26.04.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, சங்கமயுக அதிமேன்மையான பிராமணர்களாகிய நீங்கள் இப்பொழுது கடவுளின் மடிக்கு வந்திருக்கிறீர்கள். நீங்கள் சாதாரண மனிதர்களில் இருந்து தேவர்களாக மாற வேண்டும் என்பதுடன், உங்களுக்குத் தெய்வீகக் குணங்களும் தேவையாகும்.

கேள்வி:
பிராமணக் குழந்தைகளாகிய நீங்கள் எவ்விடயத்தில் மிக, மிக அவதானமாக இருக்க வேண்டும், ஏன்?

பதில்:
நாள் முழுவதும் நீங்கள் எந்தப் பாவ காரியத்தையும் செய்யாமல் இருப்பதில், மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில், தர்மராஜ் வடிவத்தில் தந்தை உங்கள் முன்னால் நிற்கின்றார். உங்களைச் சோதித்துப் பாருங்கள்: நான் எவருக்கேனும் துன்பம் விளைவித்தேனா? எவ்வளவு வீதம் நான் ஸ்ரீமத்தைப் பின்பற்றுகிறேன்? இராவணனின் கட்டளைகளை நான் பின்பற்றுகிறேனா? நீங்கள் தந்தைக்கு உரியவராகிய பின்னர், செய்கின்ற ஒவ்வொரு பாவச் செயலுக்கும் நூறு மடங்கு தண்டனை கிடைக்கும்.

ஓம் சாந்தி.
கடவுள் பேசுகிறார். எந்த ஒரு தேவரோ அல்லது மனிதரோ, கடவுள் என அழைக்கப்பட முடியாது எனக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. இங்கே அமர்ந்திருக்கின்ற வேளையில், நீங்கள் சங்கமயுகப் பிராமணர்கள் என்பது உங்கள் புத்தியில் நிலைத்திருக்கின்றது. உங்களில் சிலருக்கு இந்தளவையேனும் சதா நினைவுசெய்ய முடியாதுள்ளது. நீங்கள் உண்மையாகவும், சத்தியமாகவும் உங்களைப் பிராமணர்கள் எனக் கருதுவதில்லை. பிராமணக் குழந்தைகள் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்க வேண்டும். நாங்கள் சங்கமயுகப் பிராமணர்கள், அத்துடன் நாங்கள் சிவபாபாவினால் அதிமேன்மையான மனிதர்களாகவும் ஆக்கப்பட்டுள்ளோம். உங்களிலும் எல்லோராலும் இதனை நினைவுசெய்ய முடிவதில்லை. நீங்கள் சங்கமயுகத்தின் அதிமேன்மையான பிராமணர்கள் என்பதை மீண்டும் மீண்டும் மறந்து விடுகின்றீர்கள். இந்தளவையேனும் உங்கள் புத்தியில் நீங்கள் வைத்திருந்தால் அது உங்களுக்கான மகா பாக்கியம். அனைத்தும் எப்பொழுதுமே வரிசைக்கிரமமாகவே உள்ளது. நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் புத்திக்கு ஏற்ப ஒரு முயற்சியாளர்கள் ஆவீர்கள். இப்பொழுது நீங்கள் சங்கமயுகத்திற்கு உரியவர்கள். நீங்களே அதி மேன்மையான மனிதர்கள் ஆகுபவர்கள். நீங்கள் அதி அன்பிற்கினிய தந்தையான ‘அபா’வை (தந்தை) நினைவுசெய்தால், அதிமேன்மையான மனிதர்கள் ஆகுவீர்கள் என்பதை அறிந்திருக்கிறீர்கள். அவரை நினைவுசெய்வதனால் மாத்திரமே உங்கள் பாவங்கள் அழிய முடியும். இப்பொழுது ஒருவர் பாவம் செய்தால், அவரின் கணக்கில் நூறு மடங்கு தண்டனை சேமிக்கப்படுகின்றது. முன்னர், நீங்கள் செய்த பாவங்களுக்குப் பத்து மடங்கு சேமிக்கப்பட்டது. இப்பொழுது, கடவுளின் மடிக்கு வந்த பின்னர், பாவம் செய்தால் நீங்கள் நூறுமடங்கு சேமிக்கிறீர்கள். உங்களை அதி மேன்மையான மனிதர்களாக ஆக்குவதற்காகத் தந்தை இப்பொழுது உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். ஏனெனில் பின்னர் குழந்தைகளாகிய நீங்கள் தேவர்கள் ஆகவேண்டும். இதனைச் சதா நினைவு செய்பவர்கள் தொடர்ந்தும் அதிகளவு ஆன்மிகச் சேவையைச் செய்வார்கள். சதா மலர்ச்சியாக இருப்பதற்கு, பிறருக்குப் பாதையைக் காட்டுங்கள். எங்கே சென்றாலும், நீங்கள் சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள் என்பதை எப்பொழுதும் உங்கள் புத்தியில் வைத்திருங்கள். இது அதிமேன்மையான சங்கமயுகம். அதிமேன்மையான மாதத்தை அல்லது வருடத்தைப் பற்றி மற்றவர்கள் பேசுகிறார்கள். நீங்களே சங்கமயுகத்தின் அதிமேன்மையான பிராமணர்கள் என நீங்கள் கூறுகிறீர்கள். இதனை உங்கள் புத்தியில் மிக நன்றாகப் பதித்துக் கொள்ளுங்கள். நாங்கள் இப்பொழுது அதிமேன்மையான மனிதர்கள் ஆகுவதற்கான யாத்திரையில் இருக்கின்றோம். இந்தளவை நீங்கள் நினைவு செய்தாலே இதுவே “மன்மனாபவ” ஆகும். உங்கள் முயற்சிக்கும், உங்கள் செயல்களுக்கும் ஏற்ப நீங்கள் அதிமேன்மையான மனிதர்கள் ஆகுகிறீர்கள். உங்களுக்குத் தெய்வீகக் குணங்கள் தேவை என்பதுடன், நீங்கள் ஸ்ரீமத்தையும் பின்பற்ற வேண்டும். ஏனைய மனிதர்கள் இராவணனின் கட்டளைகளான, தத்தமது கட்டளைகளைப் பின்பற்றுகிறார்கள். நீங்கள் அனைவருமே ஸ்ரீமத்தைப் பின்பற்றுகிறீர்கள் என்றில்லை. இன்னமும் இராவணனின் கட்டளைகளைப் பின்பற்றுகின்ற பலர் இருக்கிறார்கள். சிலர் ஸ்ரீமத்தை ஒரு குறிப்பிட்ட வீதம் பின்பற்றுகிறார்கள், இன்னும் சிலர் வேறு வீதத்தில் பின்பற்றுகிறார்கள். சிலரோ 2 வீதமே ஸ்ரீமத்தைப் பின்பற்றுகிறார்கள். அவர்கள் இங்கே அமர்ந்திருந்தாலும் அவர்கள் சிவபாபாவின் நினைவில் இருப்பதில்லை. அவர்களின் புத்தியின் யோகம் அங்கும் இங்கும் அலைகின்றது. ஒவ்வொரு நாளும் உங்களைச் சோதனை செய்யுங்கள்: நான் இன்று ஏதேனும் பாவச் செயலைச் செய்தேனா? நான் எவருக்கேனும் துன்பத்தை விளைவித்தேனா? உங்களை அதிகளவு நீங்கள் எச்சரிக்கை செய்ய வேண்டும். ஏனெனில், தர்மராஜும் இங்கே நிற்கின்றார். இப்பொழுது இது உங்களின் சகல கர்மக் கணக்குகளையும் தீர்க்க வேண்டிய நேரமாகும். தண்டனையையும் அனுபவிக்க வேண்டியுள்ளது. நீங்கள் பிறவிபிறவியாகப் பாவம் நிறைந்தவர்களாக இருந்தீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். யாரேனும் ஒருவர் ஓர் ஆலயத்திற்கோ அல்லது தனது குருவிடமோ அல்லது தனது விசேடமான இஷ்ட தெய்வத்திடமோ செல்லும்பொழுது, அவர் கூறுகின்றார்: நான் பிறவிபிறவியாகப் பாவியாக இருக்கின்றேன். என்னை மன்னித்து, என் மீது கருணை காட்டுங்கள்! அத்தகைய வார்த்தைகள் சத்தியயுகத்தில் என்றுமே பேசப்பட மாட்டாது. சிலர் உண்மையைக் கூறியபோதிலும், பலர் பொய்யே கூறுகிறார்கள். இங்கும் அவ்வாறே உள்ளது. பாபா எப்பொழுதுமே கூறுகின்றார்: உங்கள் வாழ்க்கை வரலாற்றை எழுதி, பாபாவிற்கு அனுப்புங்கள். சிலர் உண்மை முழுவதையும் எழுதுகின்றார்கள், ஆனால் ஏனையோரோ சில விடயங்களை மறைக்கின்றார்கள். ஏனென்றால், அவர்கள் அவற்றை எழுதுவதற்கு மிகவும் வெட்கப்படுகின்றார்கள். நீங்கள் ஏதேனும் தீயதைச் செய்தால், அதனால் பெறப்படும் பலனும் தீயதாகவே இருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள். வேறு இடங்களில், அது தற்காலிகமான காலத்திற்குரிய விடயம். ஆனால் இங்கோ அது மிக நீண்ட காலத்திற்கான விடயமாகும். இப்பொழுது நீங்கள் தீய செயல்களைச் செய்தால், தண்டனை அனுபவம் செய்யப்படுவதுடன், சுவர்க்கத்திற்கும் இறுதியாகவே செல்வீர்கள். யார் மேன்மையானவர்கள் ஆகுவார்கள் என்ற அனைத்தையும் நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். அதுவே அதிமேன்மையான தெய்வீக இராச்சியம். நீங்கள் அதிமேன்மையான மனிதர்கள் ஆகுகிறீர்கள். வேறு எங்குமே இவ்வாறாக எவருமே புகழப்பட மாட்டார்கள். மனிதர்களுக்குத் தேவர்களின் தெய்வீகக் குணங்களைப் பற்றித் தெரியாது. மக்கள் தமது புகழைப் பாடினாலும், அவர்கள் கிளிகளைப் போன்றவர்கள். ஆகையாலேயே பாபா கூறுகின்றார்: பக்தர்களுக்கு விளங்கப்படுத்துங்கள். பக்தர்கள் தம்மைக் கீழான பாவிகள் என அழைக்கும்பொழுது, நீங்கள் அவர்களிடம் கேளுங்கள்: ‘நீங்கள் மௌன உலகில் இருக்கும் பொழுது, பாவம் செய்தீர்களா?’ அங்கே, ஆத்மாக்கள் அனைவரும் தூய்மையானவர்கள். அவர்கள் இங்கேயே தூய்மை அற்றவர்களாக ஆகுகிறார்கள். ஏனெனில், இது தமோபிரதான் உலகமாகும். தூயவர்கள் மாத்திரமே புதிய உலகில் வாழ்கிறார்கள். இராவணனே உங்களைத் தூய்மை அற்றவர்கள் ஆக்குகிறான். தற்பொழுது, இராவண இராச்சியமே குறிப்பாகப் பாரதத்திலும், பொதுவாக முழு உலகிலும் உள்ளது. அரசனும் அரசியும் எவ்வாறோ, பிரஜைகளும் அவ்வாறே இருப்பார்கள்: அதியுயர்வானதில் இருந்து அதிதாழ்வான வரை. இங்குள்ள அனைவரும் தூய்மை அற்றவர்கள். பாபா கூறுகின்றார்: நான் வந்து உங்களைத் தூய்மையாக்கிய பின்னர் வீடு திரும்புகின்றேன். உங்களை அதன்பின்னர் தூய்மை அற்றவர்கள் ஆக்கியது யார்? இராவணனே. எனது கட்டளைகளைப் பின்பற்றுவதால், இப்பொழுது மீண்டும் ஒருமுறை நீங்கள் தூய்மை ஆகுகிறீர்கள். அரைக்கல்பத்தின் பின்னர், இராவண இராச்சியத்தைப் பின்பற்றுவதால், நீங்கள் மீண்டும் தூய்மை அற்றவர்கள் ஆகுகிறீர்கள். அதாவது, நீங்கள் சரீர உணர்வுடையவர்கள் ஆகி, விகாரங்களின் ஆதிக்கத்திற்கு உட்படுகிறீர்கள். அவை அசுர வழிகாட்டல்கள் என அழைக்கப்படுகின்றன. தூய்மையாக இருந்த பாரதம், இப்பொழுது தூய்மையற்றதாகி உள்ளது. அது மீண்டும் ஒருமுறை தூய்மையாக வேண்டும். தூய்மை ஆக்குபவரான தந்தை அதனைத் தூய்மை ஆக்குவதற்காக வந்துள்ளார். இன்று, எத்தனை பேர் உள்ளார்கள் எனப் பாருங்கள். நாளை எத்தனை பேர் இருப்பார்கள்? யுத்தம் இடம்பெறும். மரணம் உங்கள் முன்னால் நிற்கின்றது. அந்த மக்கள் எல்லோரும் நாளை எங்கே இருப்பார்கள்? அனைவரது சரீரமும், இந்தப் பழைய உலகமும் அழிந்து விடும். இதன் முக்கியத்துவம், நீங்கள் செய்கின்ற முயற்சிக்கு ஏற்ப, வரிசைக்கிரமமாக உங்கள் புத்தியில் உள்ளது. நாங்கள் இப்பொழுது யார் முன்னிலையில் அமர்ந்திருக்கின்றோம்? இதனைப் புரிந்து கொள்ளாதவர்களே மிகவும் தாழ்ந்த அந்தஸ்தை அடைகிறார்கள். நாடகத்திற்கு ஏற்ப, ஒருவரின் பாக்கியத்தில் இது இல்லாதிருந்தால், யாரால் என்ன செய்ய முடியும்? குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது சேவை செய்து, தந்தையை நினைவுசெய்ய வேண்டும். நீங்களே சங்கமயுகப் பிராமணர்கள். நீங்களும் ஞானக்கடலும், சந்தோஷக்கடலுமான தந்தையைப் போன்றவர்கள் ஆக வேண்டும். உங்களை இவ்வாறாக ஆக்குகின்ற தந்தையை நீங்கள் கண்டு அடைந்துவிட்டீர்கள். தேவர்களுக்கான புகழ்: சகல தெய்வீகக் குணங்களும் நிறைந்தவர்கள் போன்றவை. தற்பொழுது, எவரிடமும் இந்தத் தெய்வீகக் குணங்கள் இல்லை. நீங்கள் ஒவ்வொருவரும் சதா உங்களிடம் கேளுங்கள்: உயர்ந்ததோர் அந்தஸ்தை அடைவதற்கு, நான் எந்தளவிற்குத் தகுதி அடைந்துள்ளேன்? சங்கமயுகத்தை மிக நன்றாக நினைவு செய்யுங்கள். சங்கமயுகப் பிராமணர்களான நாங்களே அதிமேன்மையான மனிதர்கள் ஆகுகின்றோம். ஸ்ரீகிருஷ்ணரே அந்தப் புதிய உலகின் அதிமேன்மையான மனிதர் ஆவார். நீங்கள் பாபாவின் நேர் முன்னிலையில் அமர்ந்திருக்கிறீர்கள் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். ஆகையால், நீங்கள் மேலும் கவனமாகப் படிக்க வேண்டும். நீங்கள் பிறருக்குக் கற்பிக்கவும் வேண்டும். நீங்கள் பிறருக்குக் கற்பிக்காமல் இருந்தால், நீங்கள் படிப்பதில்லை என்பதும், உங்கள் புத்தியில் எதுவுமே நிற்பதில்லை என்பதும், ஐந்து வீதமேனும் உங்கள் புத்தியில் நிற்பதில்லை என்பதும் நிரூபணம் ஆகுகின்றது. நீங்களே சங்கமயுகப் பிராமணர்கள் என்பதையேனும் நீங்கள் நினைவு செய்வதில்லை. உங்கள் புத்திகளில் தந்தையின் நினைவு இருக்க வேண்டும். அத்துடன் சக்கரத்தையும் தொடர்ந்து சுழற்றுங்கள். விளக்கம் மிகவும் இலகுவானது. உங்களை ஆத்மாக்கள் எனக் கருதி, தந்தையை நினைவு செய்யுங்கள். அவரே அனைவரிலும் அதிமகத்துவமான தந்தையாவார். தந்தை கூறுகின்றார்: என்னை நினைவு செய்தால் உங்கள் பாவங்கள் அழியும். நாங்களே பூஜிக்கத் தகுதியானவர்களாக இருந்தோம், அதன் பின்னர் பூஜிப்பவர்கள் ஆகினோம். இந்த மந்திரம் மிகவும் சிறப்பானது. ஒவ்வோர் ஆத்மாவும் பரமாத்மா என அவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் கூறுகின்றவை அனைத்தும் முற்றிலும் பிழையானவை. நாங்கள் தூய்மையானவர்களாக இருந்தோம், பின்னர் 84 பிறவிகளை எடுக்கின்ற வேளையில், நாங்கள் இவ்வாறு ஆகினோம். நாங்கள் இப்பொழுது வீடு திரும்ப உள்ளோம். இன்று, நாங்கள் இங்கே இருக்கின்றோம். நாளை, வீடு திரும்புவோம். நாங்கள் எல்லையற்ற தந்தையின் வீட்டிற்கே செல்கின்றோம். சரீரம் உட்பட, சரீர சமயங்கள் அனைத்தையும் மறந்து, உங்களை ஆத்மாக்கள் எனக் கருதுங்கள். நாங்கள் இப்பொழுது எங்கள் சரீரங்களை விட்டு நீங்கி வீடு திரும்ப உள்ளோம். இதனை மிக உறுதியாக நினைவு செய்யுங்கள்: ‘நான் ஓர் ஆத்மா’. இதனை நினைவு செய்வதும், உங்கள் வீட்டை நினைவுசெய்வதும் என்றால் உங்கள் புத்தி முழு உலகையும் துறந்துள்ளது என்று அர்த்தம். அதாவது சரீரத்தையும், ஏனைய அனைத்தையும் துறந்திருப்பதாகும். அந்த ஹத்தயோகிகள் முழு உலகையும் துறப்பதில்லை. அவர்களின் துறவறம் முழுமையற்றது. நீங்கள் முழு உலகையும் துறக்க வேண்டும். தமது சரீரத்தைத் தாம் எனக் கருதுபவர்கள் அதற்கேற்பவே செயற்படுவார்கள். சரீர உணர்வுடன் இருப்பவர்கள், களவெடுத்தல், பொய் சொல்லுதல், பாவம் செய்தல் போன்ற அனைத்துப் பழக்க வழக்கத்தையும் கொண்டிருப்பார்கள். அவர்கள் மிகச் சத்தமாக பேசுகின்ற பழக்கத்தையும் கொண்டிருப்பார்கள். அதன்பின்னர் அவர்கள் கூறுவார்கள்: ‘ஆனால், எனது குரல் அப்படித்தான்.’ நாள் முழுவதும் அவர்கள் 25 முதல் 30 வரையான பாவங்களைச் செய்வார்கள். பொய் சொல்வதும் ஒரு பாவமே. அவர்கள் அவ்வாறான பழக்கங்களை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். பாபா கூறுகின்றார்: நீங்கள் மெல்லப் பேசப் பழகுங்கள். உங்கள் குரலின் சத்தத்தைக் குறைப்பதற்கு அதிக நேரம் எடுக்காது. நாய்களுக்குக் கூட நன்றாக இருப்பதற்குப் பயிற்சி கொடுக்க முடியும். குரங்குகள் மிகவும் கூர்மையானவை. அவை சிலருடன் மிகவும் நன்றாகப் பழகிவிடுவதால், நடனம் போன்றவற்றை ஆட ஆரம்பிக்கின்றன. மிருகங்களை கூட சீர்திருத்தலாம். மனிதர்களே மிருகங்களைச் சீர்ப்படுத்துகிறார்கள். தந்தை மனிதர்களைச் சீர்திருத்துகிறார். தந்தை கூறுகின்றார்: நீங்களும் மிருகங்களைப் போன்றவர்களே. அதனாலேயே நான் ஆமையிலும், காட்டுப்பன்றியிலும் அவதரிக்கின்றேன் எனக் கூறுகிறீர்கள். உங்கள் செயற்பாடு எதுவோ, அவ்வாறே என்னை அதனையும் விட மோசமாகச் சித்தரித்திருக்கிறீர்கள். உங்களுக்கு மாத்திரமே இது தெரியும். உலகிற்கு இது தெரியாது. இறுதியில், நீங்கள் செய்தவற்றின் காட்சிகளை நீங்கள் பார்ப்பீர்கள். தண்டனை எப்படி அனுபவம் செய்யப்படும் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். நீங்கள் அரைக்கல்பத்திற்குப் பக்தி செய்தீர்கள். இப்பொழுது நீங்கள் தந்தையை இனங்கண்டிருக்கிறீர்கள். அவர் கூறுகின்றார்: நீங்கள் எனது வழிகாட்டல்களைப் பின்பற்றாதிருந்தால், தண்டனை தொடர்ந்தும் அதிகரிக்கும். ஆகையால், மேலும் பாவங்களைச் செய்யாதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்கானதோர் அட்டவiணையை வைத்திருப்பதுடன் இந்த ஞானத்தையும் கிரகியுங்கள். பிறருக்கு விளங்கப்படுத்துவதற்கான பயிற்சியையும் நீங்கள் செய்ய வேண்டும். கண்காட்சிப் படங்களைப் பற்றிச் சிந்தித்து, அவற்றைப் பிறருக்கு எவ்வாறு விளங்கப்படுத்தலாம் எனச் சிந்தியுங்கள். முதலில் ஒரு தலைப்பை எடுத்துக் கொள்ளுங்கள்: “கீதையின் கடவுள் யார்?” பரமாத்மாவும் பரமதந்தையுமான தூய்மையாக்குபவர் மாத்திரமே, ஞானக்கடலாக இருக்க முடியும். அந்தத் தந்தையே ஆத்மாக்கள் அனைவருக்கும் தந்தை ஆவார். அனைவருக்கும் தந்தையின் அறிமுகம் தேவையாகும். ரிஷிகள், முனிவர்கள் போன்றோருக்குத் தந்தையின் அறிமுகமும் இல்லை. படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியும் அவர்களுக்குத் தெரியாது. ஆகையால், முதலில் விளங்கப்படுத்தி, “ஒரேயொரு கடவுளே உள்ளார், வேறு எவருமே கடவுளாக இருக்க முடியாது” என்பதை அவர்கள் எழுதும் வகையில் அவர்களைப் புரிந்துகொள்ளச் செய்யுங்கள். மனிதர்கள் தம்மைக் கடவுள் எனக் கூற முடியாது. கடவுள் அசரீரியானவர் என்ற நம்பிக்கை குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது உள்ளது. தந்தை எங்களுக்குக் கற்பிக்கின்றார், நாங்கள் அவரின் மாணவர்கள். தந்தையாக இருப்பதுடன், அவர் ஆசிரியரும், சற்குருவும் ஆவார். ஒரேயொரு தந்தையை நீங்கள் நினைவுசெய்யும் பொழுது, ஆசிரியர், குரு இருவரும் ஞாபகப்படுத்தப்படுகிறார்கள். உங்கள் புத்தி அலைபாயக்கூடாது. “சிவனே” என்று வெறுமனே தொடர்ந்தும் கூறாதீர்கள். அவர் எங்களின் பரம ஆசிரியரான தந்தையாவார். அவர் எங்களைத் தன்னுடன் அழைத்துச் செல்வார். அவருக்கு அதிகளவு புகழ் உள்ளது. நாங்கள் அவரை நினைவுசெய்ய வேண்டும். பிரம்மாகுமாரிகளைத் தமது குருவாக ஆக்கிவிட்டதாக மக்கள் கூறுகின்றார்கள். நீங்களும் அவர்களின் குருவாக ஆகுகின்றீர்கள், அப்படித்தானே? எவ்வாறாயினும், உங்களைத் தந்தை என்று அழைக்க முடியாது. உங்களை ஓர் ஆசிரியர் என்றோ ஒரு குருவென்றோ அழைக்கலாம். ஆனால் தந்தை என்று அழைக்க முடியாது. அந்தத் தந்தையை மாத்திரமே மூன்றாகவும் அழைக்க முடியும். அவரே அனைவரிலும் அதிசிறந்த தந்தை. இவரையும் (அவ்யக்த பிரம்மா) விட, அவர் மேலானவர். நீங்கள் இதனை மிகத் தெளிவாக விளங்கப்படுத்த வேண்டும். கண்காட்சிகளில் விளங்கப்படுத்துவதற்கு உங்களுக்கு விவேகம் தேவையாகும். உங்களுக்குத் தைரியம் இல்லை என நீங்கள் நினைக்கிறீர்கள். மிகப்பெரிய கண்காட்சிகள் இடம்பெறும்பொழுது, திறமைசாலிகளான சேவை செய்யும் குழந்தைகள் அங்கே சென்று சேவை செய்ய வேண்டும். பாபா உங்களைத் தடை செய்வதில்லை. நீங்கள் முன்னேறிச் செல்கையில், தொடர்ந்தும் சாதுக்களின் மீதும், புனிதர்களின் மீதும் ஞான அம்புகளை எய்வீர்கள். அவர்களால் வேறு எங்கே செல்ல முடியும்? ஒரேயொரு கடையே உள்ளது. இந்த ஒரு கடையில் இருந்தே அனைவரும் சத்கதியைப் பெறுவார்கள். இந்தக் கடையானது நீங்கள் அனைவருக்கும் தூய்மை ஆகுவதற்கு வழிகாட்ட உதவக்கூடிய ஒன்றாகும். அதன்பின்னர் அவர்கள் எதுவாக ஆக வேண்டும் என்பது அவர்களைப் பொறுத்தது. குழந்தைகளாகிய நீங்கள் சேவை செய்வதில் விசேட கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் விவேகமானவர்கள் என்றபொழுதிலும், நீங்கள் முழுமையாகச் சேவை செய்வதில்லை. ஆகையால், உங்கள் மீது கிரகணத்தின் சகுனம் சூழ்ந்துள்ளது என பாபா புரிந்து கொள்கிறார். அனைவரின் மீதும் சகுனங்கள் சூழ்ந்துள்ளன. சிலர் மாயையால் மறைக்கப்பட்டுள்ளார்கள். அதன்பின்னர், இரு நாட்களுக்குப் பின்னர், அவர்கள் சீராகிவிடுகிறார்கள். குழந்தைகள் சேவை செய்கின்ற அனுபவத்தைப் பெற்ற பின்னரே இங்கே திரும்பி வரவேண்டும். எவ்வாறாயினும், நீங்கள் தொடர்ந்தும் கண்காட்சிகள் நடாத்துகிறீர்கள். கீதை கிருஷ்ணரால் அன்றி, சிவனாலேயே பேசப்பட்டது என உடனடியாகவே எழுதும் அளவிற்கு ஏன் மக்கள் அதைப் புரிந்து கொள்வதில்லை? சிலர் இது மிகவும் சிறப்பாக உள்ளது என்று, அதாவது மனிதர்களுக்கு மிகவும் நன்மையானது என்றும், அனைவருக்கும் காட்டப்பட வேண்டும் எனவும் வெறுமனே கூறுகிறார்கள். ஆனால், அவர்களில் எவருமே கூறுவதில்லை: நானும் இந்த ஆஸ்தியைப் பெறுவேன். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. சரீர உணர்வுடையவராகி, மிகவும் சத்தமாகப் பேசாதீர்கள். அந்தப் பழக்கத்தை முடித்துவிடுங்கள். களவெடுப்பது, பொய் சொல்வது போன்றவை அனைத்தும் பாவங்கள் ஆகும். இவற்றிலிருந்து பாதுகாக்கப்படுவதற்கு ஆத்ம உணர்வில் நிலைத்திருங்கள்.

2. மரணம் உங்கள் முன்னால் நிற்கின்றது. ஆகையால், தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றித் தூய்மை ஆகுங்கள். தந்தைக்கு உரியவராகிய பின்னர், எந்தப் பாவச் செயலிலும் ஈடுபடாதீர்கள். தண்டனையில் இருந்து பாதுகாக்கப்படுவதற்கு முயற்சி செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் லோக்-பசந்த் சபாவிற்காக (மக்கள் சபை) ஒரு டிக்கற்றைப் பதிவு செய்வதன் மூலம் இராச்சிய சிம்மாசனத்தின் உரிமையைப் பெறுவீர்களாக.

உங்களுக்குள் ஓர் எண்ணம் அல்லது யோசனை தோன்றும்போது, எல்லாவற்றுக்கும் முதலில் அந்த எண்ணம் அல்லது யோசனையைத் தந்தை விரும்புவாரா எனச் சோதியுங்கள். தந்தைக்கு விருப்பமான எதுவும் இயல்பாகவே மக்களாலும் விரும்பப்படும். எண்ணத்தில் ஏதாவது சுயநலம் இருக்குமாயின், அது உங்களுக்குப் பிடித்தது என்றே சொல்லப்படும். ஆனால் அது உலகிற்கு நன்மையை ஏற்படுத்துமாயின், அது மக்களாலும் இறைவனாலும் விரும்பப்படுகிறது எனச் சொல்லப்படும். லோக் - பசந்த் சபாவில் ஓர் உறுப்பினர் ஆகுதல் என்றால் சட்டமும் ஒழுங்குகளும் உள்ள இராச்சிய சிம்மாசனத்தின் உரிமையைப் பெறுதல் என்று அர்த்தம்.

சுலோகம்:
இறைவனின் சகவாசத்தை அனுபவம் செய்யுங்கள், எல்லாவற்றையும் இலகுவாக அனுபவம் செய்த வண்ணம் நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள்.

அவ்யக்த சமிக்கை: ஒன்றிணைந்த ரூபத்தின் விழிப்புணர்வுடன் சதா வெற்றி பெறுபவர் ஆகுங்கள்.

சிவசக்தி ஒன்றிணைந்த ரூபமாக இருப்பதைப் போல், பாண்டவபதியும் (பாண்டவர்களின் பிரபு) பாண்டவர்களும் எப்போதும் ஒன்றிணைந்த ரூபத்திலேயே இருக்கிறார்கள். பாண்டவர்கள் இல்லாமல் பாண்டவபதியால் எதையும் செய்ய முடியாது. சதா இந்த ஒன்றிணைந்த ரூபத்தில் இருப்பவர்களுக்கு, பாப்தாதா பௌதீக ரூபத்தில் சகல உறவுமுறைகளிலும் முன்னால் இருப்பதைப் போன்றதாகும். நீங்கள் எங்கே இருந்தாலும் அவரை அழைத்தவுடன், ஒரு விநாடியில் அவர் பிரசன்னம் ஆகுகிறார். இதனாலேயே, ‘பிரபு என்றும் பிரசன்னமாக இருக்கிறார்’ எனப்படுகிறது.