31.07.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, சிவபாபா தான் முதுமை அடையும் பொழுது, தனக்குச் சேவை செய்வதற்குத் தனது குழந்தைகளை எதிர்பார்ப்பதில்லை. அவர் ஒருபொழுதும் முதுமை அடைவதில்லை. தந்தை மாத்திரமே தன்னலமற்ற சேவையாளர் ஆவார்.
கேள்வி:
கள்ளங்கபடமற்ற பிரபுவாகிய சிவபாபா, எவ்வாறு குழந்தைகள் அனைவரினதும் மிகப்பெரிய வாடிக்கையாளராக இருக்கிறார்?பதில்:
பாபா கூறுகிறார்: நான் உங்களிடமுள்ள பழைய பொருட்கள் அனைத்தையும் வாங்கி, பிரதிபலனாக, அனைத்தையும் உங்களுக்குப் புதிதாகக் கொடுக்கின்ற, அத்தகையதோர் அப்பாவி வாடிக்கையாளர் ஆவேன். நீங்கள் கூறுகிறீர்கள்: ‘பாபா, இந்தச் சரீரம், மனம், செல்வம் அனைத்தும் உங்களுடையதே’. அதற்குப் பதிலாக, நீங்கள் ஓர் அழகான சரீரத்தையும், எல்லையற்ற செல்வத்தையும் பெறுகிறீர்கள்.பாடல்:
அப்பாவிப் பிரபுவைப் போன்று தனித்துவமானவர் எவருமில்லை!ஓம் சாந்தி.
பக்தி மார்க்கத்தில் அவர்கள் இப்பாடலைப் பாடுகிறார்கள். தந்தை உங்களுக்குப் பக்தி மார்க்கத்துக்குரிய பாடல்கள் அனைத்தினதும் அர்த்தத்தைக் கூறுகிறார். கள்ளங்கபடமற்ற பிரபு என்று அழைக்கப்படுபவர் யார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்களும் புரிந்து கொள்கிறீர்கள். தேவர்களை அப்பாவிப் பிரபு என அழைக்க முடியாது. குசேலர் இரு கைப்பிடிகள் அரிசியைக் கொடுத்துப் பதிலாக ஒரு மாளிகையைப் பெற்றார் என்பது நினைவுகூரப்படுகிறது; ஆனால் அது எவ்வளவு காலத்துக்கு? 21 பிறவிகளுக்கு! தந்தை உண்மையிலேயே வந்து பாரத மக்களுக்கு வைரங்களும், இரத்தினங்களும் பதிக்கப்பட்ட மாளிகைகளைக் கொடுக்கிறார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். எதற்குப் பதிலாகக் கொடுக்கிறார்? குழந்தைகள் கூறுகிறார்கள்: பாபா, இந்தச் சரீரம், மனம், செல்வம் அனைத்தும் உங்களுடையதாகும். இவை அனைத்தும் உங்களால் கொடுக்கப்பட்டது. ஒருவருக்குக் குழந்தை உள்ளபொழுது, கடவுளே அக்குழந்தையைக் கொடுத்தார் என அவர்கள் கூறுகிறார்கள். கடவுள் தங்களுக்குச் செல்வத்தைக் கொடுத்தார் எனவும் அவர்கள் கூறுகிறார்கள். இதனைக் கூறுபவர் யார்? ஆத்மாக்களே ஆவர். கடவுள், அதாவது, தந்தை அதனைக் கொடுத்தார். தந்தை கூறுகிறார்: இந்நேரத்தில் நீங்கள் அனைத்தையும் பாபாவுக்குக் கொடுக்க வேண்டும். அதற்குப் பதிலாக, நான் உங்களை ஓர் அழகான சரீரத்துக்கு மாற்றி, உங்களுக்கு எல்லையற்ற செல்வத்தையும் கொடுப்பேன். எவ்வாறாயினும், அவர் அதனை யாருக்குக் கொடுக்கிறார்? நிச்சயமாக அவர் அதனைக் குழந்தைகளான உங்களுக்குக் கொடுக்கிறார். நீங்கள் உங்கள் லௌகீகத் தந்தையரிடம் இருந்து தற்காலிகமாகச் செல்வத்தைப் பெற்றீர்கள். எல்லையற்ற தந்தை எங்களுக்கு எல்லையற்ற ஆஸ்தியைக் கொடுக்கிறார். தந்தை விளங்கப்படுத்துகிறார்: பக்திக்கும் இந்த ஞானத்துக்கும் இடையில் இரவுக்கும் பகலுக்குமான வேறுபாடு உள்ளது. பக்தி மார்க்கத்தில் நீங்கள் அனைத்தையும் தற்காலிகமாகவே பெறுகிறீர்கள். உங்களிடம் செல்வம் உள்ளபொழுது, நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்கள். எவ்வாறாயினும், பணமில்லாத மக்கள் அதிகளவு துன்பத்தை அனுபவம் செய்கிறார்கள்! பாபா உங்களுக்கு எல்லையற்ற செல்வத்தைக் கொடுக்கிறார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள், இதனாலேயே நீங்கள் சந்தோஷத்தை அனுபவம் செய்கிறீர்கள். சந்தோஷ தாமத்தில் சந்தோஷத்துக்குக் குறைவிருக்காது. அவர்கள் அனைவருக்கும் அவர்களுடைய சொந்த இராச்சியம் உள்ளது. அது தூய இல்லற ஆச்சிரமம் என்று அழைக்கப்படுகிறது. தந்தை மிகவும் அப்பாவி! அவர் உங்களிடம் இருந்து எதனைப் பெறுகிறார் எனவும், பதிலாக அவர் உங்களுக்கு எதனைக் கொடுக்கிறார் எனவும் பாருங்கள்! தந்தை அத்தகையதொரு சிறந்த வாடிக்கையாளர்! எப்படியிருப்பினும், ஒரு தந்தையே தனது குழந்தைகளின் வாடிக்கையாளர் ஆவார்: ஒரு குழந்தை பிறந்தவுடன், சொத்து அனைத்தும் அவருக்கு உரியதாக ஆகுகிறது. ஏனைய வாடிக்கையாளர்கள் அனைவரும் எல்லைக்கு உட்பட்டவர்கள், ஆனால் அவரோ எல்லையற்ற அப்பாவிப் பிரபு ஆவார். அவரே எல்லையற்ற குழந்தைகளின் வாடிக்கையாளர். தந்தை கூறுகிறார்: நான் பரந்தாமத்தில் இருந்து வந்துள்ளேன். நான் உங்களிடமுள்ள பழையன அனைத்தையும் பெற்றுக் கொண்டு, உங்களுக்குப் புதிய உலகில், அனைத்தையும் புதிதாகக் கொடுக்கிறேன். இதனாலேயே அவர் அருள்பவர் என அழைக்கப்படுகிறார். அவரைப் போன்று அருள்பவர் வேறெவரும் இல்லை. அவர் தன்னலமற்ற சேவையைச் செய்கிறார். தந்தை கூறுகிறார்: நான் தன்னலம் அற்றவர். எனக்கு எந்த எதிர்பார்ப்புக்களும் இல்லை. நான் உங்களைப் பராமரித்துள்ளதால், உங்களுடைய வயோதிபத் தந்தையைப் பராமரிப்பது குழந்தைகளாகிய உங்களின் கடமை என்று நான் கூறுவதில்லை; இல்லை. குழந்தைகள் தங்களுடைய தந்தையை அவர் முதுமை அடையும் பொழுது, பராமரிக்க வேண்டும் என்பது நியதியாகும். இந்தத்தந்தை என்றுமே முதுமை அடைவதில்லை; அவர் எப்பொழுதும் இளமையானவர். ஆத்மா ஒருபொழுதும் முதுமை அடைவதில்லை. ஒரு லௌகீகத் தந்தை முதுமை அடையும் பொழுது, தனது குழந்தைகள் தனக்குச் சேவை செய்வார்கள் என நம்புகிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் தனது குழந்தைகளுக்கு அனைத்தையும் கொடுத்திருந்தாலும், அவர் அவர்களிடம் இருந்து சேவையைப் பெறுகிறார். சிவபாபா கூறுகிறார்: நான் எதனையும் அனுபவம் செய்யும் தாக்கத்துக்கு அப்பாற்பட்டவன் (அபோக்தா) ஆவேன். நான் ஒருபொழுதும் எதனையும் உண்பதில்லை. நான் குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கவே வருகிறேன். பரமாத்மா இங்கே அமர்ந்திருந்து ஆத்மாக்களுக்கு விளங்கப்படுத்துகிறார். ஆத்மாவே செவிமடுத்து, அனைத்தையும் செய்கிறார். ஆத்மாவே சம்ஸ்காரங்களைச் சுமந்து செல்கிறார், அவற்றின் அடிப்படையில், அவர் ஒரு சரீரத்தைப் பெறுகிறார். இங்கே மனிதர்களுக்குப் பல அபிப்பிராயங்கள் உள்ளன. ஒவ்வோர் ஆத்மாவும் கடவுள் எனவும், ஆத்மா செயல்களின் தாக்கத்துக்கு அப்பாற்பட்டவர் எனவும் சிலர் கூறுகிறார்கள். ஆத்மாக்கள் செயல்களின் தாக்கத்துக்கு அப்பாற்பட்டவர்கள் எனவும் அவர்கள் கூறுகிறார்கள். ஆத்மாக்கள் செயல்களின் தாக்கத்துக்கு அப்பாற்பட்டவர்கள் எனில், அவர்கள் ஏன் “பாவாத்மாவும், புண்ணியாத்மாவும்” எனக் கூறுகிறார்கள்? ஆத்மாக்கள் செயல்களின் தாக்கத்துக்கு அப்பாற்பட்டவர் எனில், அது ‘பாவச் சரீரமும், புண்ணியச் சரீரமும்’ என்பதாக இருக்க வேண்டும். ஆத்மாக்களின் ஆன்மீகத் தந்தை ஆத்மாக்களாகிய உங்களுக்கு இச்சரீரத்தினூடாகக் கற்பிக்கிறார் என்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். அவர்கள் ஆத்மாக்களை வரவழைக்கிறார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: எனது தந்தையின் ஆத்மா இங்கே வந்து இதனை ருசித்தார். ஆத்மாக்களே அனைத்தையும் ருசிக்கிறார்கள். தந்தை இதனைக் கூறுவதில்லை. அவர் எதனையும் அனுபவம் செய்வதற்கு (அபோக்தா) அப்பாற்பட்டவர். ஓர் ஆத்மா வரும்பொழுது, பிராமணக் குருக்களுக்கே உணவு அளிக்கப்படுகிறது. ஆத்மா யாராவது ஒருவரில் பிரவேசிக்க வேண்டும். ஒரு பிராமணக் குருக்கள் போன்றோருக்கு உணவு அளிப்பது பாரதத்தில் ஒரு பொதுவான விடயமாகும். அவர்கள் ஓர் ஆத்மாவை வரவழைத்துப் பின்னர் அந்த ஆத்மாவிடம் பல விடயங்களை வினவுகிறார்கள்; அவர்கள் பெறுகின்ற சில பதில்கள் சரியாக நடைபெறுகின்றன. சரீரத்தை விட்டுப் பிரிந்த ஆத்மாக்களுக்கு உணவு அளிப்பதும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நீங்கள் இதனைப் பற்றி வியப்படையக் கூடாது. தந்தை உங்களுக்கு நாடகத்தின் இரகசியங்களைச் சுருக்கமாகக் கூறுகிறார். அவரால் நாடகத்தின் விபரமான விளக்கத்தைக் கொடுக்க முடியாது. ஒவ்வொன்றையும் பற்றி தனிப்பட்ட முறையில் விளங்கப்படுத்துவதற்கு வருடங்கள் எடுக்கும். குழந்தைகளாகிய நீங்கள் அத்தகைய இலகுவான கற்பித்தல்களைப் பெறுகிறீர்கள்! பாடப்பட்டுள்ளது: ‘ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! வந்து எங்களைத் தூய்மை ஆக்குங்கள்!’ அவருடைய பெயரே தூய்மையாக்குபவர். பிரம்மா, விஷ்ணு, சங்கரரைத் தூய்மையாக்குபவர் என்று அழைக்க முடியாது. தந்தை மாத்திரமே தூய்மையாக்குபவரும், விடுதலையளிப்பவரும் என்று அழைக்கப்படுகிறார். அவர் துன்பத்தை அகற்றுபவரும், சந்தோஷத்தை அருள்பவரும் எனவும் அழைக்கப்படுகிறார். அவர் அசரீரியானவர். சிவாலயங்களுக்குச் சென்று பாருங்கள், அங்கே நீங்கள் நீள்கோள உருவத்தைப் பார்ப்பீர்கள். அவர் நிச்சயமாக உயிர்வாழும் ரூபத்தில் இருந்தார், அதனாலேயே அவர் பூஜிக்கப்படுகிறார். தேவர்களும் உயிர்வாழும் ரூபத்தில் இருந்தார்கள், இதனாலேயே அவர்கள் புகழப்படுகிறார்கள். நேரு உயிர்வாழும் ரூபத்தில் இருந்ததனாலேயே, மக்கள் அவருடைய ஒரு புகைப்படத்தை வைத்து, அவரைப் புகழ்கிறார்கள். தனது ஆயுட்காலத்தில் ஒருவர் ஏதாவது நல்லதைச் செய்திருப்பின், மக்கள் அவருடைய சிலையை உருவாக்கி, அவரைப் புகழ்கிறார்கள். தூய்மையானவர்கள் மாத்திரமே பூஜிக்கப்படுகிறார்கள். மனிதர்களை எவரும் பூஜிக்கக்கூடாது. அவர்கள் விகாரத்தின் மூலம் பிறப்பதால், அவர்களைப் பூஜிக்கக்கூடாது. தேவர்கள் பூஜிக்கப்படுகிறார்கள், ஏனெனில் அவர்கள் சதா தூய்மையானவர்கள். தந்தை வந்தார் என்பதையும், அவர் இப்பொழுது சங்கமயுகத்தில் மீண்டும் சுவர்க்கத்தை ஸ்தாபிப்பதற்கு வந்துள்ளார் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். பின்னர், துவாபர யுகத்தில் இராவண இராச்சியம் ஆரம்பிக்கும். இராவண இராச்சியம் ஆரம்பிக்கும் பொழுது, அவர்கள் உடனேயே சிவனுக்கு ஓர் ஆலயத்தைக் கட்டுகிறார்கள். இப்பொழுது, உயிருள்ள ரூபத்தில் அவர் உங்களுக்கு இந்த ஞானத்தைக் கூறுகிறார். அவரே சத்தியமும், உணர்வுள்ளவரும் ஆவார். மக்கள் அவருடைய புகழைப் பாடுகிறார்கள். அசரீரியானவருக்கு ஒரு சரீரம் தேவைப்படுகிறது. தந்தை வந்து உலகத்தைச் சுவர்க்கமாக ஆக்குகிறார். நீங்கள் அந்தச் சுவர்க்கத்தை ஆட்சிசெய்வதற்கே முயற்சி செய்கிறீர்கள். நீங்கள் சுவர்க்கவாசிகள் ஆகுகிறீர்கள். அசரீரியான பரமாத்மாவாகிய பரமதந்தையே ஞானக்கடல், ஆனால் அவர் எவ்வாறு உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கிறார்? அவர் கூறுகிறார்: நான் இச்சரீரத்தில் பிரவேசிப்பதே, நாடகத்தில் எனது பாகம் ஆகும். நான் சடப்பொருளின் ஆதாரத்தைப் பெறுகிறேன். நான் முதல் இலக்கமாக இருந்தவரும், இப்பொழுது இவருடைய பல பிறவிகளின் இறுதிப் பிறவியில் உள்ளவருமாகிய இவரில் பிரவேசித்து, இவருக்குப் பிரம்மா எனப் பெயரிடுகிறேன். முதலில், நீங்கள் அனைவரும் பத்தியில் (சூளையில்) இருந்த பொழுது, பலருக்கும் பெயர்கள் சூட்டப்பட்டன. எவ்வாறாயினும், பலர் நீங்கிச் சென்றார்கள்; ஆகவே அவர்களுக்குப் பெயரிடுவதில் என்ன நன்மை ஏற்பட்டது? நீங்கள் அப்பெயர்களைக் கேட்க நேரிட்டால், வியப்படைவீர்கள்! ஒரு காலத்தில் அனைவருக்கும் பல்வேறு களிப்பூட்டும் பெயர்கள் கொடுக்கப்பட்டன. திரான்ஸ் செய்தியாளர்கள் பெயர்களை எடுத்து வருவது வழக்கம். நீங்கள் நிச்சயமாக அப்பட்டியலை வைத்திருக்க வேண்டும். சந்நியாசிகள் துறவை மேற்கொள்ளும் பொழுது, அவர்களின் பெயர்கள் மாற்றப்படுகின்றன. அவர்கள் தங்களுடைய வீடுகளையும், குடும்பங்களையும் விட்டு நீங்குகிறார்கள். நீங்கள் உங்கள் வீடுகளை விட்டு நீங்குவதில்லை. நீங்கள் வந்து பிரம்மாவுக்கு உரியவர்கள் ஆகுகிறீர்கள், எப்படியிருப்பினும், நீங்கள் சிவனுக்கு உரியவர்கள். நீங்கள் “பாப்தாதா” என்று கூறுகிறீர்கள். சந்நியாசிகளுக்கு இதனைப் போன்று நடைபெறுவதில்லை. அவர்கள் தங்கள் பெயர்களை மாற்றினாலும், அவர்கள் பாப்தாதாவைக் கண்டடைவதில்லை. அவர்கள் ஒரு குருவையே சந்திக்கிறார்கள். ஹத்தயோகிகள் எல்லைக்கு உட்பட்ட துறவிகள், ஆனால் இராஜயோகிகளோ எல்லையற்ற துறவிகள். ஆகவே, இரவுக்கும் பகலுக்கும் இடையிலான வேறுபாடு உள்ளது. நினைவு கூரப்பட்டுள்ளது: ஞானம், பக்தி, விருப்பமின்மை. அவர்களுக்கும் விருப்பமின்மை உள்ளது, ஆனால் அவர்களுக்குத் தங்கள் வீட்டிலும், குடும்பத்திலுமே விருப்பமின்மை உள்ளது, ஆனால் உங்களுக்கோ முழு உலகிலும் விருப்பமின்மை உள்ளது. உலகம் மாறுகிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. உங்களுக்கு எல்லையற்ற விருப்பமின்மை உள்ளது. இவ்வுலகம் முடிவடைய வேண்டும். உங்களுக்காகப் புதிய உலகம் உருவாக்கப்பட்டு வருகிறது. நீங்கள் அங்கே செல்ல வேண்டும், ஆனால் தூய்மை ஆகாமல் உங்களால் அங்கே செல்ல முடியாது. உண்மையிலேயே புதிய உலகில் தேவர்களின் இராச்சியம் இருந்தது என்பது உங்கள் இதயத்தைத் தொடுகிறது. தந்தை இப்பொழுது அதனை ஸ்தாபிக்கிறார். சிவபாபாவை நினைவு செய்வதனால் நீங்கள் புண்ணியாத்மாக்கள் ஆகுவீர்கள் என்பதை அறிவீர்கள். இது மிகவும் இலகுவானது, ஆனால் நீங்கள் அவரை நினைவுசெய்ய மறக்கிறீர்கள். பக்தி மார்க்கத்தின் சம்பிரதாயங்கள் முழுமையாகவே வேறுபட்டவை. எவராலும் வீடு திரும்ப முடியாதுள்ளது. நிச்சயமாக அனைவரும் மறுபிறவி எடுக்க வேண்டும். வீடு திரும்புவதற்கான காலம் ஒன்று மாத்திரமே உள்ளது. இன்னார் அநாதியான முக்தி அடைந்தார் எனக் கூறுவது ஒரு பொய்யாகும். தந்தை கூறுகிறார்: நாடகத்தின் இடைநடுவில் எந்த ஆத்மாவாலும் வீடு திரும்ப முடியாது; இல்லாவிட்டால் முழு நாடகமும் பாழாகி விடும். அனைவரும் நிச்சயமாகச் சதோ, ரஜோ, தமோ ஸ்திதிகளினூடாகச் செல்ல வேண்டும். அநாதியான முக்தி அடைவதற்காக இங்கே பல்வேறு மக்களும் வருகிறார்கள், ஆனால் அநாதியான முக்தி என்னும் அத்தகைய விடயம் இருப்பதில்லை என அவர்களுக்கு விளங்கப்படுத்தப்படுகிறது. இந்நாடகம் அநாதியாக முற்கூட்டியே நிச்சயிக்கப்பட்டது; அது என்றுமே மாற்றமடைய முடியாது. இங்கே ஓர் ஈ பறந்து செல்லும் பொழுது, அது இங்கே அதேவிதமாக 5000 வருடங்களில் கடந்து செல்லும். பாபா எவ்வளவு அப்பாவி என்பதை நீங்கள் அறிவீர்கள். தூய்மையாக்குபவராகிய தந்தை தனது பரந்தாமத்தில் இருந்து ஒரு பாகத்தை நடிப்பதற்கு வருகிறார். எவ்வாறு இந்நாடகம் உருவாக்கப்பட்டது எனவும், அதில் யார் பிரதானமானவர் எனவும் அவர் விளங்கப்படுத்துகிறார். முழு உலகிலும் யார் அதிகூடிய செல்வந்தர் என்பதற்கான ஒரு பதிவேட்டை அவர்கள் வைத்திருக்கிறார்கள், அவர்கள் பெயர்களை வரிசைக்கிரமமாகப் பட்டியலிட்டு வைத்திருக்கிறார்கள். யார் அனைவரிலும் அதிகூடிய செல்வந்தர் என்பதை நீங்கள் அறிவீர்கள். அது அமெரிக்கா என அவர்கள் கூறுகிறார்கள், ஆனால் இலக்ஷ்மியும் நாராயணனும் சுவர்க்கத்தில் இருக்கும் பொழுது, அவர்களே அனைவரிலும் அதிகூடிய செல்வந்தர்களாக இருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். எதிர்காலத்தில் அனைவரிலும் அதிகூடிய செல்வந்தர்கள் ஆகுவதற்கே நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். இது ஓர் ஓட்டப்பந்தயம். இலக்ஷ்மியையும், நாராயணனையும் போல் எவராவது செல்வந்தர்களாக இருப்பார்களா? அவர்கள் அலாவுதீனின் அற்புத விளக்கின் கதையையும் உருவாக்கி உள்ளார்கள். அவர் கை தட்டிய பொழுது, குபேரனின் பொக்கிஷங்கள் வெளிப்பட்டன. அவர்கள் அத்தகைய பல நாடகங்களை உருவாக்கி உள்ளார்கள். நீங்கள் இச்சரீரங்களை விட்டு நீங்கிச் சுவர்க்கத்துக்குச் செல்வீர்கள் என்பது இப்பொழுது உங்கள் புத்தியில் உள்ளது. நீங்கள் எல்லையற்ற பொக்கிஷங்களைப் பெறுவீர்கள். தந்தை கூறுகிறார்: நீங்கள் என்னை நினைவு செய்யும் பொழுது, மாயை முழுமையாகவே உங்களிடமிருந்து அப்பால் ஓடி விடுவாள். நீங்கள் தந்தையை நினைவு செய்யாத பொழுது, மாயை உங்களைத் தொந்தரவு செய்கிறாள். நீங்கள் கூறுகிறீர்கள்: ‘பாபா, எனக்கு மாயையின் பல புயல்கள் வருகின்றன’. அச்சா, தந்தையைப் பெருமளவு அன்புடன் நினைவு செய்யுங்கள், புயல்கள் பறந்து விடும். அவர்கள் நாடகங்களை உருவாக்கி உள்ளார்கள், ஆனால் அவ்வாறு எதுவுமில்லை. தந்தை உங்களுக்குக் கூறுகின்ற அனைத்தும் மிகவும் இலகுவானவை! தந்தையை நினைவு செய்யுங்கள், உங்களில் உள்ள கலப்படம் அகற்றப்படும். அவர் உங்களுக்கு வேறெந்தச் சிரமத்தையும் கொடுப்பதில்லை. நிஜத் தங்கமாக இருந்த தூய ஆத்மாக்கள், இப்பொழுது போலியாகி உள்ளனர், அவர்கள் நினைவுத் தீயின் மூலம் மீண்டும் நிஜத்தங்கம் ஆகுவார்கள். தீயில் இடப்படாமல் தங்கம் தூய்மை ஆக்கப்பட முடியாது. இது யோகத்தீ என்று அழைக்கப்படுகிறது. இது நினைவுக்கான விடயமாகும். அம்மக்கள் பல்வேறு விதமான ஹத்தயோகத்தைக் கற்பிக்கிறார்கள். தந்தை உங்களுக்குக் கூறுகிறார்: நடந்தும் உலாவியும் திரியும்பொழுதும், என்னை நினைவு செய்யுங்கள்! உங்களால் எவ்வளவு நேரத்துக்கு ஒரு குறிப்பிட்ட நிலையில் அமர்ந்திருந்து என்னை நினைவுசெய்ய முடியும்? நீங்கள் உலாவித் திரியும்பொழுதும், அனைத்தையும் செய்யும் பொழுதும் நினைவில் நிலைத்திருக்க வேண்டும். நீங்கள் நோய்வாய்ப்பட்டிருப்பினும், உங்களால் இங்கே படுத்திருந்து பாபாவை நினைவுசெய்ய முடியும். சிவபாபாவை நினைவுசெய்து, சக்கரத்தைச் சுழற்றுங்கள், அவ்வளவுதான்! தனது உதடுகளில் அமிர்தத்துடன் ஒரு நபர் கங்கையாற்றின் கரையில் இருக்க வேண்டும் எனவும் பின்னர் அவர்கள் எழுதியுள்ளார்கள். கங்கையாற்றின் கரையில் நீங்கள் கங்கைநீரை மாத்திரமே காண்பீர்கள், இதனாலேயே மக்கள் ஹரித்துவாருக்குச் சென்று, அங்கே தங்குகிறார்கள். தந்தை கூறுகிறார்: உங்களால் எங்கேயும் தங்க முடியும். நீங்கள் நோய்வாய்ப்பட்டு இருந்தாலும், தந்தையை மாத்திரம் நினைவு செய்யுங்கள். நீங்கள் சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றும் பொழுதே, சரீரத்தை விட்டு உயிர் பிரிய வேண்டும். இதனைப் பயிற்சி செய்யுங்கள்! இந்த ஞான மார்க்கத்தின் விடயங்களுக்கும், பக்தி மார்க்கத்தின் விடயங்களுக்கும் இடையில் பகலுக்கும் இரவுக்குமான வேறுபாடு உள்ளது. நீங்கள் தந்தையை நினைவு செய்வதால், சுவர்க்க அதிபதிகள் ஆகுகிறீர்கள். போர்வீரர்களுக்குக் கூறப்படுகிறது: யுத்த களத்தில் மரணிப்பவர்கள் சுவர்க்கத்துக்குச் செல்வார்கள். உண்மையில், இது ஒரு யுத்தகளம் ஆகும். கௌரவர்களினதும், பாண்டவர்களினதும் சேனைகளை அவர்கள் காண்பித்துள்ளார்கள். மகாபாரத யுத்தம் இருந்தது. ஆனால், பின்னர் என்ன நடைபெற்றது? பெறுபேறு எதுவும் காண்பிக்கப்படவில்லை. அவர்கள் காரிருளில் இருப்பதுடன், எதனையும் புரிந்து கொள்வதும் இல்லை. இதனாலேயே அது அறியாமை இருள் என அழைக்கப்படுகிறது. ஒளியைக் கொண்டு வருவதற்குத் தந்தை வந்துவிட்டார். அவர் ஞானக்கடலும், ஞானம்-நிறைந்தவரும் என்று அழைக்கப்படுகிறார். நீங்கள் இப்பொழுது இந்த ஞானம் அனைத்தையும் பெற்றுள்ளீர்கள். அதுவே ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் வசிக்கின்ற, அசரீரி உலகமாகும். அது பிரம்மாண்ட் எனவும் அழைக்கப்படுகிறது. இங்கே மக்கள் ஓர் உருத்திர ஞானயாகத்தை வளர்க்கிறார்கள். நீங்கள் பலருக்கும் நன்மை அளிப்பதால், தந்தையுடன் ஆத்மாக்களான நீங்களும் பூஜிக்கப்படுகிறீர்கள். நீங்கள் தந்தையுடன் ஆன்மீகமாக, குறிப்பாகப் பாரதத்துக்கும், பொதுவாக உலகத்துக்கும் சேவை செய்கிறீர்கள். இதனாலேயே குழந்தைகளாகிய நீங்களும் தந்தையுடன் பூஜிக்கப்படுகிறீர்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. மாயையின் புயல்களை விரட்டி அடிப்பதற்கு, தந்தையைப் பெருமளவு அன்புடன் நினைவு செய்யுங்கள். யோகத்தீயின் மூலம் ஆத்மாவை நிஜத் தங்கமாக ஆக்குங்கள்.2. ஓர் எல்லையற்ற துறவியாகி, இப்பழைய உலகத்தை மறந்து விடுங்கள். உலகம் மாற்றம் அடைகிறது, நீங்கள் புதிய உலகத்துக்குச் செல்ல வேண்டும். ஆகவே, இந்தப் பழைய உலகத்தைத் துறவுங்கள்!
ஆசீர்வாதம்:
ஒவ்வோர் அடியிலும் எச்சரிக்கையாக இருப்பதன் மூலம் பல்கோடிகள் வருமானத்தைச் சேமித்து, அதனால் பல்கோடீஸ்வரர் ஆகுவீர்களாக.குழந்தைகளான உங்களை மிக உயர்ந்த ஸ்திதியில் இருக்கும்படி தந்தை எச்சரிக்கை செய்கிறார். ஆகவே, இப்போது சிறிதளவேனும் கவனக்குறைவாக இருப்பதற்கான நேரம் கிடையாது. இப்போது, ஒவ்வோர் அடியிலும் எச்சரிக்கையுடன் இருப்பதன் மூலம், ஒவ்வோர் அடியிலும் பல்கோடிகள் வருமானத்தைச் சம்பாதிப்பதன் மூலம் நீங்கள் ஒரு பல்கோடீஸ்வரர் ஆகுவீர்கள். நீங்கள் பல்கோடி மடங்கு பாக்கியசாலிகள் என்று அழைக்கப்படுவதைப் போல், உங்களின் செயல்களையும் அவ்வாறே ஆக்குங்கள். உங்களுக்குப் பல்கோடிகளை சம்பாதித்துத் தராத ஓர் அடியையேனும் எடுத்து வைக்காதீர்கள். ஆகவே, ஒவ்வோர் அடியையும் ஸ்ரீமத்திற்கேற்ப முன்னரே மிகுந்த கவனத்துடன் கருத்தில் கொண்டு பின்னர் எடுத்து வையுங்கள். ஸ்ரீமத்துடன் உங்களின் சொந்த மனதின் கட்டளைகளை கலந்து விடாதீர்கள்.
சுலோகம்:
உங்களின் மனதை ஒழுங்காக வைத்திருங்கள். நீங்கள் இயல்பாகவே மன்மனாபவ என்ற ஸ்திதியைக் கொண்டிருப்பீர்கள்.அவ்யக்த சமிக்கை: எரிமலை ஸ்திதியில் இருந்தவண்ணம், சக்திவாய்ந்த நினைவை அனுபவம் செய்யுங்கள்.
எந்தவொரு விரிவாக்கத்திற்கும் செல்லும் முன்னர், உங்கள் நினைவைச் சக்திமிக்கதாக ஆக்க வேண்டுமாயின், சாராம்ச ஸ்திதியின் பயிற்;சியும் எவ்விதத்திலும் குறைவடையக் கூடாது. விரிவாக்கத்தில், சாராம்சத்தை மறந்து விடாதீர்கள். உண்ணுங்கள், பருகுங்கள், சேவை செய்யுங்கள். ஆனால் பற்றற்றிருப்பதை மறக்காதீர்கள். ஆன்மிக முயற்சி என்றால், சக்திமிக்க நினைவைக் கொண்டிருப்பதும், இதயத்தின் உறவுமுறையை சதா தந்தையுடன் கொண்டிருப்பதும் ஆகும். ஆன்மீக முயற்சி என்றால் யோகத்தில் அமர்ந்திருப்பது மாத்திரம் அல்ல, ஆனால் பௌதீகமாக அமர்ந்திருப்பதைப் போன்றே, உங்கள் இதயம், மனம், புத்தியும் தந்தையின் தொடர்பில் இருப்பதுடன் சதா அவருடனேயே அமர்ந்திருப்பதாகும். அத்தகைய ஒருமைப்பாட்டைக் கொண்டிருந்தாலே சுவாலை ஏற்றப்படும்.