15.11.26 Avyakt Bapdada Tamil Lanka Murli 20.03.2012 Om Shanti Madhuban
உங்கள் முகத்திலும், செயற்பாடுகளிலும் திருப்தி சக்தியை உட்கிரகித்து, தந்தை பிரம்மாவைப் போன்று ஆகுங்கள். சதா சந்தோஷமாக இருந்து, சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இன்று, பாப்தாதா தனக்கு முன்னாலும், தூர தேசங்களிலும் உள்ள, திருப்தி மணிகளான தனது குழந்தைகளைப் பார்க்கின்றார். ஒவ்வொரு குழந்தையும் தனது திருப்தி சக்தியால் பிரகாசித்து, புன்னகையுடன் ஒரு சந்திப்பைக் கொண்டாடுகின்றார்கள். இந்தத் திருப்தி சக்தியே அனைத்திலும் அதி மகத்தான சக்தியாகும். இதனாலேயே அதனுள் சகல பேறுகளும் அடங்கியுள்ளன. திருப்தி சக்தியைக் கிரகிக்கின்ற திருப்தி மணிகளான நீங்கள் சுயத்தாலும், தந்தையாலும், அத்துடன் குடும்பத்தாலும் நேசிக்கப்படுகின்றீர்கள். ஏனெனில், திருப்தி இருக்கும்போது, சகல சக்திகளும் அந்தத் திருப்தியினுள் அமிழ்ந்திருக்கும். திருப்தி சக்தியின் சூழல் எங்கும் பரவுகின்றது. திருப்தி மணிகளான ஆத்மாக்கள் ஒருபோதும் மாயையால் தோற்கடிக்கப்பட மாட்டார்கள். மாயையே தோற்கடிக்கப்படுகின்றாள். திருப்தி மணிகளான ஆத்மாக்களால் அனைவரது இதயங்களையும் தமக்குச் சொந்தமாக்க முடியும். திருப்தி மணிகளான ஆத்மாக்கள் மாயையிடம் இருந்தும், சடப்பொருட்களிடம் இருந்தும் வெவ்வேறு ரூபங்களில் வரும் குழப்பங்களை ஒரு காட்டூன் படம் பார்ப்பது போன்று அனுபவம் செய்வார்கள். எனவே, குழந்தைகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் உங்களை இவ்வாறாக திருப்தி சக்தியால் நிறைந்திருப்பவராக அனுபவம் செய்கின்றீர்களா? உங்களையே கேளுங்கள்: நான் ஒரு திருப்தி மணியாக உள்ளேனா? தாங்கள் சிலவேளைகளிலேயே இவ்வாறு இருப்பதாகவும் எல்லா வேளையும் அப்படி இருப்பதில்லை எனச் சில குழந்தைகள் கூறுகின்றனர். “சிலவேளைகளில்” என்ற வார்த்தையை பாப்தாதா விரும்பவில்லை. பாப்தாதா ஒவ்வொரு குழந்தைக்கும் சதா அன்பையும், நினைவுகளையும், சந்தோஷத்தையும் கொடுக்கின்றார். எனவே, “சிலவேளைகளில்” என்ற வார்த்தையை பாப்தாதா விரும்பவில்லை. என்றென்றும் சந்தோஷமே. “சிலவேளைகளில்” என்ற வார்த்தையை உங்களால் மாற்ற முடியுமா என பாப்தாதா அறிய விரும்புகின்றார். “சிலவேளைகளில்” என்ற வார்த்தை பிராமணர்களின் அகராதியிலும் இல்லை. ‘எப்பொழுதும்’ என்பது மாத்திரமே உள்ளது. எனவே, இன்று, தந்தையை நேசிப்பவர்களும், மாயையின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டிருப்பவர்களுமான குழந்தைகளான நீங்கள், “சிலவேளைகளில்” என்ற வார்த்தையை உங்களால் முடித்துவிட இயலுமா? உங்களால் அதை முடித்துவிட முடியுமா? சடுதியாக எத்தகைய குழப்பமும் வரலாம் என்று பாப்தாதா உங்களுக்கு நீண்ட காலமாகக் கூறிக் கொண்டிருக்கின்றார். நீங்கள் அதற்குத் தயாராக வேண்டுமாயின், “சிலவேளைகளில்” என்ற சம்ஸ்காரத்தை இன்னமும் கொண்டிருந்தால், இராச்சிய பாக்கியத்தின் உரிமையை உங்களால் எக்காலத்திற்குமாகக் கோர முடியுமா? நீங்கள் அனைவரும் தந்தை பிரம்மாவை இதயபூர்வமாக நேசிக்கின்றீர்கள். நீங்கள் தந்தை பிரம்மாவிற்குச் சத்தியம் செய்துள்ளீர்கள்: நாங்கள் ஒன்றாகவே இருக்கின்றோம், நாங்கள் ஒன்றாகவே திரும்பிச் செல்வோம், நாங்கள் ஒன்றாகவே ஆட்சி புரிவோம். இது ஓர் உறுதியான சத்தியம், அல்லவா? தலையாட்டுங்கள்! அது உறுதியாக உள்ளதா? அது எந்தளவிற்கு உறுதியாக உள்ளது? தந்தை பிரம்மா எப்பொழுதாவது “சிலவேளைகளில்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கின்றாரா? அவர் எப்பொழுதும் அமிர்தவேளையில் உங்கள் யாவருக்கும் அன்பை வழங்கினார், தந்தையுடன் சேர்ந்திருந்து, எப்பொழுதும் ஞான விடயங்களையும், அன்பான விடயங்களையும், ஆர்வமும் உற்சாகமும் பற்றிய விடயங்களையுமே பேசினார். ‘நீங்கள் பாப்தாதா மீது அன்பு வைத்திருந்தால் உங்கள் கரங்களை உயர்த்துங்கள்’ என்று பாபா உங்களிடம் கேட்டிருந்தால், நீங்கள் அனைவரும் உங்களின் இரு கரங்களையும் உயர்த்தியிருப்பீர்கள். அப்படித்தானே? நிச்சயமாகவா? நீங்கள் ஒருவரை நேசிக்கும்போது, நீங்கள் நேசிக்கின்ற ஒருவரது ஒவ்வொரு வார்த்தையையுமே நேசிப்பீர்கள். தந்தை பிரம்மா சிலவேளைகளில் அவ்வாறு நிகழ்வதாக என்றுமே தந்தை சிவனிடம் கூறியதில்லை. அவர் எப்பொழுதும் தந்தையைப் பின்பற்றியதுடன், உங்களையும் அவரைப் பின்பற்றச் செய்தார். ஏனெனில், தந்தை பிரம்மா குழந்தைகளாகிய உங்கள் மீது இதய பூர்வமாக ஆழமான அன்பு வைத்திருக்கின்றார். எனவே, உங்களின் பெயர் என்ன? பிரம்மா குமாரி, உங்கள் பெயர் சிவகுமாரி அல்ல. தந்தை பிரம்மா கூறுவதையெல்லாம் பிரம்மா குமாரிகள் கீழ்ப்படிவாகச் செய்வதே தந்தை பிரம்மாவின் மீது அன்பு கொண்டிருத்தல் என்று அர்த்தம். அன்பு என்றால் அர்ப்பணிப்பு ஆகும். எனவே, நீங்கள் எதற்கு உங்களை அர்ப்பணிப்பீர்கள்? அவரது வழிகாட்டல்களுக்காகும். இவர் (சிவபாபா) கூறியதை எல்லாம் அவர் (பிரம்மபாபா) செய்தார். ஏனெனில், தந்தை சிவனும் தந்தை பிரம்மாவுடனேயே இருக்கின்றார். அவர் தனியாக இல்லை. “பாப்தாதா, பாப்தாதா” என்றே நீங்கள் கூறுகின்றீர்கள், அல்லவா?
இன்று, “சிலவேளைகளில்” என்று கூறுவதை ஒவ்வொரு குழந்தையும் நிறுத்திவிட வேண்டும் என்றே பாப்தாதா விரும்புகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் தந்தையின் சகபாடிகள். நீங்கள் அவரை நேசிக்கின்றீர்கள், அல்லவா? அன்பு காரணமாக நீங்கள் உங்களை அவரிடம் அர்ப்பணிக்கவும் செய்கின்றீர்கள். இங்கே, இந்த வார்த்தையை அர்ப்பணிப்பது மாத்திரமே. ஏனெனில், பாப்தாதா ஒவ்வொரு குழந்தையையும் மாலையின் வெற்றி மணியாக்கவே விரும்புகின்றார். நீங்கள் உங்களை மாலையின் மணிகளாகக் கருதுகின்றீர்களா? நீங்கள் உங்களை வெற்றியாளர்களாகக் கருதுகின்றீர்களா? பிராமணர்களின் எண்ணிக்கை மிகப் பெரிதாக உள்ளதென்றும், மாலையோ 108 மணிகளையே கொண்டிருப்பதால், 108 பேர் மாத்திரமே அதில் கோர்க்கப்பட முடியும் என்றும் சில குழந்தைகள் கூறுகின்றனர். அது 108 மணிகளின் மாலை எனக் கருதாதீர்கள். நீங்கள் முழுமையாகவும், வெற்றியாளர்களாகவும் ஆகினால், பாப்தாதா நடுவில் மேலும் பல வரிசைகளைச் சேர்த்துக் கொள்வார். எவ்வாறாயினும், நீங்கள் வெற்றியாளர்கள் ஆகவேண்டும். சில குழந்தைகள் நினைக்கின்றனர்: நான் ஓர் இலக்கத்தைப் பெறுவேனா இல்லையா என்று தெரியவில்லை. நீங்கள் முழுமையானவர் ஆகினால் தந்தை ஓர் இலக்கத்தை உங்களுக்கு வழங்குவார். ஏனெனில் தந்தை ஒவ்வொரு குழந்தையையும் நேசிக்கின்றார். இறுதிக் குழந்தையாக இருந்தாலும், அந்தக் குழந்தையிலும் தந்தை அன்பு வைத்துள்ளார் என உங்களுக்கு முன்னரே கூறப்பட்டுள்ளது. ஏனென்றால், அந்தக் குழந்தை தனது சம்ஸ்காரங்களின் செல்வாக்கிற்கு உட்பட்டு இருந்தாலும், தந்தையை இனங்கண்டு “எனது பாபா” எனக் கூறியுள்ளார். உலகில் பெரிய பதவிகளில் இருப்பவர்கள்கூட தந்தையை இனங்கண்டு கொள்ளவில்லை, ஆனால் அந்தக் குழந்தை அவரை இனங்கண்டுள்ளார். அவர் சில பலவீனங்களின் ஆதிக்கத்திற்கு உள்ளாகி இருந்தாலும்கூட, குறைந்த பட்சம் தந்தையையாவது இனங்கண்டுள்ளார். குறைந்த பட்சம் “எனது பாபா” என அவர் அன்புடன் கூறுகின்றார். இதனாலேயே தந்தை இறுதி இலக்கக் குழந்தையை நேசிப்பது மாத்திரமன்றி, அந்தக் குழந்தை தொடர்ந்தும் முன்னேறிச் செல்வதற்கு உபகாரம் நிறைந்த பார்வையையும், உபகாரம் நிறைந்த மனோபாவத்தையும் கொண்டிருக்கின்றார் என பாபா முன்னரும் உங்களுக்குக் கூறியுள்ளார். இன்று, பாப்தாதா உங்களுக்குத் தெளிவாகக் கூறுகின்றார்: “எவ்வாறு இவை நிகழும்? என்ன நிகழும்?” என ஏனைய விடயங்களைப் பற்றிச் சிந்திக்காதீர்கள். உங்களை ஒரு தகுதிவாய்ந்த ஆத்மாவாக ஆக்கிக் கொள்ளுங்கள். உங்களை ஒரு கர்மயோகி ஆத்மாவாக ஆக்குங்கள். தன்னைத் தகுதியானவர் ஆக்குகின்ற ஒவ்வொரு குழந்தைக்கும் தந்தை சகல பேறுகளுக்குமான ஆசீர்வாதத்தை வழங்குவதுடன், அவரை முன்னேறவும் வைப்பார். அவர் அந்தக் குழந்தையைப் பின்தங்க விடமாட்டார்.
இன்று, அமிர்தவேளையில், பாப்தாதா இந்நாட்டிற்கும், வெளிநாடுகளுக்கும் எங்கும் சுற்றுப் பயணம் செய்தார். முன்னரும் உங்களுக்கு சொல்லப்பட்டுள்ளது, பொதுவாக பாப்தாதா சுற்றுப்பயணம் செய்யும் போது, உங்களின் விசேட மூதாதைகளான தாதிமாரும் பாபாவுடன் சுற்றுப்பயணத்தை மேற்கொள்வர். எனவே, சுற்றுப்பயணம் செய்யும் போது பாபா எதைப் பார்த்தார்? அதையும் நீங்கள் அறிவீர்கள். நீங்கள் மிக நல்ல எண்ணங்களைக் கொண்டிருக்கின்றீர்கள்: நாங்கள் நிச்சயமாக இதைச் செய்வோம், நாங்கள் நிச்சயமாக இவ்வாறு ஆகுவோம். நாங்கள் உங்களுடன் கைகோர்த்து முன்னேறிச் செல்வோம். எனவே, எந்தக் கையை? தந்தை சிவன் தேவதை வடிவத்தையேனும் கொண்டிருப்பதில்லை. ஆயின், எந்தக் கையை? அது ஸ்ரீமத் என்ற கையாகும். வெளிநாடுகளில், கைகோர்த்து நடக்கின்ற நாகரிகத்தைக் கொண்டிருக்கின்றார்கள். எனவே, இங்கே, கை என்பது ஸ்ரீமத்தாகும். எனவே, நீங்கள் அனைவரும் அவருடன் கைகோர்த்து முன்னேறிச் செல்கின்றீர்கள், அல்லவா? உங்களிடம் அந்த சக்தி உள்ளதா? தந்தை பிரம்மா ஸ்ரீமத்திற்கேற்பவே ஒவ்வோர் அடியையும் எடுத்துவைத்து, அதை நடைமுறையில் உங்களுக்குச் செய்து காட்டினார். நீங்கள் என்ன செய்ய வேண்டும், எவ்வாறு நீங்கள் அதைச் செய்ய வேண்டும் என்பதற்கு அவர் உதாரணமாகத் திகழ்கின்றார். அவர் பௌதீக ரூபத்தில் உதாரணமாகத் திகழ்ந்தார். அசரீரியானவரை தெரியாதுவிடினும், தந்தை பிரம்மா பௌதீக ரூபத்தில் உங்கள் சகபாடியாக இருந்தார். தந்தை பிரம்மா, ஸ்ரீமத் என்ற தந்தையின் கரத்துடன், கைகோர்த்து ஒரு தேவதை ஆகினார். எனவே, நீங்களும் அதேபோன்று தந்தையைப் பின்பற்றுகின்றீர்கள், அல்லவா? நீங்கள் தந்தையைப் பின்பற்ற நினைக்கின்றீர்கள், அல்லவா? எனவே, நீங்கள் எதில் தந்தையைப் பின்பற்ற வேண்டும்? அவர் உங்களுக்கு அனைத்தையும் மிகத் தெளிவாகக் காண்பித்தார். நீங்கள் அனைவரும் தந்தை பிரம்மாவின் முகத்தையும், செயற்பாடுகளையும் அறிந்துள்ளீர்கள், அல்லவா? உங்கள் புத்தியால் தந்தை பிரம்மாவை வெளித்தோன்றச் செய்ய முடியும், அல்லவா? நேரஅட்டவணை எதுவாக இருந்தாலும், தந்தை பிரம்மா அதைச் செய்தார். பௌதீக சரீரத்தில் இருந்தவாறே அவர் அனைத்தையும் இங்கே பௌதீகமாக அனுபவம் செய்தார். நீங்கள் அனைவரும் தந்தை பிரம்மாவின் குணாதிசயங்களை அறிவீர்கள். எனவே, தந்தையைப் பின்பற்றுங்கள். தந்தை பிரம்மாவின் ஒவ்வோர் அடியையும் உறுதியாக்குவதற்காக, அவை உங்களால் மீட்டல் செய்யப்பட்டன. அவர் செய்த எட்டு அடிகளைப் பற்றி நீங்கள் வாசித்துள்ளீர்கள், அல்லவா? நீங்கள் அவரைப் பின்பற்ற வேண்டும், அவ்வளவுதான். பின்பற்றுவது என்றால், தந்தை பிரம்மாவிற்குச் சமனாக ஆகுவதாகும். எனவே, சற்றுச் சிந்தியுங்கள்: நீங்கள் தந்தையை நேசிக்கின்றீர்கள், நீங்கள் இரு தந்தையரையும் நேசிக்கின்றீர்கள். அன்பு கொண்டிருப்பது என்றால் என்னவென்று உங்களுக்கு முன்னரும் கூறப்பட்டது. தந்தை பிரம்மா கூறியதும், தந்தையைப் போன்று அதேவிதமாகக் குழந்தைகள் செய்வதே அன்பின் நடைமுறை வடிவமாகும். இதுவே ஓர் உண்மையான இதயத்தின் அன்பாகும். சில குழந்தைகள் என்ன செய்கின்றனர்? தந்தை பிரம்மா செய்தது போன்றே தாங்களும் செய்யவேண்டும் என அவர்கள் நினைக்கின்றனர். ஆனால், அவர்கள் முதலில் ஒன்றைச் செய்துவிட்டே அதைப் பற்றிச் சிந்திக்கின்றனர். எனவே, அவர்கள் தந்தை பிரம்மாவைப் போன்று செய்யவில்லை. ஆனால், நீங்கள் செய்ததையே செய்தீர்கள். நீங்கள் பின்பற்ற வேண்டுமாயின், முதலில் சிந்தியுங்கள். நீங்கள் ஓர் எண்ணத்தை உருவாக்குவதற்கு முன்பாகவே சிந்தியுங்கள்: இது தந்தை பிரம்மாவின் எண்ணமா? அவ்வாறாயின், நடைமுறையில் அதைச் செய்யுங்கள். ஒன்றைச் செய்த பின்னர் அதைப் பற்றிச் சிந்திக்காதீர்கள். முதலில் அதைப் பற்றிச் சிந்தித்து, பின்னர் பின்பற்றுங்கள். தந்தை பிரம்மாவைப் பின்பற்றுவது என்றால், தந்தை பிரம்மாவிற்குச் சமனாக ஆகுவதாகும். உங்களிடம் இந்த தைரியம் உள்ளதா? அவரைப் பின்பற்றுவதற்கான தைரியம் உங்களிடம் உள்ளதா? இதைச் செய்யப் போவதாக நினைப்பவர்கள், உங்கள் கரங்களை உயர்த்துங்கள்! முதலில் சிந்தித்து, பின்னர் செய்யுங்கள். செய்துவிட்டுச் சிந்திக்காதீர்கள்.
இன்று, ஒவ்வொரு குழந்தையும் தந்தை பிரம்மாவைப் போன்று திருப்தி சக்தியைக் கொண்டிருக்கின்றாரா என பாப்தாதா விசேடமாகப் பார்க்க விரும்புகின்றார். இந்த ஒரு திருப்தி சக்தியுடன் ஏனைய சக்திகள் யாவும் வந்துவிடும். எனவே, இன்று, பாப்தாதாவின் விசேட ஆசீர்வாதம்: நீங்கள் திருப்தி சக்தியைக் கொண்டிருப்பீர்களாக! என்ன நிகழ்ந்தாலும், உங்கள் திருப்தியை ஒருபோதும் கைவிட்டுவிடாதீர்கள். சில குழந்தைகள் தமது இதயபூர்வமான சம்பாஷணைகளில் கூறுகின்றனர்: திருப்தியாக இருப்பது இலகுவானது, ஆனால் மற்றவர்களைத் திருப்திப்படுத்துவது சிரமமாக உள்ளது. ஒருவர் ஒன்றைச் செய்யும்போது, அது தவறானது என்று அறிந்திருந்தும், ஏன் அதை உங்கள் இதயத்தில் வைத்திருக்கின்றீர்கள்? இவர் இவ்வாறு செய்கின்றார். அவர் அவ்வாறு செய்கின்றார். இவரின் சுபாவம் இத்தகையது, அவருடையது அத்தகையது. நீங்கள் தந்தையை உங்கள் இதயத்தில் வைத்திருப்பதால், இதை உங்கள் இதயத்தில் வைத்திருக்காதீர்கள். நீங்கள் அவரை உங்கள் இதயத்தில் வைத்திருக்கின்றீர்கள். அல்லவா? தலையாட்டுங்கள். நீங்கள் அவரை அங்கு வைத்துள்ளீர்களா? நிச்சயமாகவா? அல்லது நீங்கள் அவரை அங்கிருந்து அகற்றிவிட்டு, பின்னர் அமர்த்துகின்றீர்களா? நீங்கள் அவரை அமர்த்திவிட்டு, பின்னர் இவ்விடயங்களையும் உங்கள் இதயத்தில் வைத்திருப்பீர்களாயின், தந்தையுடன் கூடவே இவ்விடயங்களையும் நீங்கள் இதயத்தில் வைத்திருப்பீர்கள். எனவே, இவற்றை உங்கள் இதயத்தில் வைத்திருக்காதீர்கள்.
நீங்கள் அத்தகைய ஆத்மாக்கள் மீது எப்பொழுதும் நல்லாசிகளையும் தூய உணர்வுகளையும் கொண்டிருக்க வேண்டும், உங்கள் நல்லாசிகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற வழிமுறையை பாப்தாதா முன்னரும் உங்களுக்குக் கூறியுள்ளார். அவர் செய்வது நல்லதல்ல, அது தீயது என நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். எவராவது உங்களுக்குத் தீயது ஒன்றை வழங்கினால், அதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? அது தீயதாக இருக்கும்போது, நீங்கள் ஏன் அதை உங்கள் புத்தியில் அல்லது உங்கள் இதயத்தில் வைத்திருக்க வேண்டும்? நீங்கள் ஏன் தீயதாக இருந்த ஒன்றை எடுத்தீர்கள்? தந்தையை இவ்வாறாக உங்கள் இதயத்தில் வைத்திருந்து, நீங்கள் தந்தைக்குச் சமனானவர் ஆகுவீர்கள். இதுவே உங்கள் சத்தியம், அல்லவா? நீங்கள் தந்தைக்குச் சமனானவர்கள் ஆகப்போகின்றீர்கள், அல்லவா? நீங்கள் நிச்சயமாக இவ்வாறு ஆகப்போகின்றீர்கள், அல்லவா? அல்லது, நான் சமனாகுவேனா இல்லையா எனத் தெரியவில்லை எனச் சந்தேகப்படுகின்றீர்களா? நீங்கள் இவ்வாறு சிந்திக்க மாட்டீர்கள், அல்லவா? அன்பு வைத்திருப்பது என்றால், தந்தையைப் பின்பற்றுவதாகும். ஒவ்வொரு குழந்தையும் நல்லாசிகளாலும், தூய உணர்வுகளாலும் நிறைந்திருப்பதையே பாப்தாதா இப்பொழுது பார்க்க விரும்புகின்றார்.
ஆசிரியர்களான நீங்கள் இவ்வாறு ஆகுவீர்களா? பாப்தாதா ஆசிரியர்கள் மீது விசேட அன்பு வைத்திருக்கின்றார். ஏன் அவர் உங்களில் அன்பு வைத்திருக்கின்றார்? ஏனெனில், நீங்கள் தந்தையின் கதியில் அமர்வதற்கான தைரியத்தைப் பேணியுள்ளீர்கள். எனவே, ஆசிரியர்களே, உங்களிடம் தைரியம் உள்ளது, அல்லவா? ஒவ்வோர் ஆசிரியரின் முகச்சாயல் மூலமாக எதிர்காலம் தெரிய வேண்டும் என்றே பாப்தாதா விரும்புகின்றார். பாப்தாதா கருவி ஆசிரியர்களுடன் பேசுகின்றார். ஆனால், நீங்கள் அனைவருமே சகபாடிகள், அல்லவா? 75 வருடங்களுக்கு முன்னர், விடுதிப் பாடசாலையில், சிறு குழந்தைகளுக்கு பாப்தாதா இந்தக் கற்பித்தல்களை வழங்கினார்: சந்தோஷமும் பாக்கியமும் - ஒவ்வொருவரின் முகமும் அவ்வாறிருக்க வேண்டும். இப்பொழுதும்கூட, ஒவ்வொரு குழந்தையின் முகமும் சந்தோஷத்தையும், பாக்கியத்தையும் கொண்ட ஆத்மாவினுடையதைப் போன்றிருக்க வேண்டும் என்றே பாப்தாதா விரும்புகின்றார். நீங்கள் வார்த்தைகள் மூலம் ஏராளமான சேவை செய்துவிட்டீர்கள், அதை நீங்கள் நன்றாகச் செய்துள்ளீர்கள், அதற்கான சான்றிதழும் உங்களிடம் உள்ளது. ஆனால் இப்பொழுது, உங்கள் முகம் மூலமும், செயற்பாடுகள் மூலமுமான சேவையில் முன்னேறிச் செல்லுங்கள். ஓர் ஏழைக்கு அதிர்ஷ்டலாபச் சீட்டு கிடைத்ததும், அவரது முகமும் செயற்பாடுகளும் பேசுகின்றன! அவரது முகத்தைப் பார்க்கும்போது, அவருக்கு இன்று விசேடமாக ஏதோ கிடைத்திருக்கின்றது என்றே அனைவரும் உணர்கின்றனர். அதேபோன்று, உங்கள் முகத்தையும், செயற்பாடுகளையும் பார்க்கும்போது, நீங்கள் விசேடமாக எதையோ அடைந்திருப்பதாக அவர்கள் நம்பவேண்டும்.
இன்று பாப்தாதா எதை விரும்புகின்றார்? தந்தை பிரம்மாவிற்குச் சமனாகுங்கள். தந்தையைப் பின்பற்றுங்கள். ஏனெனில், காலத்தின் கோலத்தையும், எவ்வாறு குழப்பங்கள் வருகின்றன என்பதையும் பார்க்கும்போது, அது வரவே செய்யும். இதனாலேயே பாப்தாதா ஒவ்வொரு குழந்தைக்கும் கற்பித்தல்களைக் கொடுக்க விரும்புகின்றார்: எப்பொழுதும் சந்தோஷமாக இருந்து, சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் எந்தளவிற்குச் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்கின்றீர்களோ, அந்தளவிற்கு உங்கள் சந்தோஷம் அதிகரிக்கும். நீங்கள் சந்தோஷமாக இருப்பதைப் பார்த்து, மற்றவர்கள் குறைந்தது ஐந்து நிமிடங்களுக்கேனும் சந்தோஷமாக இருப்பார்கள். சந்தோஷமற்ற ஆத்மாக்கள் உங்களைப் பார்த்து ஐந்து நிமிடங்களுக்குச் சந்தோஷம் அடைவார்களாயின், அவர்கள் அதை விரும்புவார்கள். ஒவ்வொரு குழந்தையும் தனது முகத்திலும், செயற்பாடுகளிலும் திருப்தி சக்தியைக் கிரகித்து, மற்றவர்களையும் அதைக் கிரகிக்கச் செய்யவேண்டும் என்பதற்காகவே பாப்தாதா இன்று விசேடமாக உங்கள் கவனத்தை ஈர்க்கின்றார். அச்சா.
இன்று முதற் தடவையாக வந்திருப்பவர்கள் அனைவரும் எழுந்து நில்லுங்கள்! பாருங்கள், உங்களால் அவர்களைப் பார்க்க முடிகின்றது. வகுப்பில் அரைவாசிப் பேர் முதற்தடவையாக வந்திருப்பவர்கள். உங்கள் கரங்களை உயர்த்துங்கள்! அவர்களின் கரங்கள் அனைத்தையும் பாருங்கள்! உங்களின் புதிய சகோதர, சகோதரிகள்! பாருங்கள், எத்தனை பேர் உங்களின் சகபாடிகள் ஆகியுள்ளனர்! பாராட்டுக்கள்! பற்பல பாராட்டுக்கள்! நீங்கள் அனைவரும் இங்கே வந்துவிட்டீர்கள். நீங்கள் அனைவரும் பாப்தாதாவைச் சந்திப்பதற்காக இங்கே வந்துள்ளீர்கள். நீங்கள் அடுத்ததாக என்ன செய்யப் போகின்றீர்கள்? தந்தை பிரம்மாவைப் பின்பற்றுங்கள். உங்கள் அனைவரையும் பார்க்கும்போது, பாப்தாதாவும் பூரிப்படைகின்றார். ஆஹா! குழந்தைகள் வந்துவிட்டனர்! முழுக் குடும்பமும் சந்தோஷம் அடைகின்றது: எங்கள் சகோதர, சகோதரிகள் வந்துவிட்டனர், அவர்கள் வந்துவிட்டனர், அவர்கள் வந்துவிட்டனர்! இப்பொழுது, தந்தை பிரம்மாவைப் பின்பற்றுங்கள். எப்பொழுதாவது ஏதாவது நிகழ்ந்து விட்டால், உங்களுக்கு ஏதாவது கேள்வி அல்லது பிரச்சனைகள் எழுந்தால், இது எப்படியோ பிரச்சனைகள் நிறைந்த உலகம், எனவே, உங்கள் ஆசிரியரிடம் இருந்து உடனடியாகவே அதற்கான தீர்வைக் கண்டறியுங்கள்: இரு தினங்கள் காத்திருந்துவிட்டு, இன்னமும் இப்பிரச்சனை உள்ளது எனக் கூறாதீர்கள். நீங்கள் மிகவும் தாமதமாக வந்துள்ளீர்கள், அல்லவா? அத்துடன் நீங்கள் முன்னால் செல்லவும் விரும்புகின்றீர்கள், அல்லவா? நீங்கள் பின்தங்கிவிட விரும்புகின்றீர்களா? இல்லை. நீங்கள் முன்னால் செல்லவே விரும்புகின்றீர்கள். எனவே, முன்னால் செல்வதற்கு, இந்த ஒன்றைச் செய்யுங்கள்: வீணான எதனையும் உங்கள் இதயத்தில் வைத்திருக்காதீர்கள். இதற்கு, அமிர்தவேளையில் தந்தையைச் சந்தித்த பின்னர், அதற்கு முதலில் நீங்கள் அமிர்தவேளை செய்யவேண்டும், அதன் பின்னர், பாப்தாதா உங்களுக்குப் பல அப்பியாசங்களைக் கற்பித்திருக்கின்றார். உங்களின் முழு நாள் மும்முரமான வேலைகளுக்கு மத்தியிலும் ஏதேவொரு அப்பியாசத்தைத் தொடர்ந்தும் செய்து கொண்டிருங்கள். பாப்தாதா அனைவருடனும் பேசுகின்றார். அவ்வப்போது நேரத்தை ஒதுக்குங்கள். அதாவது நீங்கள் பழையவராயினும், புதியவராயினும், அனைவரும் நிச்சயமாக உடனடியாகவே சரீரமற்றவராகும் பயிற்சியைச் செய்யவேண்டும். ஏனெனில் இனி வரப்போகும் காலத்தில், நீங்கள் ஒரு விநாடியில் சரீரமற்றவர் ஆகவேண்டும். எனவே, இந்த அப்பியாசத்தைச் செய்யுங்கள். சிலர் தங்களுக்கு நேரமில்லை எனக் கூறுகின்றனர். ஒருவர் எவ்வளவுதான் மும்முரமாக இருந்தாலும், உங்களுக்குத் தாகம் ஏற்பட்டால், சிறிதளவு நீரைப் பெறுவதற்காக நீங்கள் எழுந்துசெல்ல மாட்டீர்களா? நீங்கள் அதை அவசியம் என்று கருதுவதால், நீரை எடுப்பதற்காக எழுந்து செல்கின்றீர்கள். எனவே, ஒரு நிமிடத்திற்கு சரீரமற்றவர் ஆகின்ற இந்த அப்பியாசத்தை நிச்சயமாகப் பயிற்சி செய்யுங்கள். அந்த நேரத்தில் உங்களால் அதைப் பயிற்சி செய்ய முடியாதிருக்கும். நேரம் வரும்போது தாங்கள் அதைச் செய்வோம் எனச் சிலர் நினைக்கின்றனர். எவ்வாறாயினும், அப்படியில்லை. பிறவி பிறவியாக இருந்து வந்த இந்தச் சரீர உணர்வுப் பயிற்சி அந்நேரத்தில் உங்களைச் சரீரமற்றவர்கள் ஆகுவதற்கு அனுமதிக்காது. எனவே, இப்பொழுதில் இருந்தே சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். நாள் முழுவதும் இதற்காக உங்களால் எப்பொழுதெல்லாம் நேரம் ஒதுக்க முடியுமோ அப்பொழுது எல்லாம் அவ்வப்போது ஒரு விநாடியை ‘நான் ஒரு சரீரமற்ற ஆத்மா’ என்று பயிற்சி செய்ய ஒதுக்குங்கள். ஆத்மா என்ற ரூபத்தில் ஸ்திரமாக இருங்கள். சரீர உணர்வு உங்களைத் தன்பக்கம் ஈர்க்கக்கூடாது. புதியவரோ, பழையவரோ, அனைவரும் இதைப் பயிற்சி செய்ய வேண்டும். ஏனெனில், பாப்தாதா சிறிது காலமாக இதை உங்களுக்குக் கூறிவருகின்றார். எவ்வாறாயினும், நீங்கள் அதைச் செய்வது அவசியம். இல்லாவிடில், உங்களால் ஸ்ரீமத் என்ற கரம் கோர்த்து முன்னேறிச் செல்ல முடியாதிருக்கும். உங்களின் சத்தியம்: நாங்கள் ஒன்றாகவே வீட்டுக்குத் திரும்பிச் சென்று, ஒன்றாகவே இராச்சியத்திற்கு வருவோம். எனவே, அனைவரும் இந்த அப்பியாசத்தைச் செய்ய வேண்டும். புதிதாக வந்திருப்பவர்கள் அனைவரும் சந்தோஷமாக இருங்கள், செழிப்பாக இருங்கள். தொடர்ந்தும் அனைவரையும் முந்திச் செல்லுங்கள். அச்சா.
தொலைவில் அமர்ந்திருந்து தங்கள் இதயங்களில் அனைத்தையும் அமிழ்த்தியுள்ள எங்குமுள்ள குழந்தைகள் அனைவரையும் பாப்தாதா பார்க்கின்றார். அனைவருடைய அன்பின் நறுமணமும் மதுவனத்தை வந்தடைகின்றது. ஆகவே, இப்பொழுது, அனைவரும் ஒரு விரைவான வேகத்தில் முன்னேறிச் செல்ல வேண்டும். நீங்கள் தீவிர முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் ஒரு விரைவான வேகத்தில் உலக மக்களுக்குச் சந்தோஷத்தை அளிக்க வேண்டும். நீங்கள் சந்தோஷம் அற்றவர்களைச் சந்தோஷமாக்க வேண்டும். அனைவரையும் சந்தோஷம் ஆக்குகின்ற செய்தியை அவர்களுக்குக் கொடுப்பதனால், அனைவரையும் சந்தோஷம் ஆக்குங்கள். இந்தச் சேவையில் தீவிரம் உள்ளது, நீங்கள் மேலும் அதிகத் தீவிரத்தை ஏற்படுத்தவும் வேண்டும். அச்சா. அனைவரும் இதயத்திலிருந்து அதிகளவு அன்பையும், நினைவையும் ஏற்றுக் கொள்ளுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் சதா திருப்தியாகவும் மலர்ச்சியானவராகவும் இருந்து, உங்களின் சொந்த ஓய்வையும் தியாகம் செய்து சேவை செய்வீர்களாக.ஒரு சேவையாளர், தனது சொந்த ஓய்வை இரவு பகலாகத் தியாகம் செய்து, சேவையில் ஓய்வை அனுபவம் செய்வார். இத்தகைய ஆத்மாக்களுடன் தொடர்பில் வருகின்ற ஆத்மாக்கள், அல்லது அவர்களுடன் வாழ்பவர்கள், அல்லது அவர்களுடன் உறவுமுறையைக் கொண்டிருப்பவர்கள், அவர்களின் நெருக்கத்தைத் தாம் குளிர்மை, சக்தி மற்றும் அமைதி ஊற்றின் கீழ் இருப்பதைப் போல் அனுபவம் செய்வார்கள். அவர்கள் காமதேனுவைப் போல் மேன்மையான நடத்தைகளுடன் சேவையாளர்கள் ஆகி, எல்லா வேளையும் அனைவரின் ஆசைகளையும் பூர்த்தி செய்கிறார்கள். இத்தகைய சேவையாளர்கள் இயல்பாகவே மலர்;ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்கின்ற ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள்.
சுலோகம்:
இந்த ஞானத்தின் சொரூபம் ஆகுவதற்கு, ஒவ்வொரு கணமும் இந்தக் கல்வியில் கவனம் செலுத்துங்கள். தந்தைக்கும் இந்தப் படிப்புக்கும் சமமான அன்பு இருக்க வேண்டும்.அவ்யக்த சமிக்ஞை: தந்தை பிரம்மாவைப் போல், சம்பூரணமான, முழுமையான ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.
வீணான அல்லது பாவகரமான எண்ணங்களைக் கொண்டிருப்பதற்கான காரணம், ஒரேயொரு கேள்வியே: இது ஏன் நடந்தது? ‘ஏன்?’ என்ற வார்த்தையுடன் வீணான எண்ணங்களின் வரிசை ஆரம்பிக்கிறது. இந்த ‘ஏன்?’ என்ற வார்த்தை முடிவிற்கு வரும்போது மட்டுமே முழுமை ஏற்படும். அதன்பின்னர் அந்த வரிசை ஆரம்பமாகும். ‘ஏன்?’ என்ற வார்த்தை முடிவடையும்போது, உங்களால் நாடக விதியில் ஸ்திரமாக இருக்கக் கூடியதாக இருக்கும்.
விசேட அறிவித்தல்: மாதத்தின் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமைக்கான யோகப் பயிற்சி.
இன்று, மாதத்தின் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை. சகல சகோதரர்களும் சகோதரிகளும் ஒன்றுகூடி மாலை 6.30 இலிருந்து 7.30 வரை யோகத்தில் அமர வேண்டும். உங்களின் சக்தி ரூபத்தில் ஸ்திரமாக இருங்கள், ஞான சூரியனின் சக்திவாய்ந்த கதிர்களைக் கிரகியுங்கள், இந்தக் கதிர்களைப் பயன்படுத்தி உலக மாற்றம் என்ற சேவையைச் செய்வதற்கு ஒத்துழையுங்கள்.