31.08.25    Avyakt Bapdada     Tamil Lanka Murli    15.12.2006     Om Shanti     Madhuban


நினைவு சொரூபமாக, ஓர் அனுபவசாலி ரூபம் ஆகுங்கள். திறமைச்சித்தி எய்தி, துரித கதியுடன் ஒரு விநாடியில் மாற்றத்தை ஏற்படுத்துங்கள்.


இன்று, பாப்தாதா எங்கும் உள்ள குழந்தைகள் எல்லோருடைய நெற்றிகளிலும் பிரகாசிக்கும் விசேடமான பாக்கிய ரேகைகள் மூன்றைப் பார்க்கிறார். ஒவ்வொருவரின் நெற்றியும் இந்த பாக்கிய ரேகைகளால் பிரகாசிக்கின்றது. ஓன்று, இறை பராமரிப்பு என்ற பாக்கிய ரேகை. இரண்டாவது, மேன்மையான ஆசிரியரிடம் இருந்து நீங்கள் பெற்றுள்ள கற்பித்தல்களின் பாக்கிய ரேகை. மூன்றாவது, நீங்கள் சற்குருவிடம் இருந்து பெற்றுள்ள ஸ்ரீமத் என்ற பாக்கிய ரேகை. உண்மையில், உங்கள் எல்லோரிடமும் அளவற்ற பாக்கியம் உள்ளது. அப்படி இருந்தும், பாபா இன்று குறிப்பாக இந்த மூன்று ரேகைகளையும் பார்க்கிறார். நீங்களும் உங்களின் நெற்றிகளில் பிரகாசிக்கும் ரேகைகளை அனுபவம் செய்கிறீர்கள்தானே? அதி மேன்மையான ரேகை, இறையன்பின் பராமரிப்பின் ரேகை ஆகும். எப்படித் தந்தை எல்லோரிலும் அதியுயர்ந்தவராக இருக்கிறாரோ, அவ்வாறே, இறைவனின் பராமரிப்பே எல்லாவற்றிலும் அதியுயர்ந்த பராமரிப்பு ஆகும். எனவே, வெகுசிலரே இந்தப் பராமரிப்பைப் பெறுகிறார்கள். எனினும் நீங்கள் எல்லோரும் இந்தப் பராமரிப்பிற்குத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகியுள்ளீர்கள். இந்தப் பராமரிப்பானது குழந்தைகளான உங்களால் மட்டுமே பெறப்பட்டுள்ளது. அத்துடன் கல்பம் முழுவதிலும் ஒரு தடவை மட்டுமே பெறப்பட்டுள்ளது. நீங்கள் அதை இப்போது பெறவில்லை என்றால், உங்களால் அதை ஒருபோதும் பெற முடியாது. இந்த இறை பராமரிப்பு, இறையன்பு, இறை பேறுகள் பல மில்லியன்களில் கைப்பிடி அளவினரான ஆத்மாக்களான உங்களால் மட்டுமே அனுபவம் செய்யப்படுகின்றன. நீங்கள் எல்லோரும் அனுபவசாலிகள்தானே? உங்களுக்கு இந்த அனுபவம் உள்ளதா? நீங்கள் பராமரிப்பையும் இந்தக் கல்வியையும் அத்துடன் ஸ்ரீமத்தையும் அனுபவம் செய்துள்ளீர்கள். நீங்கள் அனுபவசாலி ரூபங்கள். எனவே, உங்களால் சதா இந்தப் பாக்கிய நட்சத்திரம் உங்களின் நெற்றியில் பிரகாசிப்பதைக் காண முடிகிறதா? எல்லா வேளையும்? அல்லது, பிரகாசிக்கும் நட்சத்திரம் சிலவேளைகளில் சிறிது மங்கி விடுகிறதா? அது மங்க அனுமதிக்காதீர்கள். பிரகாசிக்கும் நட்சத்திரம் மங்கினால், அதற்கான காரணம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?

நீங்கள் நினைவு சொரூபங்கள் ஆகுவதில்லை என்பதே பாப்தாதா கண்ட அந்தக் காரணம் ஆகும். நீங்கள் ஓர் ஆத்மா என நீங்கள் நினைக்கிறீர்கள், ஆனால் நீங்கள் அந்த எண்ணத்தின் சொரூபம் ஆகுகிறீர்கள். அதன் விழிப்புணர்வின் சொரூபமாக அந்தளவிற்கு ஆகுவதில்லை. நீங்கள் சதா நினைவின் சொரூபமாக ஆகாதவரை, உங்களிடம் சக்தி இருக்க முடியாது. ஏனென்றால், இந்த விழிப்புணர்வானது சக்தியை ஏற்படுத்தும். நினைவின் சொரூபம், சக்தி சொரூபமாக இருக்கும். இதனாலேயே, இந்தப் பாக்கிய நட்சத்திரம் குறைவாகப் பிரகாசிக்கிறது. நீங்கள் நீண்ட காலத்திற்கு என்னவாக இருக்கிறீர்கள் என உங்களையே கேட்டுப் பாருங்கள்: அது எண்ணத்தின் சொரூபமா அல்லது விழிப்புணர்வின் சொரூபமா? எண்ணத்தின் சொரூபம் ஆகுவதன் மூலம், ‘நான் இது, நான் இது, நான் இது’ என நீங்கள் மிக நன்றாக நினைக்கிறீர்கள். எவ்வாறாயினும், அந்த விழிப்புணர்வின் சொரூபமாக இல்லாதிருப்பதால், வீணான எண்ணங்களும் சாதாரணமான எண்ணங்களும் உங்களின் சிந்தனையில் கலந்து விடுகின்றன. உண்மையில், நீங்கள் அதைப் பார்த்தால், உங்களின் அநாதியான ரூபம், விழிப்புணர்வினதும் சக்தியினதும் ரூபம் ஆகும். உங்களின் ரூபம் எண்ணங்களால் ஆனதல்ல, ஆனால் அது சொரூபமாக உள்ளது. ஆரம்பத்திலும், இந்த வேளையில் விழிப்புணர்வின் சொரூபமாக இருப்பதன் வெகுமதியை நீங்கள் பெறுகிறீர்கள். எனவே, அநாதியாகவும் ஆதியாகவும் நீங்கள் விழிப்புணர்வின் சொரூபமாகவே இருக்கிறீர்கள். பின்னர், இந்த வேளையிலும் இறுதியில் அத்துடன் சங்கமயுகத்திலும் நீங்கள் விழிப்புணர்வின் சொரூபம் ஆகுகிறீர்கள். எனவே, முக்காலங்களிலும் ஆரம்பத்திலும் அநாதியாகவும் இறுதியிலும் நீங்கள் விழிப்புணர்வின் சொரூபமாக இருக்கிறீர்கள். நீங்கள் எண்ணங்களின் சொரூபம் அல்ல. இதனாலேயே, பாப்தாதா உங்களுக்கு முன்னரும் கூறியுள்ளார்: தற்சமயம் அனுபவசாலி ரூபம் ஆகுவதே மேன்மையான ஸ்திதி ஆகும். நீங்கள் உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுகிறீர்கள். உங்களிடம் இறை பேறுகள் உள்ளன. ஆனால் இதைப் புரிந்து கொள்வதற்கும் அதை அனுபவிப்பதற்கும் இடையில் பெரியதொரு வேறுபாடு உள்ளது. அனுபவசாலி ரூபத்தால் ஒருபோதும் மாயையால் ஏமாற்றப்பட முடியாது அல்லது எந்தவிதமான துன்பத்தையும் அனுபவிக்க முடியாது. அவ்வப்போது நீங்கள் பார்க்கின்ற மாயையின் விளையாட்டுக்களும் நீங்களே விளையாடுகின்ற விளையாட்டுக்களும் ஏன் ஏற்படுகின்றன என்றால், அனுபவ சொரூபம் ஆகுவதில் ஏற்படும் குறைவே ஆகும். அனுபவத்தின் அதிகாரமே அதிமேன்மையானது. சில குழந்தைகள் இதைப் பற்றிச் சிந்திக்கிறார்கள், ஆனால் சொரூபம் ஆகுவதில் அவர்களிடம் சிறிதளவு அனுபவமே உள்ளது என்பதை பாப்தாதா கண்டார்.

இன்றைய உலகில், பெரும்பாலான ஆத்மாக்கள் பார்ப்பதிலும் கேட்பதிலும் களைப்படைந்து விட்டார்கள். அவர்கள் அனுபவத்தில் இருந்து எதையாவது பெற விரும்புகிறார்கள். அனுபவசாலிகளால் மட்டுமே ஓர் அனுபவத்தைக் கொடுக்க முடியும். அனுபவசாலி ஆத்மாக்கள் சதா தொடர்ந்து முன்னேறுவார்கள். அவர்கள் தொடர்ந்து பறப்பார்கள். ஏனென்றால், அனுபவசாலி ஆத்மாக்கள் சதா தம்மில் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் வெளிப்படுத்துவார்கள். எனவே சோதித்துப் பாருங்கள்: ஒவ்வொரு கருத்தினதும் அனுபவ ரூபமாக நீங்கள் ஆகிவிட்டீர்களா? உங்களின் ஒவ்வொரு செயலிலும் அனுபவத்தின் அதிகாரம் புலப்படுகிறதா? உங்களின் ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வோர் எண்ணமும் அனுபவத்தின் அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டதா? அல்லது அது உங்களின் புரிந்துணர்வை அடிப்படையாகக் கொண்டதா? ஒன்று, புரிந்து கொள்வது. மற்றையது, அனுபவம் செய்வது. ஒவ்வொரு பாடத்திற்காகவும் இந்த ஞானத்தின் கருத்துக்களைப் பற்றிப் பேசுவது என்பது பல சொற்பொழிவுகளை ஆற்றுகின்ற வெளிப் பேச்சாளர்களாலும் செய்யப்பட முடியும். எவ்வாறாயினும், ஒவ்வொரு கருத்தினதும் அனுபவ சொரூபம் ஆகுவதெனில், ஒரு ஞானோதயம் பெற்ற ஆத்மா ஆகுதல் என்று அர்த்தம். யோகம் செய்யும் பலர் இருக்கிறார்கள். பலர் யோகம் செய்வதற்காக அமர்கிறார்கள். ஆனால் யோகத்தை அனுபவம் செய்வதெனில் சக்தி சொரூபம் ஆகுதல் என்று அர்த்தம். உங்களால் அவசியமான வேளையில் குறிப்பிட்டதொரு சக்தியை உங்களுக்குள் வரவழைத்து, தடைகளில் இருந்து விடுபட்ட சொரூபம் ஆகுவதன் மூலம் நீங்கள் ஒரு சக்தி சொரூபம் என்பதை இனங்காண முடியும். ஒரு சக்தியேனும் குறைவாக இருந்தால், நீங்கள் அதைப் பற்றிப் பேசினாலும் அதன் சொரூபமாக இல்லா விட்டால், அப்போதும் நீங்கள் அந்த நேரத்தில் ஏமாற்றப்பட முடியும். உங்களுக்கு சகித்துக் கொள்ளும் சக்தி தேவைப்படும் வேளையில், நீங்கள் எதிர்க்கும் சக்தியைப் பயன்படுத்தினால் உங்களை யோகியுக்த் என்றோ அல்லது அனுபவ சொரூபம் என்றோ அழைக்க முடியாது. நான்கு பாடங்களிலும் நீங்கள் விழிப்புணர்வின் சொரூபமாகவும் அனுபவ சொரூபமாகவும் இருப்பதன் அடையாளம் என்ன? உங்களின் ஸ்திதியில், நீங்கள் ஒரு கருவியாக இருக்கும் விழிப்புணர்வைக் கொண்டிருப்பீர்கள். உங்களின் மனோபாவத்தில் உங்களிடம் சதா தூய உணர்வுகளையும் ஆத்ம உணர்வுகளையும் தன்னலமற்ற உணர்வுகளையும் கொண்டிருப்பீர்கள். சூழலிலும் உறவுமுறைகளிலும் தொடர்புகளிலும் நீங்கள் எப்போதும் பணிவாக இருப்பீர்கள். உங்களின் வார்த்தைகள் தூயதாகவும் மென்மையாகவும் இருக்கும். அனுபவசாலி ரூபமாக இருக்கும் ஒருவருக்கு இந்தச் சிறப்பியல்புகள் ஒவ்வொரு கணமும் இயல்பான சுபாவமாக இருக்கும். இயல்பான சுபாவம். தற்சமயம், சில குழந்தைகள் சிலவேளைகளில் கூறுகிறார்கள்: ‘நான் இதைச் செய்ய விரும்பவில்லை, ஆனால் இது எனது பழைய சுபாவம்.’ உங்களின் சுபாவம் இயல்பாகவே அந்தப் பணியைச் செய்யும். நீங்கள் அதைப் பற்றிச் சிந்திக்கவும் தேவையில்லை. உங்களின் சுபாவம் இயல்பாகவே அந்தப் பணியைச் செய்யும். எனவே, உங்களையே சோதித்துப் பாருங்கள்: எனது இயல்பான சுபாவம் என்ன? எனது பழைய சுபாவத்தின் சிறிதளவு சுவடேனும் எனக்குள் இருந்தால், அதை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதன் மூலம், அது உறுதியான சம்ஸ்காரம் ஆகிவிடுகிறது. உங்களின் பழைய சுபாவத்தையும் பழைய சம்ஸ்காரங்களையும் முடிப்பதற்கு...... நீங்கள் இதைச் செய்ய விரும்பினாலும், உங்களால் அதைச் செய்ய முடியாமல் உள்ளது. அதற்கான காரணம் என்ன? நீங்கள் எல்லாவற்றையும் பற்றி ஞானம் நிறைந்தவர்கள் ஆகியுள்ளீர்கள். ஏதாவதொன்று நடப்பதை நீங்கள் விரும்பவில்லை, எனினும் அது நடக்கிறது. எனவே, அதற்கான காரணம் என்ன? மாற்றத்தின் சக்தி சிறிதளவே காணப்படுகிறது. உங்களில் பெரும்பாலானோரில் மாற்றத்தின் சக்தி குறைவாக இருப்பது புலப்படுகிறது. நீங்கள் அதைப் புரிந்து கொள்கிறீர்கள், அதைப் பற்றிப் பேசுகிறீர்கள். மாற்றத்தின் சக்தி என்ற தலைப்பில் எழுதச் சொன்னால் அல்லது ஒரு சொற்பொழிவு ஆற்றச் சொன்னால், நீங்கள் எல்லோரும் மிகவும் கெட்டிக்காரர்களாக இருப்பதையும் உங்களால் மிக நல்ல சொற்பொழிவுகள் ஆற்றக் கூடியதாக இருப்பதையும் அதைப் பற்றி மிக நன்றாக எழுதக்கூடியதாக இருப்பதையும் பாப்தாதா உணர்கிறார். அதன்பின்னர், மற்றவர்கள் வந்தால், உங்களால் அவர்களுக்கு மிக நன்றாக விளங்கப்படுத்தக் கூடியதாகவும் உள்ளது: ‘கவலைப்படாதீர்கள், அதை மாற்றிவிடுங்கள்.’ எவ்வாறாயினும், உங்களுக்குள் மாற்றத்தின் சக்தி குறைவாக உள்ளது. தற்சமயத்தின் முக்கியத்துவத்தை அறிந்திருந்தும், நீங்கள் மாற்றத்திற்காக அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது. மாற்றத்தின் சக்தி ஒரு விநாடியில் பயன்படுத்தப்பட வேண்டும். ஏதாவது ஒன்று நடக்கக்கூடாது என்பதை நீங்கள் புரிந்து கொண்டுள்ளதால், நீங்கள் அதைப் புரிந்து கொண்ட போதும், உங்களால் உங்களையே மாற்றிக் கொள்ள முடியாவிட்டால், அதற்கான காரணம் என்னவென்றால், நீங்கள் அதைப் பற்றி நினைக்கிறீர்கள், ஆனால் நீங்கள் அதன் சொரூபம் ஆகுவதில்லை. நாள் முழுவதும் நீண்ட நேரத்திற்கு அந்த எண்ணங்களின் சொரூபமாக நீங்கள் ஆகுகிறீர்கள். உங்களில் பெரும்பாலானோர் விழிப்புணர்வின் சொரூபமாகவும் அதனால் சக்தி சொரூபமாகவும் ஆகுவது குறைவாக உள்ளது.

இது இப்போது தீவிர வேகத்திற்கான நேரம் ஆகும், தீவிர முயற்சிக்கான நேரம் ஆகும். இது சாதாரணமான முயற்சிக்கான நேரம் அல்ல. ஒரு விநாடியில் மாற்றம் என்றால், நீங்கள் விழிப்புணர்வின் சொரூபம் ஆகுவதன் மூலம் ஒரு விநாடியில் எதிர்மறையான மற்றும் வீணான எண்ணங்களில் இருந்து நீங்கள் விடுபட வேண்டும். ஏன்? நீங்கள் நேரத்தையும் சம்பூரணத்தையும் நெருக்கமாகக் கொண்டு வருவதற்கான கருவிகள் ஆவீர்கள். அதனால், தற்போதைய நேரத்தின் முக்கியத்துவத்திற்கு ஏற்ப, ஒவ்வோர் அடியிலும் பலமில்லியன் மடங்குகள் அமிழ்ந்துள்ளன என்பதை நீங்கள் அறிந்திருப்பதனால், நீங்கள் அதை அதிகரிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை உங்களின் புத்தியில் வைத்திருக்கிறீர்கள். ஆனால், உங்களின் புத்தியும் உங்களால் அதை இழக்க முடியும் என்பதை உணர்ந்திருக்க வேண்டும். நீங்கள் ஒவ்வோர் அடியிலும் பலமில்லியன்களை உருவாக்கினால், உங்களால் ஓர் அடியில் பலமில்லியன்களை இழக்கவும் முடியும், அப்படித்தானே? அதனால், இப்போது, ஒரு நிமிடம் என்ற விடயம் முடிந்துவிட்டது. மற்றவர்களிடம் ஒரு நிமிடம் மௌனமாக இருக்க வேண்டும் என நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் உங்களுக்கு இப்போது இது ஒரு விநாடிக்குரிய விடயமாக இருக்க வேண்டும். ஆம் அல்லது இல்லை என நினைப்பதற்கு எவ்வளவு நேரம் எடுக்கும்? ஒரு விநாடியே. எனவே, இத்தகைய வேகமான மாற்றம் தேவைப்படுகிறது. ஏதாவதொன்று நன்றாக உள்ளதா அல்லது இல்லையா என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். நன்றாக இல்லாதிருப்பதற்கு ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள். நன்றாக இருப்பதை நடைமுறைப்படுத்துங்கள். இப்போது முற்றுப்புள்ளியின் முக்கியத்துவத்தைப் பயன்படுத்துங்கள். உங்களுக்கு மூன்று புள்ளிகளைப் பற்றித் தெரியும் அல்லவா? எவ்வாறாயினும், சரியான வேளையில் புள்ளியைப் (முற்றுப்புள்ளி) பயன்படுத்துங்கள். விஞ்ஞானிகள் இப்போது எல்லாவற்றையும் விரைவாகச் செய்கிறார்கள். அத்துடன் அவர்கள் மாற்றத்திற்கான சக்தியையும் அதிகளவில் பயன்படுத்துகிறார்கள். எனவே, மௌன சக்தியுடன் இப்போது நீங்கள் இந்த இலட்சியத்தை வைத்திருங்கள். அதாவது, நீங்கள் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினால். நீங்கள் ஞானம் நிறைந்தவர்கள். ஆனால் இப்போது ஒரு விநாடி வேகத்தில் சக்திசாலிகள் ஆகுங்கள். ‘நாங்கள் அதைச் செய்கிறோம், அது நடக்கும், நாங்கள் அதைச் செய்வோம்......’ இல்லை. இது சாத்தியமா அல்லது கஷ்டமா? ஏனென்றால், இறுதிக்கணத்தில், அது ஒரு விநாடிக்குரிய பரீட்சையாகவே இருக்கும். ஒரு நிமிடத்திற்கான பரீட்சை இல்லை. அதனால், நீண்ட காலத்திற்கு ஒரு விநாடிக்குரிய பயிற்சி உங்களுக்கு இருந்தால் மட்டுமே உங்களால் ஒரு விநாடியில் திறமைச்சித்தி எய்த முடியும். நீங்கள் இறை மாணவர்கள். நீங்கள் இந்த இறைகல்வியைக் கற்கிறீர்கள். நீங்கள் நிச்சயமாக திறமைச்சித்தி எய்த வேண்டும். எனவே, நீங்கள் சித்தி அடைவதற்கான மதிப்பெண்களை மட்டும் பெற்றால் என்ன நடக்கும்? திறமைச்சித்தி! நீங்கள் என்ன இலட்சியத்தை வைத்திருக்கிறீர்கள்? நீங்கள் திறமைச்சித்தி அடைய வேண்டும் என நம்புபவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! திறமைச்சித்தி! திறமை என்ற வார்த்தையைக் கீழ்க்கோடிடுங்கள்! அச்சா. எனவே, இப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும்? ‘ஒரு நிமிடத்தில் ஒரு மோட்டார்’ என்பது பொதுவானது. இது இப்போது ஒரு விநாடிக்குரிய விடயம் ஆகும்.

ஆம், பஞ்சாபைச் சேர்ந்தவர்களே, இது ஒரு விநாடிக்குரிய விடயம் ஆகும். இதில் யார் முதலாம் இலக்கத்தில் வருவார்கள்? பஞ்சாப். இது என்ன பெரிய விடயம்? நீங்கள் இத்தகைய போதையுடன் பேசுகிறீர்கள். நீங்கள் இத்தகைய போதையுடன் மிக நன்றாகப் பேசுகிறீர்கள். அதை பாப்தாதா கேட்கும்போது, அவர் மிகவும் மகிழ்கிறார். நீங்கள் கூறுகிறீர்கள்: ‘இது என்ன பெரிய விடயம், ஏனென்றால் பாப்தாதா எங்களுடன் இருக்கிறார்’. எனவே, அதிகாரி உங்களுடன் இருக்கிறார், இப்போது நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? நீங்கள் இப்போது தீவிர முயற்சியாளர்கள் ஆகவேண்டும். நீங்கள் சேவை செய்கிறீர்கள். சேவை செய்யாமல் நீங்கள் வேறு எதைச் செய்யப் போகின்றீர்கள்? எதுவும் செய்யாமல் அமர்ந்திருக்கப் போகிறீர்களா? சேவையே பிராமண ஆத்மாக்களின் தர்மமும் (மதம்) கர்மமும் (செயல்) ஆகும். எவ்வாறாயினும், இப்போது, சேவை செய்வதுடன்கூடவே, சக்தி சொரூபம் ஆகுங்கள். சேவை செய்வதற்காக நீங்கள் காட்டுகின்ற ஊக்கத்தினதும் உற்சாகத்தினதும் அளவைப் பார்த்து பாப்தாதா மகிழ்ச்சி அடைந்து, உங்களைப் பாராட்டுகிறார். எவ்வாறாயினும், எப்படி நீங்கள் சேவைக்கான கிரீடத்தைப் பெற்றுள்ளீர்களோ - நீங்கள் கிரீடங்களை அணிந்துள்ளீர்கள் (இளைஞர் குழு ஒரு கிரீடமும் பட்டியும் அணிந்திருந்தார்கள்) அவர் எப்படி இருக்கிறார்கள் எனப் பாருங்கள் - அதேபோல் இப்போது விழிப்புணர்வின் சொரூபமாக இருக்கும் கிரீடத்தை அணிவதன் மூலம் எல்லோருக்கும் காட்டுங்கள். இது இளைஞர் குழு, அல்லவா? எனவே, நீங்கள் என்ன அற்புதத்தைச் செய்வீர்கள்? சேவையில் முதல் இலக்கம், சக்தி சொரூபம் ஆகுவதில் முதல் இலக்கம். செய்தியை வழங்குவதும் பிராமண வாழ்க்கையின் தர்மமும் கர்மமும் ஆகும். ஆனால் பாப்தாதா இப்போது உங்களுக்கு மாற்றத்திற்கான பொறிமுறையை வேகமாக்குங்கள் என்ற சமிக்கையை வழங்குகிறார். இல்லாவிட்டால், உங்களுக்குத் திறமைச் சித்தி அடைவது கஷ்டமாகிவிடும். நீண்ட காலப்பகுதிக்கு இதைப் பயிற்சி செய்வது அவசியம். இதைப் பற்றிச் சிந்தித்து, அதைச் செய்யுங்கள்! எண்ணத்தின் சொரூபமாக மட்டும் ஆகாதீர்கள். அத்துடன் விழிப்புணர்வின் சொரூபமாகவும் அதனால் சக்தி சொரூபமாகவும் ஆகுங்கள். வீணான எதையும் துரித வேகத்தில் முடித்துவிடுங்கள். வீணான எண்ணங்கள், வீணான வார்த்தைகள், வீணான செயல்கள், வீணான நேரம், உறவுமுறைகளிலும் தொடர்புகளிலும் உள்ள வீணான வழிமுறைகளும் சம்பிரதாயங்களும் - இவை அனைத்தையும் முடித்துவிடுங்கள். பிராமண ஆத்மாக்களான நீங்கள் அந்த வீணானவை அனைத்தையும் உங்களுக்குள் விரைவாக முடிக்கும்போது, நீங்கள் விரைவாக ஆத்மாக்களிடம் இருந்து ஆசீர்வாதங்களைப் பெறுவதுடன் உங்களின் புண்ணியக் கணக்கையும் அதிகரிப்பீர்கள்.

பாப்தாதா மூன்று வகையான கணக்குகளைச் சோதிக்கிறார் என பாப்தாதா முன்னரே உங்களுக்குக் கூறியுள்ளார். முயற்சியின் வேகத்தின் கணக்கு, ஆசீர்வாதங்களின் கணக்கு, புண்ணியக்கணக்கு. எவ்வாறாயினும், பெரும்பாலானோரின் கணக்குகள் நிரம்பி இருக்கவில்லை. இதனாலேயே, பாப்தாதா இன்று உங்களுக்கு இந்த சுலோகனை நினைவூட்டுகிறார்: இப்போது வேகம் ஆகுங்கள், தீவிர முயற்சியாளர்கள் ஆகுங்கள். எல்லாவற்றையும் விரைவில் முடிப்பவர்கள் ஆகுங்கள். தமது மனங்களால் சூழலை விரைவில் மாற்றக் கூடியவர்கள் ஆகுங்கள்.

பாப்தாதா ஒரு விடயத்தை இட்டுக் குழந்தைகள் எல்லோருடனும் மகிழ்ச்சி அடைகிறார். அது என்ன? உங்கள் எல்லோருக்கும் தந்தையின் மீது உங்களின் இதயபூர்வமாக ஆழ்ந்த அன்பு உள்ளது. அதற்காகப் பாராட்டுக்கள். எவ்வாறாயினும், நீங்கள் என்ன செய்ய வேண்டும் என நான் உங்களுக்குச் சொல்லட்டுமா? இந்தப் பருவகாலத்தின் இறுதியில் - உங்களுக்கு இன்னமும் நேரம் உள்ளது - இந்தப் பருவகாலத்தின் முடிவின்போது, துரித வேகத்தில் ஏதாவதொரு கோலாகலத்தைக் காட்டுங்கள். உங்களுக்கு இது பிடித்திருக்கிறதா? உங்களுக்கு இது பிடித்திருக்கிறதா? இலட்சியத்தையும் அதன் தகைமைகளையும் உங்களின் விழிப்புணர்வில் வைத்திருப்பீர்கள் என்று உணர்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! இலட்சியத்தையும் அதன் தகைமைகளையும் உங்களுக்கு முன்னால் வைத்திருப்போம் என்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! இரட்டை வெளிநாட்டவர்கள் இதைச் செய்வார்கள், ஆசிரியர்கள் இதைச் செய்வார்கள். இளைஞரும் இதைச் செய்வார்கள். முதல் வரிசையில் இருப்பவர்களும் இதைச் செய்வார்கள். எனவே, முன்கூட்டியே பற்பல, பற்பல பாராட்டுக்கள். அச்சா.

இப்போது, இதை இப்போதே பயிற்சி செய்யுங்கள். ஒரு விநாடியில் எதிர்மறையான எண்ணங்களில் இருந்து விடுபடுங்கள். வீணான எண்ணங்களில் இருந்து விடுபடுங்கள். ஸ்திரமாகி, வேறு எவருக்கும் அன்றி ஒரேயொரு தந்தை என்பதில் ஒருமுகப்படுங்கள். உங்களால் அமர்ந்திருந்து, இந்த ஓர் எண்ணத்தில் உங்களால் ஒருமுகப்பட முடிகிறதா? வேறெந்த எண்ணங்களும் இருக்கக்கூடாது. ஒரேயொரு எண்ணத்தில் ஒருமுகப்படும் அனுபவத்துடன் அமர்ந்திருங்கள். நேரத்தை எடுக்காதீர்கள். ஆனால் ஒரு விநாடியில் அதைச் செய்யுங்கள். அச்சா.

எங்கும் இருந்து விசேடமான அன்பையும் நினைவுகளையும் அனுப்பி வைத்துள்ள குழந்தைகள் எல்லோருக்கும் அந்த ஒவ்வொரு குழந்தையும் உங்களின் பெயரால் தனிப்பட்ட முறையில் அன்பையும் நினைவுகளையும் இதயபூர்வமான ஆசீர்வாதங்களையும் ஏற்றுக் கொள்ளுங்கள். பாப்தாதா இதை ஒவ்வொருவரின் இதயத்திலும் பார்க்கிறார்: ‘எனது நினைவை வழங்குங்கள், எனது நினைவை வழங்குங்கள்’. எவ்வாறாயினும், குழந்தைகளான உங்களுக்கு இந்த எண்ணம் ஏற்பட்ட கணமே, அந்த வேளையிலேயே அது பாப்தாதாவை வந்தடைகிறது. ஆகவே, பாபா உங்களின் பெயர்களுக்கும் உங்களின் சிறப்பியல்புகளுக்கும் ஏற்ப தனிப்பட்ட முறையில் குழந்தைகளான உங்கள் எல்லோருக்கும் அன்பையும் நினைவையும் வழங்குகிறார்.

சதா விழிப்புணர்வின் சொரூபங்களாகவும் சக்தி சொரூபங்களாகவும் அனுபவத்தின் சொரூபங்களாகவும் உள்ள மேன்மையான குழந்தைகள் எல்லோருக்கும் உங்களிடம் உள்ள தூய எண்ணங்களை எப்போதும் உடனடியாக நடைமுறையில் இடுபவர்களுக்கும் - உடனடித் தானத்திற்கு முக்கியத்துவம் இருப்பதைப் போல், உடனடி மாற்றத்திற்கும் முக்கியத்துவம் உள்ளது - உடனடி மாற்றத்தை ஏற்படுத்தும் உலகை மாற்றுகின்ற குழந்தைகளுக்கும் இறை பராமரிப்பையும் இறையன்பையும் இறை கல்வியையும் இறை ஸ்ரீமத்தையும் தமது ஒவ்வொரு செயலிலும் கொண்டு வருகின்ற மகாவீர் குழந்தைகள் எல்லோருக்கும் தமது தைரியம், ஒருமுகப்படுதல், ஒற்றுமையால் முதலாம் இலக்கத் தீவிர முயற்சி செய்கின்ற மகாவீர் குழந்தைகளுக்கும் பாப்தாதாவின் இதயபூர்வமான அன்பும் நினைவுகளும் அவரின் இதயபூர்வமான ஆசீர்வாதங்களும் நமஸ்தேயும்.

தாதிகளிடம்: நீங்கள் எல்லோரும் நல்ல பாகங்களை நடிக்கிறீர்கள். பாப்தாதா ஒவ்வொருவரின் பாகத்தையும் பார்த்து மகிழ்ச்சி அடைவார். இளையவர்களும் நல்லதொரு பாகங்களை நடிக்கிறார்கள். நீங்கள் இளையவர்கள் என்று மட்டும் நினைக்காதீர்கள். இளையவர்கள் இறைவனுக்குச் சமமானவர்கள். சக்திகள் தமது சொந்தப் பாகங்களை நடிக்கிறார்கள். பாண்டவர்கள் தமது சொந்தப் பாகங்களை நடிக்கிறார்கள். பாண்டவர்கள் அங்கே இல்லாவிட்டால் எதுவும் தொடர்ந்து நடக்காது, சக்திகள் அங்கே இல்லாவிட்டால் எதுவும் தொடர்ந்து நடக்காது. இதனாலேயே, பாரதத்தில் நான்கு கரத்தின் ரூபம் ஞாபகார்த்தமாக உள்ளது. வேறெந்த மதத்திலும் அவர்கள் நான்கு கர ரூபத்தைக் காட்டுவதில்லை. ஆனால், பாரதத்தில் நான்கு கர ரூபத்திற்கு முக்கியத்துவம் உள்ளது. எனவே, இருவரும் மிக நல்ல பாகங்களை நடிக்கிறார்கள். எவ்வாறாயினும், இப்போது எல்லாவற்றையும் விரைவாகச் செய்யுங்கள், அவ்வளவுதான். சிலவேளைகளில், நீங்கள் சிறிது பின்தங்குகிறீர்கள். இப்போது இது பின்தங்குவதற்கான நேரம் இல்லை. வெவ்வேறு விடயங்கள் பல நடக்கின்றன. ஆனால், அந்தச் சூழ்நிலைகளின் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதன் மூலம், நீங்கள் தொடர்ந்து முன்னேறும்போது, ராசியுக்த், யோகியுக்த், சிநேயுக்த் (அன்பானவர்), சகயோகியுக்த் (ஒத்துழைப்பவர்) ஆக இருக்க வேண்டும். இது ஓகேயா? (தாதிஜியிடம்) இது மிகவும் நல்லதுதானே? எப்படிப் பலர் வந்துள்ளனர் எனப்பாருங்கள். அவர்கள் ஏன் வந்துள்ளனர்? ஏன் எல்லோரும் வந்துள்ளனர்? உங்களைச் சந்திப்பதற்காக. அவர்கள் பாப்தாதாவைச் சந்திக்கவே வந்துள்ளனர். எனினும் தாதிகள் இங்கில்லா விட்டால், தாம் அதை இரசிப்பதில்லை என அவர்கள் சொல்கிறார்கள். எனவே, நீங்கள் எல்லோரும் இங்கே இல்லா விட்டாலும் களிப்பு இருக்காது.

ஆசீர்வாதம்:
நீங்கள் விழிப்புணர்வு எனும் ஆளியைப் போடுவதன் மூலம் வெற்றி சொரூபமாகி, உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நன்மையை ஏற்படுத்துவீர்களாக.

உங்களின் ஸ்திதியின் அடிப்படை, உங்களின் விழிப்புணர்வே ஆகும். ‘நான் தந்தைக்குச் சொந்தமானவன், தந்தை எனக்குச் சொந்தமானவர்’ என்ற இந்த சக்திவாய்ந்த விழிப்புணர்வை சதா கொண்டிருங்கள். இந்த விழிப்புணர்வைக் கொண்டிருப்பதன் மூலம், உங்களின் ஸ்திதி சக்திவாய்ந்ததாக இருக்கும். நீங்கள் மற்றவர்களையும் சக்திவாய்ந்ததாக ஆக்குங்கள். ஓர் ஆளியைப் போட்டதும், வெளிச்சம் ஏற்படும். அதேபோல், இந்த விழிப்புணர்வும் ஓர் ஆளியே ஆகும். கவனம் செலுத்துதல் என்ற ஆளி சதா போடப்பட்டே இருக்க வேண்டும். நீங்கள் தொடர்ந்து உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நன்மை செய்வீர்கள். உங்களிடம் புதிய பிறவியும் புதிய ஞாபகங்களும் இருப்பதனால், கடந்த காலத்தின் ஞாபகங்கள் எல்லாவற்றையும் முடித்து விடுங்கள். இந்த வழிமுறையைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் வெற்றி சொரூபமாக இருக்கும் ஆசீர்வாதத்தைப் பெறுவீர்கள்.

சுலோகம்:
அதீந்திரிய சுகத்தை அனுபவம் செய்வதற்கு, அமைதி சொரூபம் என்ற உங்களின் ஸ்திதியில் ஸ்திரமாக இருங்கள்.

அவ்யக்த சமிக்கை: ஓர் இலகு யோகி ஆகுவதற்கு, இறையன்பை அனுபவிப்பவர் ஆகுங்கள்.

பாப்தாதா அன்பெனும் பந்தனத்தில் கட்டுண்டு இருக்கிறார். அவர் விரும்பினாலும் அவரால் அதில் இருந்து விடுபட முடியாது. இதனாலேயே, பக்தி மார்க்கத்தில் கட்டுண்டு இருக்கும் ஒரு ரூபத்தை அவர்கள் காட்டி உள்ளார்கள். அவ்யக்தாக இருந்தபோதும், அவர் நடைமுறை ரூபத்தில் ஒரு பந்தனத்தால் கட்டுப்பட்டு இருக்க வேண்டியுள்ளது. அவர் பௌதீக ரூபத்தில் இருந்து விடுபட்ட போதிலும், அவரால் விடுபட முடியாது. இந்த அன்பெனும் பந்தனம் மிகவும் பலமானது. அன்பெனும் சொரூபம் ஆகி, அன்பெனும் பந்தனத்தால் ஒருவரை ஒருவர் கட்டி, நெருக்கமான உறவுமுறையினதும் சொந்தமாக இருப்பதனதும் அனுபவத்தைக் கொடுங்கள்.