21.04.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, தந்தை உங்களுக்கு மின்னோட்டத்தைக் கொடுப்பதற்கே வந்துள்ளார். நீங்கள் ஆத்ம உணர்வு உடையவராகி உங்கள் புத்தியின் யோகத்தை ஒரேயொரு தந்தையுடன் இணைத்தால், தொடர்ந்தும் இம் மின்னோட்டத்தைப் பெறுவீர்கள்.
கேள்வி:
குழந்தைகளாகிய உங்களிடம் இருக்கக்கூடாத, மிகவும் அசுர சுபாவம் என்ன?பதில்:
அமைதியின்மையைப் பரப்புவதே மிகவும் அசுர சுபாவமாகும். அமைதியின்மையைப் பரப்புபவர்களால் மக்கள் விரக்தி அடைகின்றார்கள். அத்தகைய சுபாவத்தை உடையோர் எங்கு சென்றாலும் அமைதியின்மையையே பரப்புகின்றார்கள். ஆகையாலேயே அனைவரும் அமைதியின் ஆசீர்வாதத்திற்காகக் கடவுளிடம் பிரார்த்திக்கின்றார்கள்.பாடல்:
இதுவே சுவாலையினதும் புயலினதும் கதையாகும்.ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான, எப்பொழுதோ தொலைந்து இப்பொழுது கண்டு எடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளாகிய நீங்கள் பாடலின் அந்த வரியைக் கேட்டீர்கள். அந்தப் பாடல் பக்தி மார்க்கத்திற்குரியது, ஆனால் அது இந்த ஞானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அதனை வேறு எவராலும் மாற்ற முடியாது. சுவாலை என்றால் என்ன என்பதையும், புயல்கள் என்றால் எவை என்பதையும் உங்கள் முயற்சிக்கேற்ப, வரிசைக்கிரமமாக நீங்கள் ஒவ்வொருவரும் அறிவீர்கள். ஆத்மாக்களின் ஒளி அணைந்திருப்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். தந்தை இப்பொழுது மீண்டும் உங்கள் தீபங்களை ஏற்றுவதற்கே வந்துள்ளார். ஒருவர் இறக்கும்பொழுது, மக்கள் விளக்கை ஏற்றுகின்றார்கள். அந்த விளக்கு அணையாமல் இருப்பதில் அவர்கள் மிகவும் கவனம் செலுத்துகின்றார்கள். ஏனென்றால், அந்த விளக்கு அணைந்து விட்டால், அந்த ஆத்மா இருளில் பயணிக்க வேண்டும் என அவர்கள் நம்புகிறார்கள். இதனாலேயே அவர்கள் விளக்கை ஏற்றுகின்றார்கள். சத்தியயுகத்தில் இத்தகைய விடயங்கள் இடம்பெற மாட்டாது. அங்கே அவர்கள் எவ்வாறாயினும் ஒளியிலேயே இருப்பார்கள். அங்கே பசி போன்ற கேள்வியே இருக்க மாட்டாது. அங்கே அவர்கள் உண்பதற்குப் பலவற்றைப் பெறுகின்றார்கள். இங்கே இப்பொழுது காரிருள் சூழ்ந்துள்ளது. இவ்வுலகம் மிகவும் அழுக்கடைந்து உள்ளது. ஆத்மாக்கள் அனைவரின் தீபங்களும் மங்கலாகி உள்ளன. தீபங்களாகிய நீங்களே அதிகபட்சம் மங்கலாகி உள்ளீர்கள். தந்தை குறிப்பாக உங்களுக்காகவே வருகின்றார். தீபங்களாகிய நீங்கள் மங்கலாகி விட்டீர்கள். நீங்கள் எங்கிருந்து மின்சக்தியைப் பெற முடியும்? மின்னோட்டத்தைத் தந்தையிடம் இருந்து மாத்திரமே பெற முடியும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் மிகவும் சக்திவாய்ந்த மின்னோட்டத்தைப் பெற்றால், மேலும் பலரின் ஒளி சக்திமிக்கதாகும். ஆகையால், நீங்கள் இப்பொழுது பாரிய இயந்திரத்திலிருந்தே மின்சக்தியைப் பெற வேண்டும். மும்பாய் போன்ற நகரங்களில் எத்தனை மனிதர்கள் வாழ்கின்றார்கள் என்று பாருங்கள். எனவே அதிகளவு மின்சக்தி தேவையாகும். அங்கே பாரிய ஜெனரேட்டர் நிச்சயமாக இருக்க வேண்டும். ஆனால் இதுவோ எல்லையற்ற விடயமாகும். உலகம் முழுவதிலும் உள்ள ஆத்மாக்கள் அனைவரது தீபங்களும் மங்கலாகி உள்ளன. அவற்றிற்கு மின்சக்தி கொடுக்கப்பட வேண்டும். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: உங்கள் புத்தியின் யோகத்தைத் தந்தையுடன் இணைப்பதே பிரதான விடயம். ஆத்ம உணர்வுடையவர் ஆகுங்கள். அவர் அத்தகையதொரு மகத்துவமான தந்தை. உலகில் உள்ள தூய்மையற்ற மனிதர்கள் அனைவரையும் தூய்மையாக்குகின்ற பரமதந்தை அனைவரது தீபங்களையும் ஏற்றுவதற்காகவே வந்துள்ளார். உலகில் உள்ள மனிதர்கள் அனைவரதும் தீபங்களையும் அவர் ஏற்றுகின்றார். தந்தை யார் என்பதையோ, அவர் எவ்வாறு ஒவ்வொருவரின் ஒளியையும் ஏற்றுகின்றார் என்பதையோ எவரும் அறிய மாட்டார்கள். அவர் ஒளி வடிவமானவர் என்று மக்கள் கூறுகின்றனர், பின்னர் அவர் சர்வவியாபி என்றும் அவர்கள் கூறுகின்றார்கள். அனைவரது ஒளியும் அணைந்திருப்பதால், அவர்கள் ஜோதிசொரூபத்தை அழைக்கின்றார்கள். மக்கள் அநாதியான ஒளியின் காட்சியையும் காண்கின்றார்கள். எவ்வாறு அர்ஜுனன் சக்திமிகுந்த மின்னோட்டத்தைக் கொண்ட அதிகளவு பேரோளியைத் தன்னால் சகிக்க முடியவில்லை என்று கூறினான் என்று அவர்கள் காட்டுகின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இவ்விடயங்களைப் புரிந்து கொள்கின்றீர்கள். அவர்கள் அனைவரும் ஆத்மாக்கள் என்பதை நீங்கள் அனைவருக்கும் விளங்கப்படுத்த வேண்டும். ஆத்மாக்கள் மேலிருந்தே கீழிறங்கி இங்கு வருகின்றார்கள். முதலில் ஆத்மாக்கள் தூய்மையாக இருக்கின்றார்கள். அவர்களிடம் மின்சக்தி (சக்தி) இருப்பதுடன், சதோபிரதானாகவும் இருக்கின்றார்கள். சத்தியயுகத்தில் ஆத்மாக்கள் தூய்மையாக இருக்கின்றார்கள், பின்னர் அவர்கள் தூய்மை அற்றவர்களாக வேண்டும். அவர்கள் தூய்மை அற்றவர்கள் ஆகும்பொழுது, தந்தையாகிய கடவுளை அழைக்கின்றார்கள்: வந்து எங்களுக்கு விடுதலை அளியுங்கள்! எங்களைத் துன்பத்திலிருந்து விடுதலை அளியுங்கள்! விடுதலை அளிக்கப்பட்டிருப்பது, தூய்மை ஆக்கப்படுவதில் இருந்து வேறான விடயமாகும். அவர்களை நிச்சயமாக வேறு எவரோ தூய்மை அற்றவர்கள் ஆக்கியுள்ளதாலேயே அவர்கள் கூறுகின்றார்கள்: பாபா, வந்து எங்களுக்கு விடுதலை அளித்து, எங்களைத் தூய்மை ஆக்குங்கள்! எங்களை இங்கிருந்து அமைதிதாமத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்! எங்களுக்கு அமைதிக்கான ஆசீர்வாதத்தை அருளுங்கள்;! இங்கே எவருமே அமைதியாக இருக்க முடியாது, அமைதி தாமத்தில் மாத்திரமே அமைதி உள்ளது எனத் தந்தை விளங்கப்படுத்தி உள்ளார். சத்தியயுகத்தில், ஒரு தர்மமும், ஓர் இராச்சியமுமே உள்ளன. ஆகையால் அங்கே அமைதி உள்ளது; அங்கே எந்தக் குழப்பங்களும் இருக்க மாட்டாது. இங்கே அமைதி இன்மையினால் மக்கள் விரக்தி அடைந்துள்ளார்கள். ஒரே குடும்பத்தினரின் மத்தியிலும் அதிகளவு சண்டை உள்ளது. கணவனுக்கும் மனைவிக்கும் இடையே சண்டை இடம்பெற்றால், தாய், தந்தை, குழந்தைகள், சகோதர, சகோதரிகள் அனைவருமே துயரப்படுகிறார்கள். அமைதியற்ற மனிதர்கள் அசுர சுபாவத்தைக் கொண்டிருக்கின்றார்கள். எனவே அவர்கள் எங்கு சென்றாலும் அமைதியின்மையைப் பரப்புகின்றார்கள். சத்தியயுகமே சந்தோஷ உலகம் என்பதை நீங்கள் இப்பொழுது அறிந்துள்ளீர்கள். அந்த உலகத்தில் அமைதி, சந்தோஷம் இரண்டுமே உள்ளன. பரந்தாமத்தில், அமைதி மாத்திரமே உள்ளது. அந்த இடம் இனிய மௌன வீடு என்று அழைக்கப்படுகின்றது. முக்திதாமத்திற்குச் செல்ல விரும்புகின்றவர்களிடம் விளங்கப்படுத்துங்கள்: நீங்கள் முக்தியை விரும்புவதால், ஒரேயொரு தந்தையை நினைவுசெய்யுங்கள். முக்தியின் பின்னர், நிச்சயமாக ஜீவன்முக்தி உள்ளது. முதலில் நீங்கள் சுதந்திரமாக வாழ வேண்டும். பின்னர் நீங்கள் பந்தன வாழ்க்கையை வாழ்கின்றீர்கள்: அது அரை அரைவாசியாகும். நீங்கள் நிச்சயமாகச் சதோபிரதான், சதோ, ரஜோ, தமோ ஸ்திதிகளைக் கடந்து செல்ல வேண்டும். இறுதியில் வந்து, ஓரிரு பிறவிகளை மாத்திரம் எடுப்பவர்கள் என்ன சந்தோஷத்தை அல்லது துன்பத்தை அனுபவம் செய்வார்கள்? நீங்களே முழுமையான சந்தோஷத்தை அனுபவம் செய்கின்றீர்கள். நீங்கள் எத்தனை பிறவிகளுக்குச் சந்தோஷத்திலும், எத்தனை பிறவிகளுக்குத் துன்பத்திலும் இருக்கின்றீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஏனைய சமயங்களைச் சேர்ந்தவர்களால் புதிய உலகிற்குள் பிரவேசிக்க முடியாது என்பதையும் நீங்கள் அறிவீர்கள்; அவர்களது பாகங்கள் பின்னரே வருகின்றன. அது புதிய பிரிவாக இருந்தாலும், அவர்களுக்கு அது புதிய உலகம் போன்றுள்ளது. பௌத்தர்களின் பிரிவும், கிறிஸ்தவர்களின் பிரிவும் புதியவையாக உள்ளன. அவர்களும் தமது சதோ, ரஜோ, தமோ ஸ்திதிகளைக் கடந்து செல்ல வேண்டும். விருட்சத்தின் படத்திலும் அதேவிடயமே சித்தரிக்கப்பட்டுள்ளது. படிப்படியாக அது வளர்ந்து, விரிவடைகின்றது. முதலில் தோன்றுபவர்களும் இங்கே கீழேயே இருக்க வேண்டும். புதிய இலைகள் எவ்வாறு வெளிவருகின்றன என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். சிறிய பச்சை இலைகள்; முதலில் தோன்றிய பின்னர், பூக்கள் வெளித் தோன்றுகின்றன. ஒரு புதிய மரம் முதலில் மிகவும் சிறியதாக இருக்கின்றது. விதையொன்று விதைக்கப்பட்ட பின்னர், புதிய தாவரம் மிகவும் கவனமாகப் பராமரிக்கப்பட வேண்டும். அல்லது அவை பட்டுப் போய்விடும். நீங்கள் சரியான பராமரிப்பைக் கொடுக்காதிருந்தால், அவை உக்கி, பட்டுவிடும். தந்தை வந்து மனிதர்களைத் தேவர்களாக மாற்றுகின்றார். அவர்கள் வரிசைக்கிரமமாகத் தேவர்கள் ஆகுகின்றார்கள். ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது. பலரும் சித்தி அடைவதில்லை. குழந்தைகள் தமது ஸ்திதிக்கு ஏற்பவே தந்தையிடமிருந்து அன்பைப் பெறுகின்றார்கள். சில குழந்தைகளுக்கு வெளிப்படையாக அன்பைக் காட்ட வேண்டும். சில குழந்தைகள் எழுதுகின்றார்கள்: பாபா, நான் தோல்வி அடைந்து விட்டேன். நான் தூய்மை அற்றவராகி விட்டேன். இப்பொழுது, அத்தகைய குழந்தைகளையிட்டு யார் அக்கறை கொள்வார்கள்? அவர்களால் தந்தையின் இதயத்தில் இடம்பிடிக்க முடியாது. தூய ஆத்மாக்களுக்கு மாத்திரமே தந்தையால் இந்த ஆஸ்தியை வழங்க முடியும். முதலில், உங்கள்; செய்திகள் பற்றி உங்கள் ஒவ்வொருவரிடம் இருந்தும் கேட்கப்படுகின்றது. பின்னர் உங்கள் அட்டவணை சோதிக்கப்படுகின்றது. நீங்கள் பெறும் அன்பும் உங்கள் ஸ்திதிக்கேற்பவே உள்ளது. சிலருக்குப் பெயரளவில் அன்பு காட்டப்படுகின்றது. ஆனால் அவரால் சேவை செய்ய முடியாது விட்டால், அவர் முற்றிலும் ஒரு “புத்து” என்பது புரிந்து கொள்ளப்படும். அவரையிட்டு அக்கறை உள்ளது. அறியாமைப் பாதையில் ஒருவரது மகன் நல்ல வருமானத்தை ஈட்டினால், அவருடைய தந்தை அவர் மீது பெருமளவு அன்பு வைத்திருப்பார். எனினும் அவர் நல்ல வருமானம் ஈட்டாதவராக இருந்தால், அந்தளவிற்கு அவரின் தந்தை அவர் மீது அன்பு வைத்திருக்க மாட்டார். இங்கும் அவ்வாறே. குழந்தைகளாகிய நீங்கள் வெளியில் உள்ளவர்களுக்கும் சேவை செய்ய வேண்டும். மக்கள் எந்தச் சமயத்தைச் சேர்ந்தவர்களாயினும், அவர்களுக்கும் நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். தந்தையே முக்தியளிப்பவர் என்று அழைக்கப்படுகின்றார். நீங்கள் முக்தியளிப்பவரின் அறிமுகத்தை அனைவருக்கும் கொடுத்து, வழிகாட்டி யார் என்று அவர்களிடம் கூறுங்கள். பரமதந்தையான கடவுள், அனைவருக்கும் விடுதலை அளிக்கவே வருகின்றார். தந்தை கூறுகின்றார்: நீங்கள் மிகவும் தூய்மையற்றவர் ஆகிவிட்டீர்கள். சிறிதளவு தூய்மையேனும் எஞ்சியிருக்கவில்லை. இப்பொழுது என்னை நினைவு செய்யுங்கள்! தந்தை எப்பொழுதும் தூய்மையானவர். ஏனைய அனைவரும் நிச்சயமாகத் தூய்மையானவரில் இருந்து தூய்மை அற்றவராக மாறுகின்றார்கள்; மறுபிறவி எடுக்கும்பொழுது அவர்கள் தொடர்ந்தும் கீழிறங்குகின்றார்கள். இப்பொழுது அனைவரும் தூய்மை அற்றவர்கள். ஆகையாலேயே தந்தை உங்களுக்கு ஆலோசனை கொடுக்கின்றார்: குழந்தைகளே, என்னை நினைவுசெய்தால், நீங்கள் தூய்மை ஆகுவீர்கள்! மரணம் உங்கள் முன்னிலையில் நிற்கின்றது. இது இப்பொழுது பழைய உலகின் இறுதியாகும். இதுவே சுவர்க்கம் என்று நம்பும் வகையில், சிலரிடம் அதிகளவில் மாயையின் பகட்டு உள்ளது. நீங்கள் பார்க்கின்ற விமானங்கள், மின்சாரம் போன்ற அனைத்தும் மாயையின் பகட்டே. அவை அனைத்தும் அழிக்கப்படும். பின்னர் சுவர்க்கம் ஸ்தாபிக்கப்படும். மின்சாரம் போன்றன சத்தியயுகத்திலும் இருக்கின்றது. இவை யாவும் எவ்வாறு சுவர்க்கத்திற்குச் செல்கின்றன? அந்தத் திறமைகள் உடைய அனைவருமே நிச்சயமாகத் தேவைப்படுகின்றனர். நல்ல திறன்கள் உடைய தொழிலாளர்கள் வருவார்கள். அவர்கள் இராஜ குடும்பத்தில் ஒருவராக மாட்டார்கள், அவர்கள் குறைந்தபட்சம் பிரஜைகளில் ஒருவராக இருப்பார்கள். இந்த ஆக்கத்திறனைக் கற்ற மிகச் சிறந்த பொறியியலாளர்களும் வருவார்கள். இந்த நாகரீகம் அனைத்தும் வெளிநாடுகளிலிருந்து தொடர்ந்தும் வருகின்றது. ஆகவே வெளிநாட்டில் உள்ளவர்களுக்கும் நீங்கள் சிவபாபாவின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். அவர்களிடம் கூறுங்கள்: தந்தையை நினைவு செய்யுங்கள்! யோகத்தில் இருப்பதற்கும் நீங்கள் அதிகளவு முயற்சி செய்ய வேண்டும். இதிலேயே மாயையின் புயல்கள் பல வருகின்றன. தந்தை கூறுகின்றார்: சதா என்னை மாத்திரமே நினைவு செய்யுங்கள்! இது நல்ல விடயம். கிறிஸ்துவும் அவரின் படைப்பே. பரமாத்மா மாத்திரமே படைப்பவர்;. ஏனைய அனைவரும் படைப்பின் பகுதிகளே. படைப்பவரிடம் இருந்து மாத்திரமே ஆஸ்தி பெறப்படுகின்றது. இந்த நல்ல கருத்துக்கள் அனைத்தையும் குறித்துக் கொள்ளுங்கள். அனைவரையும் வேதனையில் இருந்து விடுவிப்பதே தந்தையின் பிரதான பணியாகும். அவர் அமைதி தாமத்தினதும், சந்தோஷ தாமத்தினதும் வாயில்களைத் திறக்கின்றார். மக்கள் அவரை அழைக்கின்றார்கள்: ஓ முக்தியளிப்பவரே, எங்களைத் துன்பத்திலிருந்து விடுவித்து, அமைதி தாமத்திற்கும் சந்தோஷ தாமத்திற்கும் அழைத்துச் செல்லுங்கள். நாங்கள் எங்களுடைய சந்தோஷ உலகில் இருக்கும்பொழுது, ஏனைய ஆத்மாக்கள் அனைவரும் அமைதி தாமத்தில் இருக்கின்றார்கள். தந்தையால் மாத்திரமே சுவர்க்;கத்தின் வாசலைத் திறக்க முடியும். அவர் திறக்கின்ற ஒரு வாசல் புதிய உலகிற்குரியது. மற்றையது மௌன தாமத்திற்கானது. தூய்மை அற்றவர்கள் ஆகியுள்ள ஆத்மாக்கள் அனைவருக்கும் தந்தை இந்த ஸ்ரீமத்தைக் கொடுக்கின்றார்: உங்களை ஆத்மாக்களாகக் கருதி, என்னை நினைவு செய்தால் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். இந்த முயற்சியைச் செய்பவர்கள் தமது சொந்த சமயத்தில் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவார்கள். நீங்கள் முயற்சி செய்யாவிட்டால் குறைந்த அந்தஸ்தையே பெறுவீர்கள். நல்ல கருத்துக்களைக் குறித்துக் கொள்ளுங்கள். அவை தேவை ஏற்படும்பொழுது, உங்களுக்குப் பயன்படும். அவர்களிடம் கூறுங்கள்: சிவபாபாவின் தொழில் பற்றி நாங்கள் உங்களுக்குக் கூறுவோம். மக்கள் பின்னர் பதில் அளிக்கின்றார்கள்: கடவுளாகிய தந்தை சிவனின் தொழில் என்னவென்று எங்களுக்குக் கூறுவதற்கு நீங்கள் யார்? அவர்களுக்குக் கூறுங்கள்: ஆத்மாக்கள் என்ற ரீதியில் நாங்கள் அனைவரும் சகோதரர்களே. பின்னர் அவரே பிரஜாபிதா பிரம்மாவின் மூலம் படைப்பைப் படைக்கின்றார். ஆகவே நாங்கள் சகோதர, சகோதரிகள் ஆகுகின்றோம். முக்தியளிப்பவரும், வழிகாட்டியும் என்று அழைக்கப்படுகின்ற, ஒரேயொரு தந்தையாகிய கடவுளின் தொழில் என்னவென்று நாங்கள் உங்களுக்குக் கூறுவோம். நிச்சயமாகத் தந்தையாகிய கடவுளே இதனை எங்களுக்குக் கூறினார். ஆகையால் எங்களால் உங்களிடமும் இதனைக் கூற முடியும். மகன் தந்தையை வெளிப்படுத்துகின்றார். ஆத்மாக்கள் சின்னஞ்சிறிய நட்சத்திரங்கள் போன்றவர்கள் என நீங்கள் விளங்கப்படுத்தவும் வேண்டும். ஒருவரின் பௌதீகக் கண்களால் ஆத்மாக்களைப் பார்க்க முடியாது; ஆத்மாக்களைத் தெய்வீகக் காட்சிகளினால் மாத்திரமே பார்க்க முடியும். ஆத்மாக்கள் ஒளிப்புள்ளிகளே. ஆத்மாவைப் பார்ப்பதால் எந்த நன்மையும் இல்லை. தந்தையும் ஒளிப்புள்ளியே. ஆனால் அவர் பரமாத்மா என்று அழைக்கப்படுகின்றார். ஆத்மாக்கள் அனைவரும் பார்ப்பதற்கு ஒரேமாதிரியானவர்கள். ஆனால் அவர் ஞானம் நிறைந்தவரும், பேரானந்தம் மிக்கவரும், முக்தியளிப்பவரும், வழிகாட்டியுமான பரம் ஆவார். அவர் அதிகளவில் போற்றப்பட வேண்டும். தந்தை நிச்சயமாக இங்கே வரவேண்டும். அப்பொழுதே அவரால் உங்களைத் தன்னுடன் மீண்டும் அழைத்துச் செல்ல முடியும். அவர் வந்து உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். ஆத்மாக்கள் சின்னஞ்சிறியவர்கள் என்றும், அவரும் அவர்களைப் போன்றே சின்னஞ்சிறியவர் என்றும் தந்தை மாத்திரமே உங்களுக்குக் கூறுகின்றார். அவர் உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுப்பதற்காக நிச்சயமாக ஒரு சரீரத்தில் அவதரிக்க வேண்டும். நான் வந்து இந்த ஆத்மாவிற்கு அருகில் அமர்கின்றேன். எனக்குள் சக்தி உள்ளது. நான் புலனங்கங்களைப் பெற்றதும், நான் அதிபதியாகி விடுகின்றேன். நான் இங்கே அமர்ந்திருந்து இந்த அங்;கங்களினூடாக உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றேன். இவர் ஆதாம் என்றும் அழைக்கப்படுகின்றார். ஆதாமே முதல் மனிதராவார். மனிதர்களின் வம்சாவழி விருட்சம் உள்ளது. அவர் தாயாகவும், தந்தையாகவும் ஆகுகின்றார். இவரின் மூலமே பின்னர் படைப்பு இடம்பெறுகின்றது. இவரே மிகவும் பழைமையானவர். இவர் தத்து எடுக்கப்பட்டுள்ளார். இல்லையேல் பிரம்மா எங்கிருந்து வர முடியும்? பிரம்மாவின் தந்தையின் பெயரை எவரேனும் உங்களுக்குக் கூற முடியுமா? பிரம்மாவும், விஷ்ணுவும், சங்கரரும் நிச்சயமாக எவரோ ஒருவரின் படைப்புக்களே. படைப்பவர் ஒருவரே உள்ளார். படைப்பவரான தந்தை இவரைத் தத்தெடுத்துள்ளார். சிறு குழந்தைகள் இங்கமர்ந்திருந்து இவ்விடயங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துவார்களாயின், மக்கள் சிந்திப்பார்கள்: இந்த ஞானம் மிகவும் மகத்துவமானது. இந்த ஞானத்தை மிகவும் நன்றாகக் கிரகிக்கின்ற குழந்தைகளே மிகவும் சந்தோஷமாக இருப்பவர்கள். அவர்கள் ஒருபொழுதும் கொட்டாவி விடுவதில்லை. எதையும் புரிந்துகொள்ள முடியாத ஒருவரே தொடர்ந்தும் கொட்டாவி விடுகின்றார். இங்கே நீங்கள் ஒருபொழுதும் கொட்டாவி விடக்கூடாது. வருமானத்தை ஈட்டுகின்ற நேரத்தில் ஒருவர் ஒருபொழுதும் கொட்டாவி விடமாட்டார். வாடிக்கையாளர்கள் இல்லாத பொழுது, வியாபாரம் குறைவாக இருப்பதால், அவர்கள் தொடர்ந்தும் கொட்டாவி விடுகின்றார்கள். இங்கும், சிலர் இந்த ஞானத்தைக் கிரகிப்பதில்லை. தங்களுடைய சரீர உணர்வு காரணமாக சிலர் எதையுமே புரிந்து கொள்வதில்லை; அவர்களால் ஆத்ம உணர்வுடன் அமர்ந்திருக்க முடிவதில்லை. அவர்கள் வெளி உலகைப் பற்றியே தொடர்ந்தும் சிந்திக்கின்றார்கள். அவர்களால் கருத்துக்களையேனும் குறித்துக் கொள்ள முடிவதில்லை. கூர்மையான புத்தியுடையவர்கள் கருத்துக்களை உடனடியாகவே குறித்துக் கொள்கின்றார்கள்: இந்தக் கருத்து மிகவும் நல்லது. ஓர் ஆசிரியரால் மாணவர்களின் நடத்தையை அவதானிக்க முடியும். ஒரு விவேகமான ஆசிரியரின் கண்கள் எங்கும் இருக்கின்றன. ஆகையாலேயே அவரால் அக்கல்விக்கான சான்றிதழை வழங்க முடிகின்றது. நற்பண்புகளுக்கான சான்றிதழ்களும் உள்ளன. சமூகம் அளிப்பவர்களினதும், சமூகம் அளிக்காதவர்களினதும் பதிவேடும் உள்ளன. இங்கு வந்துள்ள உங்களில் சிலருக்கு எதுவும் புரிவதில்லை. கிரகிப்பது என்பதே இல்லை. சிலர் கூறுகின்றார்கள்: எனது புத்தி மந்தமாக இருப்பதால் என்னால் எதனையும் கிரகிக்க முடிவதில்லை. அதற்கு பாபாவினால் என்ன செய்ய முடியும்? அது உங்கள் கர்மக் கணக்கு. ஒரேயளவு முயற்சி செய்வதற்கே தந்தை அனைவரையும் தூண்டுகின்றார். உங்கள் பாக்கியத்தில் அது இல்லாதிருந்தால் அவரால் என்ன செய்ய முடியும்? ஒரு பாடசாலையிலும், சிலர் சித்தி அடைகின்றார்கள், சிலர் சித்தி அடைவதில்லை. இது எல்லையற்ற தந்தை மாத்திரமே கற்பிக்கக்கூடிய, ஓர் எல்லையற்ற கல்வியாகும். கீதையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை ஏனைய சமயத்தினர் புரிந்து கொள்வதில்லை. அந்தத் தேசத்திற்கு (நாடு) ஏற்ப நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். முதலில் அதிமேலான தந்தையின் அறிமுகத்தையும், அவரே முக்தியளிப்பவரும், வழிகாட்டியும் என்ற அறிமுகத்தையும் கொடுங்கள். சுவர்க்கத்தில் விகாரங்கள் இருப்பதில்லை. தற்பொழுது இது அசுர இராச்சியம். இந்த உலகம் பழையது. இதனைச் சத்தியயுக உலகம் என்று அழைக்க முடியாது. இந்த உலகம் புதியதாக இருந்தது. ஆனால் அது இப்பொழுது பழையதாகி விட்டது. சேவை செய்ய ஆர்வமுள்ள குழந்தைகள் கருத்துக்களைக் குறித்துக் கொள்ள வேண்டும். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. இக் கல்வியின் மூலம் அதிகளவு வருமானம் ஈட்ட வேண்டியுள்ளது. ஆகையால் அந்த வருமானத்தை மிகவும் சந்தோஷத்துடன் ஈட்டுங்கள். கற்கும்பொழுது என்றுமே கொட்டாவி விடாதீர்கள். உங்கள் புத்தியின் யோகத்தை வேறு எங்கேனும் அலைய விடாதீர்கள். இந்த ஞானக் கருத்துக்களைக் குறித்துத் தொடர்ந்தும் அவற்றைக் கிரகியுங்கள்.2. தூய்மையாகி, தந்தையின் இதயத்திலிருந்து அன்பைப் பெறுவதற்கு ஓர் உரிமையைக் கோருங்கள். சேவையில் திறமைசாலிகள் ஆகுங்கள். சிறந்த வருமானத்தை ஈட்டுவதுடன், அதனை ஏனையோரும் செய்யத் தூண்டுங்கள்.
ஆசீர்வாதம்:
மரணித்து வாழும் உங்களின் பிறப்பினை உணர்ந்தவராக இருப்பதன் மூலம் நீங்கள் ஒரு கர்மயோகியாகி சகல கர்ம பந்தனங்களையும் முடிப்பீர்களாக.மரணித்து வாழும் இந்தத் தெய்வீகப் பிறவி, கர்ம பந்தனத்திற்கு உரியதொரு வாழ்க்கை இல்லை. இது ஒரு கர்மயோகி வாழ்க்கை ஆகும். இந்த அலௌகீக, தெய்வீக வாழ்க்கையில் பிராமண ஆத்மாக்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள். தங்கியிருப்பதில்லை. உங்களின் சரீரங்களை நீங்கள் கடனாகப் பெற்றுள்ளீர்கள். தந்தை உங்களின் பழைய சரீரங்களைச் சக்தியால் நிரப்பி, முழு உலகிற்கும் சேவை செய்ய வைக்கிறார். இது தந்தையின் பொறுப்பே, உங்களுடையது அல்ல. எப்படி செயல்பட வேண்டும் என்ற வழிகாட்டல்களைத் தந்தை உங்களுக்கு வழங்கியுள்ளார். நீங்கள் சுதந்திரமாக இருக்கிறீர்கள். எல்லோரையும் அசைய வைக்கும் ஒரேயொருவர் அதைச் செய்கிறார். இந்த விசேடமான விழிப்புணர்வைக் கொண்டிருப்பதன் மூலம் கர்ம பந்தனங்கள் அனைத்தையும் முடித்து, ஒரு கர்மயோகி ஆகுங்கள்.
சுலோகம்:
நேரம் நெருங்கி வருவதன் அத்திவாரம், எல்லையற்ற விருப்பமின்மைக்கான மனோபாவம் ஆகும்.அவ்யக்த சமிக்ஞை: ஒன்றிணைந்த ரூபத்தின் விழிப்புணர்வால் சதா வெற்றி பெறுபவர் ஆகுங்கள்.
எந்தளவிற்கு அதிகமாக நீங்கள் நினைவில் நிலைத்திருக்கிறீர்களோ, அந்தளவிற்கு நீங்கள் தனியாக இல்லை, ஆனால் பாப்தாதா சதா உங்களுடன் இருக்கிறார் என்பதை அனுபவம் செய்வீர்கள். என்ன வகையான பிரச்சனைகள் உங்களின் முன்னால் வந்தாலும் நீங்கள் ஒன்றிணைந்து இருக்கிறீர்கள் என்ற விழிப்புணர்வுடன் இருங்கள், அப்போது நீங்கள் பயப்பட மாட்டீர்கள். ஒன்றிணைந்த ரூபத்தின் விழிப்புணர்வால் எந்தவொரு கஷ்டமான காரியமும் இலகுவாகிவிடும். உங்களின் சுமைகளைத் தந்தையிடம் கொடுத்துவிட்டு, இலேசாகுங்கள். நீங்கள் சதா உங்களைப் பாக்கியசாலியாக அனுபவம் செய்வதுடன் தொடர்ந்து ஒரு தேவதையைப் போல் நடனம் ஆடுவீர்கள்.