பொழுது இது உங்களின் ஏறும் ஸ்திதியாகும், ஆனால் ஏனைய அனைவருக்கும் இது இறங்கும் ஸ்திதியாகும். எண்ணற்ற சமயங்கள் உள்ளன. சத்திய யுகத்தில் ஒரேயொரு தேவ தர்மம் மாத்திரமே இருந்தது. அது இப்பொழுது மறைந்து விட்டது. (ஆல மரத்தின் உதாரணம் உள்ளது). தேவ தர்மம் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளன என்பதை நீங்கள் அறிவீர்கள். உண்மையிலேயே தேவர்களின் இராச்சியம் இருந்தது. அது 5000 வருடங்களுக்கான விடயம். இது 5000 வருடங்களைக் கொண்ட சக்கரம் என்றும், அதில் 4 யுகங்கள் உள்ளன என்றும், ஒவ்வொரு யுகமும் 1250 வருடங்களைக் கொண்டது என்றும் நீங்கள் அவர்களுக்கு நிரூபிக்கின்றீர்கள். சக்கரம் நூறாயிரக்கணக்கான வருடங்களைக் கொண்டது என அவர்கள் கூறியுள்ளனர். இரண்டிற்கும் இடையில் பெருமளவு வித்தியாசம் உள்ளதால், எவரது புத்தியிலும் அது பதிவதில்லை. பிரம்மாகுமாரிகளின் அமைப்பும் ஏனைய பல அமைப்புக்களைப் போன்றதே என்றும், நாங்களும் கீதையையே பேசுகின்றோம் என்றும் அவர்கள் எண்ணுகின்றனர். எவ்வாறாயினும், கீதையைப் பேசியவர் கடவுள் ஸ்ரீகிருஷ்ணரே என அவர்கள் நம்புகின்றனர். இங்கு அமர்ந்திருக்கின்ற இந்த தாதா ஒரு நகை வியாபாரியாக இருந்ததால், மக்கள் குழப்பம் அடைகின்றனர். தந்தை கூறுகின்றார்: இதுவரை, நான் யாரென்றோ, எவ்வாறானவர் என்றோ எவருமே இனங்கண்டு கொள்ளவில்லை. இறுதியில் நீங்கள் என்னை முழுமையாக இனங்கண்டு கொள்வீர்கள். இதுவரை நீங்கள் அனைவரும் என்னை வரிசைக்கிரமமாகவே இனங்கண்டு கொள்கின்றீர்கள். இதனாலேயே ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதை நீங்கள் மிகவும் சிரமமாக உணர்கின்றீர்கள். மிகச்சிறந்த குழந்தைகள் கூட ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதில்லை. இராவணன் அவர்களை அதனைப் பின்பற்ற அனுமதிப்பதில்லை; அவர்கள் தங்களின் சொந்தக் கட்டளைகளையே பின்பற்றுகின்றனர். வெகு சிலரே முழுமையாக ஸ்ரீமத்தைப் பின்பற்றுகின்றனர். நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும் பொழுது, என்னை முழுமையாக அறிந்து கொள்வீர்கள், அப்பொழுதே நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவீர்கள். நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும்பொழுது, நான் யாரென்றும், எவ்வாறானவர் என்றும் அறிந்து கொள்வீர்கள். நீங்கள் இப்பொழுது தொடர்ந்தும் இதைப் புரிந்து கொள்கின்றீர்கள். இதனை முழுமையாகப் புரிந்து கொண்ட பின்னர், உங்களுக்கு இன்னமும் என்ன தேவை? நீங்கள் வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழ வேண்டும். ஆனால் எதிரியான மாயை, உங்களை ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதில் இருந்து தடுக்கக் கூடியவள். நீங்கள் கூறுகிறீர்கள்: பாபா, மாயையின் புயல்கள் பல வருகின்றன. மாயை என்னை உங்களை மறக்கச் செய்கின்றாள். ஆம், நீங்கள் பெரும் விசையுடன் முயற்சி செய்யும்பொழுது, மாயை இறுதியில் களைப்படைந்து விடுவாள். எட்டு மணிகளின் மாலை உள்ளது. எட்டு பிரதான இரத்தினங்கள் உள்ளன. எட்டும் சோடிகளாக உள்ளன, அத்துடன் ஒன்பதாவதாக சிவபாபா மத்தியில் உள்ளார். சிலர் மத்தியில் உள்ளதை சிவப்பு நிறமாகச் செய்கின்றார்கள். சிலர் அதனை வெள்ளை நிறமாகச் செய்கின்றார்கள். சிவபாபா ஒரு புள்ளியே. ஒரு புள்ளி சிவப்பு நிறமாக இருக்க முடியாது. ஒரு புள்ளி எப்பொழுதும் வெள்ளையாகவே இருக்கும்; அது மிகவும் சூட்சுமமானது. தெய்வீகப் பார்வை இல்லாமல் எவராலும் அதனைப் பார்க்க முடியாது. மருத்துவர்கள் அதனைப் பார்ப்பதற்கு மிகவும் கடினமாக முயற்சி செய்கின்றார்கள். எனினும், அது மிகவும் சூட்சுமமாக உள்ளதால், அவர்களால் அதனைப் பார்க்க முடியாமல் உள்ளது. இதனாலேயே கேட்கப்படுகிறது: நீங்கள் ஓர் ஆத்மா எனக் கூறுகிறீர்கள். சரி, நீங்கள் எப்பொழுதாவது ஓர் ஆத்மாவைப் பார்த்திருக்கின்றீர்களா? உங்களையே உங்களால் பார்க்க முடியாதிருக்கும் பொழுது, எவ்வாறு உங்களால் தந்தையைப் பார்க்க முடியும்? நீங்கள் ஆத்மாக்களைப் பற்றியும், எவ்வாறு அவர்களினுள் பாகங்கள் பதியப்பட்டுள்ளன என்பதையும் அறிந்திருக்க வேண்டும். எவருக்குமே இது தெரியாது. 84 பிறவிகளுக்குப் பதிலாக, அவர்கள் 8.4 மில்லியன் பிறவிகளைப் பற்றிப் பேசுகிறார்கள். தந்தை வந்து, குழந்தைகளாகிய உங்களுக்கு அனைத்தையும் விளங்கப்படுத்துகிறார். இன்றைய பாரதம் எப்படி உள்ளது, நாளைய பாரதம் எப்படியிருக்கும்? மகாபாரத யுத்தமும் உள்ளது. கீதையின் ஞானம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவும் உருத்திரனின் யாகமேயாகும். சமயங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு, ஒரேயொரு தர்மம் ஸ்தாபிக்கப்படுகிறது. இது சிவபாபாவின் பண்டாரா (சமையலறை) ஆகும். இங்கே நீங்கள் தூய உணவைப் பெறுகின்றீர்கள். பிராமணர்களே இவ்வுணவைத் தயாரிக்கின்றனர். இதனாலேயே இதற்கு எல்லையற்ற புகழ் உள்ளது. நீங்கள் இதன் மூலம் தூய்மையாகி, தூய உலகின் அதிபதிகள் ஆகுவீர்கள். இதனாலேயே தூய உணவே மிகவும் சிறந்தது. நீங்கள் எந்தளவிற்கு அதிகமாக மேன்மையானவர்கள் ஆகுகின்றீர்களோ, அந்தளவிற்கு உங்களின் உணவு தூய்மையானதாக இருக்கும். யோகியுக்தாக உள்ள ஒருவர் உணவைத் தயாரித்தால், நீங்கள் பெருமளவு சக்தியைப் பெறுவீர்கள். நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும்பொழுது, அத்தகையவர்களைக் காண்பீர்கள். நிலையங்களில் வசிக்கின்ற சேவாதாரிக் குழந்தைகள் தாங்களாகவே உணவைத் தயாரித்து உண்ண வேண்டும். அப்பொழுதே அவர்களால் அதிலிருந்து பெருமளவு சக்தியைப் பெற முடியும். ஒரு விசுவாசமான, கீழ்ப்படிவான மனைவி தனது கணவனைத் தவிர வேறெவரையும் நினைவு செய்யாதது போன்று, குழந்தைகளாகிய நீங்களும் நினைவில் இருந்தவாறே உணவைத் தயாரித்து உண்பீர்களாயின், பெருமளவு சக்தியைப் பெறுவீர்கள். பாபாவின் நினைவில் நிலைத்து இருப்பதால், நீங்கள் உலக இராச்சியத்தைக் கோருகின்றீர்கள். பாபா உங்களுக்கு ஆலோசனை கூறுகிறார், எனினும், அது இன்னமும் எவருடைய புத்தியிலும் பதியவில்லை. நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும் பொழுது, உங்களில் சிலர் இவ்வாறு கூறுவது சாத்தியம்: அனைவரும் நன்மை பெறத்தக்க வகையில் நான் யோகியுக்தாக இருந்து உணவைத் தயாரிப்பேன். தந்தை குழந்தைகளான உங்களுக்கு அனைத்திற்கும் வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார். திரிமூர்த்தி படம் உங்கள் முன்னால் வைக்கப்பட வேண்டும். நீங்கள் சிவபாபாவிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைக் கோரவேண்டும். தொடர்ந்தும் ஏதோவொரு வழிமுறையை உருவாக்குங்கள். பாபா தனது சொந்த உதாரணத்தைக் கொடுக்கிறார். பக்தி மார்க்கத்தில், நாராயணனின் படத்தின் மீது எனக்குப் பெருமளவு அன்பு இருந்தது. அந்நேரத்தில் நான் உலகின் மீது விருப்பமின்மையைக் கொண்டிருந்ததால், அவரை நினைவு செய்யும்பொழுது கண்ணீர் சிந்துவேன். நான் எனது குழந்தைப் பருவத்தில் விருப்பமின்மைக்குரிய மனோநிலையைக் கொண்டிருந்தேன். இவை எல்லையற்ற விடயங்கள். இருந்த பொழுதிலும் பின்னர் உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது: மன்மனாபவ! யோகத்தில் நிலைத்து இருப்பதால் மாத்திரமே நீங்கள் தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகுவீர்கள். நினைவில் நிலைத்திருப்பதில் அக்கறை கொண்டிருங்கள். நீங்கள் ஸ்ரீமத்தைப் பெறுகின்றீர்கள். தந்தை கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள்! நானே உலகைப் படைப்பவர், எனவே நீங்களும் புதிய உலகின் அதிபதிகள் ஆகுவீர்கள். இல்லாவிடில் தண்டனையை அனுபவிப்பதுடன், அந்தஸ்தும் அழிக்கப்படும். குழந்தைகளாகிய நீங்கள் மரணிப்பதற்கு முன்னரே, எவ்வாறு சதோபிரதான் ஆகுவது என்பதில் அக்கறை கொண்டிருக்க வேண்டும். நீங்கள் நிச்சயமாகத் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். இதுவே அனைத்திலும் மிகப் பெரிய அக்கறை ஆகும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. யோகியுக்தாக இருந்து, நீங்கள் தயாரித்த உணவை உண்ணுங்கள். தூய உலகிற்குச் செல்வதற்கு, தூய உணவை மாத்திரமே உண்ணுங்கள். இதிலேயே சக்தி உள்ளது.

2. புதிய சரீரம், மனம், செல்வம் ஆகியவற்றைப் பெறுவதற்கு, உங்களிடமுள்ள பழையவை அனைத்தையும் தந்தையிடம் அர்ப்பணியுங்கள். உங்களின் சரீரம் உட்பட, உங்களை முழுமையாகத் தந்தையிடம் அர்ப்பணியுங்கள்.

ஆசீர்வாதம்:
ஏகாந்தத்தையும் அகநோக்கையும் பயிற்சி செய்வதன் மூலம் நீங்கள் உங்களை அனுபவத்தால் நிரப்பி, அதனால் மாயையை வென்றவர் ஆகுவீர்களாக.

சக்திவாய்ந்தவராகவும் ஞானம் நிறைந்தவராகவும் ஆகுவதற்கு, அதாவது, அனுபவத்தின் ரூபம் ஆகுவதற்கு, ஏகாந்தத்திலும் அகநோக்கிலும் இருங்கள். அனுபவக் குறைவே உங்களின் தளம்பலுக்கான காரணம். ஆகவே, புரிந்து கொண்டு மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துபவராக அல்லது கடைபவராக மட்டும் இருக்காமல், ஏகாந்தத்தில் இருந்து ஒவ்வொரு கருத்தையும் அனுபவம் செய்யுங்கள். அப்போது நீங்கள் எந்த வகையான ஏமாற்றுதல், துன்பம் அல்லது முரண்பாடுகளில் இருந்து பாதுகாக்கப்படுவீர்கள். நீங்கள் யாருடைய குழந்தை, உங்களின் பேறுகள் என்ன என்ற முதல் பாடத்தில் அனுபவசாலி ஆகினால், நீங்கள் இலகுவாக மாயையை வென்றவர் ஆகுவீர்கள்.

சுலோகம்:
தமது பொறுப்புக்களை நிறைவேற்றும்போது டபிள் லைற்றாக இருப்பவர்கள், தந்தைக்கு நெருக்கமான இரத்தினங்கள் ஆவார்கள்.

அவ்யக்த சமிக்ஞை: மற்றவர்களை ஈடேற்றும் மனப்பான்மையைக் கொண்டிருந்து, உங்களை இகழ்பவர்களையும் ஈடேற்றுங்கள்.

உங்களின் விழிப்புணர்வில் எப்போதும் மூன்று ரூபங்களை வைத்திருங்கள். 1) நான் மற்றவர்களை ஈடேற்றுபவன். 2) நான் அகங்காரம் அற்றவன். 3) என்னிடம் சகல உரிமைகளும் உள்ளன. மற்றவர்களை ஒருவர் எவ்வளவுதான் அவமதித்தாலும் உங்களின் பார்வையும் மனோபாவமும் எப்போதும் மற்றவர்களை ஈடேற்றுவதாகவே இருக்க வேண்டும். உங்களிடம் சகல உரிமைகளும் இருக்கும் அளவிற்கு ஏற்ப நீங்கள் அகங்காரம் அற்றவராக இருப்பீர்கள். உங்களின் மனோபாவத்தில் நான் என்ற உணர்வை நீங்கள் துறந்தால், உங்களின் விழிப்புணர்வில் எப்போதும் பாபாவையும் தாதாவையும் வைத்திருந்தால், உங்களின் உதடுகளில் இந்த வார்த்தைகளைக் கொண்டிருந்தால், உங்களால் உலக அதிபதியாகி உலகிற்கே சேவை செய்ய முடியும்.