19.12.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, இந்த அதி மங்களகரமான சங்கமயுகமே உங்களை இடமாற்றம் செய்வதற்கான யுகமாகும். நீங்கள் இப்பொழுது அதி சீரழிந்த மனிதர்களிலிருந்து அதி மேன்மையான மனிதர்கள் ஆகவேண்டும்.

கேள்வி:
எத்தகைய குழந்தைகள் தந்தையுடன் சேர்த்துப் புகழப்படுகின்றனர்?

பதில்:
பலருக்கும் நன்மை பயப்பதற்காக ஆசிரியர்களாகவும், கருவிகளாகவும் ஆகுகின்ற குழந்தைகளின் புகழ் தந்தையின் புகழுடன் சேர்த்துப் பாடப்படுகின்றது. கரன்கரவன்ஹார் பாபா குழந்தைகளாகிய உங்கள் மூலமாகவே பலருக்கும் நன்மை பயக்கின்றார். இதனாலேயே குழந்தைகளாகிய நீங்களும் தந்தையுடன் சேர்த்துப் புகழப்படுகின்றீர்கள். மக்கள் கூறுகின்றனர்: பாபா, இன்ன இன்னார் என்மீது கருணை கொண்டிருந்தார். எவ்வாறிருந்த நான் இப்பொழுது எவ்வாறாகிவிட்டேன் எனப் பாருங்கள்! ஓர் ஆசிரியர் ஆகாமல் உங்களால் ஆசீர்வாதங்களைப் பெற முடியாது.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களிடம் வினவுகின்றார். முதலில், அவர் விளங்கப்படுத்திவிட்டு, பின்னர் வினவுகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது தந்தையை அறிவீர்கள். சிலர் தந்தையைச் சர்வவியாபகர் எனக் கூறுகின்றனர், எனினும், அதற்கு முன்பாக, குறைந்தபட்சம் தந்தை யார் என, அவர்களால் இனங்கண்டு கொள்ளக்கூடியதாகவேனும் இருக்க வேண்டும். அவர்கள் அவரை இனங்கண்டு கொள்வதுடன், அவரது வசிப்பிடம் என்ன என்பதையும் கூறவேண்டும். தந்தையை அறியாத ஒருவரால் எவ்வாறு அவரது வசிப்பிடத்தைப் பற்றி அறிய முடியும்? அவர் பெயருக்கும் ரூபத்திற்கும் அப்பாற்பட்டவர் என அவர்கள் கூறுகின்றனர். அவர் இல்லாததைப் போன்றே அது பொருள்படுகின்றது. எனவே, இல்லாத ஒருவரின் இருப்பிடத்தைப் பற்றி எவ்வாறு அவர்கள் சிந்திக்க முடியும்? குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இதனை அறிவீர்கள். முதலில், தந்தை தனது சொந்த அறிமுகத்தை உங்களுக்குக் கொடுத்தார். பின்னர் தனது வசிப்பிடத்தைப் பற்றி விளங்கப்படுத்தினார். தந்தை கூறுகின்றார்: நான் இந்த இரதத்தின் மூலமாக எனது அறிமுகத்தை உங்களுக்குக் கொடுப்பதற்காக வந்துள்ளேன். பரம தந்தை என அழைக்கப்படும் நானே உங்கள் அனைவரதும் தந்தையாவேன். தந்தையைப் பற்றி எவரும் எதனையும் அறியார். தந்தைக்கென ஒரு பெயரோ, வடிவமோ, காலமோ அல்லது இடமோ இல்லையெனில், எவ்வாறு அவரது குழந்தைகளுக்கு இவையேதும் இருக்கமுடியும்? தந்தை பெயருக்கும், ரூபத்திற்கும் அப்பாற்பட்டவராயின், அவரது குழந்தைகள் எங்கிருந்து வரமுடியும்? குழந்தைகள் இருப்பதால், நிச்சயமாகத் தந்தையும் இருக்கவே வேண்டும். அவர் பெயருக்கும், ரூபத்திற்கும் அப்பாற்பட்டவரல்ல என்பதையே இது நிரூபிக்கின்றது. அவரது குழந்தைகள் எந்தளவிற்குச் சூட்சுமமானவர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் பெயரும், ரூபமும் இருக்கவே செய்கின்றன. ஆகாயம் சூட்சுமமாக உள்ளபோதிலும் அதற்கு “ஆகாயம்” என்ற பெயர் இருக்கவே செய்கின்றது. வெற்றிடம் சூட்சுமமானது. எனவே, தந்தையும் மிகவும் சூட்சுமமானவர். குழந்தைகள் இச்சரீரத்தினுள் பிரவேசிக்கின்ற அற்புதமான நட்சத்திரத்தைப் பற்றிப் பேசுகின்றனர். அவரும் ஆத்மா என்றே அழைக்கப்படுகின்றார். தந்தை பரந்தாமத்தில் வசிக்கின்றார். அது வசிப்பிடமாகும். அவர்கள் தங்களது விரலால் மேலே சுட்டிக்காட்டி அவரை நினைவு செய்யும்போது, அவர்களின் பார்வை மேலேயே செல்கின்றது. எனவே, அவர்கள் நினைவுசெய்கின்ற அந்த ஒரேயொருவர் நிச்சயமாக இருக்கவே வேண்டும். அவர்கள் பரமாத்மாவாகிய பரமதந்தையைப் பற்றிப் பேசுகின்றனர். அவர் பெயருக்கும், ரூபத்திற்கும் அப்பாற்பட்டவர் எனக் கூறுவது அறியாமையே. தந்தையை அறிந்துகொள்வது என்றால், இந்த ஞானத்தைக் கொண்டிருப்பதாகும். முன்னர் நீங்கள் அறியாமையில் இருந்தீர்கள் என்பதைப் புரிந்துகொள்கின்றீர்கள். நீங்கள் தந்தையையும் அறிந்திருக்கவில்லை. உங்களையும் அறிந்திருக்கவில்லை. நீங்கள் சரீரங்கள் அன்றி, ஆத்மாவே என்பதை இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். ஆத்மா அழிவற்றவர் எனக் கூறப்படுவதால், அது நிச்சயமாக, இருக்கின்ற ஒன்றாகவே இருக்கவேண்டும். “அழிவற்றது” என்ற வார்த்தை ஆத்மாக்களுக்கான பெயரல்ல. ‘அழிவற்றது’ என்றால், அதனை அழிக்க முடியாது என்றே அர்த்தமாகும். எனவே, அது நிச்சயமாக ஏதோவொன்றாக இருக்க வேண்டும். இது குழந்தைகளாகிய உங்களுக்கு மிக நன்றாக விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. அவர் தனது குழந்தைகள் என அழைக்கின்ற, இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய நீங்கள் அழிவற்ற ஆத்மாக்கள். சகல ஆத்மாக்களினதும் பரமதந்தையாகிய பரமாத்மாவே இங்கிருந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். தந்தை வந்து, குழந்தைகளாகிய உங்களுக்குத் தனது அறிமுகத்தைக் கொடுக்கும்போது மாத்திரமே இந்த நாடகம் நடிக்கப்படுகின்றது. நானும் ஒரு நடிகரே. எவ்வாறு நான் எனது பாகத்தை நடிக்கின்றேன் என்பது உங்கள் புத்தியிலுள்ளது. அவர் பழைய, தூய்மையற்ற ஆத்மாக்களைப் புதியவர்களாகவும், தூய்மையானவர்களாகவும் ஆக்குகின்றார். எனவே, நீங்கள் அங்கு பெறுகின்ற சரீரமும் அழகானது. இது இப்பொழுது உங்கள் புத்தியில் உள்ளது. நீங்கள் “பாபா! பாபா!” எனக் கூறுகின்றீர்கள். இப்பாகம் இப்பொழுது நடிக்கப்படுகின்றது. குழந்தைகளாகிய உங்களை மௌன தாமமாகிய உங்கள் வீட்டிற்கு மீண்டும் அழைத்துச் செல்ல பாபா வந்துவிட்டார் என ஆத்மாக்களாகிய நீங்கள் கூறுகின்றீர்கள். மௌன தாமத்தின் பின்னர் சந்தோஷதாமம் உள்ளது. மௌன தாமத்தைத் தொடர்ந்து உடனடியாகவே துன்பதாமம் இருக்க முடியாது. புதிய உலகில் சந்தோஷம் மாத்திரமே இருக்க முடியும். அத் தேவர்கள் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருப்பார்கள் ஆயின், அவர்கள் இப்பொழுது எங்கே வசிக்கின்றார்கள் என எவராவது அவர்களிடம் கேட்டால், அவர்கள் சுவர்க்கத்தில் வசிப்பதாகவே அவர்கள் பதிலளிப்பார்கள். அந்த உயிரற்ற விக்கிரகங்களால் இதனை உங்களுக்குக் கூறமுடியாது. எவ்வாறாயினும், நாங்களே ஆதியில் சுவர்க்கத்தில் வசித்த தேவர்கள் என்றும், 84 பிறவிகளின் சக்கரத்தினூடாகச் சென்ற பின்னர், இப்பொழுது சங்கமயுகத்தில் உள்ளோம் என்பதையும் நீங்கள் கூறலாம். இதுவே நாங்கள் இடமாற்றம் செய்யப்படுகின்ற, அதி மேன்மையான சங்கமயுகமாகும். நீங்கள் அதி மேன்மையான மனிதர்கள் ஆகுகின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். ஒவ்வொரு 5000 வருடங்களுக்கு ஒருமுறை நீங்கள் சதோபிரதானாக ஆகுகின்றீர்கள். நீங்கள் அனைவரும் வரிசைக்கிரமமாக சதோபிரதானாக ஆகுகின்றீர்கள். ஆத்மாக்களே பாகங்களைப் பெற்றுள்ளனர். மனிதர்களே பாகங்களைப் பெறுகின்றனர் என நீங்கள் கூறமாட்டீர்கள். ஆத்மாவாகிய நான் ஒரு பாகத்தைப் பெற்றுள்ளேன். ஆத்மாவாகிய நான் 84 பிறவிகளை எடுக்கின்றேன். ஆத்மாவாகிய நான் ஒரு வாரிசு ஆவேன். பெண்கள் அன்றி, ஆண்களே எப்பொழுதும் வாரிசுகளாக உள்ளனர். எனவே, ஆத்மாக்களாகிய நீங்கள் ஆண்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் உறுதியாகப் புரிந்துகொள்ள வேண்டும். நாங்கள் அனைவரும் எல்லையற்ற தந்தையிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுகின்றோம். புத்திரிகள் அன்றி, புத்திரர்களே எல்லைக்குட்பட்ட, லௌகீகத் தந்தையிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுகின்றனர். சில ஆத்மாக்கள் எப்பொழுதும் பெண்களாகவே இருப்பார்கள் என்றில்லை. சகல ஆத்மாக்களும் சிலவேளைகளில் ஆண் சரீரத்தையும், சிலவேளைகளில் பெண் சரீரத்தையும் எடுப்பார்கள் எனத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். இந்நேரத்தில், நீங்கள் (ஆத்மாக்கள்) அனைவரும் ஆண்களே. சகல ஆத்மாக்களும் ஒரேயொரு தந்தையிடமிருந்தே ஓர் ஆஸ்தியைப் பெறுகின்றனர். நீங்கள் அனைவரும் புத்திரர்கள். அனைவரினதும் தந்தை ஒரேயொருவரே. தந்தை கூறுகின்றார்: ஓ குழந்தைகளே, ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் ஆண்கள். நீங்கள் எனது ஆன்மீகக் குழந்தைகள். உங்கள் பாகங்களை நடிப்பதற்கு, ஆண்கள், பெண்கள் ஆகிய இருபாலாரும் தேவைப்படுகின்றனர். அப்பொழுதே மனித உலகின் சனத்தொகை அதிகரிக்க முடியும். வேறு எவருக்குமன்றி, உங்களுக்கே இவ்விடயங்கள் தெரியும். தாங்கள் சகோதரர்கள் என மக்கள் கூறினாலும், அது எவ்வாறு என்பதை அவர்கள் புரிந்துகொள்வதில்லை. நீங்கள் இப்பொழுது கூறுகின்றீர்கள்: பாபா, நாங்கள் உங்களிடமிருந்து எண்ணற்ற தடவைகள் எங்களின் ஆஸ்தியைக் கோரியுள்ளோம். ஆத்மாக்களாகிய உங்களுக்கு இது உறுதியாகி விட்டது. ஆத்மாக்கள் நிச்சயமாகத் தந்தையை நினைவு செய்கின்றனர். “ஓ பாபா! கருணை காட்டுங்கள்! பாபா இப்பொழுது வாருங்கள், நாங்கள் அனைவரும் உங்கள் குழந்தைகள் ஆகுவோம்! ஆத்மாக்களாகிய நாங்கள் எங்களின் சரீரங்கள், சரீர உறவுமுறைகள் அனைத்தையும் மறந்து, உங்களை மாத்திரமே நினைவு செய்வோம்.” தந்தை விளங்கப்படுத்தியுள்ளார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள். நீங்கள் எவ்வாறு தந்தையிடமிருந்து உங்களின் ஆஸ்தியைக் கோருகின்றீர்கள் என்பதும், எவ்வாறு 5000 வருடங்களுக்கு ஒருமுறை தேவர்கள் ஆகுகின்றீர்கள் என்பதும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய விடயமாகும். நீங்கள் யாரிடமிருந்து உங்கள் சுவர்க்க ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள் என்பதை இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். தந்தை ஒரு சுவர்க்கவாசியல்ல. ஆனால், அவர் குழந்தைகளாகிய உங்களையே அவ்வாறு ஆக்குகின்றார். அவரோ நரகத்திற்கு மாத்திரமே வருகின்றார். நீங்கள் எல்லோரும் தமோபிரதானாகியதும் தந்தையை நரகத்திற்கு அழைத்தீர்கள். இது தமோபிரதான் உலகமாகும். 5000 வருடங்களுக்கு முன்னர் அது அவர்களின் இராச்சியமாக இருந்தபோது, உலகம் சதோபிரதானாக இருந்தது. இக்கல்வியின் இவ்விடயங்களை நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். இது சாதாரண மனிதர்களிலிருந்து தேவர்கள் ஆகுவதற்கான கல்வியாகும். கடவுளுக்கு மனிதர்களைத் தேவர்களாக மாற்றுவதற்கு நீண்டகாலம் பிடிக்கவில்லை எனக் கூறப்படுகின்றது. நீங்கள் ஒரு குழந்தை ஆகும்போது, ஒரு வாரிசு ஆகுகின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் எனது குழந்தைகள், நான் உங்கள் அனைவருக்கும் ஆஸ்தியை வழங்குகின்றேன். நீங்கள் அனைவரும் சகோதரர்கள். அசரீரி உலகம் என அழைக்கப்படுகின்ற, சத்தத்திற்கு அப்பாற்பட்ட உலகமாகிய (நிர்வாணதாமம்) பரந்தாமமே, உங்களது வசிப்பிடமாகும். சகல ஆத்மாக்களும் அங்கேயே வசிக்கின்றனர். சூரியனுக்கும், சந்திரனுக்கும் அப்பாலேயே உங்களது இனிய, மௌனமான வீடு உள்ளது. ஆனால் நீங்கள் அங்கு சென்று, என்றென்றும் அங்கேயே தங்கிவிட முடியாது. அங்கிருந்தவாறு நீங்கள் என்னதான் செய்வீர்கள்? அது உயிரற்ற ஸ்திதி ஆகும். ஆத்மாக்கள் ஒரு பாகத்தை நடிக்கும்போதே, அவர்கள் உயிர்வாழ்பவர்கள் எனப்படுகின்றனர். ஆத்மாக்கள் உயிருள்ளவர்களேயாயினும், அவர்கள் ஒரு பாகத்தை நடிக்காதபோது, உயிர் வாழாதவர்கள் போன்றவர்கள். நீங்கள் உங்களது கைகளையோ அல்லது பாதங்களையோ அசைக்காது இங்கு நின்றுகொண்டிருப்பீர்களாயின், அது நீங்கள் உயிரற்ற நிலையில் இருப்பதைப் போன்றதாகும். அங்கு, இயல்பான மௌனம் உள்ளது. அங்கு ஆத்மாக்கள் உயிரற்றிருப்பதைப் போன்றிருக்கும். அவர்கள் அங்கு எந்தப் பாகத்தையும் நடிப்பதில்லை. நீங்கள் நடிக்கின்ற பாகத்திலேயே அழகு உள்ளது. மௌனதாமத்தில் என்ன அழகு உள்ளது? அங்கு ஆத்மாக்கள் சந்தோஷ, துன்ப அனுபவங்களுக்கு அப்பாற்பட்டிருப்பார்கள். அவர்கள் அங்கு எப்பாகத்தையும் நடிப்பதில்லை. எனவே, அங்கு தங்கியிருப்பதன் நன்மை என்ன? நீங்கள் முதலில் உங்களின் சந்தோஷப் பாகங்களை நடிக்கின்றீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் முற்கூட்டியே ஒரு பாகத்தைப் பெற்றுவிட்டீர்கள். சிலர் தங்களுக்கு மோட்சம் வேண்டும் எனக் கூறுகின்றனர். ஒரு குமிழி நீரினுள் அமிழ்ந்து விடுவதைப் போன்று, அந்த ஆத்மாவும் அதன்பின்னர் இல்லாமல் போய்விடுவதைப் போன்றதே அதுவாகும். ஓர் ஆத்மாவிற்கு நடிப்பதற்கு ஒரு பாகம் இல்லாதபோது அவர் உயிர்வாழாதவர் எனப்படுகின்றார். உயிர்வாழக்கூடிய அவர், அங்கு உயிர் வாழாத நிலையில் இருப்பதில் என்ன பயன் உள்ளது? அனைவரும் ஒரு பாகத்தை நடித்தாக வேண்டும். கதாநாயகன், கதாநாயகியாலேயே முதன்மையான பாகங்கள் நடிக்கப்படுகின்றன. குழந்தைகளாகிய நீங்கள் கதாநாயகன், கதாநாயகி என்ற பட்டங்களைப் பெறுகின்றீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் உங்களது பாகங்களை இங்கேயே நடிக்கின்றீர்கள். முதலில் நீங்கள் சந்தோஷ இராச்சியத்தை ஆட்சிசெய்து, பின்னர் இராவணனின் துன்ப இராச்சியத்தினுள் செல்கின்றீர்கள். தந்தை இப்பொழுது கூறுகின்றார்: குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அனைவருக்கும் இச்செய்தியைக் கொடுக்க வேண்டும். நீங்கள் ஆசிரியர்களாகி, இவ்விடயங்களை அனைவருக்கும் விளங்கப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் ஆகாதவர்கள் ஒரு தாழ்ந்த அந்தஸ்தையே பெறுவார்கள். நீங்கள் ஓர் ஆசிரியர் ஆகாது எவ்வாறு ஆசீர்வாதங்களைப் பெறமுடியும்? நீங்கள் மற்றவர்களுக்குச் செல்வத்தை வழங்கினால், அவர்கள் சந்தோஷமடைவார்கள், இல்லையா? பிரம்மா குமாரிகளாகிய நீங்கள் அவர்கள் மீது பெருமளவு கருணை கொண்டு அவர்களை முற்றாக மாற்றுவதாக அவர்கள் உள்ளார்த்தமாக உணர்வார்கள். உண்மையில், அவர்கள் ஒரேயொரு தந்தையின் புகழையே பாடுகின்றனர்: ஆஹா பாபா! நீங்கள் இக்குழந்தைகள் மூலமாக எங்களுக்குப் பெருமளவில் நன்மை பயக்கின்றீர்கள்! அது எவர் மூலமாகவோ நிகழ்ந்தாக வேண்டும். தந்தையே மற்றவர்களை நடிக்கத் தூண்டுவதுடன், மற்றவர்கள் மூலமாக அனைத்தையும் நிறைவுசெய்து வைக்கின்றார். அவர் உங்கள் மூலமாகவே அனைத்தையும் செய்விக்கின்றார். அதனால், உங்களுக்கு நன்மை உள்ளது. இதனாலேயே நீங்கள் இந்த மரக்கன்றை நாட்டி, மற்றவர்களுக்கு நன்மை பயக்கின்றீர்கள். நீங்கள் எந்தளவிற்குச் சேவை செய்கின்றீர்களோ, அதற்கேற்ப அந்தஸ்தைக் கோருவீர்கள். நீங்கள் ஓர் அரசனாக ஆக வேண்டுமாயின், பிரஜைகளை உருவாக்கவேண்டும். மாலையில் உயர்ந்த ஸ்தானத்தில் வைக்கப்பட்டவர்கள், அரசர்களாக ஆகுவார்கள். மாலை உருவாக்கப்பட வேண்டும். உங்களையே கேளுங்கள்: மாலையில் நான் எந்த இலக்கத்தைக் கோருவேன்? நவரத்தினங்களே பிரதானமானவர்கள். மற்றவர்களை வைரங்களாக ஆக்குபவர் மத்தியில் உள்ளார். ஒரு மாலையின் ஆரம்பத்தில் குஞ்சம் இருப்பதைப் போன்று, வைரமானது இரத்தினங்களின் மத்தியில் வைக்கப்பட்டுள்ளது. வம்சத்தினுள் யார் செல்வார்கள் என்பது இறுதியில் உங்களுக்குத் தெரியவரும். இறுதியில், நிச்சயமாக நீங்கள் காட்சிகளைக் காண்பீர்கள். ஒவ்வொருவரும் எவ்வாறு தண்டனை அனுபவிக்கின்றார்கள் என்பதை நீங்கள் பார்ப்பீர்கள். யக்ஞத்தின் ஆரம்பத்தில், சூட்சும உலகில் தெய்வீகக்காட்சிகள் மூலமாக நீங்கள் இதனைக் கண்டீர்கள். இது மறைமுகமானது. ஓர் ஆத்மா தண்டனை அனுபவிப்பதும் நாடகத்திலுள்ள ஒரு பாகமேயாகும். ஆத்மாக்கள் கருப்பைச் சிறையில் தண்டிக்கப்படுகின்றார்கள். அவர்கள் அந்தச் சிறையில் இருக்கும்போது, தர்மராஜைக் காண்கிறார்கள். தங்களை வெளியில் விடுமாறு அழுகின்றார்கள். நோய்கள் போன்ற அனைத்தும் கர்மக்கணக்குகளே ஆகும். இவ்விடயங்கள் அனைத்தும் புரிந்துகொள்ளப்பட வேண்டும். எது சரி என்பதைத் தந்தை நிச்சயமாக உங்களுக்குக் கூறுவார். நீங்கள் இப்பொழுது தர்மவான்கள் ஆகுகின்றீர்கள். தந்தையிடமிருந்து பெருமளவு பலத்தைப் பெறுபவர்களே தர்மவான்களாவர். நீங்கள் உலக அதிபதிகள் ஆகுகின்றீர்கள். எனவே உங்களிடம் அதிக பலம் உள்ளது. இதில், குழப்பமடைதல் என்ற கேள்விக்கே இடமில்லை. ஒருவரிடம் போதியளவு பலம் இல்லாதபோதே பல குழப்பங்கள் ஏற்படுகின்றன. குழந்தைகளாகிய நீங்கள் அரைக் கல்பத்திற்கு உங்களுடன் நீடிக்கக்கூடிய அளவிற்குப் போதிய பலத்தைப் பெறுகின்றீர்கள். எவ்வாறாயினும், அதுவும்கூட நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமானதாகும். நீங்கள் அனைவருமே ஒரேயளவிற்குச் சக்தியைப் பெறமுடியாது. நீங்கள் அனைவருமே ஒரே அந்தஸ்தைப் பெறமுடியாது. இவை அனைத்தும் முற்கூட்டியே நிச்சயிக்கப்பட்டவை, இது நாடகத்தில் அநாதியாக நிச்சயிக்கப்பட்டதாகும். சிலர் மிக இறுதியிலேயே வருகின்றனர், அவர்கள் ஓரிரு பிறவிகளையே எடுத்து, பின்னர் மரணித்துவிடுகின்றார்கள். அவர்கள் இரவில் பிறந்து, காலையில் மரணித்துவிடும் தீபாவளி காலத்து நுளம்புகளைப் போன்றவர்கள். அவை எண்ணற்றவை. உங்களால் மனிதர்களைக் குறைந்தபட்சம் எண்ணவேனும் முடியும். ஆரம்பத்தில் வருகின்ற ஆத்மாக்கள் மிக நீண்ட ஆயுளைக் கொண்டுள்ளனர். நீங்களே நீண்ட ஆயுளைக் கொண்டிருக்கப் போகின்றவர்கள் என்பதையிட்டுக் குழந்தைகளாகிய நீங்கள் அதிக சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் ஒரு முழுமையான பாகத்தை நடிக்கின்றீர்கள். நீங்கள் எவ்வாறு உங்களின் முழுமையான பாகத்தை நடிக்கின்றீர்கள் என்பதைத் தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் இப்பொழுது எந்தளவிற்குக் கற்கின்றீர்களோ, அதற்கேற்ப உங்களின் பாகத்தை நடிப்பதற்காகக் கீழிறங்கி வருகின்றீர்கள். உங்களது இக்கல்வி புதிய உலகிற்கானதாகும். தந்தை கூறுகின்றார்: நான் முன்னரும் பல தடவைகள் உங்களுக்குக் கற்பித்திருக்கின்றேன். இக்கல்வி அழிவற்றதாகும். நீங்கள் அரைக்கல்பத்திற்கு ஒரு வெகுமதியைப் பெறுகின்றீர்கள். அழிந்துவிடும் (லௌகீகக்) கல்வியால் நீங்கள் தற்காலிகச் சந்தோஷத்தையே அனுபவம் செய்கின்றீர்கள். இப்பொழுது சட்டநிபுணராகும் ஒருவர் ஒரு கல்பத்தின் பின்னர் மீண்டும் சட்டநிபுணர் ஆகுவார். ஒருவர் என்ன பாகத்தை நடிக்கின்றாரோ, அதே பாகத்தை ஒவ்வொரு கல்பத்திலும் நடிப்பார் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஒருவர் தேவராயினும், சூத்திரராயினும் ஒவ்வொருவரும் அதே பாகத்தையே ஒவ்வொரு கல்பத்திலும் நடிக்கின்றனர். இதில் சற்றேனும் வேறுபாடு இருக்க முடியாது. ஒவ்வொருவரும் தங்கள் சொந்தப் பாகத்தையே நடிக்கின்றனர். இந்நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டதாகும். நீங்கள் கேட்கின்றீர்கள்: முயற்சியா, அல்லது வெகுமதியா உயர்வானது? முயற்சியின்றி வெகுமதி இருக்க முடியாது. நாடகத்தின்படி, முயற்சி செய்வதன் மூலமே நீங்கள் உங்களது வெகுமதியைப் பெறுகின்றீர்கள். அனைத்தும் நாடகத்திலேயே தங்கியுள்ளது. சிலர் முயற்சி செய்கின்றனர், சிலர் செய்வதில்லை. அவர்கள் இங்கு வருகின்றார்களாயினும், எந்த முயற்சியுமே செய்வதில்லை. எனவே, அவர்கள் எந்த வெகுமதியையும் பெறுவதில்லை. உலக நாடகத்தில் நடிக்கப்படுவதெல்லாம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டதாகும். ஒவ்வொரு ஆத்மாவும் ஆரம்பம் முதல் இறுதி வரை கொண்டுள்ள பாகம் ஏற்கனவே அவருக்கு நிச்சயிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, ஆத்மாக்களாகிய நீங்கள் உங்களின் 84 பிறவிகளின் பாகத்தை நடிக்க வேண்டும். நீங்கள் வைரம் போலாகி, பின்னர் சிப்பி போல் ஆகுகின்றீர்கள். இப்பொழுதே நீங்கள் இவ்விடயங்களைக் கேட்கின்றீர்கள். பாடசாலையில் ஒருவர் சித்தியெய்தாவிட்டால், அவருக்குப் புத்தியில்லை என்றும், அதனாலேயே அவரால் எதையும் கிரகிக்க முடியாதுள்ளது என்றும் கூறப்படுகின்றது. இது பல்வகை விருட்சம் என்றும், பல்வேறுபட்ட சாயல்கள் என்றும் அழைக்கப்படுகின்றது. தந்தை மாத்திரமே பல்வகை விருட்சத்தின் ஞானத்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அவர் கல்ப விருட்சத்தையும் விளங்கப்படுத்துகின்றார். ஆலமரத்தின் உதாரணம் இதனையே குறிக்கின்றது, அதன் கிளைகள் பெரிதாகப் பரந்து விரிந்துள்ளன. ஆத்மாக்கள் அழிவற்றவர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். உங்களின் சரீரங்கள் அழிந்துபோகும். ஆத்மாக்களாகிய நீங்களே இந்த ஞானத்தைக் கிரகிக்கின்றீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் 84 பிறவிகளை எடுக்கின்றீர்கள். உங்கள் சரீரங்கள் மாறிக் கொண்டிருக்கின்றன. ஆத்மாக்களாகிய நீங்கள் அதே வடிவிலேயே இருக்கின்றீர்கள், ஆனால் உங்களது பாகங்களை நடிப்பதற்காக வெவ்வேறு சரீரங்களை எடுக்கின்றீர்கள். இது ஒரு புதிய விடயமாகும். குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது இந்தப் புரிந்துணர்வு கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு கல்பத்திற்கு முன்னரும் இதைப் புரிந்துகொண்டீர்கள். தந்தை பாரதத்திற்கே வருகின்றார். நீங்கள் தொடர்ந்தும் அனைவருக்கும் இச்செய்தியைக் கொடுக்கின்றீர்கள். எவருமே இச்செய்தியைப் பெறாமல் இருக்கக்கூடாது. அனைவருக்கும் இச்செய்தியைக் கேட்பதற்கான உரிமை உள்ளது. அனைவரும் தந்தையிடமிருந்து ஓர் ஆஸ்தியையும் கோரிக் கொள்வார்கள். அவர்கள் தந்தையின் குழந்தைகள் என்பதால், குறைந்தபட்சம் எதையாவது கேள்விப்படவேனும் வேண்டும். தந்தை விளங்கப்படுத்துகிறார்: நானே ஆத்மாக்களாகிய உங்கள் அனைவரதும் தந்தையாவேன். ஆத்மாக்களாகிய நீங்கள் என்னிடமிருந்து படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிக் கற்பதன் மூலம் அந்த அந்தஸ்தைக் கோருகின்றீர்கள். ஏனைய ஆத்மாக்கள் அனைவரும் முக்தி தாமத்திற்குச் சென்று ஓய்வெடுப்பார்கள். தந்தை அனைவருக்கும் சற்கதியை அருள்கின்றார். அவர்கள் கூறுகின்றனர்: கடவுளே, உங்கள் விளையாட்டு மிகவும் அற்புதமானது! என்ன விளையாட்டு? இப்பழைய உலகை மாற்றுகின்ற விளையாட்டாகும். நீங்கள் அனைவரும் இதை அறிவீர்கள். மனிதர்கள் மாத்திரமே இதனை அறிவார்கள். தந்தை வந்து, குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே இவ்விடயங்களைக் கூறுகின்றார். தந்தை ஞானம் நிறைந்தவர். அவர் உங்களை ஞானம் நிறைந்தவர்கள் ஆக்குகின்றார். நீங்கள் வரிசைக்கிரமமாக இவ்வாறு ஆகுகின்றீர்கள். ஒரு புலமைப்பரிசிலைக் கோரிக் கொள்பவர்கள், ஞானம் நிறைந்தவர்கள் எனப்படுகின்றனர். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கின்றார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் ஆண்கள், நீங்கள் தந்தையிடமிருந்து உங்களது முழு ஆஸ்தியையும் கோரவேண்டும் என்ற விழிப்புணர்வில் எப்பொழுதும் இருங்கள். சாதாரண மனிதர்களிலிருந்து தேவர்களாகும் இக்கல்வியைக் கற்று, மற்றவர்களுக்கும் கற்பியுங்கள்.

2. முழு உலகிலும் நடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பாகம் எதுவாயினும், அது நாடகத்தில் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. முயற்சி, வெகுமதி இரண்டுமே அதனுள் நிச்சயிக்கப்பட்டுள்ளன. முயற்சியின்றி, வெகுமதி எதுவும் கிடையாது என்பதை நீங்கள் மிகத்தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆசீர்வாதம்:
நீங்கள் உண்மையான இதயத்தினால் அன்புடன் சகல வகையான சேவைகளையும் செய்யும் ஓர் உண்மையான ஆன்மீகச் சேவையாளர் ஆகுவீர்களாக.

அது எந்த வகையான சேவையாகவும் இருக்கலாம், ஆனால் அதை உண்மையான இதயத்துடன் செய்யும்போது, நீங்கள் அதற்காக 100 மதிப்பெண்களைப் பெறுகிறீர்கள். நீங்கள் செய்யும் சேவையில் எந்தவிதமான எரிச்சல் அடைதலும் இருக்கக்கூடாது. சேவை என்பது பெயரளவில் இருக்கக்கூடாது. உங்களின் சேவை, தவறாகப் போனவற்றைச் சரி செய்வதற்கும், எல்லோருக்கும் சந்தோஷத்தைக் கொடுப்பதற்கும், ஆத்மாக்களை யோக்யா (இயலுமானவர்கள், தகுதிவாய்ந்தவர்கள்) மற்றும் யோகிகள் ஆக்குவதற்கும் உங்களை இகழ்பவர்களை ஈடேற்றுவதற்கும் தேவைப்படும் வேளையில் உங்களின் சகவாசத்தையும் ஒத்துழைப்பையும் கொடுப்பதற்கும் ஆகும். இத்தகைய சேவை செய்பவர்களே, உண்மையான ஆன்மீக சேவையாளர்கள் ஆவார்கள்.

சுலோகம்:
தூய்மையே, பிராமண வாழ்க்கையின் புதுமையாகும். அது இந்த ஞானத்தின் அத்திவாரம் ஆகும்.