31.05.26    Avyakt Bapdada     Tamil Lanka Murli    15.03.2010     Om Shanti     Madhuban


ஓ ஆத்மாக்களே, இறையன்பிற்குத் தகுதிவாய்ந்தவர்களே, சந்தோஷம் அற்று இருப்பவர்களுக்கு கைப்பிடி அளவு சந்தோஷத்தை வழங்குங்கள். வீணானவை அனைத்தையும் முடித்து, சக்திசாலி ஆகி, காலத்தை நெருக்கமாகக் கொண்டு வாருங்கள்.


இன்று, பாப்தாதா எங்கும் உள்ள இறைவனின் அன்பான குழந்தைகள் அனைவரையும் பார்க்கிறார். பல்கோடிக்கணக்கான மக்களில், இறைவனின் அன்பான குழந்தைகளான நீங்கள் கைப்பிடி அளவினர் மட்டுமே இருக்கிறீர்கள். ஏனென்றால், இந்த வேளையில் மட்டுமே உங்களால் இறையன்பை அனுபவம் செய்ய முடியும். கல்பம் முழுவதிலும், நீங்கள் ஆத்மாக்களின், மகாத்மாக்களின், மதம்சார்ந்த ஆத்மாக்களின் அன்பை அனுபவம் செய்துள்ளீர்கள். ஆனால் இறையன்பை இப்போது சங்கமயுகத்தில் மட்டுமே அனுபவம் செய்ய முடியும். இதைக் குழந்தைகளான நீங்கள் அனைவரும் அனுபவம் செய்கிறீர்கள். கடவுள் எங்கே இருக்கிறார் என யாராவது கேட்டால், நீங்கள் அவருக்கு என்ன பதில் சொல்வீர்கள்? ‘அவர் என்னுடன் இருக்கிறார். அவர் என்னுடனேயே இருக்கிறார். அவர் எனது இதயத்தில் இருக்கிறார்’. நீங்கள் இதை அனுபவம் செய்கிறீர்கள்தானே? உங்களுக்கு மட்டுமே இது தெரியும். நீங்கள் மட்டுமே இந்த அன்பை அனுபவம் செய்துள்ளீர்கள்: தந்தை எனது இதயத்தில் இருக்கிறார், நான் தந்தையின் இதயத்தில் இருக்கிறேன். நீங்கள் மட்டுமே இறையன்பின் போதையை அனுபவம் செய்யும் பாக்கியத்தைப் பெற்றுள்ளீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். யாராவது ஒருவரிடம் அன்பு வைத்திருப்பதன் அடையாளம் என்ன? அதன் அடையாளம், அவருக்காக நீங்கள் உங்களையே அர்ப்பணிப்பீர்கள். பரமாத்மா பரமதந்தை குழந்தைகளான உங்கள் அனைவரிடம் இருந்தும் எதை விரும்புகிறார் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். குழந்தைகளான நீங்கள் ஒவ்வொருவரும் தந்தைக்குச் சமமானவர் ஆகவேண்டும் என்பதே தந்தையின் விருப்பம் ஆகும். தந்தையைப் போன்றே, குழந்தைகளின் ஸ்திதியும் மேன்மையானது ஆகவேண்டும். அந்த மேன்மையான ஸ்திதி என்ன? சம்பூரணமான தூய்மைக்குரிய ஸ்திதி: உங்களின் கனவுகளிலேனும் தூய்மை இன்மை வர முடியாத அளவு தூய்மை. தூய்மை இன்மையின் பெயரோ அல்லது சுவடோ இல்லாத அளவிற்கு நீங்கள் அத்தகைய சம்பூரணமான தூய ஸ்திதியை, தூய்மை ஸ்திதியை உருவாக்குகிறீர்களா?

தற்சமயம், காலம் நெருங்கி வருவதனால், பாப்தாதா இந்த சமிக்கையை வழங்குகிறார்: காலம் நெருங்கி வருவதற்கேற்ப, வீணான எண்ணங்களைக் கொண்டிருப்பதும் தூய்மை இன்மையின் அடையாளமே ஆகும். அகங்காரம் அல்லது அவமதிப்பிற்கான ஏதாவது வீணான எண்ணம் உங்களை ஈர்க்கிறதா என்பதை நாள் முழுவதும் சோதித்துப் பாருங்கள். தொடர்ந்து முன்னேறும்போது, தந்தையால் உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஏதாவதொரு சிறப்பியல்பையும் நீங்கள் உங்களின் சொந்தச் சிறப்பியல்பாகக் கருதி அகம்பாவம் அடைந்தால், அதுவும் ஒரு வீணான எண்ணமே. அத்துடன் ‘நான்’ என்ற உணர்வுடனான தூய்மையற்ற எண்ணம்: ‘நான் எதிலும் குறைந்தவன் அல்ல, எனக்கும் அனைத்தும் தெரியும், எனது எண்ணம் மட்டுமே சரியானது, மேன்மையானது’. இத்தகைய ‘நான்’ என்ற அகங்காரத்தின் எண்ணங்களும் சூட்சுமமான தூய்மை இன்மையின் சுவடாகும். எனவே, உங்களையே சோதித்துப் பாருங்கள். எந்த வகையான தூய்மை இன்மையின் வீணான எண்ணத்தின் சுவடு இன்னமும் எஞ்சியுள்ளதா? இறைவனின் அன்பான குழந்தைகளான நீங்கள், தூய உலகின் ஸ்தாபனைக்குரிய நேரத்தை நெருக்கமாகக் கொண்டு வருவதற்கான கருவிகள் ஆவீர்கள். அதனால் கருவி ஆத்மாக்களான உங்களின் அதிர்வலைகள் எங்கும் பரவும். ஆகவே, சோதித்துப் பாருங்கள்: எந்த வகையான வீணான எண்ணமும் உங்களை ஈர்க்கிறதா? தூய உலகமும் தூய இராச்சியமும் இப்போது நெருங்கி வருவதனால், தூய்மையின் அதிர்வலைகள் தேவைப்படுகின்றன. ஏனென்றால் துன்பமும் அமைதியின்மையும் வெவ்வேறு வடிவங்களில் எங்கும் அதிகரித்து வருகின்றன. துன்பத்திற்கும் அமைதி இன்மைக்குமான காரணம், தூய்மை இன்மையே ஆகும். எனவே, தூய்மையற்ற ஆத்மாக்களும் பக்த ஆத்மாக்களும் இப்போது இரட்டைச் சேவையைப் பெற வேண்டிய தேவை உள்ளது. வார்த்தைகள் மூலமான சேவை எங்கும் கோலாகலமாக இடம்பெறுவதை பாப்தாதா பார்த்துள்ளார். நீங்கள் இப்போது அவர்களின் முறைப்பாட்டை முடிக்கிறீர்கள். எவ்வாறாயினும், இப்போது ஆத்மாக்களுக்கு மேலதிக சகாஷ் தேவைப்படுகிறது. உங்களின் மனதால் சேவை செய்வதன் மூலம் இதைச் செய்து, அவர்களுக்கு சகாஷ், தைரியம், ஊக்கம் மற்றும் உற்சாகத்தை வழங்குங்கள். எனவே, இந்த வேளையில், இரட்டைச் சேவை செய்வதற்கான தேவை உள்ளது. இதற்கு, குழந்தைகளான நீங்கள் ஒவ்வொருவரும் உங்களை ஒரு மூதாதையராகக் கருத வேண்டும் என்று பாப்தாதா கூறியுள்ளார். நீங்களே இந்தக் கல்ப விருட்சத்தின் அத்திவாரங்கள், மூதாதையர்கள், பூஜிக்கத்தகுதி வாய்ந்த ஆத்மாக்கள் ஆவீர்கள். பாப்தாதா தொடர்ந்து சந்தோஷம் அற்று இருக்கும் குழந்தைகளின் சத்தத்தைக் கேட்கிறார். அந்த ஆத்மாக்கள் அழைக்கும் ஒலி குழந்தைகளான உங்களையும் வந்தடைய வேண்டும். நீங்கள் சம்பூரணமான தூய ஆத்மாக்கள் ஆகப் போகின்றீர்கள். நீங்கள் அவ்வாறு ஆகுகிறீர்கள், நீங்கள் அப்படி ஆகினீர்கள். ஆனால் அத்துடன் கூடவே, உங்ளின் மனங்களால் சேவை செய்வதையும் நீங்கள் அதிகரிக்க வேண்டும்.

இன்று, சந்தோஷம், அமைதி, திருப்தி என்பவை உலகில் குறைந்து வருகின்றன. எனவே, இப்போது இறையன்பிற்குத் தகுதிவாய்ந்த ஆத்மாக்களான நீங்கள் ஆத்மாக்களுக்கு கைப்பிடி அளவிலான அன்பு, திருப்தி, சந்தோஷத்தைக் கொடுக்க வேண்டும். சந்தோஷம் அற்றிருக்கும் அந்த ஆத்மாக்களுக்கு நீங்கள் கைப்பிடி அளவு சந்தோஷத்தை வழங்க வேண்டும். முதலில், உங்களின் மனதால் சேவை செய்வதன் மூலம் சகாஷ் கொடுங்கள். இரண்டாவதாக, உங்களின் முகம் மற்றும் செயல்களின் ஊடாகத் தந்தையை வெளிப்படுத்துங்கள். நீங்கள் செய்துள்ள மற்றும் செய்கின்ற சேவையை இட்டு பாப்தாதா மகிழ்கிறார். எங்கும் ஊக்கமும் உற்சாகமும் காணப்படுகின்றன. ஆனால் இன்னமும் ஒரு சேவை செய்வதற்காக எஞ்சியுள்ளது. இதுவரை, பிரம்மாகுமாரிகளான நீங்கள் மனிதர்களை நல்லவர்கள் ஆக்குகிறீர்கள் என்றும் நீங்கள் அவர்களைத் தூய்மையற்ற தொடர்பில் இருந்து விடுவிக்கிறீர்கள் என்றும் ஒலி பரவியுள்ளது. நீங்கள் மிக நல்ல சேவை செய்கிறீர்கள், அதனால் அரசாங்கமும் இளைஞர் அணி அதைச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறது. எவ்வாறாயினும், இப்போது அவர்கள் சொல்ல வேண்டும்: ‘தந்தை வந்துள்ளார், இறைவன் ஏற்கனவே வந்துவிட்டார், அவர்கள் இறைவனால் கொடுக்கப்பட்ட ஞானத்தையே கொடுக்கிறார்கள். எனது தந்தை ஆஸ்தியை வழங்குவதற்காக வந்துவிட்டார்’. அவர்களின் பார்வை இப்போது தந்தையிடம் செல்வதன் மூலம் அவர்கள் இறையன்பினாலும் இறைவனுக்கான கவர்ச்சியாலும் ஈர்க்கப்படுவார்கள். ‘இது நல்லது, இது நல்லது’ என்று அவர்கள் ஏற்கனவே சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். எனினும், தந்தையான இறைவனின் வெளிப்பாடு அவர்களை ஈர்த்து அவர்களை நல்லவர்கள் ஆக்கும். எனவே, இப்போது அவர்கள் தந்தையை, அவர்கள் நினைவு செய்து வருகின்ற ஒருவரை, இந்த ஞானத்தையும் இந்த ஆஸ்தியையும் வழங்குபவரை இனங்கண்டு கொள்ள வேண்டும். இப்போது, உங்களின் மனதால் அவர்களுக்குச் சேவை செய்வதன் மூலம் அவர்களைத் தந்தைக்கு நெருக்கமாகக் கொண்டு வாருங்கள். தந்தை உங்களின் முகம், உங்களின் செயல்பாடுகள், உங்களின் கண்களின் மூலம் வெளிப்பட வேண்டும். எனவே, உங்களுக்கு இடையே இந்தத் திட்டத்தை இப்போது செய்யுங்கள்.

பாப்தாதா அவ்வப்போது குழந்தைகளான உங்களுக்கு வழங்கும் திட்டங்களை மிகுந்த ஒழுங்கு முறையாகவும் அதிகளவு ஊக்கம் மற்றும் உற்சாகத்துடனும் நீங்கள் பயிற்சியில் இடுவதை பாப்தாதா கண்டார். இன்னமும் நீங்கள் அதைச் செய்து வருகிறீர்கள். அதற்காக பாப்தாதா குழந்தைகளான உங்கள் அனைவருக்கும் கோடானுகோடி மடங்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். இப்போது இதைச் சேர்த்துக் கொள்ளுங்கள். கடவுள் ஆஸ்தியை வழங்குகிறார். நீங்கள் இப்பொது ஆஸ்தியைப் பெற்றுக் கொள்ளாவிட்டால், எப்போதுதான் அதைப் பெற்றுக் கொள்ளப் போகின்றீர்கள்? தந்தை துன்பமும் அமைதி இன்மையும் உள்ள சூழலைப் பார்க்கும்போது குழந்தைகளான உங்களின் மீது கருணை கொள்கிறார். இது உச்சக்கட்டத்தை அடையப் போகின்றது என்பதை நீங்களும் அறிவீர்கள், தந்தையும் அறிவார். உச்சக்கட்டம் இல்லாமல் முடிவு வர முடியாது. இத்தகைய வேளையில், ஆத்மாக்களுக்கு இந்த அனுபவத்தைக் கொடுங்கள். அவர்கள் அதைப் பற்றிக் கேட்பதாக மட்டும் இல்லாமல், இறைவன் ஆஸ்தியை வழங்குகிறார் என்ற அனுபவத்தையும் அவர்களுக்குக் கொடுங்கள். எப்போது, எப்படி இறைவனை வெளிப்படுத்துதல் நிகழும் என்று நீங்கள் எல்லோரும் கேட்கின்றீர்கள், அல்லவா? ‘பிரம்மாகுமாரிகள்’ என்று அவர்கள் சொல்லும் அளவிற்கு ஒலி பரவியுள்ளது. ஆனால் பிரம்மா குமாரிகளுக்குக் கற்பிப்பவர் யார்? பிரம்மா குமாரிகளுக்கும் பிரம்மா குமார்களுக்கும் அருள்பவர் யார்? நீங்கள் இப்போது காலத்தை நெருக்கமாகக் கொண்டு வந்து, நிறைவை ஏற்படுத்த வேண்டும். நிறைவை நெருக்கமாகக் கொண்டு வரப் போகின்றவர் யார்? குழந்தைகளான நீங்கள் ஒவ்வொருவரும் உங்களை இதற்கான கருவியாகக் கருதுகிறீர்கள், அல்லவா? தந்தையே குழந்தைகளான உங்களுக்கு இந்தப் பொறுப்பை வழங்கி உள்ளார். மகன் தந்தையைக் காட்டுவார். உங்களில் சிலர் தந்தையை அறிந்து கொண்டபோது, என்ன நடந்தது? நீங்கள் அவரை இனங்கண்டு கொண்டீர்கள். நீங்கள் அவரை அறிந்து கொண்டீர்கள். அவரின் குழந்தைகள் ஆகியதால், நீங்கள் ஆஸ்திக்கான உரிமையையும் கோரிக் கொண்டீர்கள். இப்போது, தமது ஆஸ்தியைக் கோருகின்ற ஆத்மாக்களின் வரிசை ஒன்று உருவாக வேண்டும். எனவே, ஏன் இந்த வரிசை சிக்கிக் கொண்டு, உருவாக்கப்படாமல் உள்ளது? ஏனென்றால், சில குழந்தைகள் இப்போதும் வீணான எண்ணங்களின் வரிசையில் சிக்குண்டு இருக்கிறார்கள்: ஏன்? என்ன? எப்படி? நிறைவு செய்யும் பணிக்கு நீங்கள் உங்களின் நேரத்தைக் கொடுத்துள்ளீர்கள், ஆனால் இன்னமும் வீணானவற்றை நீங்கள் முடிக்கவில்லை. வீணானவை (வியர்த்), நீங்கள் சக்திசாலி (சமர்த்) ஆகுவதில் ஒரு தடையை ஏற்படுத்தும்.

இன்று, பாப்தாதா எங்கும் உள்ள குழந்தைகளான உங்கள் அனைவருக்கும் உங்களின் வீணான எண்ணங்களை முடிப்பதற்கான தைரியத்தை வழங்குகிறார்: இப்போது வீணானவை அனைத்தையும் முடியுங்கள், சதா சக்திசாலி ஆகி, மற்றவர்களையும் சக்திசாலி ஆக்குங்கள். அவர்களுக்கு செய்தியை மட்டும் கொடுக்காதீர்கள், ஆனால் அவர்களைச் சக்திசாலி ஆக்குங்கள். நீங்களும் சக்திசாலியாகி, மற்றவர்களையும் சக்திசாலிகள் ஆக்குங்கள். வீணானவை அனைத்தையும் முடிப்பதற்கான நாளைக் கொண்டாடுங்கள். இது சாத்தியமா? வீணான எண்ணங்கள் உங்களுக்கு இழப்பை ஏற்படுத்துகின்றன என்பதை நீங்கள் நம்புகிறீர்கள். அவை உங்களின் நேரத்தை வீணாக்கி, சதா சந்தோஷமாகவும் பாக்கியசாலியாகவும் இருக்கும் குறைவான அனுபவத்தையே உங்களுக்குக் கொடுக்கும். நிறைவு செய்யும் நேரத்தை நெருக்கமாக நீங்கள் கொண்டு வரவேண்டும் என்பதை நீங்கள் நம்புகிறீர்கள். எனவே, யார் இதைச் செய்ய வேண்டும்? நீங்கள் இதைச் செய்ய வேண்டும், அப்படித்தானே? நீங்களே நிறைவு செய்யும் நேரத்தை நெருக்கமாகக் கொண்டு வரவேண்டும், அதற்காக நீங்கள் வீணானவற்றை முடிக்க வேண்டும் என்பதை நீங்கள் நம்புகிறீர்கள். நீங்கள் அதைச் செய்யப் போகின்றீர்கள் என்பதல்ல, ஆனால் நீங்கள் நிச்சயமாக அதைச் செய்யவே வேண்டும். வீணானவை உங்களின் கனவுகளிலேனும் பிரவேசிக்கக் கூடாது. உங்களின் எண்ணங்களில் மட்டுமல்ல, ஆனால் அது உங்களின் கனவுகளிலேனும் பிரவேசிக்கக் கூடாது. இத்தகைய தைரியசாலிக் குழந்தைகளாகத் தங்களைக் கருதிக் கொள்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! நீங்கள் உங்களின் மனங்களின் கைகளை உயர்த்துகிறீர்கள்தானே? உங்களின் பௌதீகக் கையை உயர்த்துவது மிகவும் இலகுவானது. ஆனால் உங்களின் மனதின் கையை நீங்கள் உயர்த்துகிறீர்களா? உங்களின் மனங்களின் கைகளை நீங்கள் உயர்த்துகிறீர்கள் என்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! இது உங்களின் மனதின் கைதானே? அச்சா.

பாப்தாதா குழந்தைகளான உங்கள் அனைவருக்கும் இந்த ஆசீர்வாதத்தை வழங்குகிறார்: நீங்கள் அனைவரும் வரப்போகும் புதிய உலகில் 21 பிறவிகளுக்கு சதா சந்தோஷமாக இருப்பீர்கள். நீங்கள் சிரமப்பட வேண்டியதில்லை. நீங்கள் உலகின் பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ள மாட்டீர்கள். உங்களின் வாழ்க்கையில், உங்களின் சரீரங்கள், மனங்கள், செல்வம் போன்ற எதற்கும் உங்களுக்கு என்ன தேவையோ நீங்கள் அவை அனைத்தையும் பெறுவீர்கள். உங்களின் சரீரங்கள் ஆரோக்கியமாக இருக்கும். உங்களின் மனங்கள் சந்தோஷமாக இருக்கும். உங்களிடம் அளவற்ற செல்வம் இருக்கும். இதுவே 21 பிறவிகளுக்கான உங்களின் உத்தரவாதம் ஆகும். அச்சா. இன்றைய உலகிற்கேற்ப, பல விடயங்கள் தொடர்ந்து மாறிக் கொண்டிருக்கின்றன. அரசாங்கத்தின் சட்டங்களும் மாறுகின்றன. மனிதர்களின் மனோபாவங்களும் மாறுகின்றன. இதனால், ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பல விடயங்கள், வீணான விடயங்கள் வரும். அதனால் வீணானவற்றை முடிப்பதற்கு உங்களுக்கு சக்திவாய்ந்த எண்ணங்கள் தேவை. வீணான எண்ணங்களை முடிப்பதற்கு, உங்களுக்குச் சிறந்த எண்ணங்கள் தேவை. அதற்காக, ஒவ்வொரு நாளும் நீங்கள் ஆசீர்வாதத்தைச் செவிமடுக்க வேண்டும். ஆசீர்வாதம் மேன்மையான எண்ணங்கள் ஆகும். உங்களிடம் ஏதாவது வீணான எண்ணங்கள் ஏற்படும்போது, உங்களின் மனதில் மேன்மையான எண்ணங்களைக் கொண்டிருப்பது அவசியம். மனதை வெறுமையாக வைத்திருக்க முடியாது. மனதில் நிச்சயமாக ஏதாவதோர் எண்ணம் இருக்கும். வீணானவற்றைச் சிறந்ததாக ஆக்குவதற்கு, உங்களின் மனமானது ஒவ்வொரு முரளியிலும் வருகின்ற ஆசீர்வாதம், சுலோகம், ஆரம்பத்தில் வருகின்ற சாராம்சம் என்பவற்றால் மாற வேண்டும். நீங்கள் கண்களைத் திறந்த உடனேயே, அனைத்திற்கும் முதலில் சிவபாபாவிற்கு ‘காலை வணக்கம்’ சொல்லுங்கள். உங்களால் இதைச் செய்ய முடியுமா? காலையில் யாராவது நல்லவரின் முகத்தை முதலில் பார்த்தால், உங்களின் நாள் முழுவதுமே நன்றாக இருக்கும் என்றொரு கூற்று உள்ளது. நல்லவர் இல்லாத ஒருவரின் முகத்தைப் பார்த்தால் அவர்கள் என்ன சொல்கிறார்கள்? அவர்கள் கூறுகிறார்கள்: ‘நான் யாருடைய முகத்தில் விழித்தேன் என்று எனக்குத் தெரியவில்லை, ஏனென்றால் நாள் முழுவதும் சரியே இல்லை’. எனவே, அனைவரிலும் சிறந்தவர் யார்? சிவபாபா. உங்களுக்கு சிவபாபாவிடம் அன்பு உள்ளதல்லவா? நீங்கள் கண்களைத் திறந்த உடனேயே, ‘சிவபாபா, காலை வணக்கம்’ என்று சொல்லுங்கள். பின்னர், இரவில் உங்களின் கண்களை மூடும்போது, நீங்கள் தூங்கச் செல்லும்போது, ‘இரவு வணக்கம், சிவபாபா’ என்று சொல்லுங்கள். இது இலகுவானதுதானே? அப்போது உங்களின் முழு நாளும் நன்றாக இருக்கும். ஏனென்றால், நீங்கள் அந்த ஆசீர்வாதத்தில் இருந்து தூய எண்ணங்களை எடுத்துள்ளீர்கள். எனவே, இதைச் செய்யுங்கள்! பாப்தாதாவிற்கு உங்கள் அனைவரின் மீதும் அன்பு உள்ளது. ஆகவே, இதைச் செய்வதன் மூலம் நீங்கள் தொடர்ந்து முன்னேறுவீர்கள். உங்களின் இந்த வாழ்க்கையிலும் நீங்கள் சந்தோஷத்தை அனுபவம் செய்வீர்கள். ஒருபோதும் துன்பத்தின் அலை எதுவும் இருக்க மாட்டாது. எனவே, நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? இலகு யோகிகள் ஆகுங்கள், அவ்வளவுதான். நான் ஓர் ஆத்மா, நான் சிவபாபாவின் குழந்தை, அவ்வளவுதான்! இதுவே இலகுயோகியாக இருத்தல் ஆகும். நடக்கும் போதும் அசையும் போதும் நினைவில் வைத்திருங்கள்: நான் ஓர் ஆத்மா, நான் சிவபாபாவின் குழந்தை. இந்தளவை உங்களால் நினைவு செய்ய முடியும், அல்லவா? இது மிகவும் நல்லது.

இப்போது, நீங்கள் அனைவருமே, வாரிசுகள் அல்லது வாரிசுகள் ஆகப் போகின்றவர்கள். உங்களை பாப்தாதாவின் உண்மையான வாரிசுகள் எனக் கருதுபவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! நீங்கள் வாரிசுகளா? விஐபிகள் அனைவரும்கூடத் தமது கைகளை உயர்த்துகிறார்கள். குறைந்தபட்சம் கைதட்டுங்கள்! அச்சா. இப்போது, வாரிசு தரமுள்ளவர்கள் இந்தத் திடசங்கற்பமான எண்ணத்தைக் கொண்டிருப்பார்கள், ஏதாவதொரு வேளையில் அன்றி, இப்பொழுதில் இருந்தே பாப்தாதாவிற்கு இந்த எண்ணத்தைக் கொடுப்பார்கள்: ‘நாங்கள் நிச்சயமாக இப்பொழுதில் இருந்தே வீணான எண்ணங்கள் அனைத்தையும் நிச்சயமாக முடித்து விடுவோம்’. நீங்கள் இதை ஏற்றுக் கொள்கிறீர்களா? ஏற்றுக் கொள்கிறீர்களா? அப்படியாயின், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! இரண்டு பணிகள் உள்ளன. ஒன்று, சதா சக்திசாலி ஆகுதல். மற்றையது, நிறைவிற்கான நேரத்தை நெருக்கமாகக் கொண்டு வருதல். பாப்தாதாவால் துன்பத்தில் அழைப்புகளையும் அழுகுரல்களையும் அதிகளவில் கேட்க முடிகிறது. உங்களால் ஏன் அதைக் கேட்க முடியவில்லை என்பது பாபாவிற்குத் தெரியவில்லை. பாப்தாதாவால் அதைக் கேட்க முடியும் என்றால், குழந்தைகளான நீங்கள், உங்களை வாரிசுகளாகக் கருதுபவர்கள், ஆஸ்தியைக் கோருபவர்கள், தமது ஆஸ்தியை இன்னமும் பெற இருப்பவர்களின் மீது கருணை கொள்ள வேண்டும். ஏன் உங்களுக்கு அந்தக் கருணை இருப்பதில்லை? விருப்பமின்மை - எல்லையற்ற விருப்பமின்மையும் கருணையும் இருக்க வேண்டும். அற்ப விடயங்களுக்காக ஏன்? என்ன? என்ற வரிசைக்கு உங்களின் நேரத்தைக் கொடுக்காதீர்கள். எனவே, ஓ பாப்தாதாவின் நீண்ட காலம் தொலைந்து இப்போது கண்டு எடுக்கப்பட்டுள்ள அதியன்பிற்குரிய குழந்தைகளே, கோடானு கோடி மடங்கு ஆசீர்வாதங்களால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ள குழந்தைகளான நீங்கள், இப்போது உங்களின் எண்ணங்களைத் திடசங்கற்பமானவை ஆக்குங்கள். திடசங்கற்பம் என்ற சாவியை மேலும் அதிகமாகப் பயன்படுத்துங்கள். கர்ம யோகிகள் ஆகுங்கள். நீங்களே கர்மயோகி வாழ்க்கை வாழுபவர்கள். வாழ்க்கை என்பது எல்லா வேளைக்கும் உரியது. ஏதாவதொரு நேரத்திற்கு மட்டும் உரியதல்ல. எனவே, இப்போது, உங்களின் கருணைநிறைந்த, துன்பத்தை நீக்கி சந்தோஷத்தை அருள்கின்ற கனிவான ரூபம் வெளிப்பட வேண்டும். பாப்தாதா உங்களுக்கு நீண்ட காலமாகவே ‘சடுதியாக’ என்ற காலப்பகுதியைப் பற்றிக் கூறி வருகிறார். அதனால், குறைந்தபட்சம் ஏதாவது சடுதியாக நடப்பதற்கு முன்னர் பக்தர்களின் அழைப்பைப் பூர்த்தி செய்யுங்கள். சந்தோஷம் அற்றிருப்பவர்களின் துன்ப ஒலியைச் செவிமடுங்கள். இப்போது, உலகை மாற்றுபவர்களாக இருக்கும் நீங்கள், இளையவர்களோ முதியவர்களோ யாராக இருந்தாலும் நீங்கள் ஒவ்வொருவரும் உங்களை இந்தத் துன்ப உலகை மாற்றி, அந்த சந்தோஷ உலகை ஏற்படுத்துவதற்கான பொறுப்பு உடையவர் எனக் கருதிக் கொள்ள வேண்டும்.

எப்போது வரை பாப்தாதா தொடர்ந்து வந்து போய்க் கொண்டிருப்பார்? இதனாலேயே, இது இப்போது சடுதியாக நடக்க வேண்டும். அதனால் இப்போது, ஓ வாரிசு தரமுள்ள ஆத்மாக்களே, நீங்கள் ஆத்மாக்களை அவர்களின் ஆஸ்தியைப் பெறச் செய்ய வேண்டும். இப்போது கருணைநிறைந்தவராக இருக்கும் பாகத்தை நடியுங்கள். இது எப்போது நடக்கும் என்று நினைக்காதீர்கள். அது சடுதியாக நடக்கும். இதனாலேயே, நீங்கள் நிச்சயமாக வீணானவற்றை முடிக்க வேண்டும். அது நடக்கும் என்பதல்ல, ஆனால் நீங்கள் நிச்சயமாக அதைச் செய்ய வேண்டும். பாப்தாதா பெறுபேற்றைப் பார்த்தார், அனைவரின் கர்மத்தின் பெறுபேறுகளையும் (விளைவுகள்) சோதித்தார். பாபா உங்களின் முயற்சியின் வேகத்தையும் சோதித்தார். அத்துடன் பொக்கிஷங்களின் சேமிப்புக் கணக்கையும் சோதித்தார். எனவே, பெறுபேற்றிலே பாபா எதைக் கண்டார்? நீங்கள் அவற்றைச் சேமிப்பதற்கு மிக நல்ல முயற்சி செய்கிறீர்கள். ஆனால் நீங்கள் சேமித்தவற்றில் பல வகையான சதவீதம் காணப்படுகிறது. நீங்கள் அவற்றைச் சேமித்துள்ளதாக நினைக்கிறீர்கள். நீங்கள் சிலவற்றைச் சேமித்துள்ளீர்கள். ஆனால் அது சதவீதத்திலேயே உள்ளது. சிறிதளவு சேமிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது எல்லா வேளைக்குமாகச் சேமிக்கப்படவில்லை. நீங்கள் அதை நீண்ட காலமாகச் செய்கிறீர்கள், ஆனாலும் எல்லா வேளைக்குமாகச் சேமிப்பதில் ஒரு வேறுபாடு காணப்படுகிறது. இதனாலேயே, பாப்தாதா இப்போது உங்களை ஒவ்வொரு விடயத்திலும் திடசங்கற்பமான எண்ணங்களைக் கொண்டிருக்கச் செய்கிறார். அவர் கோபத்திற்காக உங்களை அதைச் செய்ய வைத்தார்: எவ்வாறாயினும், எவரை இட்டும் உங்களின் மனதில் எந்தவிதமான குழப்பமும் இருக்கக்கூடாது. ஏன்? அல்லது என்ன? என்ற எதுவும் இருக்கக்கூடாது. உங்களின் வாயால் கோபப்படுவதை நீங்கள் கட்டுப்படுத்தி உள்ளீர்கள். உங்களில் சிலர் இதை மிக நன்றாகச் செய்துள்ளீர்கள். ஆனால் இன்னமும் அது உங்களின் மனதில் சிறிதளவில் தொடர்கிறது. நீங்கள் அதை முடிப்பதற்கு முயற்சி செய்கிறீர்கள். அப்படி இருந்தும், உங்களின் கவனம் அதை நோக்கிக் கவரப்பட்டுள்ளதை இட்டு பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். நீங்கள் மட்டுமே இழப்பீர்கள் என்பதை நீங்கள் உணர ஆரம்பித்துள்ளீர்கள். உங்களுக்குப் புரிகிறதா? அச்சா.

எங்கும் உள்ள இறை காதலிகளான குழந்தைகளான உங்கள் அனைவருக்கும் சதா தந்தையின் அன்புடன் பறந்து கொண்டிருப்பதுடன் தீவிர முயற்சியாளர்களாகவும் சேவையில் தடைகளில் இருந்து விடுபட்டிருக்கும் உண்மையான சேவையாளர்களாகவும் இருப்பவர்களுக்கும் பாப்தாதா எங்கும் உள்ள இத்தகைய குழந்தைகள் அனைவரையும் பார்க்கிறார். பாபா வெகு தொலைவில் உள்ள குழந்தைகளைப் பார்ப்பதுடன் சாந்திவானின் வெவ்வேறு இடங்களில் இருந்து திரையில் பாப்தாதாவைப் பார்ப்பதுடன் கேட்டுக் கொண்டும் இருக்கும் குழந்தைகள் அனைவரையும் பார்க்கிறார். பாப்தாதா குழந்தைகளான உங்கள் அனைவருக்கும் ஆசீர்வாதத்தை வழங்குகிறார்: நீங்கள் சதா சந்தோஷமாக இருப்பதுடன் எல்லா வேளைக்காகவும் சந்தோஷத்தைப் பகிர்ந்து அளியுங்கள். சந்தோஷமான முகம் - உங்களின் முகத்தைப் பார்க்கும் எவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும். சில மக்கள் எத்தகையவர்களாக இருந்தாலும் அவர்கள் உங்களின் முகத்தைப் பார்த்ததும் அவர்களும் சந்தோஷம் அடைய வேண்டும். இதுவே எங்கும் உள்ள குழந்தைகளான உங்கள் அனைவருக்குமான ஆசீர்வாதம் ஆகும். இது இங்கே தனிப்பட்ட முறையில் முன்னால் அமர்ந்திருக்கும் அனைவருக்குமான ஆசீர்வாதமும் ஆகும். உங்களின் முகம் ஒருபோதும் வாடக்கூடாது. நீங்கள் வாடினால், உலகின் நிலைமை என்னவாக இருக்கும்? நீங்கள் சதா சந்தோஷமான முகத்தைக் கொண்டிருக்க வேண்டும். அத்துடன் எப்போதும் சந்தோஷமான செயல்பாடுகளில் உங்களை மும்முரமாக வைத்துக் கொள்வதுடன் மற்றவர்களையும் அவ்வாறே ஆக்குங்கள். இத்தகைய இனிமையான, தீவிர முயற்சியாளர் குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் நமஸ்தேயும்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஓர் அனுபவசாலி ரூபமாகி, உங்களின் சொந்த ரூபத்தால் தந்தையினதும் ஆசிரியரினதும் ரூபங்களை வெளிப்படுத்துவீர்களாக.

உங்களின் உண்மையான நிலையில் இருப்பதே நினைவு யாத்திரை ஆகும். நீங்கள் யார் என்பதையும் யாருக்குச் சொந்தமானவர் என்பதையும் அறிந்து கொள்வதில் ஸ்திரமானவர் ஆகுங்கள். இந்த நம்பிக்கையின் உண்மையான ரூபத்தாலும் பல தடவைகள் நீங்கள் வெற்றி பெற்ற விழிப்புணர்வாலும் நீங்கள் சதா உங்களின் போதைமிக்க ஸ்திதியின் கடலின் அலைகளில் தொடர்ந்து முன்னேறுவீர்கள். நீங்கள் சந்தோஷத்தை அருள்பவரின் குழந்தைகள் என்பதனால், எப்படி துன்ப அலைகள் உங்களிடம் வரமுடியும்? எப்படி சர்வசக்திவானின் குழந்தைகளான குழந்தைகளால் சக்தியற்றவர்களாக இருக்க முடியும்? நீங்கள் இந்த நிலையின் அனுபவத்தில் இருக்கும்போது, தந்தையினதும் ஆசிரியரினதும் ரூபம் இயல்பாகவே உங்களின் ரூபத்தினூடாக வெளிப்படுத்தப்படும்.

சுலோகம்:
நேர்மையாகவும் சத்தியம் நிறைந்தவர்களாகவும் இருப்பவர்கள், தமது முகங்களிலும் தமது செயல்களிலும் தெய்வீகத் தன்மையைக் கொண்டிருப்பார்கள்.

அவ்யக்த சமிக்கை: சதா ஆட்ட, அசைக்க முடியாத மற்றும் நிலையான ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.

குழந்தைகளான நீங்கள் அமரத்துவ ரூபங்களாக இருந்து, உங்களின் நெற்றிகள் என்ற சிம்மாசனங்களில் ஸ்திரமாக இருக்கும்போது, உங்களால் நிலையான ஸ்திதி என்ற சிம்மாசனத்திலும் பாப்தாதாவின் இதய சிம்மாசனத்திலும் ஸ்திரமாக இருக்க முடியும். நிலையான ஸ்திதியில் உள்ள உங்கள் அனைவரின் ரூபங்களின் நடைமுறை ரூபத்தின் காட்சி, தெய்வீக ஒன்றுகூடலில் இருந்து கொடுக்கப்படும் போது, பாப்தாதாவின் வெளிப்பாடு நெருக்கமாக வரும். இதற்கு, நீங்கள் ஒவ்வொருவரும் பாப்தாதாவைப் போன்ற சம்ஸ்காரங்களைக் கொண்டிருப்பதில் சமமாக ஆகவேண்டும்.