31.03.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது பழைய உலகத்தின் வாசலினூடாக வெளியேறி, அமைதி தாமத்தினுள்ளும், சந்தோஷ தாமத்தினுள்ளும் பிரவேசிக்கிறீர்கள். தந்தை மாத்திரமே உங்களுக்கு முக்திக்கும் ஜீவன்முக்திக்குமான பாதையைக் காட்டுகிறார்.

கேள்வி:
தற்பொழுது அதி சிறந்த கர்மா எது?

பதில்:
உங்கள் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களில் குருடர்களுக்கான கைத்தடி ஆகுவதே அதிசிறந்த கர்மா ஆகும். மக்களால் வீட்டுக்கும் (முக்திக்கான), ஜீவன்முக்தி தாமத்துக்குமான பாதையைக் கண்டடையக் கூடிய வகையிலும், அமைதிக்கும் சந்தோஷத்துக்குமான பாதை இங்கே காண்பிக்கப்படுகிறது என்பதை மனிதர்களால் இலகுவில் புரிந்துகொள்ளக் கூடிய வகையிலும் எந்த வார்த்தைகள் எழுதப்பட வேண்டும் என்பதையிட்டுக் குழந்தைகளாகிய நீங்கள் ஞானக்கடலைக் கடைய வேண்டும்.

ஓம் சாந்தி.
நீங்கள் மந்திரவாதியின் விளக்கைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளீர்களா? அலாவுதீனின் விளக்கும் நினைவுகூரப்பட்டு வருகிறது. அலாவுதீனின் விளக்கு அல்லது மந்திரவாதியின் விளக்கு உங்களுக்குக் காட்டுவது எது? அது சந்தோஷ தாமமாகிய, சுவர்க்கமாகிய, வைகுந்தத்தைக் காட்டுகிறது. ஒரு விளக்கு ஒளி என்று அழைக்கப்படுகிறது. தற்பொழுது, இருளே உள்ளது. அனைவருக்கும் ஒளியைக் காட்டுவதற்கே இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் விழாக்களையும் கண்காட்சிகளையும் நடாத்துகிறீர்கள். நீங்கள் அதிகளவில் பணத்தைச் செலவழிப்பதுடன் பெரும் பிரயத்தனமும் செய்கிறீர்கள். நீங்கள் வினவுகிறீர்கள்: பாபா, நாங்கள் அதை என்னவென்று அழைப்போம்? பம்பாய் “இந்தியாவின் நுழைவாசல்” என்று அழைக்கப்படுகிறது. நீராவிக்கப்பல்கள் முதலில் பம்பாயிலேயே தரிக்கின்றன. டெல்லியிலும், “இந்தியாவின் வாசல்” உள்ளது. இங்கு இது எங்கள் முக்திக்கும் ஜீவன்முக்திக்குமான வாசல் ஆகும். இரண்டு வாசல்கள் உள்ளன. எப்பொழுதும் உட்செல்ல, வெளிச்செல்ல என்று இரண்டு வாசல்கள் உள்ளன. ஒன்று உள்ளே வருவதற்கும் மற்றையது வெளியே செல்வதற்குமாக உள்ளன. இங்கும் அதேபோன்றே உள்ளது. நாங்கள் புதிய உலகினுள் வந்து, பின்னர் பழைய உலகலிருந்து வெளியேறி, அதன்பின்னர் எங்கள் வீட்டுக்குத் திரும்பிச் செல்கிறோம். எவ்வாறாயினும், எங்கள் வீட்டை நாங்கள் மறந்து விட்டதால், நாங்களாகவே எங்கள் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல முடியாமல் உள்ளது. வழிகாட்டி தேவைப்படுகிறார். நாங்கள் அவரைக் கண்டடைந்து விட்டோம், அவர் எங்களுக்குப் பாதையைக் காட்டுகிறார். முக்திக்கும் ஜீவன்முக்திக்குமான அதாவது அமைதிக்கும் சந்தோஷத்திற்குமான பாதையை பாபா உங்களுக்குக் காட்டுகிறார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். ஆகவே, நீங்கள் எழுத வேண்டும்: அமைதி தாமத்துக்கும் சந்தோஷ தாமத்துக்குமான வாசல். நீங்கள் இதைக் கடைய வேண்டும். முக்தி என்றால் என்ன, ஜீவன்முக்தி என்றால் என்ன என்பதைப் பற்றிப் பல எண்ணங்கள் உள்ளன. இவை யாவை என்பதை எவரும் அறிய மாட்டார்கள். அனைவரும் அமைதியையும் சந்தோஷத்தையும் வேண்டுகிறார்கள். அமைதியும் அத்துடன் செல்வமும் செழிப்பும் இருக்க வேண்டும். இவை சத்தியயுகத்தில் மாத்திரமே இருக்கின்றன. ஆகவே, “சாந்தி தாமத்துக்கும் சுக தாமத்துக்குமான வாசல்” என எழுதப்பட வேண்டும், இல்லாவிட்டால், “தூய்மை, அமைதி, செழிப்புக்கான வாசல்” என எழுதப்பட வேண்டும். இவ்வார்த்தைகள் சிறந்தவை ஆகும். இங்கு இந்த மூன்று விடயங்களும் இல்லை. ஆகவே, இவை அனைத்தும் புதிய உலகில் இருந்தன என்பது விளங்கப்படுத்தப்பட வேண்டும். தூய்மை ஆக்குபவராகிய, தந்தையாகிய, கடவுளே புதிய உலகை ஸ்தாபிப்பவர் ஆவார். ஆகவே, நிச்சயமாக நாங்கள் இப்பழைய உலகை நீங்கி வீடு திரும்ப வேண்டும். ஆகவே, இதுவே தூய்மை, அமைதி, செழிப்புக்கான வாசல் ஆகும். பாபா இப்பெயரை விரும்புகிறார். உண்மையில், சிவபாபாவே திறப்பு விழாவைச் செய்தாலும், அவர் அதைப் பிராமணர்களாகிய எங்களினூடாகவே செய்கிறார். உலகில் பல திறப்புவிழாக்கள் உள்ளன. சிலது வைத்தியசாலைகளைத் திறப்பதற்கும் சிலது பல்கலைக்கழகங்களைத் திறப்பதற்கும் உரியவை. ஆனால் இந்த அங்குரார்ப்பண வைபவம், ஒருமுறையே, இவ்வேளையில் மாத்திரமே இடம்பெறுகின்றது. இதனாலேயே இதற்காகப் பெருமளவு சிந்திக்க வேண்டியுள்ளது. சில குழந்தைகள் எழுதியுள்ளார்கள்: பிரம்மா பாபா வந்து இதை அங்குரார்ப்பணம் செய்ய வேண்டும். பாப், தாதா இருவரையும் நாங்கள் அழைக்க வேண்டும். தந்தை என்னிடம் கூறுகிறார்: வெளியே எங்கும் செல்ல உங்களுக்கு அனுமதியில்லை. நான் சென்று அதனை அங்குரார்ப்பணம் செய்வதற்கு மனச்சாட்சி என்னை அனுமதிப்பதில்லை, நான் செல்வதற்கு நியதியும் இடமளிப்பதில்லை. அதை எவரும் அங்குரார்ப்பணம் செய்யலாம். செய்தித்தாள்களில் பிரசுரிக்கப்படும்: பிரஜாபிதா பிரம்மா குமார்களும் குமாரிகளும். இப்பெயர் சிறந்ததாகும். பிரஜாபிதா என்றால் அனைவரினதும் தந்தை என்பதாகும். அவர் குறைந்தவர் அல்லர். தந்தையே இந்த விழாவைச் செய்கிறார். அவர் கரன்கராவன்கார் ஆவார். நீங்கள் சுவர்க்கத்தை ஸ்தாபிக்கிறீர்கள் என்பது உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். ஆகவே, நீங்கள் அதிகளவு முயற்சி செய்து, ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். தற்பொழுது, உங்கள் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களினூடாக ஒரேயொரு அதிசிறந்த கர்மாவே செய்யப்பட வேண்டும், அது குருடர்களுக்குக் கைத்தடி ஆகுவதே ஆகும். மக்களும் கூறுகிறார்கள்: ஓ கடவுளே! குருடர்களுக்கு ஒரு கைத்தடியைக் கொடுங்கள்! அனைவரும் குருடர்கள் ஆவர். ஆகவே, தந்தை வந்து அந்தக் கைத்தடியாக ஆகுகிறார். அவர் ஞானமாகிய மூன்றாம் கண்ணைக் கொடுக்கிறார், அதனூடாக நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப, வரிசைக்கிரமமாகச் சுவர்க்கம் செல்கிறீர்கள். அது வரிசைக்கிரமமானது. இது ஒரு மிகப்பெரிய வைத்தியசாலை இணைந்த பல்கலைக்கழகம் ஆகும். தூய்மை ஆக்குபவராகிய, பரமாத்மாவாகிய பரமதந்தையே ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தை என்பது விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. அந்தத் தந்தையை நினைவு செய்யுங்கள், நீங்கள் சந்தோஷ தாமம் செல்வீர்கள். இது நரகம், இதைச் சுவர்க்கம் என்று அழைக்க முடியாது. சுவர்க்கத்தில் ஒரேயொரு தர்மம் மாத்திரமே உள்ளது. பாரதம் சுவர்க்கமாக இருந்தபொழுது, அங்கு வேறெந்தச் சமயங்களும் இருக்கவில்லை. இதை நினைவு செய்வது என்றால், மன்மனாபவவாக இருப்பது என்று அர்த்தம். சுவர்க்கத்தில், நாங்கள் முழு உலகினதும் அதிபதிகளாக இருந்தோம். நீங்கள் இதையேனும் நினைவு செய்வதில்லை. நீங்கள் தந்தையைக் கண்டடைந்து விட்டீர்கள் என்பது உங்கள் புத்தியில் உள்ளது. ஆகவே, அதன் சந்தோஷம் உங்களுக்கு இருக்க வேண்டும். எவ்வாறாயினும், மாயை குறைந்தவள் அல்லள். அத்தகையதொரு தந்தைக்கு உரியவராகிய பின்னரும், உங்களால் அந்தளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க முடியாமல் உள்ளது. நீங்கள் தொடர்ந்தும் மூச்சுத் திணறுகிறீர்கள். மாயை உங்களை மீண்டும் மீண்டும் மூச்சுத் திணறச் செய்கிறாள். அவள் நீங்கள் சிவபாபாவின் நினைவைக் கொண்டிருப்பதை மறக்கச் செய்கிறாள். பின்னர் நீங்கள் கூறுகிறீர்கள்: என்னால் நினைவில் நிலைத்திருக்க முடியாமல் உள்ளது. தந்தை ஞானக்கடலில் உங்களை ஆழமாக மூழ்க வைக்கிறார், மாயையோ உங்களை நச்சுக்கடலில் தத்தளிக்க வைக்கிறாள். சிலர் பெரும் சந்தோஷத்தில் தத்தளிக்கிறார்கள். தந்தை கூறுகிறார்: சிவபாபாவை நினைவு செய்யுங்கள். எவ்வாறாயினும், மாயை அவர்களை மறக்க வைக்கிறாள். அவர்கள் தந்தையின் நினைவைக் கொண்டிருப்பதில்லை. அவர்கள் தந்தையையும் அறியார்கள். பரமாத்மாவாகிய பரமதந்தை மாத்திரமே துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அருள்பவர் ஆவார். அவரே எங்கள் துன்பம் அனைத்தையும் முடிப்பவர் ஆவார். மக்கள் கங்கையைத் தூய்மையாக்குபவர் என்று கருதுவதால், கங்கையில் நீராடச் செல்கிறார்கள். சத்தியயுகத்தில், கங்கை உங்கள் துன்பத்தை அகற்றுகிறது அல்லது உங்கள் பாவங்களை அழிக்கிறது என்று நீங்கள் கூற மாட்டீர்கள். சாதுக்கள், புனிதர்கள் போன்றோர்கள் அனைவரும் சென்று, ஓர் ஆற்றங்கரையில் அமர்கிறார்கள். ஏன் அவர்கள் கடற்கரையில் அமர்வதில்லை? இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் கடற்கரையில் அமர்ந்திருக்கிறீர்கள். பல குழந்தைகள் கடலுக்கு வருகிறார்கள். இந்த சிறிய, பெரிய ஆறுகள் கடலிலிருந்து வெளித்தோன்றுகின்றன என்பது புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. “பிரம்மபுத்திரா”, “சிந்து சரஸ்வதி” என்னும் பெயர்கள் அவற்றுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. தந்தை விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளே, உங்கள் எண்ணங்களிலும், வார்த்தைகளிலும், செயல்களிலும் நீங்கள் பெருமளவு கவனம் செலுத்த வேண்டும். ஒருபொழுதும் கோபம் அடையாதீர்கள். கோபம் முதலில் மனதிலும் பின்னர் வார்த்தைகளிலும் செயல்களிலும் எழுகிறது. இவையே மூன்று ஜன்னல்கள் ஆகும். இதனாலேயே தந்தை விளங்கப்படுத்துகிறார்: இனிய குழந்தைகளே, தேவையின்றிப் பேசாதீர்கள். மௌனத்தில் நிலைத்திருங்கள். ஏதாவது வார்த்தைகளில் வெளிப்படும்பொழுது, அது உங்கள் செயல்களிலும் வெளிப்படும். கோபம் முதலில் மனதில் வெளிப்பட்டு, பின்னர் வார்த்தைகளிலும் செயல்களிலும் வெளிப்படுகிறது. அது மூன்று ஜன்னல்களாலும் வெளிப்படுகிறது. அது முதலில் மனத்தில் பிரவேசிக்கும். உலக மக்கள் தொடர்ந்தும் ஒருவருக்கு ஒருவர் துன்பத்தை விளைவிக்கிறார்கள்; அவர்கள் தொடர்ந்தும் சண்டை இடுகிறார்கள். நீங்கள் எவருக்கும் துன்பத்தை விளைவிக்கக் கூடாது. நீங்கள் அந்த எண்ணத்தைக் கூடக் கொண்டிருக்கக் கூடாது. மௌனத்தில் இருப்பது மிகவும் சிறந்ததாகும். தந்தை வந்து சுவர்க்க வாசலை, அதாவது, அமைதிக்கும் சந்தோஷத்துக்குமான வாசலைத் திறக்கிறார். அவர் மாத்திரமே இதைக் குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகிறார். அவர் குழந்தைகளாகிய உங்களை ஏனையோருக்குக் கூறுமாறும் கூறுகிறார். சுவர்க்கத்தில் மாத்திரமே தூய்மையும், அமைதியும், செழிப்பும் உள்ளன. நீங்கள் எவ்வாறு அங்கு செல்ல முடியும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். மகாபாரத யுத்தமும் வாசலைத் திறக்கிறது. எப்பெயர் கொடுக்கப்பட வேண்டும் என்பதைப் பற்றி பாபா தொடர்ந்தும்; ஞானக்கடலைக் கடைகிறார். காலையில் இந்த ஞானக்கடலைக் கடைவதால், உங்களால் வெண்ணையைப் பிரித்தெடுக்க இயலும். சிறந்த ஆலோசனைகள் வெளிப்படுகின்றன. இதனாலேயே பாபா கூறுகிறார்: காலையில் எழுந்து தந்தையை நினைவுசெய்து, எப்பெயரைக் கொடுக்க வேண்டும் என்பதைப் பற்றி ஞானக்கடலைக் கடையுங்கள். இதைப் பற்றிச் சிந்தியுங்கள். உங்களிற் சிலரால் சிறந்த எண்ணக் கருத்துக்களைக் கூற முடியும். ஒரு தூய்மையற்ற நபரைத் தூய்மையானவராக மாற்றுவது எனில், அவரை நரகவாசியில் இருந்து சுவர்க்கவாசியாக மாற்றுவதாகும் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். தேவர்கள் தூய்மையானவர்கள். இதனாலேயே மக்கள் அவர்கள் முன்னிலையில் தலை வணங்குகிறார்கள். நீங்கள் இப்பொழுது எவரையாவது வணங்குவது நியதிகளுக்கு எதிராக இருந்தாலும், நீங்கள் தொடர்ந்தும் சாதுரியமாகச் செயற்பட வேண்டும். சாதுக்கள் தங்களை உயர்ந்தவர்களாகவும் புனிதம் ஆனவர்களாகவும், ஏனைய அனைவரையும் தூய்மை அற்றவர்களாகவும் சீரழிந்தவர்களாகவும் கருதுகிறார்கள். நீங்களே அதிமேன்மையானவர்கள் என்று நீங்கள் அறிந்திருந்தாலும் கூட, ஒருவர் உங்களைக் கரங்குவித்து வணங்கும் பொழுது, நீங்கள் அவருக்குப் பதில் வணக்கம் செய்ய வேண்டும். அவர்கள் உங்களை எவ்விதமாக வணங்குகிறார்களோ, நீங்கள் அதேவிதமாகப் பதிலுக்கு வணக்கம் செலுத்த வேண்டும். நீங்கள் அவர்களுடன் சாதுரியமாக நடந்து கொள்ளாவிடின், உங்களால் அவர்களைப் பிடிக்க முடியாமல் போய்விடும். உங்களுக்குப் பல சாதுரியங்கள் தேவைப்படுகின்றன. மக்களின் தலைகளின் மேலே மரணம் நிற்கும்பொழுது. அவர்கள் அனைவரும் கடவுளை நினைவு செய்கிறார்கள். இந்நாட்களில், எதிர்பாராமலேயே பல விடயங்கள் தொடர்ந்தும் நடைபெறும். படிப்படியாக தீ பரவும். தீ வெளிநாட்டில் ஆரம்பித்துப் பின்னர் படிப்படியாக முழு உலகமும் எரிக்கப்படும். இறுதியில், குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இருப்பீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையாக்கப்பட்டுப் பின்னர் புதிய உலகைப் பெறுவீர்கள். உலகத்துக்காகக் குழந்தைகளாகிய நீங்கள் புதிய கருத்துக்களைப் பெறுவீர்கள். அங்கு நீங்கள் ஆட்சி செய்வீர்கள். அலாவுதீனின் விளக்கும் பிரபல்யமானது. அத்தகைய கருத்துக்களை உருவாக்குவதால், நீங்கள் எல்லையற்ற பொக்கிஷங்களைப் பெறுகிறீர்கள். இது மிகச்சரியானதாகும். ஒரு சமிக்ஞையைக் கொடுப்பதால், அல்லா அலாவுதீன் உங்களுக்கு உடனடியாகக் காட்சிகளைக் கொடுக்கிறார். சிவபாபாவை நினைவுசெய்யுங்கள், நீங்கள் எல்லோரும் காட்சிகளைப் பெறுவீர்கள். தீவிர பக்தி செய்வதால், பக்தர்கள் காட்சிகளைப் பெறுகிறார்கள். இங்கு, உங்கள் இலட்சியம் மற்றும் குறிக்கோளின் காட்சிகளை நீங்கள் பெறுகிறீர்கள். ஆகவே, நீங்கள் பாபாவையும் சுவர்க்கத்தையும் பெருமளவுக்கு நினைவுசெய்ய முடியும். நீங்கள் தொடர்ந்தும் அதை மீண்டும் மீண்டும் பார்ப்பீர்கள். திறமைசாலிகளாக இருந்து, பாபாவையும் இந்த ஞானத்தையும் நினைவு செய்பவர்களால் இறுதியில் காட்சிகளையும் இயற்கையின் காட்சிகளையும் பார்க்க முடியும். இலக்கு மிகவும் உயர்வானது. உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவுசெய்வது என்பது உங்கள் மாமியார் வீட்டுக்குப் போவது போன்றதல்ல! அதற்குப் பெருமளவு முயற்சி தேவை. பிரதான விடயம் நினைவு செய்வதாகும். பாபா தெய்வீகக் காட்சியை அருள்பவராக இருப்பதைப் போன்று, அதேவிதமாக, நீங்கள் உங்களுக்கே தெய்வீகக் காட்சிகளை அருள்பவர்கள் ஆகுவீர்கள். பக்தி மார்க்கத்தில், அவர்கள் அதிதீவிரமாகக் கடவுளை நினைவுசெய்த பின்னர் ஒரு தெய்வீகக் காட்சியைக் காண்கிறார்கள். அது தங்கள் சொந்த முயற்சிகளால், அவர்கள் தெய்வீகக் காட்சியை அருள்பவர்கள் ஆகுவதைப் போல உள்ளது. நினைவைக் கொண்டிருக்க முயற்சி செய்வதில் ஈடுபட்டிருப்பதால், நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பதுடன் காட்சிகளையும் காண்பீர்கள். உங்களால் இவ்வுலகம் முழுவதையும் மறக்கக்கூடியதாக இருப்பதுடன் மன்மனாபவ என்பதன் விழிப்புணர்வில் ஸ்திரமாகவும் ஆகுவீர்கள். உங்களுக்கு வேறு என்ன தேவை? பின்னர் நீங்கள் யோகசக்தி மூலம் உங்கள் சரீரத்தை விட்டு நீங்குவீர்கள். பக்தியில் முயற்சி உள்ளது. இதிலும் முயற்சி தேவைப்படுகிறது. முயற்சி செய்வதற்குரிய முதற்தர வழிமுறையை பாபா தொடர்ந்தும் உங்களுக்குக் காட்டுகிறார். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுவதால், நீங்கள் சரீரமாக இருக்கும் உணர்வை இழப்பீர்கள். அது நீங்கள் தந்தைக்குச் சமமானவர்கள் ஆகுவதைப் போல இருக்கும், நீங்கள் தொடர்ந்தும் காட்சிகளைக் காண்பீர்கள். பெருமளவு சந்தோஷமும் இருக்கும். இறுதிநேரத்தின் பெறுபேறு நினைவு கூரப்படுகிறது. உங்கள் சொந்தப் பெயர், ரூபத்திலிருந்தும் நீங்கள் பற்றற்று இருக்க வேண்டும். ஆகவே, நீங்கள் ஏனையோர்களின் பெயர்களையும், ரூபங்களையும் நினைவு செய்தால், உங்கள் நிலை என்னவாகும்? இந்த ஞானம் மிகவும் இலகுவானது. பாரதத்தின் புராதன யோகம் நினைவுகூரப்பட்டு வருகிறது. அதில் மந்திரவித்தை உள்ளது. இதைப் போன்றே பிரம்ம தத்துவத்தின் ஞானத்தைக் கொண்டிருப்பவர்களும் தங்கள் சரீரங்களை நீக்குகிறார்கள் என்று பாபா விளங்கப்படுத்தியுள்ளார். அவர்கள் கூறுகிறார்கள்: நான் ஓர் ஆத்மா, நான் பரமாத்மாவுடன் இரண்டறக் கலப்பேன். எவ்வாறாயினும், எவரும் இரண்டறக் கலக்க முடியாது. அவர்கள் பிரம்ம தத்துவத்தின் ஞானத்தைக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எங்கேயாவது அமர்ந்திருக்கும் போதே, தமது சரீரங்களை விட்டு நீங்கிச் செல்வதை பாபா பார்த்திருக்கிறார். சூழலில் அமைதி நிறைந்திருப்பதுடன், மயான அமைதியும் நிலவும். இந்த ஞான மார்க்கத்தில் இருப்பவர்கள், அமைதி நிறைந்தவர்களாக இருக்கக் கூடியவர்களே அந்த மயான அமைதியை அனுபவம் செய்கிறார்கள். எவ்வாறாயினும், சில குழந்தைகள் இன்னமும் சிறு குழந்தைகளாகவே இருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து மீண்டும் மீண்டும் கீழே வீழ்கிறார்கள். இதில் பெருமளவு மறைமுகமான முயற்சி தேவைப்படுகிறது. பக்தி மார்க்கத்தில் இருப்பவர்களின் முயற்சி வெளியே தெரிகிறது. அவர்கள் மாலையின் மணிகளை உருட்டுகிறார்கள். அவர்கள் ஒரு சிறு குடிலில் அமர்ந்திருந்து பக்தி செய்கிறார்கள். இங்கோ, நடந்தும் உலாவியும் திரிகையில், நீங்கள் நினைவுசெய்வதில் நிலைத்திருக்கிறீர்கள். நீங்கள் ஓர் இராச்சியத்தைக் கோருவதை எவராலும் காண முடியாது. உங்கள் கர்மக் கணக்குகள் அனைத்தையும் யோகத்தின் மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும். அவற்றை இந்த ஞானத்தின் மூலம் தீர்த்துக் கொள்ள முடியாது. நினைவு செய்வதன் மூலமே கணக்குகள் தீர்க்கப்படும். கர்மவேதனையானது நினைவின் மூலம் தீர்த்துக் கொள்ளப்படும். இது மறைமுகமானது. பாபா உங்களுக்குக் கற்பிக்கின்ற அனைத்தும் மறைமுகமானவை. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் எண்ணங்கள், வாரத்தைகள், அல்லது செயல்களில் ஒருபொழுதும் கோபமடைய வேண்டாம். இம்மூன்று ஜன்னல்களிலும் பெருமளவு கவனம் செலுத்துங்கள். தேவையின்றிப் பேசாதீர்கள். ஒருவருக்கொருவர் துன்பம் விளைவிக்க வேண்டாம்.

2. ஞானத்திலும் யோகத்திலும் போதையுடையவராக இருந்து இறுதியில் காட்சிகளையும் இயற்கைக் காட்சிகளையும் காணுங்கள். உங்கள் சொந்தப் பெயர், ரூபத்துடன் ஏனையோரின் பெயர்களையும் ரூபங்களையும் மறப்பதால், சரீரங்களின் எந்தவோர் உணர்வையும் முடித்துவிட்டு, ஆத்மாக்களாக இருக்கும் விழிப்புணர்வில் இருங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் அன்பிலே திளைத்திருக்கும் ஓர் ஆத்மாவாகி, அன்பினாலும் பேறுகளாலும் நிரம்பி, அன்பு அம்புகளை எய்வதன் மூலம் மற்றவர்களை அன்பில் மயக்கம் அடையச் செய்வீர்களாக.

உலக வழக்கப்படி, ஒருவர் இன்னொருவரின் அன்பிலே திளைத்திருக்கும்போது, அவனுடைய அல்லது அவளுடைய முகம், கண்கள், வார்த்தைகளில் இருந்து அவர் அன்பிலே திளைத்திருக்கிறார், அவர் காதல் வசப்பட்டுள்ளார் என்பதை உங்களால் உணர முடியும். அதேபோல், உங்களுக்குள்ளே தந்தையின் அன்பை வெளிப்படுத்துகின்ற ஸ்திதிக்குச் செல்லும்போது, அதற்கேற்ப அன்பு அம்புகள் மற்றவர்களை அன்பில் மயக்கம் அடையச் செய்யும். சொற்பொழிவின் இணைப்பைச் சிந்தித்தல் அல்லது கருத்துக்களை மீண்டும் கூறுதல் என்ற ரூபத்தை எடுக்காதீர்கள். அதற்குப் பதிலாக, அன்பிலே திளைத்திருக்கின்ற, அன்பாலும் பேறுகளாலும் நிரம்பி இருக்கின்ற ரூபம் இருக்க வேண்டும். நீங்கள் அதிகாரி ஆகப் பேசும்போது, அது ஓர் தாக்கத்தை ஏற்படுத்தும்.

சுலோகம்:
சம்பூரணத்தையும் முழுமையையும் அடைவதன் மூலம் முடிவிற்கான நேரத்தை நெருக்கமாகக் கொண்டு வாருங்கள்.

அவ்யக்த சமிக்கை: சத்தியம் மற்றும் நல்ல பண்புகளின் கலாச்சாரத்தைக் கடைப்பிடியுங்கள்.

எல்லோருமே ஒரேயொருவர் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். எவ்வாறாயினும் இந்த ஒருவரே, ஒரேயொருவர் ஆவார். இந்தக் குழப்பத்தின் நிலத்தை இப்போது உழுங்கள். இந்த ஒருவருடனும் ஏனையோரும் இருக்கிறார்கள் எனக் கூறும் நிலையை இப்போது அவர்கள் அடைந்து விட்டார்கள். ஆனால் ‘இவர் மட்டுமே ஒருவர்’ என அவர்கள் சொல்லும் வகையில் ஓர் அம்பை இப்போது எய்யுங்கள். நிலம் தயாராக உள்ளது. தொடர்ந்தும் அது தயார் ஆகும். ஆனால், அத்திவாரம், புதுமை, விதை எல்லாமே இந்தப் புதிய ஞானமே. இது சுயநலமற்ற அன்பு என்றும் ஆன்மீக அன்பு என்றும் அவர்கள் அனுபவம் செய்துள்ளார்கள். ஆனால் இப்போது, அன்புடன் கூடவே, நீங்கள் இந்த ஞானத்தின் அதிகாரத்தையும், உண்மையான இந்த ஞானத்தின் அதிகாரத்தையும் கொண்ட ஆத்மாக்கள் என்பதை அவர்களுக்குக் காட்டுங்கள். இதை வெளிப்படுத்துங்கள். அப்போது வெளிப்படுத்துகை இடம்பெறும்.