30.11.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, மகன் தந்தையை வெளிப்படுத்துகிறார். உங்கள் மனதின் கட்டளைகளைப் பின்பற்றுவதைத் துறந்து, ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள். அப்பொழுது மாத்திரமே உங்களால் தந்தையை வெளிப்படுத்த முடியும்.

கேள்வி:
எக் குழந்தைகளைத் தந்தை நிச்சயமாகப் பாதுகாக்கின்றார்?

பதில்:
நேர்மையான குழந்தைகள் நிச்சயமாகப் பாதுகாக்கப்படுகிறார்கள். எவராவது பாதுகாக்கப்படவில்லையெனின், அவர்களுக்குள் நிச்சயமாக ஏதோ ஒரு வகையான பொய்மை உள்ளது. கல்வியைத் தவறவிடுதல் அல்லது சந்தேகங்களைக் கொண்டிருப்பது என்றால், அவருக்குள் பொய்மை உள்ளது என்பதே அதன் அர்த்தமாகும். அதன் பின்னர் அவர்களை மாயை இடறி விழச் செய்து விடுகின்றாள்.

கேள்வி:
எக் குழந்தைகளுக்கு மாயை ஒரு காந்தமாக இருக்கிறாள்?

பதில்:
மாயையின் அழகில் கவரப்படுகின்றவர்களுக்கே மாயை ஒரு காந்தம் போன்றவள். ஸ்ரீமத்தைப் பின்பற்றும் குழந்தைகள் கவரப்பட மாட்டார்கள்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்டுத்துகிறார். ஆன்மீகத் தந்தை, ஆன்மீகக் குழந்தைகளாகிய எங்களுக்குக் கற்பிக்கிறார் என்ற நம்பிக்கை குழந்தைகளாகிய உங்களுக்கு இருப்பதுடன், அது இவ்வாறாக நினைவுகூரப்படுகிறது: ஆத்மாக்கள் நீண்டகாலமாகப் பரமாத்மாவிடமிருந்து பிரிந்திருந்தார்கள். அசரீரி உலகில் அவர்கள் பிரிந்து இருக்க மாட்டார்கள். அங்கு அனைவரும் ஒன்றாக இருக்கிறார்கள். அவர்கள் பிரிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்றால், அவர்கள் தங்கள் சொந்தப் பாகங்களை நடிப்பதற்காக அங்கிருந்து வந்துள்ளார்கள் என்பதே நிச்சயமாக அதன் அர்த்தமாகும். சதோபிரதானாக இருந்த அவர்கள் தொடர்ந்து கீழிறங்கி, தமோபிரதான் ஆகுகிறார்கள். அவர்கள் அழைக்கிறார்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வந்து எங்களைத் தூய்மையாக்குங்கள்! தந்தையும் கூறுகிறார்: நான் 5000 வருடங்களுக்கு ஒருமுறை வருகிறேன். இந்த உலகச் சக்கரம் 5000 வருடங்களுக்கானது. முன்னர் நீங்கள் இதனை அறிந்திருக்கவில்லை. சிவபாபா விளங்கப்படுத்தும்போது நிச்சயமாக அவர் எவராவது ஒருவருடைய சரீரத்தின் மூலமாகவே விளங்கப்படுத்துவார். அவர் மேலே இருந்தவாறு, சத்தம் செய்வதில்லை. சக்தி அல்லது தூண்டுதல் என்ற கேள்விக்கே இடமில்லை. ஆத்மாக்களாகிய நீங்கள் ஒரு சரீரத்தில் பிரவேசித்து, பேசுகிறீர்கள். அதேபோன்று, தந்தை கூறுகிறார்: நானும் ஒரு சரீரத்தின் மூலம் வழிகாட்டல்களைக் கொடுக்கிறேன். பின்னர் அவர்கள் அவற்றை எந்தளவுக்குப் பின்பற்றுகிறார்களோ, அந்தளவுக்கு தத்தமக்கு நன்மை செய்கிறார்கள். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுகிறீர்களோ அல்லது இல்லையோ, நீங்கள் ஆசிரியரைச் செவிமடுக்கின்றீர்களோ அல்லது இல்லையோ, அதனால் நீங்கள் உங்களுக்கே ஒரு நன்மையை அல்லது இழப்பை ஏற்படுத்துகிறீர்கள். நீங்கள் கற்காவிட்டால், நிச்சயமாகச் சித்தியடைய மாட்டீர்கள். இவரும் விளங்கப்படுத்துகிறார்: நீங்கள் சிவபாபாவிடமிருந்து கற்று, பின்னர் பிறருக்குக் கற்பிக்க வேண்டும். தந்தை மகனை வெளிப்படுத்துகிறார். இது ஒரு லௌகீகத் தந்தையோடு சம்பந்தப்பட்டதல்ல. அவர் ஆன்மீகத் தந்தையாவார். நீங்கள் எந்தளவுக்கு அதிகமாக ஸ்ரீமத்தைப் பின்பற்றுகிறீர்களோ, அந்தளவுக்கு அதிகமாக நீங்கள் ஆஸ்தியைப் பெறுவீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். வழிகாட்டல்களை முற்றாகப் பின்பற்றுபவர்கள் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவார்கள். அவற்றைப் பின்பற்றாதவர்கள், ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெற மாட்டார்கள். தந்தை கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். இராவணனின் இராச்சியத்தில் நீங்கள் அதிகளவு பாவத்தைச் சேர்த்திருக்கிறீர்கள். நீங்கள் விகாரத்தில் ஈடுபடுவதால், மிகவும் பாவாத்மாக்கள் ஆகிவிட்டீர்கள். நிச்சயமாக, தூய, புண்ணியாத்மாக்களும், பாவாத்மாக்களும் இருக்கிறார்கள். பாவாத்மாக்கள் புண்ணியாத்மாக்களின் முன்னால் சென்று, தலை வணங்குகிறார்கள். புண்ணியாத்மாக்களான தேவர்கள் பின்னர் மறுபிறவி எடுத்து, பாவாத்மாக்கள் ஆகுகிறார்கள் என்பது மக்களுக்குத் தெரியாது. அவர்கள் (தேவர்கள்) எப்போதுமே புண்ணியாத்மாக்கள் என்றே அவர்கள் நம்புகிறார்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: மறுபிறவி எடுப்பதன் மூலம் அவர்கள் சதோபிரதான் ஸ்திதியிலிருந்து, தமோபிரதான் ஸ்திதிக்கு இறங்குகிறார்கள். அவர்கள் முற்றாகப் பாவாத்மாக்கள் ஆகும்போது தந்தையை அழைக்கிறார்கள். அவர்கள் புண்ணியாத்மாக்களாக இருக்கும்போது, நினைவுசெய்ய வேண்டிய தேவை இல்லை. ஆகவே குழந்தைகளாகிய நீங்கள் இதனை விளங்கப்படுத்துவதுடன், சேவை செய்யவும் வேண்டும். தந்தை சென்று, அனைவரிடமும் இதனைக் கூற மாட்டார். குழந்தைகளாகிய நீங்கள் சேவை செய்வதற்குத் தகுதியானவர்கள் என்பதால் நீங்கள் செல்ல வேண்டும். நாளுக்கு நாள், மக்கள் தொடர்ந்தும் அசுரர்கள் போன்றவர் ஆகுகின்றார்கள். அந்தளவிற்கு இனங்கண்டு கொள்ளாததால், குப்பைகளைப் பேசுவதற்கும் அவர்கள் தயங்குவதில்லை. கீதையின் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர் என்று மக்கள் கூறுகிறார்கள். அவர் ஒரு சரீரதாரி என்றும், ஒரு தேவர் என்று அழைக்கப்படுகிறார் என்றும் நீங்கள் விளங்கப்படுத்துகிறீர்கள். ஸ்ரீ கிருஷ்ணரைத் தந்தை என்று அழைக்க முடியாது. இங்கு அனைவரும் தந்தையை நினைவு செய்கிறார்கள். ஆத்மாக்களின் தந்தையாக வேறு எவரும் இருக்க முடியாது. இந்தப் பிரஜாபிதா பிரம்மாவும் கூறுகிறார்: நீங்கள் அசரீரியான தந்தையை நினைவுசெய்ய வேண்டும். இவர் சரீரத் தந்தையாவார். பெருமளவு விளங்கப்படுத்தப்படுகிறது. ஆனால், சிலர் முற்றாகப் புரிந்து கொள்ளாததால், அவர்கள் பிழையான பாதையில் காட்டிற்குச் செல்கிறார்கள். தந்தை சுவர்க்கத்திற்குச் செல்வதற்கான பாதையை உங்களுக்குக் காட்டுகிறார். அவ்வாறிருந்தும் சிலர் காட்டிற்குச் செல்கிறார்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: இராவணனே உங்களைக் காட்டிற்கு அழைத்துச் செல்கிறான். நீங்கள் மாயையால் தோற்கடிக்கப்படுகிறீர்கள். நீங்கள் பாதையை மறந்ததால், அக்காட்டின் முட்கள் ஆகுகின்றீர்கள். பின்னர் நீங்கள் சுவர்க்கத்திற்குச் செல்வீர்கள். நீங்கள் சுவர்க்கத்திற்குச் செல்வதற்கு முயற்சி செய்வதற்கே இங்கு வந்துள்ளீர்கள். திரேதாயுகத்தைச் சுவர்க்கம் என்று அழைக்க முடியாது. அது 25 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. அது தோல்விக்கான மதிப்பெண்ணாகவே கருதப்படுகின்றது. பழைய உலகை நீக்கி, புதிய உலகிற்குச் செல்வதற்கே நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள். திரேதாயுகத்தைப் புதிய உலகம் என அழைக்க முடியாது. சித்தியடையாதவர்களே அங்கு செல்கிறார்கள். ஏனெனில் அவர்கள் சரியான பாதையைப் பின்பற்றுவதில்லை. அவர்கள் தொடர்ந்தும் நிலைதடுமாறுகிறார்கள். நீங்கள் நினைவு செய்யவேண்டிய அளவுக்கு நினைவு செய்வதில்லை என்பதை நீங்கள் உணர்ந்துகொள்கிறீர்கள். சுவர்க்கவாசிகள் ஆகுபவர்கள் சிறந்த புள்ளிகளுடன் சித்தியடைபவர்கள் எனக் கூறப்படுகிறார்கள், திரேதாயுக வாசிகள் சித்தியடையாதவர்கள் என்று கருதப்படுகிறார்கள். நீங்கள் நரகவாசிகளிலிருந்து சுவர்க்கவாசிகள் ஆகுகிறீர்கள். அவ்வாறில்லாவிட்டால், சித்தியடையாதவர்கள் என்றே நீங்கள் அழைக்கப்படுவீர்கள். ஒரு லௌகீகக் கல்வியில், அவர்கள் மீண்டும் ஒரு வருடம் கற்கவேண்டும். இதில் மீண்டும் ஒரு வருடம் கற்பது என்ற கேள்விக்கே இடமில்லை. பிறவிபிறவியாக, கல்பம் கல்பமாக நீங்கள் முன்னைய கல்பத்தில் சித்தியடைந்த அதே பரீட்சையிலேயே சித்தியடைகிறீர்கள். இந்த நாடகத்தின் இரகசியங்களை மிகவும் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். சிலர் தங்களால் இங்கு தொடர்ந்தும் நீடிக்க முடியாது என்று நம்புகிறார்கள். சில முதியவர்கள் நடக்கும்போது, நீங்கள் அவர்களின் கரங்களைப் பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால், அவர்கள் விழுந்துவிடுவார்கள். எவ்வாறாயினும் அது அவர்களின் பாக்கியத்தில் இல்லாவிட்டால், அவர்கள் மலர்களாக வேண்டும் என்று நீங்கள் எவ்வளவுதான் வலியுறுத்திக் கூறினாலும் அவர்கள் அவ்வாறு ஆகுவதில்லை. ‘அக்’ மலரும் ஒரு மலரே. ஆனால் அந்த முட்கள் குத்துகின்றன. தந்தை உங்களுக்கு அதிகளவு விளங்கப்படுத்துகிறார். நீங்கள் நேற்று வணங்கிய சிவன், இன்று உங்களுக்குக் கற்பிக்கின்றார். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நீங்கள் முயற்சி செய்யவேண்டும் என்பதே வலியுறுத்தப்படுகிறது. மாயை மிக நல்ல மலர்களையும் விழச் செய்கிறாள் என்பது அவதானிக்கப்பட்டுள்ளது. அவள் அவர்களின் எலும்புகளை முற்றாக முறித்துவிடுகிறாள், அவர்கள் துரோகிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். ஓர் இராச்சியத்தை விட்டு நீங்கி, இன்னொன்றுக்குச் செல்பவர்கள் துரோகிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். தந்தை கூறுகிறார்: எனக்கு உரியவர்களாக இருந்து, பின்னர் மாயைக்கு உரியவர்களாக ஆகுபவர்களும் துரோகிகள் என்றே அழைக்கப்படுகிறார்கள். அவர்களின் செயற்பாடுகள் அவ்வாறு ஆகுகின்றன. உங்களை மாயையிடமிருந்து விடுவிப்பதற்காக, இப்போது தந்தை வந்துள்ளார். மாயை மிகவும் சக்தி நிறைந்தவள் என்றும், மாயை தங்களைத் தன் பக்கம் இழுக்கிறாள் என்றும் சில குழந்தைகள் கூறுகிறார்கள். மாயை ஒரு காந்தம் போன்றவள். இந்த நேரத்தில் அவள் ஒரு காந்தத்தின் வடிவத்தையே எடுக்கின்றாள். உலகின் அழகு இப்பொழுது மிகவும் அதிகரித்துள்ளது. முன்னர் அந்தத் திரைப்படங்கள் போன்றவை இருக்கவில்லை. அவ்விடயங்கள் அனைத்தும் கடந்த 100 வருடங்களிலேயே கண்டுபிடிக்கப்பட்டன. பாபா அனுபவம் நிறைந்தவர். ஆகவே குழந்தைகளாகிய நீங்கள் இந்த நாடகத்தின் ஆழமான இரகசியங்களை மிகவும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். அனைத்தும் மிகச்சரியாக நிச்சயிக்கப்பட்டுள்ளது. உங்களை எதிர்ப்பவர்களுக்கு இந்த இடம் கடந்த நூறு வருடங்களில் வைகுந்தம் போலாகியுள்ளது. சுவர்க்கம் இப்பொழுது விரைவில் வரும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது. விஞ்ஞானமும் மிகவும் பயன் நிறைந்தது. அது பெருமளவு சந்தோஷத்தைக் கொடுக்கிறது. அச் சந்தோஷம் நிரந்தரமாக இருப்பதற்கு, இப் பழைய உலகம் அழிக்கப்பட வேண்டும். சத்தியயுக சந்தோஷம் பாரதத்தின் பாக்கியத்தில் மாத்திரமே உள்ளது. ஏனையோர் பக்தி மார்க்கம் ஆரம்பமாகும் பொழுது, பின்னர் வருகிறார்கள். பாரத மக்கள் வீழும்போது, ஏனைய சமயத்தவர்களும் வரிசைக்கிரமமாகக் கீழிறங்குகிறார்கள். படிப்படியாக பாரதம் நிலத்தில் வீழ்ந்து விடுகிறது, பின்னர் அது மேலேற வேண்டும். இங்கும் நீங்கள் மேலேறி, பின்னர் கீழிறங்குகிறீர்கள். மக்கள் அதிகளவு வீழ்கிறார்கள், கேட்கவே வேண்டாம்! பாபா தங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதைச் சிலர் நம்புவதுமில்லை. தந்தை புகழ்கின்ற மிகச்சிறந்த சேவாதாரிக் குழந்தைகள்கூட மாயையின் பிடியில் அகப்பட்டு விடுகிறார்கள். மல்யுத்தம் நடைபெறுகிறது. மாயையும் அவ்வாறே சண்டை செய்கிறாள். அவள் உங்களுடன் மோதி, விழச் செய்கிறாள். குழந்தைகளாகிய நீங்கள் முன்னேறிச் செல்லும்போது, நீங்கள் தொடர்ந்தும் அனைத்தையும் அறிந்து கொள்வீர்கள். மாயை உங்களை நன்றாகத் தூங்கச் செய்கிறாள். இருந்தபோதும், தந்தை கூறுகிறார்: நீங்கள் ஞானத்தைச் செவிமடுத்திருந்தால், நிச்சயமாகச் சுவர்க்கத்திற்குச் செல்வீர்கள். எவ்வாறாயினும், உங்களால் ஓர் அந்தஸ்தைப் பெற முடியாதிருக்கும். ஒவ்வொருவரும் முன்னைய கல்பத்தில் எவ்வாறான முயற்சியைச் செய்தார்களோ அல்லது முயற்சி செய்யும்போது அவர்கள் வீழ்ந்தார்களோ, அவ்வாறே அவர்கள் இப்பொழுதும் மேலேறி, கீழிறங்குவார்கள். வெற்றியும், தோல்வியும் உள்ளன. குழந்தைகளுக்கான அனைத்தும் அவர்களின் நினைவிலேயே தங்கியுள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் இந்த எல்லையற்ற பொக்கிஷங்களைப் பெறுகிறீர்கள். அம்மக்கள் ஏழைகளாகி, நூறாயிரங்களை இழக்கிறார்கள். சிலர் நூறாயிரங்களுடன் செல்வந்தர்கள் ஆகுகிறார்கள், ஆனால் அதுவும் ஒரு பிறவிக்கு மாத்திரமே. அவர்களின் அடுத்த பிறவியில் அந்த செல்வங்கள் அனைத்தையும் கொண்டிருக்க மாட்டார்கள். பெருமளவுக்குக் கர்ம வேதனையும் உள்ளது. அங்கு சுவர்க்கத்தில், உங்களின் கர்மாவிற்கான வேதனை என்ற கேள்விக்கே இடமில்லை. இந்த நேரத்தில் நீங்கள் உங்களின் 21 பிறவிகளுக்கு அதிகளவு சேகரிக்கிறீர்கள். முழு முயற்சி செய்பவர்கள் சுவர்க்கம் என்ற முழு ஆஸ்தியையும் பெறுகிறார்கள். நீங்கள் சுவர்க்கம் என்ற ஆஸ்தியை உண்மையில் பெறுகிறீர்கள் என்பது உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். நீங்கள் மீண்டும் வீழ்வதை எண்ணக்கூடாது. நீங்கள் அதிகளவு கீழிறங்கிவிட்டீர்கள். இப்பொழுது நீங்கள் மீண்டும் மேலேற வேண்டும். முயற்சியும் தொடர்ந்து இயல்பாக இடம்பெறுகிறது. தந்தை விளங்கப்படுத்துகிறார்: மாயை எவ்வளவு சக்தி நிறைந்தவள் என்று பாருங்கள்! மனிதர்களுக்கு அதிகளவு அறியாமை உள்ளது. அந்த அறியாமையினால், அவர்கள் தந்தையைச் சர்வவியாபி என்று கூறுகிறார்கள். பாரதம் மிகவும் முதல் தரமானதாக இருந்தது! நீங்கள் அவ்வாறு இருந்தீர்கள் என்பதையும், மீண்டும் ஒருமுறை நீங்கள் அவ்வாறு ஆகுகிறீர்கள் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இத் தேவர்களின் புகழ் அதிகளவுக்கு உள்ளது. ஆனால், குழந்தைகளாகிய உங்களைத் தவிர, வேறு எவரும், அவர்களைப் பற்றி அறிந்ததில்லை. ஞானக்கடலான, எல்லையற்ற தந்தை, வந்து எங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பது உங்களுக்கு மாத்திரமே தெரியும். அப்போதுகூட மாயை பலரில் சந்தேகம் எழச் செய்கிறாள். பின்னர் அவர்கள் பொய் கூறுவதையும், ஏமாற்றுவதையும் நிறுத்துவதில்லை. இதனாலேயே தந்தை கூறுகிறார்: உங்களுடைய அட்டவணையை நேர்மையுடன் எழுதுங்கள். எவ்வாறாயினும், சரீர உணர்வு காரணமாக சிலர் உண்மையைக் கூறுவதில்லை. ஆகவே அதுவும் ஒரு பாவமாகி விடுகிறது. எவரும் உண்மையைக் கூறவேண்டும். இல்லாவிட்டால் அதிகளவு தண்டனை கிடைக்கும். ஒரு கருப்பை என்னும் சிறையில் பெரும் தண்டனை பெறப்படுகிறது. அவர்கள் இனிமேல் அவ்வாறான செயல்களைச் செய்ய மாட்டோமென்று விரக்தியில் கதறி அழுகிறார்கள். அது எவரோ அடித்துத் துன்புறுத்துவது போன்று உள்ளது. அவர் தொடர்ந்தும் மன்னிப்புக் கேட்கிறார். தண்டனை பெற்ற பின்னரும் அவர்கள் தொடர்ந்தும் அதனையே செய்கிறார்கள். மாயையின் இராச்சியம் எப்போது ஆரம்பமாகியது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்போது புரிந்துகொள்கிறீர்கள். அவர்கள் தொடர்ந்தும் பாவம் செய்கிறார்கள். நீங்கள் மிகவும் இனிமையானவர்களாக அல்லது மென்மையானவர்களாகவும், சாந்தமானவர்களாகவும் ஆகவில்லை என்பதைத் தந்தை பார்க்கிறார். மிகவும் மென்மையானவராகவும், ஒரு குழந்தை போன்று சாந்தமானவராகவும் தந்தை இருக்கிறார். நாடகத்திற்கேற்ப, அவர் தொடர்வதால், அவர் கூறுகிறார்: நடந்தவை அனைத்தும் நாடகத்தின் நியதி ஆகும். எதிர்காலத்திலும் அவ்வாறு நடக்கக்கூடாது என்பதையும் அவர் விளங்கப்படுத்துகிறார். இங்கு, பாபா, தாதா இருவரும் இணைந்து இருக்கிறார்கள். தாதாவின் வழிகாட்டல்கள் அவருடைய சொந்த வழிகாட்டல்கள் ஆகும். கடவுளின் வழிகாட்டல்கள் கடவுளினுடையதாகும். உங்களுக்கு இந்த வழிகாட்டல்களைக் கொடுப்பவர் யார் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இவரும் ஒரு தந்தையாவார், இல்லையா? நீங்கள் தந்தை கூறுவனவற்றைக் கேட்கவேண்டும். பாபாவே மூத்த பாபா ஆவார், இதனாலேயே பாபா கூறுகிறார்: சிவபாபாவே உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார் என எப்போதும் எண்ணுங்கள். நீங்கள் இதனைப் புரிந்து கொள்ளவில்லை என்றால், உங்களால் ஓர் அந்தஸ்தைப் பெறமுடியாது. நாடகத்திட்டத்தின்படி, தந்தையும், தாதாவும் இருக்கிறார்கள். நீங்கள் தந்தையின் ஸ்ரீமத்தைப் பெறுகின்றீர்கள். மாயை, மிகவும் உறுதியான மகாவீரர்களைக் கூட தவறான செயல்களைச் செய்ய வைக்கிறாள். அவர் தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்றாதவர் என்பது அப்போது புரிந்துகொள்ளப்படுகிறது. தாங்கள் தங்களுடைய சொந்த அசுர வழிகாட்டல்களைப் பின்பற்றுகிறார்கள் என்பதை அவர்கள் உணர்கிறார்கள். உங்களுக்கு ஸ்ரீமத்தைக் கொடுப்பவர் இப்போது இங்கு பிரசன்னமாகி இருக்கிறார். அவருடைய வழிகாட்டல்கள் கடவுளின் வழிகாட்டல்களாகும். தந்தையே கூறுகிறார்: இவரிடமிருந்து நீங்கள் அவ்வாறான (தவறான) வழிகாட்டல்களைப் பெற்றால், அப்பொழுது அதனைச் சரிசெய்வதற்கு நான் இங்கு அமர்ந்திருக்கிறேன். நான் அவரின் இரதத்தைப் பெற்றுள்ளேன். நான் அவரின் இரதத்தைப் பெற்றதால், அவர் அவதூறு செய்யப்பட்டார். இல்லாவிட்டால், முன்னர் ஒருபோதும் அவர் அவதூறு செய்யப்படவில்லை. எனக்காக அவர் அதிகளவு அவதூறு செய்யப்பட்டார். ஆகவே நான் அவரைக் கவனித்துக் கொள்ளவும் வேண்டும். ஒரு (லௌகீக) தந்தை தனது குழந்தைகளைக் காப்பாற்றுவது போன்று, நிச்சயமாகத் தந்தையும் அவரைப் பாதுகாப்பார். நீங்கள் எந்தளவுக்கு அதிகமாக நேர்மையாக இருக்கின்றீர்களோ, அந்தளவுக்கு அதிகமாக நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள். போலியானவர்கள் காப்பாற்றப்பட மாட்டார்கள். அவர்களுக்கான தண்டனை சதா காலத்திலும் நிச்சயிக்கப்பட்டதாகும். இதனாலேயே தந்தை கூறுகிறார்: மாயை உங்கள் மூக்கில் பிடித்து, உங்களை முற்றாக முடித்துவிடுகிறாள். மாயை தங்களை விழுங்கிவிடுவதாக சில குழந்தைகள் தாங்களாகவே உணர்கிறார்கள், ஆகவே அவர்கள் கற்பதை நிறுத்துகிறார்கள். தந்தை கூறுகிறார்: நிச்சயமாகக் கற்கவேண்டும்! நல்லது. எதற்காகவாவது எவராவது குற்றம் சாட்டப்பட்டால், நினைவு செய்யுங்கள்: ஒவ்வொருவரும் செய்கின்றவற்றின் பலனை எதிர்காலத்தில் பெறுவார்கள், ஏனெனில் உலகம் இப்போது மாறிக்கொண்டு இருக்கிறது. நீங்கள் அந்தச் சந்தோஷத்தைக் கொண்டிருக்காத அளவுக்கு மாயை உங்களை இடறி விழச் செய்கிறாள். பின்னர் நீங்கள் கதறி அழுகிறீர்கள்: பாபா, என்ன நடக்கின்றது என்று எனக்குத் தெரியவில்லை! எவரும் உங்களை இடறிவிழச் செய்யாத அளவிற்கு போர்க்களம் ஒன்றில் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். எவ்வாறிருந்தபோதும், பெரும் பலத்தைக் கொண்டவர்கள், பலவீனமானவர்களை விழச்செய்கிறார்கள். பின்னர் அவர்கள் அதனை மறுநாளும் தொடர்ந்து செய்கிறார்கள். மாயையுடனான இந்த யுத்தம் இறுதிவரை தொடரும். அவர்கள் தொடர்ந்தும் தளம்பல் அடைகிறார்கள். சில குழந்தைகள் உண்மையைக் கூறுவதில்லை. தாங்கள் தங்கள் கௌரவத்தை இழந்துவிடுவார்கள் என்ற பயம் அவர்களுக்குப் பெருமளவு உள்ளதால், அவர்கள் எண்ணுகிறார்கள்: “பாபா என்ன கூறுவார்?” உண்மையைக் கூறாதவரை உங்களால் முன்னேற முடியாது. அது தொடர்ந்தும் உள்ளே உங்கள் மனச்சாட்சியை உறுத்துவதுடன், அது பின்னர் அதிகரிக்கிறது. சிலர் ஒருபொழுதும் தாங்களாகவே உண்மையைக் கூறுவதில்லை. சில சமயங்களில் இருவர் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள். மற்றவர் பாபாவிற்கு அதனைக் கூறுவார் என்று நீங்கள் உணர்வதால், நீங்களாகவே சென்று பாபாவிற்குக் கூறுவீர்கள். மாயை மிகவும் சக்தி நிறைந்தவள். உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறும் பாக்கியம் அவர்களுக்கு இல்லாதால் அவர்கள் சத்திரசிகிச்சை நிபுணரிடமிருந்து எவற்றையாவது மறைக்கிறார்கள் என்பது பின்னர் புரிந்துகொள்ளப்படுகிறது. நீங்கள் அதனை மறைப்பதால், நோய் நீக்கப்பட மாட்டாது. எந்தளவுக்கு அதிகமாக நீங்கள் அதை மறைக்கின்றீர்களோ, அந்தளவுக்கு அதிகமாகத் தொடர்ந்தும் நீங்கள் வீழ்வீர்கள். அனைவரிலும் தீய ஆவிகள் உள்ளன. நீங்கள் உங்கள் கர்மாதீத ஸ்திதியை அடையும்வரை தவறான பார்வை உங்களைத் தனியே விட்டுவிடாது. காமமே கொடிய எதிரியாகும். பலர் விழுகிறார்கள். பாபா மீண்டும் மீண்டும் விளங்கப்படுத்துகிறார்: நீங்கள் சிவபாபாவைத் தவிர, வேறு எச்சரீரதாரிகளையும் நினைவு செய்யக்கூடாது. ஒருபொழுதும் வேறு எவரையும் நினைவு செய்யாதிருப்பதில் சிலர் மிகவும் உறுதியாக இருக்கிறார்கள். மிகவும் விசுவாசம் நிறைந்த ஒரு மனைவி தூய்மையற்ற புத்தியைக் கொண்டிருக்க மாட்டார். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளான உங்களுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. ஞானக்கடலான, எல்லையற்ற தந்தையே எங்களுக்குக் கற்பிக்கின்றார். ஒருபொழுதும் இதைப் பற்றி எச்சந்தேகமும் கொண்டிருக்காதீர்கள். பொய் சொல்வதையும் ஏமாற்றுவதையும் துறந்து, உங்கள் அட்டவணையை நேர்மையுடன் வைத்திருங்கள். என்றுமே சரீர உணர்வுடையவராகவோ அல்லது ஒரு துரோகியாகவோ ஆகாதீர்கள்.

2. நாடகத்தை உங்கள் புத்தியில் வைத்திருந்து, தந்தையைப் போன்று மிகவும் இனிமையானவராகவும் மென்மையானவர்களாகவும் (பணிவானவர்) ஆகுங்கள். உங்கள் அகங்காரத்தை வெளிப்படுத்தாதீர்கள். உங்கள் சொந்தக் கட்டளைகளைப் பின்பற்றுவதை நிறுத்தி, ஒரேயொரு தந்தையின் மேன்மையான வழிகாட்டல்களைப் பின்பற்றுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரேயொரு தந்தையின் அன்பில் திளைத்தவர்களாகி, அதனால் சகல கவர்ச்சிகளில் இருந்தும் விடுபட்டு, உங்களின் இலக்கைச் சென்று அடைவீர்களாக.

பாப்தாதா குழந்தைகளான உங்களைத் தனது அன்பு மற்றும் ஒத்துழைப்பு என்ற மடியில் இருத்தி, உங்களின் இலக்கை நோக்கி அழைத்துச் செல்கிறார். இது சிரமப்படுவதற்கான பாதை அல்ல. ஆனால், நெடுஞ்சாலையில் செல்வதற்குப் பதிலாக, கிளை வீதிகளால் சிலர் செல்லும்போது, அவர்கள் தமது இலக்கை விட்டு மேலும் தூரச் செல்கிறார்கள். அப்போது திரும்பி வருவதற்காக அவர்கள் நிச்சயமாக முயற்சி செய்ய வேண்டியிருக்கும். சிரமப்படுவதில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறை, ஒரேயொருவரின் அன்பிலே திளைத்திருப்பதே ஆகும். ஒரேயொரு தந்தையின் அன்பிலே திளைத்திருந்தவண்ணம் எல்லாவற்றையும் செய்யுங்கள். நீங்கள் வேறு எதையும் பார்க்க மாட்டீர்கள். நீங்கள் சகல கவர்ச்சிகளில் இருந்தும் விடுபடுவீர்கள்.

சுலோகம்:
உங்களின் முகத்தாலும் செயல்பாடுகளாலும் உங்களின் சந்தோஷ பாக்கியத்தின் அனுபவத்தைக் கொடுங்கள்.