23.12.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் புத்துணர்ச்சி ஊட்டப்படுவதற்காகவே தந்தையிடம் வருகின்றீர்கள். நீங்கள் தந்தையைச் சந்திக்கும்போது பக்தி மார்க்கத்திலிருந்த களைப்புக்கள் அனைத்தும் அகற்றப்பட்டுவிடும்.

கேள்வி:
குழந்தைகளாகிய உங்களைப் புத்துணர்ச்சி ஊட்டுவதற்காக பாபா பயன்படுத்தும் வழிமுறைகள் என்ன?

பதில்:
1. இந்த ஞானத்தை பாபா தொடர்ந்து கொடுப்பதன் மூலம் உங்களைப் புத்துணர்ச்சி ஊட்டுகிறார். 2. நீங்கள் பாபாவின் நினைவைக் கொண்டிருப்பதன் மூலம் புத்துணர்ச்சி ஊட்டப்படுகிறீர்கள். உண்மையில் சத்திய உலகமே ஓய்விற்கான உலகமாகும். நீங்கள் முயற்சி செய்து எதனையும் பெறவேண்டும் என்றளவிற்கு எக்குறைபாடும் அங்கில்லை. 3. நீங்கள் சிவபாபாவின் மடிக்கு வந்ததுமே குழந்தைகளாகிய உங்களுக்கு ஓய்வு கிடைப்பதுடன் உங்கள் களைப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டு விடுகின்றது.

ஓம் சாந்தி.
தந்தை இங்கமர்ந்திருந்து விளங்கப்படுத்துகின்றார். தந்தை அமர்ந்திருந்து இந்த தாதா மூலம் விளங்கப்படுத்தும் அதேநேரம் இந்த தாதாவும் செவிமடுக்கின்றார். உங்களைப் போலவே இந்த தாதாவும் புரிந்து கொள்கின்றார். தாதா கடவுள் என்று அழைக்கப்படுவதில்லை. இவை கடவுளின் வாசகங்கள். தந்தை எதனை விளங்கப்படுத்துகின்றார்? நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுவீர்களாக. இது ஏனெனில் நீங்கள் உங்களை ஓர் ஆத்மா எனக் கருதும் வரை உங்களால் பரமாத்மாவாகிய பரம தந்தையை நினைவு செய்ய முடியாது. இப்பொழுது ஆத்மாக்கள் அனைவரும் தூய்மையற்றுள்ளார்கள். தூய்மையற்றவர்கள் மனிதர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். ஆனால் தூய்மையானவர்கள் தேவர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். இந்த விடயங்கள் புரிந்துகொள்வதற்கும் மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துவதற்கும் மிகவும் இலகுவானதாகும். மனிதர்களே அழைத்தார்கள்: ஓ தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குபவரே, வாருங்கள்! தேவர்கள் ஒருபோதும் இவ்வாறு அழைக்க மாட்டார்கள். தூய்மையற்றவர்களின் அழைப்பைக் கேட்டு தூய்மையாக்குபவரான தந்தை வந்துள்ளார். அவர் ஆத்மாக்களைத் தூய்மையாக்குவதுடன் தூய புதிய உலகையும் ஸ்தாபிக்கின்றார். தந்தையை ஆத்மாக்களே அழைத்தார்கள். சரீரங்கள் அழைப்பதில்லை. அனைவரும் என்றென்றும் தூய்மையான ஒரே ஒருவரான பரலோகத்தந்தையை நினைவு செய்கிறார்கள். இவ்வுலகம் பழையது. தந்தை உலகைப் புதியதாகவும் தூயதாகவும் ஆக்குகின்றார். சிலர் இங்கேயே (பழைய உலகில்) எல்லையற்ற சந்தோஷத்தைக் கொண்டிருப்பதாகக் கூறுகின்றார்கள். இங்கே அவர்களிடம் பெருஞ்செல்வமும் சொத்துக்களும் இருப்பதனால் அவர்களைப் பொறுத்தவரையில் இதுவே சுவர்க்கம் என்று அவர்கள் நினைக்கின்றார்கள். நீங்கள் கூறும் விடயங்களை அவர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? இந்தக் கலியுகத்தை சுவர்க்கம் எனக் கருதுவது விவேகமற்றதாகும். இந்த உலகம் முற்றிலும் அழியும் நிலையை அடைந்துள்ளது. இருப்பினும் சுவர்க்கத்தில் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். குழந்தைகளாகிய உங்களால் இதனை விளங்கப்படுத்த முடியாது விட்டால் உங்கள் புத்தி கல்லால் ஆனதா எனத் தந்தை நிச்சயமாக வினவுவார். உங்களால் இதனை மற்றவர்களுக்கு விளங்கப்படுத்த முடியாதா? நீங்கள் தெய்வீகப் புத்தியுடையவராகும் போதே உங்களால் மற்றவர்களையும் உங்களைப் போன்று ஆக்க முடியும். நீங்கள் அதிகளவு முயற்சி செய்ய வேண்டும். இதனையிட்டு வெட்கப்பட வேண்டிய அவசியம் எதுவுமில்லை. எனினும் அரைக்கல்பமாக மனிதர்களின் புத்தி பிழையான எண்ணங்களால் நிறைந்துள்ளது. அவர்களால் அவற்றை விரைவில் மறந்து விட முடிவதில்லை. நீங்கள் தந்தையை மிகச் சரியாக இனங்காணும் வரை உங்களால் அந்தளவு சக்தியைக் கொண்டிருக்க முடியாது. தந்தை கூறுகின்றார்: அந்த வேதங்களையும் சமய நூல்களையும் கற்பதினால் மனிதர்கள் சீர்திருத்தம் அடைவதில்லை. நாளுக்கு நாள் அவர்கள் மேலும் மோசமடைந்து வந்துள்ளார்கள். அவர்கள் சதோபிரதானிலிருந்து தமோபிரதானாகி விட்டார்கள். எவ்வாறு நாங்கள் சதோபிரதானான தேவர்களாக இருந்தோம் என்பதும் எவ்வாறு நாங்கள் கீழிறங்கி வந்தோம் என்பதும் எவரது புத்தியிலும் இல்லை. எதனையும் எவருமே அறிந்திருக்கவில்லை. 84 பிறவிகளுக்குப் பதிலாக, அவர்கள் 8.4 மில்லியன் பிறவிகளைப் பற்றிப் பேசுகிறார்கள். ஆகவே எவ்வாறு அவர்கள் எதனையும் அறிவார்கள்? வேறு எவரும் அன்றி தந்தையால் மாத்திரமே உங்களுக்கு ஞான ஒளியைக் கொடுக்க முடியும். ஒருவரைத் தொடர்ந்து ஒருவர் வாசல் தோறும் தொடர்ந்தும் அலைந்து திரிந்தார்கள். அவர்கள் தொடர்ந்தும் கீழிறங்கி இப்பொழுது அடித்தளத்தை அடைந்துள்ளார்கள். அவர்கள் தங்களிடமிருந்த பலம் முழுவதையும் பயன்படுத்தி விட்டார்கள். தந்தையை மிகச் சரியாக இனங்கண்டு கொள்வதற்கான பலம் அவர்களின் புத்திக்கு இல்லை. தந்தை வந்து அனைவருடைய புத்தியின் பூட்டைத் திறக்கின்றார். அப்போது அவர்கள் புத்துணர்ச்சி அடைகின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் புத்துணர்ச்சி அடைவதற்காகவே தந்தையிடம் வருகிறீர்கள். நீங்கள் உங்கள் வீட்டில் இளைப்பாறுகிறீர்கள். உங்கள் தந்தையைக் காணும் போது பக்தி மார்க்கத்திலிருந்த உங்கள் களைப்புக்கள் அனைத்தும் அகன்று விடுகின்றன. சத்தியயுகம் ஓய்விற்கான உலகம் என்றும் அழைக்கப்படுகிறது. அங்கு நீங்கள் அதிக ஓய்வு எடுக்கிறீர்கள்! அங்கு நீங்கள் முயற்சி செய்ய அவசியம் ஏற்படும் வகையில் எக் குறைபாடும் இருக்காது. இங்கு தந்தையுடன் இந்த தாதாவும் உங்களைப் புத்துணர்ச்சி அடையச் செய்கின்றார். சிவபாபாவின் மடிக்கு நீங்கள் வந்ததும் நீங்கள் அதிகளவு ஓய்வைப் பெறுகின்றீர்கள். ஓய்வு என்பது மௌனம் ஆகும். மக்கள் களைப்டையும் போதே ஓய்வு எடுக்கிறார்கள். சிலர் ஓய்வெடுப்பதற்காக ஓரிடத்திற்குச் செல்வார்கள். மற்றும் சிலர் வேறு எங்காவது ஓய்வெடுப்பதற்காகச் செல்வார்கள். எனினும் ஓய்வெடுப்பதில் எவ்விதப் புத்துணர்ச்சியும் கிடைப்பதில்லை. இங்கு தந்தை உங்களை ஞானத்தினால் அதிகளவு புத்துணர்ச்சி அடையச் செய்கிறார். நீங்களும் தந்தையின் நினைவைக் கொண்டிருப்பதன் மூலம் புத்துணர்ச்சி அடைகிறீர்கள். தமோபிரதானிலிருந்து நீங்கள் தொடர்ந்தும் சதோபிரதானாக ஆகுகின்றீர்கள். சதோபிரதானாக ஆகுவதற்காகவே நீங்கள் இங்கே தந்தையிடம் வந்துள்ளீர்கள். தந்தை கூறுகின்றார்: இனிமையான குழந்தைகளே, தந்தையை நினைவு செய்யுங்கள். தந்தை உலகச் சக்கரம் எவ்வாறு சுழல்கிறதென்றும் எவ்வாறு, எங்கு ஆத்மாக்கள் அனைவரும் ஓய்வு எடுக்கிறார்கள் என்பதையும் விளங்கப்படுத்தியுள்ளார். அனைவருக்கும் தந்தையின் செய்தியைக் கொடுப்பது குழந்தைகளாகிய உங்களின் கடமையாகும். தந்தை கூறுகின்றார்: என்னை நினைவு செய்தால் நீங்கள் இந்த ஆஸ்திக்கு அதிபதிகள் ஆகுவீர்கள். சங்கமயுகத்திலேயே தந்தை புதிய உலகான சுவர்க்கத்தை உருவாக்குகின்றார். நீங்கள் அங்கே சென்று அதிபதிகள் ஆகுகின்றீர்கள். பின்னர் துவாபர யுகத்தில் நீங்கள் இராவணனாகிய மாயையினால் சபிக்கப்பட்டு உங்கள் தூய்மை, அமைதி, சந்தோஷம், செல்வம் போன்ற அனைத்தையும் இழந்து விடுகிறீர்கள். அவற்றை நாளடைவில் எப்படி இழக்கின்றீர்கள் என்பதையும் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். துன்ப உலகில் எவ்வித ஓய்வும் இல்லை. ஆனால் சந்தோஷ உலகில் ஓய்வைத்தவிர வேறு எதுவுமில்லை. பக்தி செய்வதன் மூலம் மக்கள் அதிகளவு களைப்படைகின்றார்கள்! அவர்கள் பிறவி பிறவியாக பக்தி செய்வதன் மூலம் களைப்படைந்துள்ளார்கள். தந்தை இங்கமர்ந்திருந்து நீங்கள் எவ்வாறு முற்றிலும் ஏழ்மையாகினீர்கள் என்ற இரகசியங்களை விளங்கப்படுத்துகிறார். புதியவர்கள் இங்கு வரும் போது அவர்களுக்கு நீங்கள் அதிகமாக விளங்கப்படுத்த வேண்டும். மக்கள் அனைத்தையும் பற்றி அதிகமாகச் சிந்திக்கின்றார்கள். அவர்கள் தங்கள் மீது மந்திரசக்தி ஏவி விடப்பட்டிருக்குமோ எனப் பயப்படுகிறார்கள். எனினும் நீங்கள் மாத்திரமே கடவுளை மந்திரவாதி எனக் கூறுகின்றீர்கள். எனவே தந்தை கூறுகின்றார்: ஆம், நான் உண்மையில் மந்திரவாதிதான். ஆனால் நான் மக்களை மந்திரத்தால் செம்மறி ஆடுகளாகவோ, ஆடுகளாகவோ மாற்றுபவர் அல்ல. யார் ஆடுகள் போன்றவர்கள் என்பதை உங்கள் புத்தி புரிந்து கொள்ளும். பாடல் ஒன்று கூறுகிறது: ஓர் ஆட்டிற்கு சுவர்க்கத்தின் தெய்வீக நாதத்தைப் பற்றி என்ன தெரியும்? தற்போது மக்கள் செம்மறி ஆடுகளைப் போன்றும் ஆடுகளைப் போன்றும் இருக்கிறார்கள். அந்தக் கதைகள் யாவும் இந்த இடத்தையே குறிக்கின்றன. அந்தப் பாடல்கள் இக் காலத்தையே குறிக்கின்றது. சக்கரத்தின் இறுதியிலும்கூட மக்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை. அவர்கள் சண்டிக்காதேவி (சுடலை தெய்வம்) பெரிய கண்காட்சியை நடாத்துகின்றார்கள். அவள் யார்? அவள் இறைவி என அவர்கள் கூறுகின்றார்கள். சத்திய யுகத்தில் அத்தகைய பெயர்களை அவர்கள் கொண்டிருப்பதில்லை. சத்தியயுகத்தில் அவர்கள் அழகான பெயர்களைக் கொண்டிருப்பார்கள். சத்தியயுகத்து சமூகத்தவர்களை மேன்மையானவர்கள் என அழைக்கிறார்கள். ஆனால் கலியுகத்து சமூகத்தவர்களுக்கு அவலட்சணமான பட்டங்களைக் கொடுத்துள்ளார்கள். இன்றுள்ள மக்களை மேன்மையானவர்கள் என எவருமே கூறுவதில்லை. தேவர்களையே மேன்மையானவர்கள் என அழைக்கிறார்கள். மனிதர்களைத் தேவர்களாக மாற்றுவதற்கு கடவுளுக்கு நீண்ட நேரம் எடுப்பதில்லை என்றதொரு கூற்றும் உண்டு. தந்தை உங்களுக்கு தேவர்கள் எப்படி மனிதர்களாக மாறுகின்றார்கள், மனிதர்கள் எப்படித் தேவர்களாக மாறுகிறார்கள் என்பதன் இரகசியத்தை விளங்கப்படுத்தியுள்ளார். அது தேவர்களின் உலகமாகும். இது மனித உலகமாகும். பகல் வெளிச்சமாகவும் இரவு இருட்டாகவும் உள்ளது. ஞானம் ஒளியாகவும் பக்திமார்க்கம் இருள் மயமாகவும் இருக்கும். அதனை அறியாமையின் உறக்கம் என அழைப்பார்கள். முன்னர் உங்களுக்கு இதைப்பற்றி எதுவுமே தெரியாதிருந்தது என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்கள். நீங்கள் “நேற்றி நேற்றி” எனக் கூறுவதன் அர்த்தம் எதுவுமே உங்களுக்குத் தெரியாது என்பதாகும். முன்னர் நீங்கள் நாஸ்திகர்களாக இருந்தீர்கள் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்து கொண்டுள்ளீர்கள். உங்களுக்கு எல்லையற்ற தந்தையைத் தெரியாது. அவரே உங்கள் உண்மையான அநாதியான பாபா ஆவார். அவர் சகல ஆத்மாக்களினதும் தந்தை என அழைக்கப்படுகின்றார். நீங்கள் இப்பொழுது எல்லையற்ற தந்தைக்கு உரியவர் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு மறைமுகமான ஞானத்தைக் கொடுக்கின்றார். இந்த ஞானத்தை நீங்கள் மனிதர்களிடமிருந்து பெற முடியாது. ஆத்மாக்களாகிய நீங்கள் மறைமுகமானவர்கள், ஆத்மாக்களாகிய நீங்கள் கிரகிக்கின்ற ஞானமும் மறைமுகமானது. இந்த ஞானத்தை ஆத்மாக்களாகிய நீங்கள் உங்கள் வாய்கள் மூலமாகப் பேசுகின்றீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் மறைமுகமான தந்தையின் நினைவில் மறைமுகமாக நிலைத்திருக்கிறீர்கள். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே சரீர உணர்வுடையவராக ஆகாதீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் சரீர உணர்விற்கு வரும்போது நீங்கள் உங்கள் பலத்தை இழந்து விடுவீர்கள். ஆத்ம உணர்வுடையவராக ஆகுவதனால் ஆத்மாக்களாகிய நீங்கள் உங்களுக்குள்ளேயே சக்தியைச் சேகரித்துக் கொள்வீர்கள். தந்தை கூறுகின்றார்: நாடகத்தின் இரகசியங்களை மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டு தொடர்ந்தும் நீங்கள் முன்னேற வேண்டும். அழிவற்ற நாடகத்தின் இரகசியங்களை மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டவர்கள் எப்பொழுதும் முகமலர்ச்சியுடன் இருப்பார்கள். இந்நேரத்தில் மேலே ஓர் உலகம் உள்ளது என மக்கள் நினைப்பதால் அவர்கள் மேலே செல்வதற்குப் பெரும் முயற்சி செய்கிறார்கள். அவர்கள் மேலே ஓர் உலகம் உள்ளது எனச் சமயநூல்களில் கேள்விப்பட்டிருப்பதால் அங்கு சென்று அதனைப் பார்க்க வேண்டுமென விரும்புகின்றார்கள். ஏனெனில் இவ்வுலக சனத்தொகை மிகவும் அதிகரித்துள்ளதால் அவர்கள் மேலேயும் ஓர் உலகை ஸ்தாபிக்க முயற்சிக்கின்றார்கள். பாரதத்தில் ஒரேயொரு ஆதிசனாதன தேவி தேவதாதர்மம் மாத்திரமே இருந்தது. வேறு தேசங்கள் எதுவும் இருக்கவில்லை. பின்னர் சனத்தொகை பெருமளவில் வளர்ச்சியடைகின்றது! அதனையிட்டுச் சிந்தியுங்கள்: தேவர்கள் பாரதம் என்ற சிறிய இடத்தில் வாழ்ந்திருக்க வேண்டும்! இலக்ஷ்மியும் நாராயணனும் ஆட்சி செய்த பரிஸ்தான், யமுனை நதிக்கரையிலேயே இருந்தது. அப்போது உலகம் மிகவும் அழகாகவும் சதோபிரதானாகவும் இருந்தது. அங்கு இயற்கை அழகும் இருந்தது. முழுப்பிரகாசமும் ஆத்மாவில் இருந்தது. ஸ்ரீ கிருஷ்ணர் எவ்வாறு பிறப்பு எடுத்தார் என்ற காட்சியை குழந்தைகளாகிய உங்களிற் சிலர் கண்டார்கள். அது அறை முழுவதும் ஒளி பரவியது போலிருந்தது. தந்தை இங்கமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: இப்பொழுது நீங்கள் பரிஸ்தானுக்குச் செல்வதற்காக முயற்சி செய்கின்றீர்கள். குளத்தில் நீங்கள் மூழ்கி எழுவதினால் தேவதைகள் ஆகலாம் என்றில்லை. குளங்களுக்கு அப்பிழையான பெயர்களைக் கொடுத்துள்ளார்கள். நூறாயிரம் வருடங்களைப் பற்றிப் பேசியதன் மூலம் அவர்கள் அனைத்தையும் முற்றாக மறந்து விட்டார்கள். இப்பொழுது நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமாக அனைத்தையும் நினைவு செய்கின்றீர்கள். எவ்வாறு அத்தகைய சின்னஞ்சிறு ஆத்மாக்கள், பெரியதொரு பாகத்தை தங்கள் சரீரங்கள் மூலமாக நடிக்கின்றார்கள் என்பதைப் பற்றியும் நீங்கள் சிந்திக்க வேண்டும். ஓர் ஆத்மா சரீரத்தை விட்டு நீங்கிச் சென்றதும் அச்சரீரத்தின் நிலையைப் பாருங்கள். ஆத்மாவே ஒரு பாகத்தை நடிக்கின்றார். இது ஆழமாகச் சிந்திக்க வேண்டிய விடயமாகும். உலகம் முழுவதிலும் உள்ள நடிகர்கள் அனைவரும் தங்கள் சொந்தப் பாகங்களை நடிக்க வேண்டும். அவர்களின் சொந்தப் பாகங்களில் ஒரு சிறு வித்தியாசமும் இருக்க முடியாது. முழு நடிப்பும் அதே போன்று மீண்டும் இடம் பெறும். இதனையிட்டு எவ்விதச் சந்தேகமும் இருக்க முடியாது. ஒவ்வொருவரின் புத்திகளுக்கும் இடையில் வேறுபாடு இருக்கலாம். ஏனெனில் மனமும் புத்தியும் ஆத்மாவிலேயே உள்ளன. குழந்தைகள் ஒரு புலமைப் பரிசிலைப் பெறப்போகிறார்கள் என்பதை அறியும்போது தங்கள் இதயத்தில் பெருமளவு சந்தோஷத்தைக் கொண்டிருப்பார்கள். இங்கு நீங்கள் வந்ததும் உங்கள் இலக்கும் இலட்சியமும் உங்கள் முன்னிருப்பதைக் காணும் போது நீங்கள் நிச்சயமாகச் சந்தோஷம் அடைவீர்கள். நீங்கள் இங்கு கற்பது அவர்களைப் (இலக்ஷ்மி நாராயணன்) போல் ஆகுவதற்கே என்பதை நீங்கள் இப்பொழுது அறிந்து கொள்கிறீர்கள். அடுத்த பிறவியின் உங்கள் இலக்கையும் இலட்சியத்தையும் உங்களுக்குக் காட்டுகின்ற பாடசாலை வேறு எங்கும் இல்லை. நீங்கள் எவ்வாறு இலக்ஷ்மி நாராயணன் ஆகுகின்றீர்கள் என்பதை உங்களால் பார்க்க முடிகின்றது. நாங்கள் இப்பொழுது சங்கமயுகத்தில் இருப்பதுடன் எதிர்காலத்தில் இலக்ஷ்மி நாராயணன் ஆகுவதற்கான இக் கல்வியையும் கற்கின்றோம். இது அத்தகையதொரு மறைமுகமான கல்வியாகும்! நீங்கள் உங்கள் இலக்கையும் இலட்சியத்தையும் காணும் போது அதிகளவு சந்தோஷப்பட வேண்டும். உங்கள் சந்தோஷத்திற்கு எல்லையே இருக்கக் கூடாது. ஒரு பாடசாலை என்றால் இவ்வாறே இருக்க வேண்டும். இப்பாடசாலை மறைமுகமானது என்றாலும் மிகவும் சக்தி வாய்ந்தது. பொதுவாக கல்வியின் முக்கியத்துவத்திற்கு ஏற்ப வசதிகளும் இருப்பதுண்டு. எனினும் இங்கோ நீங்கள் நிலத்தில் அமர்ந்திருந்து கற்கிறீர்கள். ஆத்மாக்களாகிய நீங்களே கற்க வேண்டும் என்பதால் நீங்கள் நிலத்திலோ அல்லது கதியிலோ இருந்தாலென்ன, அதற்காகக் கற்றுப் பரீட்சைகளில் சித்தியெய்திய பின் நீங்களும் அவர்களைப் போல் ஆகுவீர்கள் என்று நீங்கள் மகிழ்ச்சியில் ஆடவேண்டும். தந்தை இப்பொழுது வந்து உங்களுக்கு தனது அறிமுகத்தைக் கொடுத்து அவர் எப்படி இவரினுள் பிரவேசித்து உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதை உங்களுக்குக் கூறுகின்றார். தந்தை தேவர்களுக்குக் கற்பிப்பதில்லை. தேவர்களிடம் எப்படி இந்த ஞானம் இருக்க முடியும்? மக்கள் குழப்பமடைந்து வினவுகின்றார்கள்: தேவர்களிடம் இந்த ஞானம் இருக்காதா? இந்த ஞானத்தைக் கற்றதாலேயே அவர்கள் தேவர்கள் ஆகினார்கள். தேவர்கள் ஆகியதும் அவர்கள் இந்த ஞானத்தைக் கொண்டிருப்பதற்கான அவசியம் என்ன? நீங்கள் ஒரு சட்டநிபுணர் ஆகி ஒரு வருமானத்தை ஈட்டுகின்றபோது சட்டநிபுணர் ஆகுவதற்கான கல்வியை மீண்டும் கற்பீர்களா? அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. அழிவற்ற நாடகத்தின் இரகசியங்களை மிகச் சரியாகப் புரிந்து கொள்வதன் மூலம் முகமலர்ச்சியுடன் இருங்கள். இந்த நாடகத்தில் ஒவ்வொரு நடிகனும் தனது சொந்தப் பாகத்தை நடிக்க வேண்டும். ஒவ்வொரு சக்கரத்திலும் அவர் அதே மாதியே நடிப்பார்.

2. உங்கள் இலக்கையும் இலட்சியத்தையும் உங்கள் முன் வைப்பதனால் நீங்கள் அவர்களைப் போன்று ஆகுகின்றீர்கள் என்று மகிழ்ச்சியில் ஆட வேண்டும். இக்கல்வியின் மூலமே நீங்கள் இலக்ஷ்மி நாராயணன் போன்று ஆகுகிறீர்கள் என்பது உங்கள் புத்தியில் நிலைத்திருக்கட்டும்.

ஆசீர்வாதம்:
நீங்கள் சக்திவாய்ந்த நினைவினதும் சேவையினதும் ஆதாரத்தை எடுப்பதன் மூலம் துரித கதியில் முன்னேறி மாயையை வென்றவர் ஆகுவீர்களாக.

பிராமண வாழ்க்கையின் அடிப்படையே, நினைவும் சேவையும்தான். இந்த இரு ஆதாரங்களும் சக்தி வாய்ந்தவையாக இருக்கும்போது நீங்கள் துரித கதியுடன் தொடர்ந்து முன்னேறுவீர்கள். அதிகளவு சேவையும் பலவீனமான நினைவும் இருந்தால் அல்லது நினைவு மிக நன்றாக இருந்து, சேவை பலவீனமாக இருந்தால் ஒவ்வொன்றிலும் உங்களால் துரித கதியுடன் முன்னேற முடியாது. நினைவு, சேவை இரண்டிலும் துரித கதி இருக்க வேண்டும். ஒரே நேரத்தில் நினைவும் தன்னலமற்ற சேவையும் இடம்பெற வேண்டும். அப்போது மாயையை வெற்றி கொள்பவர் ஆகுவது இலகுவாக இருக்கும். ஒரு செயல் நிறைவடைவதற்கு முன்னரே ஒவ்வொரு செயலிலும் வெற்றி புலப்படும்.

சுலோகம்:
இந்த உலகை ஓர் ஆன்மீக விளையாட்டாகவும் இக்கட்டான சூழ்நிலைகளை ஆன்மீகப் பொம்மைகளாகவும் கருதித் தொடர்ந்து முன்னேறுங்கள்.