01.09.24    Avyakt Bapdada     Tamil Lanka Murli    25.11.2001     Om Shanti     Madhuban


நல்லாசிகளைக் கொடுத்து, நல்லாசிகளைப் பெறுங்கள். எந்தவொரு காரணத்திற்கும் ஒரு தீர்வைக் கண்டு, சகல பிரச்சனைகளையும் தீருங்கள்.


இன்று, அன்புக் கடலான பாப்தாதா, அன்பின் சொரூபங்களாக இருக்கும் தனது குழந்தைகளின் அன்பு இழைகளால் இழுக்கப்பட்டு, ஒரு சந்திப்பைக் கொண்டாட வந்துள்ளார். குழந்தைகள் அழைத்தார்கள். எனவே, பிரபு (ஹஸுர்) பிரசன்னம் (ஹாஸிர்) ஆகினார். நீங்கள் சதா சூட்சும சந்திப்பைக் கொண்டாடுகிறீர்கள். ஆனால், அப்படியிருந்தும், நீங்கள் பாப்தாதாவை பௌதீக ரூபத்தில் அழைத்தீர்கள். அதனால் பாப்தாதா குழந்தைகளான உங்களுக்காக இந்த எல்லையற்ற ஒன்றுகூடலுக்குள் வந்துள்ளார். குழந்தைகளின் அன்பைப் பார்க்கும்போது பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். அவரின் இதயத்தில், எங்கும் உள்ள குழந்தைகள் எல்லோருக்காகவும் இந்தப் பாடலைப் பாடுகிறார்: ‘ஆஹா! மேன்மையான, பாக்கியசாலிக் குழந்தைகளே! ஆஹா! இறையன்பிற்குத் தகுதிவாய்ந்த ஆத்மாக்களே, ஆஹா!’ இத்தகைய மகத்தான பாக்கியத்தைக் கொண்டிருப்பதுடன் அதை இலகுவாகச் சாதாரணமான முறையில் அடைவது என்பதை நீங்கள் உங்களின் கனவுகளிலேனும் நீங்கள் நினைத்திருக்கவில்லை. எவ்வாறாயினும், இன்று, நீங்கள் உங்களின் பாக்கியத்தை பௌதீகமான வடிவில் காண்கிறீர்கள். வெகு தொலைவில் உள்ள குழந்தைகளும் ஒரு சந்திப்பைக் கொண்டாடுவதை பாப்தாதா பார்க்கிறார். பாப்தாதா அவர்களைப் பார்க்கிறார். அவர்களுடன் சந்திப்பைக் கொண்டாடுகிறார். பெரும்பாலான தாய்மார்கள் ஒரு பொன்னான வாய்ப்பைப் பெற்றுள்ளார்கள். பாப்தாதாவும் குறிப்பாக சக்தி சேனையைப் பார்க்கும்போது மகிழ்ச்சி அடைகிறார். நான்கு சுவர்களுக்குள் இருக்கும் தாய்மார்கள் தந்தையினூடாக உலக உபகாரிகள் ஆகியுள்ளார்கள். அத்துடன் உலக இராச்சியத்தின் உரிமையைப் பெற்றுள்ளார்கள். நீங்கள் இப்படி ஆகியுள்ளீர்களா அல்லது இன்னமும் அப்படி ஆகிக் கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் என்ன சொல்வீர்கள்? நீங்கள் இப்படி ஆகிவிட்டீர்கள்தானே? உங்கள் எல்லோரிடமும் உலக இராச்சியத்தின் வெண்ணெய் உருண்டை உங்களின் கைகளில் உள்ளதல்லவா? மதுவனத்தை வந்தடைந்துள்ள தாய்மார்களான நீங்கள் எல்லோரும் ஒரு விடயத்தை இட்டு சந்தோஷப்படுவதை பாப்தாதா பார்த்தார். நீங்கள் எதையிட்டு சந்தோஷப்படுகிறீர்கள்? அதாவது, பாப்தாதா விசேடமாகத் தாய்மார்களை அழைத்துள்ளார் என்பதையிட்டு. எனவே, தாய்மார்களான உங்களிடம் விசேடமான அன்பு உள்ளதல்லவா? நீங்கள் போதையுடன் கூறுகிறீர்கள்: ‘பாப்தாதா எங்களை அழைத்துள்ளார். எங்களுக்கு அழைப்பு வந்துள்ளது, அப்படியிருக்கும்போது நாம் ஏன் வராமல் விடுவோம்?’ பாப்தாதா தொடர்ந்து எல்லோருடைய இதயபூர்வமான உரையாடல்களைக் கேட்பதுடன் தொடர்ந்து இந்த சந்தோஷ போதையையும் அவதானிக்கிறார். உண்மையில், பாண்டவர்களும் இதில் சளைத்தவர்கள் இல்லை. உலகப் பணியின் பூர்த்தியானது, பாண்டவர்கள் இல்லாமல் நடக்க முடியாது. எவ்வாறாயினும், இன்று, பாண்டவர்களும் குறிப்பாகத் தாய்மார்களை முன்னால் வைத்திருக்கிறார்கள்.

குழந்தைகளான உங்கள் எல்லோருக்கும் மிக இலகுவாக முயற்சி செய்வதற்கான வழிமுறையை பாப்தாதா கூறுகிறார். தாய்மார்கள் அனைத்தும் இலகுவாக இருக்க வேண்டும் என விரும்புகிறீர்கள்தானே? அதனால், பாப்தாதா தாய்மார்களான உங்களுக்கும் குழந்தைகளுக்கும் எல்லாவற்றிலும் மிக இலகுவாக செய்யக்கூடிய வழிமுறை என்னவென்று கூறுகிறார்: நடக்கும்போதும் அசையும்போதும் மற்றவர்களுடன் தொடர்பிலும் உறவுமுறையிலும் வரும்போதும், ஒவ்வோர் ஆத்மாவிற்கும் உங்களின் இதயபூர்வமான நல்லாசிகளின் உணர்வுகளைக் கொடுப்பதுடன் மற்றவர்களிடமிருந்து நல்லாசிகளையும் பெற்றுக் கொள்ளுங்கள். மற்றவர்கள் உங்களுக்கு எதைக் கொடுத்தாலும், அவர்கள் தீங்கு நினைத்தாலும், உங்களின் நல்லாசிகளின் சக்தியால், அந்தத் தீங்கான எண்ணங்களை நல்லாசிகளாக மாற்றுங்கள். ஒவ்வோர் ஆத்மாவும் உங்களிடமிருந்து நல்லாசிகளை அனுபவம் செய்ய வேண்டும். அந்த வேளையில், தீங்கு நினைக்கும் அந்த ஆத்மா ஏதாவதொரு விகாரத்தின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கிறார் என்பதை அனுபவம் செய்யுங்கள். ஏதாவதொன்றின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட ஆத்மாவிற்காக அல்லது யாராவது ஒருவரின் கட்டுப்பாட்டின் கீழுள்ள ஒருவருக்காக நீங்கள் ஒருபோதும் தீங்கு நினைக்கக்கூடாது. அத்தகையதோர் ஆத்மாவிற்கு உதவி செய்வதற்காக நல்லாசிகள் எப்போதும் வெளிப்பட வேண்டும். ஒரு விடயத்தை நினைவில் வைத்திருங்கள்: ‘நான் சதா ஒரு பணியையே செய்ய வேண்டும் - எனது எண்ணங்களாலும் எனது வார்த்தைகளாலும் எனது செயல்களாலும் எனது தொடர்புகள் மற்றும் உறவுகளாலும் நான் நல்லாசிகளைக் கொடுத்து, நல்லாசிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்’. எந்தவோர் ஆத்மாவிற்காகவும் உங்களிடம் வீணான அல்லது எதிர்மறையான எண்ணங்கள் இருந்தால், உங்களின் கடமை என்னவென்பதை நினையுங்கள். உதாரணமாக, எங்கேயாவது தீப்பிடித்திருப்பதை தீயணைக்கும் படையினர் கண்டால், அவர்கள் அந்தத் தீயை நீரூற்றி அணைக்கும் தமது கடமையை மறக்க மாட்டார்கள். தாங்களே அந்தத் தீயின் மீது நீரை ஊற்றியவர்கள், அந்தத் தீயை அணைத்தவர்கள் என்பதை அவர்கள் நினைவில் வைத்திருப்பார்கள். அதேபோல், ஒருவர் ஏதாவது விகாரத்தீயின் ஆதிக்கத்தின் கீழிருந்து உங்களுக்குப் பிடிக்காத ஒரு காரியத்தைச் செய்வாராயின், உங்களின் பணி என்னவென்பதை நினைவில் வைத்திருங்கள்: எனது கடமை, எந்த வகையான நெருப்பையும் அணைப்பதும் ஆசீர்வாதங்களைக் கொடுப்பதும் நல்லாசிகளுக்கான உணர்வுகளின் ஒத்துழைப்பை வழங்குவதும் ஆகும். ஒரேயொரு வார்த்தையை நினைவில் வைத்திருங்கள். தாய்மார்கள் இலகுவாக ஒரு வசனத்தை நினைவில் வைத்திருக்க வேண்டும்: நல்லாசிகளைக் கொடுங்கள், நல்லாசிகளைப் பெறுங்கள். தாய்மார்களான உங்களால் இதைச் செய்ய முடியுமா? (தாய்மார்கள் எல்லோரும் தமது கைகளை உயர்த்தினார்கள்) உங்களால் இதைச் செய்ய முடியுமா? அல்லது நீங்கள் அதைச் செய்வீர்கள் என உணர்கிறீர்களா? பாண்டவர்களான உங்களால் இதைச் செய்ய முடியுமா? நீங்கள் இதைச் செய்வீர்கள் எனப் பாண்டவர்களான நீங்கள் சொல்கிறீர்கள். பாண்டவர்கள் சதா வெற்றியாளர்கள் என்று நினைவுகூரப்படுகிறார்கள். சக்திகள் சதா உலக உபகாரிகளாக இருப்பதில் பிரபல்யமாக இருக்கிறார்கள்.

எங்கும் உள்ள குழந்தைகள் எல்லோராலும் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற ஒரு நம்பிக்கையை பாப்தாதா இன்னமும் வைத்துள்ளார். அந்த ஒரு நம்பிக்கை என்னவென்று பாபா உங்களுக்குச் சொல்லட்டுமா? உங்களுக்கு அது என்னவென்று ஏற்கனவே தெரியும். ஆசிரியர்களான நீங்கள் அதை அறிவீர்கள்தானே? குழந்தைகளான நீங்கள் எல்லோரும் உங்களின் கொள்ளளவிற்கேற்ப முயற்சி செய்கிறீர்கள். உங்களின் முயற்சிகளைப் பார்த்து பாப்தாதா புன்னகை செய்கிறார். எவ்வாறாயினும், இப்போது உங்களின் முயற்சிகளில் துரித கதி ஏற்பட வேண்டும் என்பதே அந்த ஓர் ஆசையாகும். முயற்சிகள் உள்ளன. ஆனால் அவை இப்போது துரித கதியில் இருக்க வேண்டும். இதைச் செய்வதற்கான வழிமுறை, காரணம் என்ற வார்த்தையை முடித்து, சதா தீர்வுகளின் சொரூபம் ஆகுவதாகும். காலத்திற்கேற்ப காரணங்கள் உள்ளன. தொடர்ந்தும் காரணங்கள் ஏற்படும். எவ்வாறாயினும், நீங்கள் எல்லோரும் தீர்வுகளின் சொரூபங்கள் ஆகவேண்டும். ஏனென்றால், உலகிற்கே தீர்வுகளைக் காண்பதன் மூலம் குழந்தைகளான நீங்கள் எல்லோரும் ஆத்மாக்களில் பெரும்பாலானோரை நிர்வாணா தாமத்திற்கு அனுப்ப வேண்டும். நீங்கள் உங்களைத் தீர்வுகளின் சொரூபங்கள் ஆக்கினால் மட்டுமே, உங்களால் உலகிலுள்ள ஆத்மாக்களின் பிரச்சனைகள் எல்லாவற்றுக்கும் தீர்வுகளைக் காண முடியும். அத்துடன் அவர்களை நிர்வாணா தாமத்திற்கும் அனுப்ப முடியும். இப்போது, உலகிலுள்ள ஆத்மாக்களுக்கு முக்தி தேவைப்படுகிறது. நீங்களே அவர்கள் தந்தையிடமிருந்தும் முக்தியின் ஆஸ்தியைப் பெறச் செய்வதற்கான கருவிகள் ஆவீர்கள். ஆகவே, கருவி ஆத்மாக்களான நீங்கள் வெவ்வேறு பிரச்சனைகளுக்குமான காரணங்களின் தீர்வுகளைக் கண்டறிவதன் மூலம், உங்களை முதலில் விடுவிப்பதன் மூலம், உங்களால் உலகமே முக்திக்கான ஆஸ்தியைப் பெறச் செய்ய முடியும். எனவே, நீங்கள் விடுதலை அடைந்துவிட்டீர்களா? எந்தவகையான பிரச்சனைக்கான காரணமும் உங்களின் முன்னால் வரக்கூடாது: ‘இந்தக் காரணத்தால், வேறொரு காரணத்தால், இந்தக் காரணத்தால் போன்றவை’. எந்தவொரு காரணமும் உங்களுக்கு முன்னால் வரும்போது, ஒரு விநாடியில் அதற்கான காரணத்திற்கான தீர்வைச் சிந்தித்துப் பாருங்கள். இப்படிச் சிந்தியுங்கள்: ‘உலகிற்கே தீர்வினை நான் கண்டுபிடிக்கும்போது, என்னால் எனது அற்பமான பிரச்சனைகளுக்குத் தீர்வினைக் காண முடியாதா?’ உங்களால் அதைச் செய்ய முடியாதா? இப்போது, ஆத்மாக்கள் வரிசையாக உங்களின் முன்னால் வந்து, ‘ஓ முக்தியை அருள்பவர்களே, எங்களுக்கு முக்தி கொடுங்கள்!’ எனக் கேட்பார்கள். ஏனென்றால், நீங்கள் முக்தியை அருள்பவரின் நேரடிக் குழந்தைகள் ஆவீர்கள். நீங்கள் உரிமையுள்ள குழந்தைகள். நீங்கள் மாஸ்ரர் முக்தியை அருள்பவர்கள்தானே? எவ்வாறாயினும், ஒரு தடையின் கதவு, மாஸ்ரர் முக்தியை அருள்பவர்களான உங்களால் அந்த வரிசையின் முன்னால் மூடப்பட்டுள்ளது. வரிசை தயாராக உள்ளது. ஆனால் எந்தக் கதவு இன்னமும் மூடியுள்ளது? உங்களின் முயற்சிகளைப் பொறுத்தவரை, பலவீனமான முயற்சியின் ஒரு வார்த்தைக்கான கதவு, ‘ஏன்?’ (கியூ), ‘ஏன்?’ என்ற கேள்விக்குறி. என்பதாகும். ‘ஏன்?’ என்ற இந்த வார்த்தை உங்களின் முன்னால் வரிசையைக் கொண்டு வரமாட்டாது. அதனால், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள குழந்தைகளான உங்களுக்கு பாப்தாதா நினைவூட்டுகிறார்: இப்போது பிரச்சனைகளின் கதவிற்கு, ‘ஏன்?’ என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். உங்களால் இதைச் செய்ய முடியுமா? ஆசிரியர்களான உங்களால் இதைச் செய்ய முடியுமா? பாண்டவர்களான உங்களால் இதைச் செய்ய முடியுமா? உங்களில் ஒவ்வொருவரும் உங்களின் கையை உயர்த்துகிறீர்களா அல்லது உங்களில் சிலர் மட்டுமே உயர்த்துகிறீர்களா? வெளிநாட்டவர்களான நீங்கள் என்றும் தயாராக இருக்கிறீர்கள்தானே? ஆமா அல்லது இல்லையா? ஆம் என்றால், உங்களின் கைகளை உயரே தூக்குங்கள். சிலர் இதை இப்படிச் செய்கிறார்கள். இப்போது, எந்தவொரு நிலையத்திலும் எந்தவொரு பிரச்சனையின் பெயரோ அல்லது சுவடோ இருக்கக்கூடாது. இது சாத்தியமா? ‘நான் இதைச் செய்ய வேண்டும்!’ என நீங்கள் ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும். ‘நான் இதைச் செய்ய வேண்டும்’ என ஆசிரியர்கள் நினைக்க வேண்டும். ‘நான் இதைச் செய்ய வேண்டும்’ என மாணவர்கள் நினைக்க வேண்டும். ‘நான் இதைச் செய்ய வேண்டும்’ என இல்லறத்தவர்கள் நினைக்க வேண்டும். மதுவனவாசிகள், ‘நான் இதைச் செய்ய வேண்டும்’ என நினைக்க வேண்டும். உங்களால் இதைச் செய்ய முடியுமா? ‘பிரச்சனை’ என்ற வார்த்தை முடிந்ததும், காரணங்கள் முடிந்து, தீர்வுகள் ஏற்படுவது சாத்தியமா? எதுதான் சாத்தியமில்லை? ஸ்தாபனையின் ஆரம்ப காலத்தில் வந்த குழந்தைகள் என்ன சத்தியத்தைச் செய்தார்கள்? அவர்கள் அதை நடைமுறையில் இட்டுச் செய்து காட்டினார்கள். அவர்கள் அசாத்தியத்தையும் சாத்தியமாக்கிக் காட்டினார்கள். நீங்கள் இதைக் காட்டினீர்கள்தானே? எனவே, எத்தனை வருடங்கள் கடந்துவிட்டன? ஸ்தாபனையில் இருந்து இப்போது எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன? (65). எனவே, இத்தனை வருடங்களில், அசாத்தியம் சாத்தியம் ஆகாதா? இது சாத்தியமா? பிரதான ஆசிரியர்களே, உங்களின் கைகளை உயர்த்துங்கள்! பஞ்சாபில் இருந்து வந்திருப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துகிறீர்கள் இல்லை. ஏதாவது சந்தேகம் உள்ளதா? நீங்கள் சிறிது சிந்திக்கிறீர்கள். அதைப் பற்றிச் சிந்திக்காதீர்கள். நான் செய்ய வேண்டும். மற்றவர்களைப் பற்றிச் சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்காகச் சிந்திக்க வேண்டும். உங்களால் உங்களைப் பற்றிச் சிந்திக்க முடியுமல்லவா? மற்றவர்களை மறந்துவிடுங்கள், உங்களால் உங்களைப் பற்றிச் சிந்திக்கவும் உங்களுக்குள் தைரியத்தைக் கொண்டிருக்கவும் முடியுமல்லவா? அல்லது, இல்லையா? வெளிநாட்டவர்களான உங்களால் இந்தத் தைரியத்தைக் கொண்டிருக்க முடியுமா? பாராட்டுக்கள்! அச்சா, இப்போது இதைப் புரிந்து கொள்பவர்கள், உங்களின் கைகளை இதயபூர்வமாக உயர்த்துங்கள். மேலோட்டமாக இல்லை. மற்றவர்கள் செய்வதனால் நான் எனது கைகளை உயர்த்துவதாக இருக்கக்கூடாது. காரணங்களை முடித்து, நிச்சயமாகத் தீர்வுகளின் சொரூபம் ஆகுகின்ற திடசங்கற்பம் உங்களின் இதயத்தில் இருந்தால், என்னதான் நடந்தாலும் அல்லது நீங்கள் எதைச் சகித்துக் கொள்ள வேண்டியிருந்தாலும், நீங்கள் மாயையை எதிர்க்க வேண்டியிருந்தாலும், உங்களின் தொடர்புகளிலும் உறவுமுறைகளிலும் ஒருவரையொருவர் சகித்துக் கொள்ள வேண்டியிருந்தாலும், நீங்கள் ஒரு பிரச்சனை ஆகக்கூடாது. இது சாத்தியமா? இந்தத் திடசங்கற்பமான நம்பிக்கை உங்களுக்கிருந்தால், பின்னால் அமர்ந்திருப்பவர்களில் இருந்து முன்னால் இருப்பவர்கள்வரை, உங்களின் கைகளை உயர்த்துங்கள்! (பாப்தாதா அவர்கள் எல்லோரையும் அவர்களின் கைகளை உயர்த்தச் செய்ததுடன் இந்தக் காட்சியைத் தொலைக்காட்சியிலும் பார்த்தார்) இது உங்களுக்கு நல்லதொரு பயிற்சியாகும். இதனாலேயே, பாப்தாதா உங்களைக் கைகளை உயர்த்தச் செய்கிறார். மற்றவர்கள் தமது கைகளை உயர்த்துவதைப் பார்க்கும்போது உங்களுக்கு உற்சாகம் ஏற்படுவதைப் போல், எப்போதெல்லாம் ஒரு பிரச்சனை ஏற்படுகிறதோ, அப்போது பாப்தாதாவை உங்களின் முன்னால் பாருங்கள். உங்களின் இதயங்களில், ‘பாபா’ எனச் சொல்லுங்கள். பாபா அங்கே பிரசன்னம் ஆகுவார். பிரச்சனையும் முடிந்துவிடும். உங்களுக்கு முன்னாலுள்ள பிரச்சனை அப்பால் சென்றுவிடும். பாப்தாதா உங்களுக்கு முன்னால் இருப்பார். எப்போதும், உங்களின், ‘ஒரு மாஸ்ரர் சர்வசக்திவான், சகல சக்திகளையும் கொண்டவர்’ என்ற பட்டத்தை ஒவ்வொரு கணமும் நினையுங்கள். இல்லாவிட்டால், பாப்தாதா வழங்கும் அன்பிலும் நினைவிலும், ‘மாஸ்ரர் சர்வசக்திவான்கள், சகல சக்திகளையும் கொண்டவர்கள்’ என அவர் சொல்ல மாட்டாரா? அதற்குப் பதிலாக, ‘சக்திகளைக் கொண்டவர்கள்’ என்று மட்டும் சொல்வாரா? ‘சக்திகளைக் கொண்டுள்ள குழந்தைகளுக்கு அன்பும் நினைவுகளும்’ என பாபா சொல்வதை நீங்கள் விரும்புகிறீர்களா? நீங்கள் மாஸ்ரர் சர்வசக்திவான்கள், சகல சக்திகளையும் கொண்டவர்கள். எனவே, ஒரு மாஸ்ரர் சர்வசக்திவானால் என்னதான் செய்ய முடியாது? உங்களின் பட்டத்தையும் உங்களின் கடமையையும் நினையுங்கள். ‘மாஸ்ரர் சர்வசக்திவான், சகல சக்திகளையும் கொண்டவர்’ என்பதே ஒவ்வொருவரின் பட்டமும் ஆகும். ‘உலக உபகாரி’ என்பதே உங்களின் கடமை ஆகும். உங்களின் பட்டத்தையும் கடமையையும் நீங்கள் சதா நினைப்பதன் மூலம், சக்திகள் வெளிப்படும். ஒரு மாஸ்ரர் ஆகுங்கள். சக்திகளினதும் மாஸ்ரர் ஆகுங்கள். ஒரு கட்டளை இடுங்கள். தேவைப்படும் வேளையில் சரியான சக்திக்குக் கட்டளை இடுங்கள். உண்மையில், நீங்கள் சக்திகளைக் கிரகிக்கிறீர்கள். உங்களிடம் அவை உள்ளன. ஆனால், தவறவிடப்படும் ஒரு விடயம் என்னவென்றால், சிலவேளைகளில் உங்களுக்குத் தேவைப்படும் வேளையில் அவற்றைப் பயன்படுத்துவது எப்படி எனத் தெரியவில்லை. காலம் கடந்த பின்னர், ‘அதற்குப் பதிலாக நான் இதைச் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்’ என நீங்கள் நினைக்கிறீர்கள். இப்போது, சரியான வேளையில் உங்களுக்குள் அமிழ்ந்துள்ள சக்திகள் அனைத்தையும் பயன்படுத்துவதைப் பயிற்சி செய்யுங்கள். பௌதீக அங்கங்களுக்குக் கட்டளை இடுவதன் மூலம் அவற்றைப் பயன்படுத்துங்கள். நீங்கள் உங்களின் கைகளையும் பாதங்களையும் பயன்படுத்துகிறீர்கள்தானே? அதேபோல், ஒவ்வொரு சக்திக்கும் கட்டளை இட்டு அவற்றைப் பயன்படுத்துங்கள். அவற்றை நடைமுறையில் பயன்படுத்துங்கள். நீங்கள் அவற்றை உங்களுக்குள் வைத்திருக்கிறீர்கள். ஆனால், அவற்றை அதிகளவில் பயன்படுத்துவதில்லை. சரியான வேளையில் ஒவ்வொரு சக்தியையும் பயன்படுத்துவதன் மூலம், அவை நிச்சயமாகத் தமது வேலையைச் செய்யும். அத்துடன் சந்தோஷமாக இருங்கள்! சிலவேளைகளில், சில குழந்தைகளின் முகங்கள் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருப்பதையும் சிறிது சீரியஸாக இருப்பதையும் காணக்கூடியதாக உள்ளது. சந்தோஷமாக இருங்கள். ஆடிப் பாடுங்கள். உங்களின் பிராமண வாழ்க்கை என்பது சந்தோஷத்தில் நடனம் ஆடுவதற்கும் உங்களின் பாக்கியத்தைப் பற்றியும் கடவுளைப் பற்றியும் பாடல்களைப் பாடுவதற்கும் ஆகும். நடனக் கலைஞர்களும் பாடகர்களும் சீரியஸாக நடனம் ஆடினால், அவர்களுக்கு எப்படி நடனம் ஆடுவதென்று தெரியாது என்றே சொல்லப்படும். முதிர்ச்சி நல்லதே. ஆனால், மிகவும் சீரியஸாக இருப்பது, நீங்கள் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருப்பது போன்றே தோன்றும்.

டெல்லியில் உள்ள இடத்தின் திறப்புவிழா நடக்கப்போவதாக பாப்தாதா அறிந்தார். ஆனால், எந்தத் திறப்புவிழாவை பாப்தாதா காண விரும்புகிறார்? (ஓம் சாந்தி ரிட்ரீட் நிலையத்தின் திறப்புவிழா 2001 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் திகதி இடம்பெற்றது). ஒரு திகதியை நிச்சயம் செய்யுங்கள். இந்தச் சிறிய மற்றும் பெரிய திறப்புவிழாக்கள் இடம்பெறும். எவ்வாறாயினும், பாப்தாதா விரும்புகின்ற திறப்புவிழா என்னவென்றால், நீங்கள் எல்லோரும் உலக மேடையில் தந்தைக்குச் சமமான தேவதைகளாக நடைமுறை ரூபத்தில் வரவேண்டும். திரைகளும் திறக்கப்பட வேண்டும். நீங்களும் எல்லோரும் இத்தகைய திறப்புவிழாவை விரும்புகிறீர்கள்தானே? உங்களின் இதயபூர்வமான சம்பாஷணையிலும், நீங்கள் எல்லோரும் தொடர்ந்து கூறுகிறீர்கள், தந்தையும் தொடர்ந்து கேட்கிறார்: இப்போது எமக்குள்ள ஒரேயொரு ஆசை, தந்தையை வெளிப்படுத்துவதே ஆகும். ஆனால், தந்தையின் ஆசை, குழந்தைகள் முதலில் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதேயாகும். தந்தை குழந்தைகளுடன்கூடவே வெளிப்படுத்தப்படுவார். அவர் தனித்து வெளிப்படுத்தப்பட மாட்டார். எனவே, பாப்தாதா இந்த திறப்புவிழாவைக் காண விரும்புகிறார். உங்களுக்கு மிக நல்ல உற்சாகம் உள்ளது. நீங்கள் பாபாவுடன் இதயபூர்வமாக சம்பாஷணை செய்யும்போது, உங்கள் எல்லோருக்கும் மிக நல்ல உற்சாகம் உள்ளது. எவ்வாறாயினும், நீங்கள் கர்மயோகிகள் ஆகும்போது, சிறிதளவு வேறுபாடு ஏற்படுகிறது. எனவே, தாய்மார்களான நீங்கள் என்ன செய்வீர்கள்? தாய்மார்களின் குழு மிகப் பெரியது. தாய்மார்களைப் பார்க்கும்போது, பாப்தாதா மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார். வேறு யாருமே தாய்மார்களை அதிகளவில் முன்னணியில் வைப்பதில்லை. எவ்வாறாயினும், தாய்மார்கள் முன்னேறிச் செல்வதைப் பார்க்கும்போது பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். தாய்மார்களுக்கு இந்த விசேடமான எண்ணம் ஏற்படுகிறது: எவருமே அடையாத விடயத்தை, தாய்மார்களான நாங்கள் தந்தையுடன் சேர்ந்து செய்வோம். நீங்கள் நடைமுறையில் அதைச் செய்து காட்டுவீர்களா? இப்போது, ஒரு கையைத் தட்டுங்கள் (உங்கள் கையை அசையுங்கள்). தாய்மார்களே, தாய்மார்களான உங்களால் எல்லாவற்றையும் செய்ய முடியும். தாய்மார்களுக்கு மிக நல்ல உற்சாகம் உள்ளது. நீங்கள் வேறு எதையும் புரிந்து கொள்ளாவிட்டாலும், குறைந்தபட்சம் நீங்கள் இதைப் புரிந்து கொண்டீர்கள்: நான் பாபாவிற்குச் சொந்தமானவன், பாபா என்னுடையவர். நீங்கள் இந்தளவைப் புரிந்து கொண்டீர்கள்தானே? நீங்கள் எல்லோரும், ‘எனது பாபா!’ எனச் சொல்கிறீர்கள்தானே? உங்களின் இதயங்களில் தொடர்ந்து இந்தப் பாடலைப் பாடுங்கள்: ‘எனது பாபா, எனது பாபா, எனது பாபா!’

பாப்தாதா உங்கள் எல்லோருக்கும் விழிப்பாக இருப்பதற்கு ஒரு விநாடியை வழங்குகிறார். நீங்கள் எல்லோரும் இப்போது பாப்தாதாவிடம் 100 சதவீத அன்பை வைத்துள்ளீர்கள்தானே? அந்த அன்பு சதவீதத்தில் இல்லையல்லவா? அது 100 சதவீதம் உள்ளதா? எனவே, நீங்கள் 100 சதவீத அன்பின் பிரதிபலனைக் கொடுப்பதற்குத் தயாரா? உங்களிடம் நூறு சதவீதம் அன்பு உள்ளதல்லவா? சிறிது குறைந்தளவு அன்பைக் கொண்டவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! நீங்கள் பின்னர் பாதுகாக்கப்படுவீர்கள்! உங்களிடம் அன்பு குறைவாக இருந்தால், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! 100 சதவீதம் அன்பைக் கொண்டிராதவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! பாபா அன்பைப் பற்றிப் பேசுகிறார். ஓரிருவர் இருக்கிறார்கள். அச்சா, உங்களிடம் அன்பில்லை. அது பரவாயில்லை. அது நடக்கும். நீங்கள் வேறு எங்கேதான் செல்வீர்கள்? நீங்கள் பாபாவையே நேசிக்க வேண்டும். அச்சா, நீங்கள் எல்லோரும் இப்போது விழிப்பாக அமர்ந்திருக்கிறீர்கள்தானே? இப்போது, அன்பின் பிரதிபலனாக, பாப்தாதாவின் முன்னால் உங்களால் ஒரு விநாடியில் அகநோக்குடையவராகி, உங்களின் இதயத்தில் இந்த எண்ணத்தைக் கொண்டிருக்க முடியுமா? அதாவது, உங்களுக்கோ அல்லது மற்றவர்களுக்கோ நீங்கள் இனியும் ஒரு பிரச்சனை ஆக மாட்டீர்கள் என்பதை உங்களின் இதயபூர்வமாக நினைக்க முடியுமா? அன்பின் பிரதிபலனாக, உங்களால் இந்தத் திடசங்கற்பமான எண்ணத்தைக் கொண்டிருக்க முடியுமா? உங்களால் இதைச் செய்ய முடியுமா? என்னதான் நடந்தாலும், ஏதாவது நடந்தாலும், நீங்கள் உங்களை ஒரு விநாடியில் மாற்றிக் கொள்வீர்கள் என நீங்கள் நினைப்பவர்கள். உங்களின் இதயத்தில் இந்தத் திடசங்கற்பமான எண்ணத்தைக் கொண்டிருங்கள். இந்தத் திடசங்கற்பமான எண்ணத்தைக் கொண்டிருப்பவர்களுக்கு பாப்தாதா உதவி செய்வார். ஆனால், உதவியைப் பெற்றுக் கொள்வதற்கான வழிமுறை, திடசங்கற்பமான எண்ணத்தை உணர்ந்தவராக இருப்பதாகும். நீங்கள் பாப்தாதாவின் முன்னால் இந்த எண்ணத்தைக் கொண்டிருந்தீர்கள். இதை உணர்ந்தவராக இருக்கும் வழிமுறை, உங்களுக்கு உதவி செய்யும். எனவே, உங்களால் இதைச் செய்ய முடியுமா? இதற்கு இணங்குகிறீர்கள் எனத் தலையசையுங்கள்! பாருங்கள், எண்ணங்களால் எதைத்தான் அடைய முடியாது? பயப்படாதீர்கள்! நீங்கள் நிச்சயமாக பாப்தாதாவிடமிருந்து மேலதிக உதவியைப் பெற்றுக் கொள்வீர்கள். அச்சா.

தீவிர முயற்சி செய்யும் மேன்மையான ஆத்மாக்கள் எல்லோருக்கும், தந்தையின் அன்பிற்கான பிரதிபலனை சதா வழங்கும் தைரியசாலிக் குழந்தைகளுக்கும் புண்ணியாத்மாக்களாக இருந்து, சதா மற்றவர்களைத் தமது சொந்தச் சிறப்பியல்புகளால் விசேடமான ஆத்மாக்கள் ஆக்குகின்ற குழந்தைகளுக்கும், பிரச்சனைகளுக்குச் சதா தீர்வுகளின் சொரூபங்களாக இருக்கும் குழந்தைகளுக்கும் குறிப்பாக முன்னால் பறந்து செல்லும் குழந்தைகளுக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்தேயும்.

விடைபெறும் வேளையில்: இன்று, மதுவனத்தில் பாதுகாப்புப் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளவர்கள், பாப்தாதாவின் முன்னால் வருகிறார்கள். யக்யத்தைப் பார்த்துக் கொள்பவர்களுக்கு மிகப் பெரியதொரு கடமை உள்ளது. அதனால் அவர்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வதுடன் தொலைவில் இருந்தாலும் பாபாவை நினைவு செய்தவண்ணமும் இருக்கிறார்கள். ஆகவே, பாப்தாதா குறிப்பாக எல்லாவற்றையும் பார்த்துக் கொள்பவர்களுக்கும் அல்லது இந்த வேளையில் கியான்சரோவர், மதுவனம், சாந்திவான் என்பவற்றில் ஏனைய கடமைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் விசேடமான அன்பையும் நினைவுகளையும் வழங்குகிறார். நீங்கள் எல்லோரும் மிகக் கடினமாக வேலை செய்கிறீர்கள். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருந்து தமது நினைவுகளை அனுப்பி வைத்திருப்பவர்கள், பாப்தாதா அவர்களுக்கு விசேடமான அன்பையும் நினைவுகளையும் வழங்குகிறார் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். அச்சா.

ஆசீர்வாதம்:
நீங்கள் பழைய சம்ஸ்காரங்கள், பழைய உலக உறவுகளின் எந்தவிதமான கவர்ச்சிகளில் இருந்தும் விடுபட்டிருக்கும் இலேசாகவும் ஒளியாகவும் இருக்கும் தேவதை ஆகுவீர்களாக.

ஒரு தேவதையாக இருத்தல் என்றால், பழைய உலகின் எந்தவிதமான கவர்ச்சியில் இருந்தும் விடுபட்டிருத்தல் என்று அர்த்தம். உங்களின் சரீரம் அல்லது எந்தவொரு நபர் அல்லது பௌதீக உடமைகளின் உறவுமுறைகளால் கவரப்படாதிருத்தல். அதேபோல், நீங்கள் பழைய சம்ஸ்காரங்களின் எந்தவிதமான கவர்ச்சியில் இருந்தும் நீங்கள் விடுபட்டிருக்க வேண்டும். சம்ஸ்காரங்களின் எந்தவிதமான கவர்ச்சியும் எண்ணங்கள், மனோபாவம் அல்லது வார்த்தைகள் என்ற எந்த ரூபத்திலும் இருக்கக்கூடாது. நீங்கள் சகல கவர்ச்சிகளில் இருந்தும் விடுபட்டிருக்கும்போது, அதாவது, நேரத்தை வீணாக்குதல், வீணான சகவாசம் அல்லது வீணான சூழல் என்பவற்றின் கவர்ச்சிகளில் இருந்து விடுபட்டிருக்கும்போது, நீங்கள் இலேசான மற்றும் ஒளியாலான தேவதை எனப்படுவீர்கள்.

சுலோகம்:
ஆத்மாக்கள் எல்லோரையும் மௌன சக்தியால் பராமரிப்பவர்கள் மட்டுமே ஆன்மீக சமூக சேவையாளர்கள் ஆவார்கள்.